Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதான மாணவர்கள் மூவருக்கு 3 மாதகால தடுப்புக்காவல் உத்தரவு.

Featured Replies

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர்மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,

“பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார். தற்போது 9 மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும்.

ஏனைய ஆறு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-1 பிரிவின் கீழ் 72 மணித்தியால தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்று விசாரணையாளர்கள் கருதினால், மேலும் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.

இவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரே விசாரித்து வருகின்றனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், தடுத்து வைக்கப்பட்டுள்ளதும், வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சிறிலங்கா படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

http://thaaitamil.com/?p=40428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.