Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

university%20of%20jaffna.jpg

எங்களை அடித்து உதைத்தால் எதிர்த்துக் கேட்பதற்கு எவருமில்லையென்று சிங்களவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடித்து நொருக்குவது போல புலம்பெயர் தமிழ் மக்களான எமது உறவுகள் எமக்காகக் குரல்கொடுப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது. இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எங்களைத் தாக்கிய சிங்களவர்களை கண்டித்து நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எமது விடுதலையை வென்றெடுப்பதற்குரிய ஆணித்தரமான போராட்டங்களாக அமைய வேண்டுமென்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தாக்கப்பட்டமைக்கு சர்வதேசம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் இளையோரும் கொதித்தெழுந்துள்ளமை தங்களுக்கு மேலும் மேலும் வீரியத்தைத் தந்துள்ளதாகவும் தங்களுக்காக சர்வதேசம் பூராகவும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறுகின்றமையானது தங்கள் பணியையும் தங்கள் விடுதலை வேட்கையையும் சர்வதேச தமிழ் மக்கள் புரிந்துகொண்டமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய தாங்கள் சிங்களப் படையினராலும் காவல்துறையினராலும் படைப் புலனாய்வாளர்களாலும் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சர்வதேசம் பூராகவும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற தமிழ் இளையோருக்கும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தொடர்ந்து நடைபெறுகின்ற போராட்டங்களில் அலையலையாக மக்கள் அணிதிரண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் இதன் மூலமே ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் சிங்களவன் கைவைக்க அஞ்சுவான் என்றும் மாணவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும் போராட்டங்களின் தேவைகளை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கதி இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ள ஈ-மெயில் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா படையினர் ஈழத்தில் அரங்கேற்றும் அராஜகங்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. எமது இனத்தின் விடுதலைக்காகவும் எமது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகவும் காடுகளிலும் முட்புதர்களிலும் அலைந்து உணவின்றி போராடி உலகத்திலேயே இல்லாத பெரும் தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபமேற்ற முடியாத சூழ் நிலையே தாயகத்தில் தற்போது நிலவுகிறது.

குடந்த 27 ஆம் திகதி நாம் என்ன செய்தோம்? செய்யக்கூடாத ஒன்றைச் செய்தோமா? ஊலகத்தில் இல்லாத ஒன்றைச் செய்தோமா? ஏந்தவொரு போரிலும் இறந்தவர்களை நினைவு கூர்வது உலகத்தின் நியதி. அந்த நியதியைத் தானே நாங்கள் செய்தோம். 30 வருடகாலப் போரில் இறந்த எமது உறவினர்களுக்கு பொது நாளொன்றில் அஞ்சலித் தீபம் ஏற்றினோம். இதற்கு சிங்களம் ஏன் தடை விதிக்கிறது. தடை விதித்தாலும் போதாதென்று எங்களை அச்சுறுத்தியது போதாது என்று எமது சகோதரிகள் தங்கியிருக்கின்ற விடுதிகளுக்குள் நுழைந்து அரச படைகள் அட்டகாசம் செய்தன.

ஏங்கள் வீட்டில் எமது சகோதரிகள் இரவு ஆடையுடன் படுத்திருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்து உள்ளே போக நாம் அனுமதிப்போமா? அதேபோன்;று பல்கலைக்கழக பெண்கள் விடுதிகளில் தங்கியிருந்த எமது சகோதரிகள் போன்ற மாணவிகளின் அறைகளை கால்களால் உதைத்துக்கொண்டு உள் நுழைந்த சிங்களக் காடையர்கள் மாணவிகளைத் தாக்கினர். வெளியே சொல்ல வெட்கமாயினும் சில மாணவிகள் சிங்களக் காடையர்களால் துப்பாக்கிப் பிடிகளால் தாக்கப்பட்டனர். இது தான் இந்த நாட்டின் ஜனநாயகமா?

