Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குற்றச்சாட்டு : வால்மார்ட் மறுப்பு

Featured Replies

தங்கள் மீதான குற்றச்சாட்டினை வால்மார்ட் மறுத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினை அனுமதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வாயிலாக வால்மார்ட் நிறுவனம் காய்நகர்த்தி காரியம் சாதித்ததாக பகீர் புகார் எழுந்தது.

இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. எந்த அமெரிக்க எம்.பி.க்களையும் நாங்கள் வற்புறுத்தவில்லை. அமெரிக்க சட்டத்திட்டங்களை மதித்து தான் நடக்கிறோம் அதே வேளையில் இந்திய சட்டத்திட்டங்களையும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-134700160.html

இந்திய உறவுகளுக்கு வணக்கம்!
 
                              சில்லறை வர்த்தகத்தில் வால் மாட் நிறுவனம் வருவதை இந்தியர்களான நீங்கள் பெரிதும் வரவேற்கவேண்டும்.இவ்வளவு நாளும் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் அதிகமதில் ஒரு சிலவற்றை இங்கு வரிசைப்படுத்துவதுமூலம் அனைவரும் புரிந்துகொள்வீர்கள்.தரமான பொருட்கள்,அதுவும் நியாயவிலையில் கிடைத்திருக்காது.தரமான பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு தரக்குறைவான பொருட்களை உள்ளூரில் விற்பனை செய்திருப்பார்கள்.
 
கடைக்கு கடை விலை வித்தியாசம்.எல்லாபொருட்களையும் ஒரே இடத்தில் கொள்வனவு செய்யும் வசதி.இதைவிட வால் மாட்டில் கிடைக்கும் விலையில்விட எங்காவது பொருட்கள் மலிவாகக்கிடைக்கப்பெற்று அதை சரியான முறையில் உறுதிப்படுத்தினால் அந்த வித்தியாசப்படும் தொகையைக்கூட மீளளிப்பார்கள்.இதைவிட தொழில்வசதி அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலைக்காப்புறுதி.வேலையாட்களை வேலையை வேண்டி விட்டு துன்புறுத்தமாட்டார்கள்.சரியான முறையில் ஊதியம் வழங்குவார்கள்.பெண்களுக்கு கூட தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.இதையெல்லாம் வியாபாரத்தில் கொள்ளை லாபமடித்த பணமுதலைகளால் தாங்க முடியவில்லை.இனிமேல் காலங்களில் அவர்களால் கொள்ளை லாபமடிக்க முடியாது.கடைகளுக்கு வேலைக்கு அமர்த்தும் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டிவரும் இப்படியான பிரச்சனைகளால் தான் சில்லறை வர்த்தகத்தில் பெரு நிறுவனங்கள் வருவதை இந்திய வர்த்தகர்கள் மற்றும் அரசியல் வாதிகளும் விரும்பமாட்டார்கள்.இந்திய மக்களே விழிப்பாகவிருங்கள். நீங்கள்  உங்களுக்கு கிடைக்கும் பாக்கியத்தை நழுவ  விடாதீர்கள்  

தரமான பொருள்களை தமிழ் நாட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் சில்லறை வர்த்தகம் தொலைந்துபோகும். பலர் வேலை இழப்பார்கள்.

  • தொடங்கியவர்

உள்ளூர் சில்லறை வர்த்தகம் தொலைந்துபோகும். பலர் வேலை இழப்பார்கள்.

பல இலட்சம் மக்களுக்கு வேலை இல்லாமல் போகும்.

ஆனால் நீலப்பறவை முன்வைத்த கருத்தின் படி நீண்டகால அடிப்படையில் மக்களுக்கு இது இலாபத்தை தரலாம் என்கிறார். வட அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் சில்லறை வர்த்தகம் வால்மார்ட்டினால் பாதிப்பு அடைந்ததா? இல்லையா? எனப்பார்ப்பது உதவும்.

பொதுவில் ஒரு வியாபாரத்தில் நூறு பில்லியன் டொலர்கள் உள்ளதென வைத்துக்கொள்வோம். உள்ளூரில் அந்த வியாபாரம் கட்டுப்படுத்தப்படும்போது அந்த 100 பில்லியன்களும் உள்ளூர்வாசிகளிடமே இருக்கும்.

மாறாக அந்நிய முதலீடு என வரும்போது, கடைகளைக் கட்டுவதற்கான செலவு மட்டுமே அவர்களது முதலீடாக இருக்கும். மற்றும்படி நூறு பில்லியனில் சில ஆயிரம் மில்லியன்கள் அமெரிக்காவை தவறாமல் வந்தடையும். :D ஆக, வெளியே செல்லும் பணத்தை இந்தியர்கள் இழந்தவராகிறார்கள்.

