Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை : பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா திடிரென வெளிநடப்பு செய்துள்ளார்

Featured Replies

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா திடிரென வெளிநடப்பு செய்துள்ளார்.

 

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  தெரிவுக்குழுவின் மூன்றாவது நாள் அமர்வு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.


இதன்போதே, தெரிவுக்குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறிய பிரதம நீதியரசர் அமர்விலிருந்து வெளியேறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54256-2012-12-06-12-48-12.html

  • தொடங்கியவர்

சிங்களவருக்கும் தலையீடு இல்லாமல் எஞ்சி இருக்கும் ஒரே இடம் - நீதித்துறை.

அதன் பிரதம நீதியரசருக்கே சிங்கள பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லை.

 

இதே பாராளுமன்றம் தமிழர்களுக்கு உரிமை தருமா?

விசாரணையிலிருந்து ஷிராணி வெளிநடப்பு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 டிசம்பர், 2012 - 15:02 ஜிஎம்டி
121123140741_cj_shirani_304x171_photoksu

இலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றம்சாட்டி பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை மேற்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளிலிருந்து ஷிராணி வியாழனன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்.

இன்றைய விசாரணையின்போது பலபக்க ஆவணங்களை ஷிராணி பண்டாரநாயக்கவிடம் கொடுத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அந்த ஆவணங்கள் அனைத்தையும் நாளை வெள்ளிக்கிழமைக்குள் படித்து விட்டு அவை தொடர்பான கேள்விகளுக்கு நாளையே (வெள்ளிக்கிழமையே) பதிலளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அந்த ஆவணங்களை படித்துப்பார்க்க மேலதிக அவகாசம் கொடுக்க தெரிவுக்குழு மறுத்துவிட்டதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஷிராணி பண்டாரநாயக்கவின் சார்பில் அஜராகும் சட்ட நிறுவனத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன்.

மேலும், இந்த விசாரணைகளின்போது, தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலர் இந்த விசாரணைகள் தொடர்பில் முன்கூட்டிய தீர்மானங்களை எடுத்துவிட்டதாக தாங்கள் உணர்ந்ததாகவும், இவர்களின் விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் இன்றைய விசாரணைகளில் இருந்து தாங்கள் வெளிநடப்பு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சிலர் இது குறித்த முன் முடிவுகளுக்கு வந்திருப்பதாக எந்த அடிப்படையில் நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று கேட்டபோது, தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை தாங்கள் வெளியில் சொல்லக்கூடாது என்பதால் தங்களால் இது குறித்து விவரமாக இப்போதைக்கு வெளியில் கூறமுடியாது என்று பதிலளித்தார் கந்தையா நீலகண்டன்.

இன்று அளிக்கப்பட்ட ஆவணங்களை படித்துப் பார்த்து பதிலளிப்பதற்கு மேலதிக அவகாசம் அளிக்கப்பட்டால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பங்கேற்பாரா என்று கேட்டபோது, அது குறித்து இப்போதைக்கு பதிலளிக்க முடியாது என்றார் அவர்.

ஆளும் உறுப்பினர்கள் வசைமொழிகளை பயன்படுத்தினர்

இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய நிகழ்வுகள் குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த, தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியல்ல, இந்த தெரிவுக்குழு செயற்படத்துவங்கிய நாள் (நவம்பர் 14 ஆம் தேதி) முதல் இன்றுவரை எதிர்தரப்புக்கு (ஷிராணி தரப்புக்கு) எந்த ஆவணங்களும் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

முதல்முறையாக இன்று அவர்களுக்கு சுமார் ஐம்பது ஆவணங்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றுக்கான பதில்களை ஷிராணி தரப்பு வழக்கறிஞர்கள் நாளை வெள்ளிக்கிழமை மதியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டதாகவும் லக்ஷ்மண் கிரியல்ல தெரிவித்தார்.

இந்த ஆவணங்களை படித்துப்பார்க்கவும், இதில் கூறப்பட்டுள்ள சாட்சியங்கள் குறித்து ஆராயவும் தமக்கு மேலதிக அவகாசம் தேவை என்று ஷிராணி தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த லக்ஷ்மண் கிரியல்ல, அவர்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த கோரிக்கைகளை நிராகரிக்கும்போது ஆளும் அரசு தரப்பு உறுப்பினர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கிரியல்ல தெரிவித்தார்.