நேரடியாக புலிகளுடன் மோத முடியாமல் வெளிநாடுகளில் பிச்சையெடுத்த ஆயுதங்களைக் கொண்டு வந்து வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வன்னியில் பேரவலத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளைக் கொன்றழித்த சிங்களக் காடையர்கள் இரவு வேளை எமது சக மாணவிகளின் அறைகளுக்குள் புகுவதை நாம் அனுமதிக்க முடியுமா? அதைக் கண்டித்துத்தான் நாங்கள் மறுநாள் 28 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினோம். அந்தப் போராட்டத்திற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களை விட்டு வெளியே வந்து விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த போராட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களாக நடைபெறுவதில்லை. பெரும் ஆர்ப்பாட்டங்ளாகவே அந்தப் போராட்டங்கள் நடைபெறும். வுhகனப் போக்குவரத்தைக் கூட பொலிஸார் வேறு பாதைகளுக்கு மாற்றுவார்கள்.

ஆனால், நாங்கள் எமது பல்கலைக்கழகத்தை விட்டு அதிகம் போக்குவரத்து அற்ற எமது வீதியில் இறங்க அனுமதியில்லை. அன்று நாங்கள் செத்துப் பிழைத்தோம். நாங்கள் அனைவரும் காவல்துறையாலும் படையாலும் புலனாய்வாளர்களாலும் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம். துமிழனிடம் ஒரு பண்பு உண்டு. நாய்க்கு அடிக்கும்போது கூட நாய் கத்திக்கொண்டு ஓடினால் மீண்டும் அடிக்கமாட்டார்கள். ஆனால் சிங்கள காடையர்கள் அன்று நாம் கத்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி ஒட ஒட எங்களை விரட்டினார்கள். கதவுகளுக்குள்ளும் வேலிகளுக்குள்ளும் கேற்றுகளுக்குள்ளும் தள்ளிவைத்து நசித்து அடித்தனர். மனிதாபிமானம் என்றே என்னென்று தெரியாதவர்களாக சிங்களக் காடையர்கள் அன்று செயற்பட்டனர்.

பல ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போன்றோர் சாட்சியங்களாகக் காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தபோதே சிங்களச் சிப்பாய்கள் எங்கள் மீது இப்படி ஏறி மிதித்தனரென்றால், யாருமே இல்லாத, சாட்சியமில்லாமல் வன்னியில் நடந்த யுத்தத்தின் போது மகிந்தவின் படைகள் எப்படிச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை புலம்பெயர் தமிழ் மக்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

சிங்களப் படைகளின் இந்தச் செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், நாங்கள் இங்கே பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்க உங்களாலேயே முடியும். எமக்கு அடித்த உடனேயே நீங்கள் பொங்கியெழுந்தமை எங்களைப் பூரிப்படைய வைத்திருக்கிறது. சிங்களவன் எங்களை அடித்தபோது எமது பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட ஏனென்று கேட்குமுன்னர் நீங்கள் எமக்கான கண்டனப் போராட்டங்கள், ஆதரவுப் போராhட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறீர்கள். நீங்கள் இப்படிப் பொங்கியெழுவீhர்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

சிறு வயதில் பிட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் கதையில் பாண்டிய மன்னன் சிவனுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லோர் முதுகிலும் விழுந்ததாம். அதுபோல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய எங்களுக்கு விழுந்த அடியை உலகிலுள்ள அத்தனை தமிழ் மக்களும் தங்களுக்கு விழுந்த அடியாகப் பார்க்கிறீர்கள். இது எமது ஒற்றுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. இதுவரை எமக்கு அடித்தால் கேட்க யாருமில்லையென்று நினைத்தோம். ஆனால், இப்போது உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உங்கள் செய்கைளால் காட்டியிருக்கிறீர்கள். இனி நாம் அஞ்சமாட்டோம். ஏதிரியின் அட்டூழியங்களைத் தட்டிக்கேட்போம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் துணிந்து செயற்படுவோம்.