இன்னொரு விதமாகப் பார்த்தால், நூறு பில்லியன் வியாபாரத்தை இருநூறு பில்லியன்களாக வோல்மார்ட் பெருக்குமாக இருந்தால் அது நன்மையே.. ஆனால் உள்ள சனத்தொகைதானே நுகர்வோர்? அது எப்படி மாறும் எனத் தெரியவில்லை.

எண்பதுகளின் பிற்பகுதிகளில் தமிழகத்தில் பல சுதேசிப் பொருட்கள் இருந்தன. Gold Spot, காளிமார்க், கோலிசோடா என்பவை உதாரணம். :D இன்று கொகாகோலாவும், பெப்சியும் தான். மக்களும் மாறிவிட்டார்கள்.

இன்னொரு உதாரணம் அம்பாசிடர் கார்கள்.

Edited by இசைக்கலைஞன்

இருந்தாலும் இடையில் உள்ள இந்திய தரகர்களும் இந்திய முதலைகளும் வால்மாட்ர் செய்வதைத்தானே செய்கிறார்கள்? பணத்தை சுருட்டி சுவிஸ் வங்கியில் முடக்குகின்றார்கள்?

 இதை விட வால்மார்ட் பரவாயில்லை தானே ??  :D

 வேலை செய்பவர்களுக்கு நல்ல வசதிகள், காப்புறுதி என்பனவற்றை வால்மார்ட் தரும். அத்துடன் வழக்கும் அந்த நிறுவனம் மேல் போடலாம்  :D

எனக்குத் தெரிந்து சில்லறை வர்த்தகத்தில் இந்தியப் பெரும் முதலாளிகள் நுழையவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே நுழைந்திருந்தது. ஆனால் வோல்மார்ட் என்பது ராட்சதன் போல.. :rolleyes: எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள்..! :D

நான் தமிழகத்தில் இருந்தபோது இரண்டு குடும்பங்கள் முன்னேறியதை நேரில் கண்டேன்..

முதலாமவர் சிறிய உணவுக்கடை நடத்தி வந்தார். நாங்கள் பெரிதாக அதற்குள் போவதில்லை. ஒரு பத்தாண்டு காலத்தில் நிலம் வாங்கிவிற்கும் தொழிலதிபர் ஆனார்..

இரண்டாவது நபர் காய்கறியை வண்டிலில் தள்ளி வந்து விற்கும் தொழிலில் ஈடுபட்டார். நான் சென்றமுறை தமிழகம் சென்றபோது பெரிய கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தனர் அவரது புதல்வர்கள். அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டிருந்தார்.

சிறுதொழில்ற்துறையில் சுயதொழில் செய்வது ஒப்பீட்டளவில் சுலபமாக இருந்தது. இனிமேல் அது இயலாது. :rolleyes:

சில தெளிவுகளை ஏற்படுத்தியமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

பங்குச்சந்தையில் வால்மார்ட்

வந்தது : 1972 ஆம் ஆண்டு
விலை: 0.05 USD

பிரிந்தது : 9 தடவைகள்
இன்று ஒரு பங்கின் விலை: 72.16 USD

நீங்கள் 1972 ஆம் நூறு டாலர்களை முதலீடு செய்திருந்தால், இன்று அதன் பெறுமதி: 36,000 x 72.16 ? 

நான் இது தொடர்பாக ஒரு இந்தியருடன் கதைத்த போது அவர் சொன்னது, இந்தியாவில் விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் 50 சதவீதமானவை மக்களைப் போய் சேர்வதில்லை என. அதற்கு காரணமாக இரண்டு விடயங்களைச் சொன்னார். முதலாவது  தகுந்த சேமிப்புக் கிடங்குகள் இல்லாமையால் அநியாயமாக பாவனைக்குதவாமல் அழுகிப் போகின்றன என்பது.  இரண்டாவது பெரும் கம்பெனிகள்; முக்கியமாக ரிலையன்ஸ் ஆனது அடிமாட்டு விலைக்கு உணவுப் பொருட்களை வாங்கி வேண்டும் என்றே அழுகிப் போகச் செய்தும் விநியோகத்தில் செயற்கை தாமதத்தை உருவாக்கியும் சந்தையில் உணவுப் பொருட்களுக்கான தேவையை (Demand) அதிகரிக்கச் செய்து அதன் பின் அதிக விலைக்கு விற்கின்றார்கள் என. ஒரு விவசாயிடம் வாங்கிய பொருளின் விலைக்கும் விற்கும் விலைக்கும் பெரும் இடைவெளி என்று.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சில்லரை வியாபாரச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க ரிலையன்ஸ் கடுமையாக லொபி செய்தது என்றும் கடுமையாக முட்டுக்கட்டைகள் போட்டது என்றும் சொன்னார். வோல்மார்ட் ஆனது தான் வாங்க நினைக்கும் இடங்களில் தானே உணவு சேமிப்பு கிடங்குகளை நவீன தொழில்நுட்பத்துடன் அமைத்து வருவதாகவும், நேரடியாகவே விவசாயிகளிடம் இருந்தும் அவர்களின் அமைப்புகளிடம் இருந்து வாங்க இருப்பதால் இடைத்தரகர்களின் தலையீடு போய்விடும் என்றும் சொன்னார். நீண்ட கால நோக்கில் இது நல்ல பலனைத் தரும் என்றார்.

