Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் தொலைபேசியில் பேசிய இலங்கை, கனடா நபர்கள் யார்? - குழப்பத்தில் பொலீசார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
murugan-seithy-150.jpg

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி - முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள நபருடன், முருகன் தொலைபேசியில் பேசியதாக வந்த முறைப்பாடு தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். தம்பதியர் இருவரும், 15 நாட்களுக்கு, ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர்.

 

பல ஆண்டுகளாக, இவர்கள் சந்திப்பு நடந்து வந்தது. கடந்த மாதம், சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார், வேலூர் ஆண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது, முருகனிடமிருந்து கைத்தெலைபேசி ஒன்று, சிம்கார்ட் மற்றும் குறுந்தட்டுக்கள் இரண்டையும் கைப்பற்றினர். இதை ஆய்வு செய்த போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முருகனிடமிருந்து கைப்பற்றிய, சிம்கார்டில் இருந்து, இலங்கை, கனடாவுக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி பேசியது தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும், சென்னை பிரமுகர் ஒருவரிடம், அடிக்கடி பேசியதும் அம்பலமாகியுள்ளது.

 

அதோடு கைப்பற்றிய, குறுந்தகடுகளை ஆய்வு செய்ததில், இலங்கை உட்பட முக்கிய வரைபடங்கள் இருந்தது தெரிந்தது. இது பற்றி மத்திய அரசு உளவுத்துறையினர், இரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர். முருகனிடம் கைப்பற்றிய தொலைபேசி குறித்த விவகாரம், டில்லியில் உள்ள "றோ" உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முருகனை இரகசியமாக கண்காணிக்கும்படியும், முருகன் - நளினி சந்திப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், முருகன் - நளினி தம்பதியர் சந்திப்பு கடந்த, இரண்டு முறை நடக்கவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருவரையும் வேறு சிறைக்கு மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=71803&category=TamilNews&language=tamil

மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்கள் போல இருக்கின்றது. அதனால் தான் இந்தளவுக்கு கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர். தூக்கில் போட்டால் தான் சரி என்ற உணர்வினை தமிழக மக்களுக்கு இப்படியான செய்திகளின் மூலம் பரப்பி விட்டு தருணம் பார்க்கின்றனர்.

 

 

 

மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்கள் போல இருக்கின்றது. அதனால் தான் இந்தளவுக்கு கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர். தூக்கில் போட்டால் தான் சரி என்ற உணர்வினை தமிழக மக்களுக்கு இப்படியான செய்திகளின் மூலம் பரப்பி விட்டு தருணம் பார்க்கின்றனர்.

உண்மை நிழலி இதுவே நான் கருதுவதும் ................ ஒருவிடயத்தை சாதிக்க அந்த விடயத்திற்குல்லாலேயே காய்நகர்த்தி பம்டா அடிக்கும் நடவடிக்கை ,இதுதான் தற்போது தமிழீழ அரசியலிலும் கொடிகட்டிப்பறக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.