Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது: - கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆனந்தசங்கரி பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Anandasangaree-150a.jpg

எமது மத்தியில் ஒற்றுமையில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன். இன்று இங்கு பல விதமான கோசங்கள் எழுப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான கோசங்கள் இங்கு சிலருக்க புதுமையாக இருந்தாலும் இது 40 ஆண்டுகாலமாக திரும்பத்திரும்ப ஒலித்தகோசங்கள். ஆகவே 40 ஆண்டுகளாக இவ்வாறான கோசங்கள் எழுப்பப்படுவதாக இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக உள்ள பிரச்சினை.

  

இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கடந்த இரண்டாண்டு காலமாக நான் எனது கட்சி செயற்பாடுகளை ஒதுக்கி விட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்று செயற்பட்டு வருகின்றேன்.

அண்மையில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது என்று எனக்கு தெரியாது. எனவே சிலர் சில குறிக்கோளை வைத்து அரசியல் செய்யமுடியாது. இன்று எமக்கு அரசியல் அல்ல ஜீவாதார பிரச்சனையே உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதுவும் எனக்கு தெரியாது. நான் நூற்றுக்கு நூறு வீதம் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடாது 50 ஆண்டுகால அரசியலில் இருக்கின்றேன்.

அதனால் என்ன என்ன நடக்கின்றது. என்ன என்ன நடக்கபோகின்றது என்பதை அறிந்தவன். இன்று உங்களை உற்சாகமூட்டுவதால் மாலை உங்கள் வீடுகளுக்கு இராணுவம் வரலாம். ஏனெனில் இங்கு சிலர் மிக வேகமாக கோசம் எழுப்பினார்கள். அந்த வீரம் இந்த இடத்திலே நிற்கப்போவதில்லை. அதற்கு சோதனை வரப்போகின்றது.

அது இன்று மாலையோ, இரவோ அல்லது நாளையோ ஆக இருக்கலாம். அன்றில் இருந்து இதுதான் நடக்கின்றது. நான் எத்தனையோ இளைஞர்களின் மரண வீடுகளுக்கு சென்றிருக்கின்றேன். அவ்வாறானவர்கள் சிறிய குற்றம் செய்தவர்கள். உண்மையில் பெரிய குற்றம் செய்தவர்கள் தப்பி விடுவார்கள். மக்களை தூண்டிவிட்டு இப்படி சொல் அப்படி சொல் என்று கூறி முன்னின்று நடத்தியவர்கள் மறைந்து விடுவார்கள்.

இவ்விடத்தில் கைதட்டல் பெறுவது அல்ல சிறப்பு. நான் இவ்விடத்தில் நீங்கள் தொடர்ந்து கை தட்டிக்கொண்டிருக்கும் அளவிற்கு பேச முடியும். ஆனால் கைதட்டலுக்காக பேசுபவன் அல்ல நான். எங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது. நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம். தினம் தினம் நாம் அடிமைப்பட்டுகொண்டிருக்கின்றோம்.

இன்று அரசாங்கம் 2500 பேருக்க வேலை கொடுத்துள்ளது. 18,000 ரூபா சம்பளம் யார்தான் விடுவான். 100 பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்து இன்று 15 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்யவேண்டிய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அங்கே இருக்கின்றது. அவ்வாறான நிலைகளுக்குதான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இன்று சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் நாம் கூடவில்லை. எமது இனத்திற்காக இடம்பெறும் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளும் தலைவர்களில் அவர் ஒரு தலைவரே தவிர அவரது தலைமையில் இங்க கூடவில்லை. வேறு எவரது தலைமையிலும் கூடவில்லை. தலைமைப்பதவிகள் எல்லாம் போய்விட்டது. தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் மண் கவ்வி விட்டார்கள். இன்றைக்கு நாம் எல்லோரும் தலைவர்களாக உள்ளோம். எல்லாரும் மன்னர்கள் என்பதுபோல். எமக்கும் பொறுப்புகள் இருக்கின்றது.

இந்த போராட்டம் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது, படம் பிடித்தார்கள், பேசவிட்டார்கள், படம் பத்திரிகையில் வந்துவிட்டது. இது அல்ல போராட்டம். நான் கோட்பது எமக்குள்ள பிரச்சனை என்ன என்பதை நாம் இருந்து பேச வேண்டும். அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பில். கே.பி. என்பவரை அரசாங்கம் கொண்டு வந்து போட்டுள்ளது. யார் இந்த கே.பி.யாராவது கேள்வி கேட்டார்களா?. அரசாங்கத்தின் எடுபிடிகளாக பலர் இருக்கின்றார்கள் அவர்களே ஜென்ம விரோதிகள்' என்றார் அவர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=72064&category=TamilNews&language=tamil

ஐயா,


விடுதலப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் 'ஒற்றுமையை' குலைத்தவர்களில் ஒருவர் நீங்கள்.

சரி காலம் தாழ்ந்து திருந்தி உள்ளீர்கள்.


உங்களில் இருந்து இன்றும் எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பாடம் படித்தால், அதுவே உதவியாக இருக்கும்.

 

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றூமை எப்பிடி தானா வரும்..? அடிபோட்டால்தான் ஒற்றுமை வரும்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.