Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துப் பல்கலை மாணவரும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்; யாழ். மாணவர் மீதான கெடுபிடிகளை கண்டித்து

Featured Replies

[size=2]

[size=4]யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாட்டிலுள்ள சகல பல்கலைக் கழகங்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழியில் முன்னெடுத்த கவனவீர்புப் போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கலைத்துள்ளனர். இதன்போது மாணவர்களை அவர்கள் விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். [/size][/size]

[size=2]

[size=4]மேலும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் உள்பட நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளனர். [/size][/size]

[size=2]

[size=4]இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தவுள்ளனர். விரைவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று சஞ்சீவ பண்டார கூறினார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=725081664002802068[/size]

  • தொடங்கியவர்

மாணவ சமூகத்திற்கு ஆதரவான புலம்பெயர் போராட்டங்கள்:

  • தொடங்கியவர்

Massive protest organized joining with entire university students. Jaffna students' harassments condemned.

 

Condemning the arrest of Jaffna university students, and the attacks carried out against the students, all the universities in the country will join together and will organize a massive protest was mentioned by All Ceylon University students’ union leader Sanjeeva Bandara.


A peaceful protest was carried out by the Jaffna University students’ were dispersed by the military and the police. During this time, students were chased and were brutally assaulted.

Further university student union secretary including four students are arrested by the police.

Against this activity, entire universities in the country will join and will protest and shortly this would be held is according to sources.

Immediate release of the arrested students, the relevant sectors to take action to ensure the safety of the students arrested was mentioned by Sanjeeva Bandara



http://onlineuthayan.com/english-news/uthayannews/3354y2l1h1h1r2

இம்முறை சிங்கள பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களிற்காக போராட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

யாழ்.மாணவர்களுக்கு ஆதரவாக தொடரும் சிங்கள மாணவ சகோதரர்களின் போராட்டங்கள்!

02 டிசம்பர் 2012

யாழ்.மாணவர்களுக்கு ஆதரவாக தொடரும் சிங்கள மாணவ சகோதரர்களின் போராட்டங்கள்!

யாழ்ப்பாண மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும் , இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் , தமிழ் மாணவர்களின் ஜனநாயக உரிமையை முன்னிறுத்தியும், தென்னிலைங்கை சகோதர இன மாணவர்கள் பாரிய ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளனர். இது பற்றி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான சஞ்ஜீவ பண்டார உடகங்களுக்கு தெரிவிக்கையில்: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைதான மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சஞ்ஜீவ பண்டார மற்றும் முன்னிலை சோஷலிச கட்சின் மாணவர் அமைப்பின் முன்னெடுப்பில், மாத்தறை றுகுணு பல்கலைக்கழகத்திலும், கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்திலும், வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மாணவர்களின் உரிமைகளை வலியுறுத்தி 29.12.2012அன்று உணர்வு பூர்வமான பாரிய ஆர்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது அத்துடன், நாளை (02.12.2012 ) முன்னிலை சோஷலிச கட்சி தமிழ் மக்களின் மாவீரர் தினம் கொண்டாடும் உரிமையை வலியுறுத்தி, ஊடக பிரச்சாரத்தை முன்னெடுக்க போவதாக, கட்சின் பிரசார செலயர் புபுது ஜெயகொட கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை அரச படைகளின் அடவாடிதனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்தும் நடைபெறுகிறது இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.

மேலும் , யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறை இன்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு மாத்திரமே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வகுப்பு பகிஷ்கரிப்பைத் தொடரப்போவதாக மாணவர் தலைமை அறிவித்துள்து.

நன்றி லங்காவியூஸ்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86095/language/ta-IN/article.aspx

சரி முதல் முறையாக மாணவர், மக்கள், மங்கையர் என்று எந்தவகையில் பார்த்தாலும், ஒரு சிங்கள அமைப்பு தமிழருக்கு ஒன்று செய்ய ஜனநாயக உரிமை இருக்கு என்று கூறுகிறது. தேவானந்தாவினால் நடத்தபடும் பல்கலைகழக நிருவாகம் இந்த சிங்கள மாணவர்கள் சொல்லவது சரிதான் என்று அறிக்கை விடுமா? அல்லது சிங்கள மாண்வர்கள அதை சொன்னாலும், தமிழ் பத்திரிகைகள் போய் பிரச்சாரம் மட்டும் தான் செய்கின்றன என்று தொடர்ந்து கூறிக்கொண்டு அரசுக்காக அடக்குமுறையை செய்ய போகிற்தா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.