எனக்கு வியாபார விடயங்களில் பெரியளவுக்கு அறிவு இல்லை என்பதால் (பொதுவாகவே அறிவு குறைவு என்பது வேறு விடயம்) அதிகமாக  குறுக்கு கேள்விகள் கேட்க முடியாமல் போய்விட்டது.

உள்ளூர் சில்லறை வர்த்தகம் தொலைந்துபோகும். பலர் வேலை இழப்பார்கள்.

இசைக்கலைஞன் பொருளாதாரத்தை பொறியியல் பாணியில் விளங்கிக் கொள்ளப் பார்க்கிறார் :lol:

இரண்டும் தத்துவங்களின் அடிப்படையில்தான் பிறக்கும் அறிவியல்களாயினும் பாரிய எதிர்வளத்தாக்கம் உடையவை.

பொறியியல்:

நம்மிடம் 100 கலன் எரிபொருள் இருக்காயின் அதன் வலு  கலனுக்கு 20 யூல்களாயின், அதை 25% வினைத்திறன் யந்திரத்தில் போடும் போது   நமக்கு 500 யூல்கள் வேலை செய்யப்படும். 1500 யூல்கள் நட்டம். ஆனால் இங்கே வேலை நடந்து முடிவதால் நாம் இந்த நட்டமானமுறையைப் பின்பற்றுகிறோம்.

பொருளியியல்:

உங்களிடம் 100 கலன் எரிபொருள் இருக்காயின், கலனை விலை 20 டலருக்கு வாங்கியிருந்தீர்களாயின், விற்கும் போது 25% லாபம் பெறமுடியுமாயின், கலனுக்கு 5 டலர் படி 500 டலர்கள் மொத்த லாபம் ஈட்டியிருப்பீர்கள். இந்த 500ம் ஆரம்ப செலவு 2000 டலர்களுக்கு மேலதிகமாகும். இந்த 500 டலர்களும் வெறும் காற்றுக்குள்ளால் இழுத்தெடுக்கபட்டது. இந்த புதிய பணம் 500 டலர்களும் புதிதாக உலகில் வந்து இறங்க வியாபாரம் என்ற தொழில் நடை பெற்றது.   அதாவது சும்மா இருக்காமல் வியாபாரம் போன்றதொரு உழைப்பை செய்தால் பணம் உருவாகும். இந்த 100 கலனையும் நீங்கள் விற்க உங்கள் பையன்(வேலையாட்கள்) உதவினான் ஆயின் அவன் உங்களிடம் 50 டலர்களை, படத்துக்கும், புது கால் சட்டைக்கும் கேட்பான். மேலும் உங்கள் மச்சன்(Bank) தான் எரிபொருளை வாங்க 2000 டலர் கடன் கொடுத்தவராயின் அவர் 50 டலர் வட்டி கேட்பார்.  உங்களிடம் 400 டலர் எப்போதும் இருக்காத பணம் இப்போ கையில் இருக்கிறது. உங்களுக்கு எரிபொருள் விற்ற நண்பர் இப்போ 2000 டலர் காசு வைத்திருக்கிறார். 

மச்சானின் கடன், 2000 டலர் பணம், உங்கள் முதாலீத்துவம், பையனின் வேலை, நண்பரின் எரிபொருள் நான்கும் சேர்ந்து எங்குமே இருக்காத 500 டலர்களை ஆக்கியிருக்கிறது.   Bank of Canada (Canadian Central Bank) உடனே 500 டலர் காசு நோட்டுக்களை அடித்து நீங்கள் உற்பத்தியாக்கிய அந்த 500 டலர் உழைப்பையும் நிரந்தரமாக்கிவிடும். இதன் பின்னர் இது வரையும் 2000 டலர்களாக இருந்த கனேடிய பொருளாதாரம் 2500 டலர்களாக விரிவடைந்துவிட்டதாக Bank of Canada வருட முடிவில் அறிக்கை விடும். இப்படி ஒரு மிகச் சாமனிய வழியில்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது.

