Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாபிலவு: "இப்போதுள்ள இடத்தை விட்டும் விரட்டிவிடுவோம்"

Featured Replies

[size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் நீண்டகாலமாக தமது சொந்தக் காணிகளைப் பெற முடியாத நிலையில் தமது சட்டத்தரணியினூடாக வழக்குத் தக்கல் செய்ய முற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய முற்பட்ட ஆறு பெண்களில் மூவரை இராணுவத்தினர் கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளதாகவும் கேப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=4]அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படாது சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். தமக்கு சொந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி 6 பெண்கள் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் முதற்கட்டமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி, கேப்பாபிலவு இராணுவ அதிகாரி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.[/size]

[size=4]இந்நிலையில் நேற்று கேப்பாபிலவு 59ஆவது படையணியின் 2ஆம் நிலை இராணுவ அதிகாரி உட்பட பத்திற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்ய முற்பட்ட 3 பெண்களை கிராம சேவகர் அலுவலகத்துக்கு அழைத்து தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளதுடன் [size=5]இப்போதுள்ள இடத்தை விட்டும் விரட்டிவிடுவோம் [/size]என கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் வழக்குக்கான ஏற்பாடுகளை கைவிடுமாறும் கோரியுள்ளனர்.[/size]

[size=4]இதனால் கேப்பாபிலவு மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.[/size]

http://www.virakesari.lk/article/notheast.php?vid=89

கேப்பா பிலவு மகளிர் கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய மகளிர் எழுச்சி போன்ற நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் சொந்த ஊர் திரும்ப விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்கே உள்ள கஸ்டப்பட்ட மகளிருக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினை வழக்கறிஞர்களுக்கும் கொடுத்து இம்முறை சொந்தவீடு திரும்பும் புரட்சி நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை கேப்பாபிலவு மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும், வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை கேப்பாபிலவு மகளிரில் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மகளிர் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது மகளிர் அமைப்புக்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பி.கு:

இது யாழில் உறவு ஒருவர் வரைந்த எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தக் கூடிய, பொதுவான ஒரு மற்றுக் கருத்து. அதில் மாணவர்கள் என்பதற்கு பதிலாக ஒரு variable ஒன்றை இணைத்திருக்கிறேன். :icon_idea:

இனி அகுத, தமிழரசு, யாழ் அன்பு..... போன்றோர் தமிழ்ஈழத்தில் நடக்கும் உரிமை போராட்டங்களை பதிந்தால், மாற்று கருத்து மாணிக்கங்கள் கஸ்டப்படாமல், இலகுவாக, நான் தேவையான புதிய சொல்லை, இதில் இணைத்திருக்கும் variable மூலம் பிரதியிட்டு விட்டு பதிந்துவிட முடியும். இது இனிமேலைய காலங்களில் மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் வேலைகளை இலகுவாக்கும். எதோ அவர்களுக்கும் உதவலாம் என்ற ஒரு சிறு நல்ல நோக்கம்தான்...

:D :D :D :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவரது எழுத்துவேலையைக் குறைத்துவிட்டீர்கள் மல்லை.. :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.