நீங்களும் எமக்காக குரல் கொடுங்கள். இந்தத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் அலையலையாகக் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்துங்கள். இந்த எமது போராட்டங்கள் ஐ.நா சபையின் காதுகளை எட்ட வேண்டும். எமது நாடும் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நீங்கள் போராட்டங்களில் பங்கெடுங்கள். உங்கள் பலத்துடன் நாங்கள் எமது கல்விச் செயற்பாட்டையும் தாயகப் பணியையும் முன்னெடுப்போம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17686:2012-12-04-13-45-16&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக சூழலை இராணுவம் பயப்பீதியில் ஆழ்த்த முயற்சிக்கிறது .
 

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் விடுதலை செய்யப்படும் வரை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுவது சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக சூழலை இராணுவம் பயப்பீதியில் ஆழ்த்த முயற்சித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்களை நள்ளிரவு வேளையில் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவது மேலும் நிலமையை மோசமடையச் செய்யும் என்பதனை சம்பந்தப்பட்ட தரப்பி னருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்திற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சூழலை இயல்பு நிலைக்கு மீளக் கொண்டு வரவேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆசிரியர் சங் கத்தினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து வழங்கப்பட்ட மகஜரிலேயே இவ்விடயத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வழங்கிய மகஜரில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இரவு வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிக்குள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நிர்வாகத்தின் அனுமதியின்றி அத்து மீறி நுழைந்து மரணபயத்தை ஏற்படுத்தும் வகையிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி யிருந்தனர்.

இதனைக் கண்டித்து மறுநாள் 28ஆம் திகதி எமது பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தியமையும் அப் போராட் டத்தை ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிஸாரும் வன்முறையை பிரயோகித்து நசுக்கியமையும் தாங்கள் அறிந்ததே. மேலும் அதனைத் தொடர்ந்து சில பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப் பட்டுள்ளமையும் இன்னும் பல மாணவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே. இச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக இராணுவத்தினராலும் பொலிஸாராலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுற்றாடல் எங் கனும் வீதித்தடைகள் அமைத்தும் சோதனைச் சாவடிகள் அமைத்தும் பல்கலைக்கழக சூழல் ஒரு இராணுவச் சூழலாக மாற்றப்பட்டுள்ள மையை தாங்கள் அவதானித்திருப்பீர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக் கழக சமூகத்தவர்களை சோதனை என்ற போர்வையில் அச்சுறுத்தி பதிவு செய்தல் நடைமுறைகளையும் மேற்கொண்டு பல் கலைக்கழக சூழலை பயப்பீதியில் வைத் திருக்க முனைந்து வருவதனையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள்.

இந்த நிலையில், இன்று (நேற்று) யாழ்ப் பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேடப் பொதுக் கூட்டம் ஒன்றில் ஏகமன தாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவும் அசா தாரண சூழலை தணிப்பது தொடர்பில் பின் வரும் முன்வைப்புக்களை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். மீ கைது செய்யப்பட்ட நான்கு மாணவர் களும் விடுதலை செய்யப்படும் வரை கற்றல், கற் பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுவது சாத்தியமற்றது. மீ கைது செய்யப்பட்ட மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் மேலும் கைதுகள் இடம் பெறாது என்றும் உறுதியளிக்கப்படவேண்டும். மீ பல்கலைக்கழக சூழலில் இராணுவ மய மாக்கலின் அடையாளங்களாக அமைக்கப் பட்டுள்ள வீதித்தடைகள், சோதனைச் சாவடி கள் மற்றும் இராணுவம், பொலிஸாரின் பிரசன்னம், புலனாய்வுப் பிரிவினரின் தலையீடு நீக்கப்படாவிடில் இயல்பான சூழலில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது சாத்தியமற்றது என் பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். மீ மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கை களும் பல்கலைக்கழக சமூகத்தினை ஒரு பய பிராந்திக்குள் உட்படுத்தி அடக்கி வைத்திருக்க முயலும் ஒரு செயலாகும் என்பதனையும் சம் பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேற்படி விடயங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எமது பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை மீளத்திரும்புவதற்கு உடனடியாக ஆவண செய்யுமாறு யாழ்ப்பாணப் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களை வேண்டிக் கொள்கின்றது என அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

http://www.valampurii.com/viewnews.php?ID=35737

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.