இதில் நண்பர் திரும்ப 2000 டலருக்கு இன்னொருவருக்கு எரிபொருள் மூலப்பொருள் விற்பார். அதை வருடத்தில் 5 முறை விற்றாராயின் அவரின் வருட விற்பனவு 10,000 டலர்கள்.அவரும் 25% லாபம் ஈட்டுபவராகா இருந்தால் இந்த வருடம் அவரின் உழைப்பு 2,000 டலர்கள். இந்த யாபாரத்தில், அவர் 400, மச்சான் 50, பயன் 50 நீங்கள் 400 டலர்கள் உழைத்தீர்கள். நீங்கள் நால்வரும் சந்தையில் உங்கள் வருமானத்துடன்  போய் பொருள்கள் வங்க முயலும் போது இந்த வருடம் சந்தையில் 900 டலர்களுக்கு புது பொருள்கள் செய்து வந்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் எரிபொருள் விற்று லாபம் ஈட்டியதால் புதிதாக சில தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு உங்களுக்கு பண்டங்கள் செய்ய வேண்டி வந்திருக்கிறது.

எதற்கு,ம் நீங்கள் எதுவுமே செய்திருக்க முடியாது, மச்சன் அந்த 2000 டலர்களையும் கடனாகத் தராவிட்டால். இதனால்தான் காசுக்கு பஞ்சமான இந்தியா போன்ற நாடுகளில் அன்னிய முதலீடு வேண்டும்.

அந்த முதலீடு வந்தால்:

1. வால் மாட்டுக்கு கட்டங்கள் கட்ட வேண்டும். இப்போது குறைந்த ஊதியம் பெறும் தள்ளுவண்டில் விற்பனவுக்காரர், விவசாயிகள் புதிதாக வந்திருக்கும்  சம்பளம் கூடிய கட்டிட வேலைக்கு போய்விடுவார்கள்.

2. இதனால் விவசாய பொருள்களுக்கு தட்டுப்பாடு வர எஞ்சிய விவசாயிகள் நல்ல விலைக்கு விற்க முடியும். பெரு நிலத்தில் பயிரமுடியும்.

3. இப்போது பழைய தள்ளுவண்டி காரர்கள், விவசாயிகள் போன்றோருக்கு வருமானம் கூடியதால், மூன்று நேரமும் சாப்பிட உணவு பண்டகளை வாங்குவது மட்டும் இன்றி 4 மணிக்கே வேலையை நிறுத்திவிட்டு evening show பார்க்க போவார்கள். இதனால் புதிய படங்கள் தயாரிக்க வேண்டி வரும். வாழ்க்கைத்தரமும் சந்தோசமும் உயரும்.

இப்படி பொருளாதாரம் விரிவடைய வேண்டுமாயின் பணம் இல்லா நாட்டில் யாரோ ஒருவர் முதல் இட வேண்டும். நிச்சயமாக முதலிட்ட வால்மாட் தன் லாபத்தை எடுத்துத்தான் தீரும். முன்னைய  உதாரணத்தில், மச்சான் 50 டலர் வட்டி வாங்கினார். ஆனால் நீங்கள் 400, மகன் 50டலர், எரிபொருள் விற்ற நண்பர் உங்கள் யாபாரத்தில் 400 டலர்கள் என்று ஈட்டி இருக்கிறீர்கள். இது வந்த காரணம் மச்சானின் 2000 டலர்கலால்த்தான். ஆகவே வால்மாட் லாபம் ஈட்டினாலும், உண்மையில், விரிவடையும் பொருளாதாரத்தால் இந்தியா அதைவிட பல மடங்கு நன்மை அடையும்.   இதனால்த்தான் மேற்கு நாடுகள் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கின்ற்ன.

இந்த உதாரணம், உண்மையான பொருளாதார சுழற்சியின் விளக்கம் அல்ல. ஆனல் அதன் அடிப்படை.

மனித முயற்சி பணமாக மாற நிலம், முதல், முகாமைத்துவம் மூன்றும் வேண்டும். இந்தியாவில் உழைப்பும் நிலமும் இருக்கிறது. அதற்கு வால்மாடின் முகாமைத்துவமும், முதலும் வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரம் விரிவடைந்து மக்களின் ஏழமை மாறி நல்வாழ்வு வரும்.

ஒருதடவை நீங்கள் "நான் ஏன் மச்சனுக்கு தேவை இல்லாமல் 50 டலர் கொடுப்பான்" என்று நினத்து அவரிடம் 2000 டலர்கள் கடன் பட்டிருக்காவிட்டால், மேற்கண்ட உதாரணத்தில் வந்த பொருளாதார விரிவு ஏற்பட்டிருக்காது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1) :  http://www.badriseshadri.in/2012/10/1.html

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2) : http://www.badriseshadri.in/2012/10/2.html

அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3) : http://www.badriseshadri.in/2012/10/3.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.