இந்த விசாரணை நடைமுறைகள் நீதியாகவும் நேர்மையாகவும் இருக்காது என்று தாங்கள் நினைப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதியும் அவரது வழக்கறிஞர்களும் வெளிநடப்பு செய்ததாகவும் கிரியல்ல பிபிசியிடம் கூறினார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121206_shiraniwalksout.shtml

 

  • தொடங்கியவர்

cartoon-of-the-day-07_12_2012-600-1.jpg

  • தொடங்கியவர்

U.S. Embassy Urges Transparency and Due Process



The United States Embassy remains very concerned about the state of the Sri Lankan judiciary and the impeachment process of the Chief Justice.  We urge that the Government of Sri Lanka and the Parliamentary Select Committee investigating the Chief Justice ensure any investigation be conducted transparently, guarantee due process, and is conducted in accordance with the rule of law.



http://srilanka.usembassy.gov/pr-7december12.html

  • தொடங்கியவர்

எதிரணியின் தந்திரோபாயம்; ஆளுந்தரப்பு குற்றச்சாட்டு

 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவிலிருந்து வாபஸ் பெற்றமையானது தந்திரோபாய செயற்பாடாகும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நால்வர் இன்றைய தினம் குழுவிலிருந்து வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54334-2012-12-07-13-51-05.html

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தன

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் தோன்றிய உயர்நீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தன, பிரதம நீதியரசருக்கு எதிராக சாட்சியமளித்துள்ளார்.

 

 

இன்று மாலை தெரிவுக்குழு முன் தோன்றிய அவர் தனது சாட்சிகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் அங்கத்தவர்கள் நால்வர் அக்குழுவிலிருந்து வாபஸ் பெற்ற நிலையிலும் தெரிவுக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54333-2012-12-07-13-41-51.html

  • தொடங்கியவர்

பிரதம நீதியரசரின் வெளிநடப்புக்கான விளக்கம்

 

பாரபட்சமான விசாரணைக்கு முகங்கொடுக்க விரும்பாமலும் நீதித்துறையின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகவும் விசாரணையின் போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா வெளியேறியதாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அவசியமான தகவல்களை வழங்கும்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நவம்பர் 20இல் கேட்கப்பட்டது. ஆனால் அது ஒரு போதும் தரப்படவில்லை.
  • சாட்சியங்களின் பட்டியலை கேட்டும் தரப்படவில்லை.
  • குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமான ஆவணங்களின் பட்டியலை கேட்டோம். அதுவும் தரப்படவில்லை.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54332-2012-12-07-13-30-53.html

எதிரணியின் தந்திரோபாயம்; ஆளுந்தரப்பு குற்றச்சாட்டு

 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவிலிருந்து வாபஸ் பெற்றமையானது தந்திரோபாய செயற்பாடாகும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நால்வர் இன்றைய தினம் குழுவிலிருந்து வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54334-2012-12-07-13-51-05.html

 

சம்பந்தரே ஐயாவே "தெரிவுக்குழு என்றால் எனக்கு அப்படி ஒன்றும் அலர்ஜி இல்லை" என்று உலகநாடுகளுக்கு காட்டவா இந்த இந்த குப்பைக்குள் விழுந்தீர்கள்?  எனது அப்பிராயத்தில் நீங்கள் இதற்குள் போகாமலும், இன்று , JVP,UNP மட்டும் தங்கள் இஸ்ட்டப்படி தெரிவு குழுவைவிட்டு விலகியுமிருந்தால், இலங்கை அரசின் தெரிவுக்குழு நாடகங்களை உலக நாடுகள் இன்னமும் கொஞ்சம் வடிவாக விளங்கியிருக்க முடியும்.

போனது போகட்டும். இந்திய தூதுவர் இலங்கை அரசின் விளக்கத்தை டெல்கிக்கு அனுப்பிவைக்க முதல், எல்லா எதிர்கட்சிகளும் ஒன்றாக தெரிவுக்குழுவை விட்டு விலகியிருப்தை உடனே இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். முடிந்தால் சகல சர்வதேசநாடுகளுக்கும் இதை அறிவிக்க வேண்டும். ஆனால்  அவரின் தூதுவர்கள், சீனாவின் கமிசனுக்காக இலங்கையில் வேலைசெய்யும் இந்திய தூதுவர்கள் போலன்றி, தாங்களும் கொஞ்சம் அக்கறை எடுப்பார்கள். என்வே இந்தியாவினதை உடனே செய்ய வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.