Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தனிநாட்டு கோரிக்கைக்கு இனவாதிகளே காரணம்: ராஜித்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R01(37).jpg
(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


'இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் விடுதலைப் புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம்' என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் நடைபெற்ற புதிய ஐஸ் தொழிற்சாலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,  

'இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பெடரல் முறை வேண்டாம் என்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட விரும்பவதாக தெரிவித்திருந்தனர்.

1958ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஒரு நாட்டுக்குள் இரண்டு மொழிகள் வேண்டும் என்று கோசமிட்டனர். இந்த கோசம் 20 வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கும் அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவதற்கும் வழிவகுத்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக 30 வருடகாலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு கோசங்களிட்ட இனவாதிகளில் 75 வீதமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்னும் 25 வீதமானவர்கள் மட்டுமே தென்னிலங்கையில் இருக்கின்றார்கள். 

ஒரு நாணயத்தில் இருக்கின்ற இரண்டு பக்கங்களைப் போன்றது தான் இன்றுள்ள தமிழ், சிங்கள இனவாதம்.இந்த இனவாதப் போக்கை இனிவரும் காலங்களில் எமது எதிர்காலப் பரம்பரைக்கு நாங்கள் கொண்டு செல்ல விடமாட்டோம். 

வட மாகாணம் எம்மோடு என்றும் கூடவே இருக்கும் ஒரு மாகாணமாகும். டீ.எஸ்.சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை செலவழிக்காத பணத்தைச் செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்திருக்கின்றது. 

இனி ஒரு பயங்கரவாதம் உருவாவதை தடுக்க எம்மால் முடியும். அவ்வாறு உருவாகினால் தடுப்பதற்கு படையினரால் முடியும். அத்துடன் 2013ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/54770-2012-12-14-09-12-28.html

தமிழ் கொலைகள்; தட்டிக் கேட்க ஆளில்லை
 

கடற்றொழில் அமைச்சர் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தமிழ் கொலைகள் அதிகமாக காணப்படுவதை படத்தில் காணலாம்.

 

இன்று யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இலங்கைக் கடற்றொழில் கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமாக காணியில் தனிநபர் ஒருவரினால் கட்டப்பட்ட ஐஸ் தொழிற்சாலையினை அமைச்சர் ராஜித சேனாரட்ன திறந்து வைத்தார்.


அதன் நிகழ்வுகளை முக்கியப்படுத்தும் நோக்கில் கட்டப்பட்டிருந்த வரவேற்பு பணர்கள் அனைத்திலும் தமிழ் எழுத்துக்கள் பிழையாக அச்சிடப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

 

இந்த பணர்கள் தென்னிலங்கையில் இருந்து அச்சிடப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் இந்த நிகழ்வுகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருடையது என்பதனால் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறைத்திணைக்களத்தினருக்கும் இது குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதுடன் அவர்கள் குறித்த நிகழ்வின் அழைக்கப்பட்ட விருந்தாளிகளாகவே இருந்தனர்.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிகளில் அநேகர் தமிழர்களாக இருந்தனர். ஆனாலும் அவர்களால் கூட இந்த கொலைகளை கவனித்து உரியவர்களிடம் சுட்டிக் காட்டுவதற்கு முடியவில்லைப் போலும்.


இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது தலைவர்களும் உடந்தையானவர்களோ என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.

அத்துடன் இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன் முடிவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடி நிகழ்வு சமப்படுத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

http://onlineuthayan.com/News_More.php?id=458371697814228018

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.