Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

[size=5]தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு[/size]

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கோரமான முறையில் தாக்கியமையைக் கண்டிக்கும் முகமாகவும் மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தாக்கப்பட்டமை, காரை நகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் அவர்களது வீடு எரிக்கப்பட்டைமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 03.12.2012 அன்று திங்கட்கிழமை மு.ப 10 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

யுத்தம் முடிந்தும் 3 ஆண்டுகளுக்கு பின்னும் ஜனநாயக முறைமையில் குந்தகம் விளைவிக்கின்றமை ஆகியவற்றைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு ஜனநாயக விரும்பிகள் அனைவரையும் இனத்துவம் கடந்து சகோதரத்துவ முறையில் பங்குகொண்டு எமது ஜனநாயக உரிமைக் குரலுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

http://onlineuthayan...751656029104297

Edited by akootha

[size=5]சில மனிதர்கள் சில நேரங்களில் சிந்திக்கும் விதங்கள்.[/size]

[size=4]பல்கலைக்கழக கண்மணிகளா![/size]

[size=4]முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.[/size]

[size=4]இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.[/size]

[size=4]என்ன உலகமடா சாமி.[/size]

[size=4]அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.[/size]

[size=4]இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.[/size]

[size=4]அங்கே உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.[/size]

[size=4]இவ்வாறான நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.[/size]

[size=4]இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா. [/size]

[size=4]முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். [/size]

[size=3]Edited by nirmalan, Today, 06:37 PM.[/size]

[size=3]http://www.yarl.com/...22[/size]

புலம் பெயர் மக்கள் கூட்டமைப்புக்கு காசு அனுப்பினார்கள் என்பது உண்மை. ஆனால் கூட்டமைப்பு வாக்களிக்கும் மக்களை மறந்து புலம் பெயர்மக்கள் ஆட்டும் ஆட்டத்திற்கு ஆடுகிறது என்று கூற முடியுமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது மாணவர்கள்மீது கொலைவெறித்தாக்குதல் ஆரம்பமாக வேண்டும் என்கிறார் நிர்மலன்.

  • தொடங்கியவர்

[size=5]பல்கலை மாணவர்கள் தாக்குதல் கண்டனப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு[/size]

[size=4]பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 4.12.2012 செவ்வாய்க்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. [/size]

[size=4]இன்றைய தினம் யாழ்; பல்கலைக்கழக வளாகத்தின் முன் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும் சிறீலங்கா காவற்துறையினரும் இணைந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர். அத்தாக்குதலில் 10ற்கு மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4] [/size]

[size=4]மாவீரர் நாளான நேற்று பல்கலை விடுதியில் மாணவர்கள் சுடர் ஏற்றக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி அவர்களை மிரட்டும் செயலில் இராணுவம், பொலிஸ் ஈடுபட்டனர். [/size]

[size=4]யாழ் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதிக்குள்ளும் பெண்கள் விடுதிக்குள்ளும் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினர் மாணவர்களதும் மாணவிகளதும் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். [/size]

[size=4]இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று மாணவர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்ட வேளையில் அவ்விடத்தில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரும் பொலீசாரும் துப்பாக்கிகளாலும் இரும்புக் கேபிள்களாலும் கட்டைகளாலும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். [/size]

[size=4]இராணுவத்தினரும் பொலீசாரும் மேற்கொண்ட இந்த தாக்குதலை தமிழத் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் இச் சம்பவத்தைக் கண்டித்து எதிர்வரும் 04-12-2012 காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக உள்ள சோமசுந்தரப் புலவர் சிலையருகில் கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. [/size]

[size=4]எனவே இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=225181655829746208

எதிர்ப்பு என்பது உங்கள் சுதந்திரம் பறிக்கப்படும் போது உருவாவது .இங்கே உயிரழந்த போராளிகள் அதாவது

அவர்களின் பெற்றோர் நினைவு கொல்வதிக்கும் தடை என்பதை அனுமதிக்கமுடியாது . கூட்டமைப்பின் எதிர்ப்பு

போராட்டம் கட்டாயமானது.சர்வதேசத்திக்கு இதை வெளிகொனரவேண்டும் , அமைதியான முறையில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.