Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவில் மாபெரும் அமைதிப் பேரணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v.keenalparuthiannaaa.jpg

கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் இடம்பெறவுள்ளது. 
Place Gambetta, 75020 Parisஇல் ஆரம்பமாகும் பேரணி 341rue des Pyrénées, 75020 Paris இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தின் முன்பாக நிறைவடையும். 
 
அன்றையதினம் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது. 
 
கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 
 
மேலதிக தொடர்புகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 
(01 43 58 11 22) paruthiannaa%202.jpg

Edited by தமிழரசு

பருதி அண்ணாவுக்கு  எனது 45ம்  நாள் நினைவு வணக்கங்கள்

நினைவு வணக்கங்கள்

உலகம் முழுவதும் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதுவராலயங்கள் முன்பாக அடையாள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு !

 

Eelam Tamils around the world in many countries gather outside French embassies @ same day to ask France to deliver justice for Col Parithi's assassination by Sri Lankan intelligence agents. It will be 45 days since the murder and no one has been charged.

 

Join us outside French Embassy in London,
58 Knightsbridge
SW1X 7JT
3:30 TO 5:00 PM
Friday 21 Dec

 

Travel: Picadilly line, Knightsbridge
TCC-UK

பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்"
==================


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான எதிர்வரும் 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரை மாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

 

மேலதிக தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா

 

Tel : 020 3371 9313

 

 



481431_312512388852680_675005174_n.jpg

எமது பொது எதிரிக்கு எதிரான உணர்வும்...
அவர்களுக்கு எதிரான போராட்டங்களும்....


உலகெங்கும் வலுப்பெற வேண்டும்.

Edited by akootha

பாரிசில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு அமைதிப் பேரணி"

கடந்த 08.11.2012 அன்று பிரான்சில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு தினமான 22.12.2012 நேற்று சனிக்கிழமை மாபெரும் அமைதிப் பேரணியும் ஒன்றுகூடலும் பாரிசில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

 

Place Gambetta பகுதியில் அமைந்துள்ள மாநகரசபை கட்டடத்தின் முன்பாக பிற்பகல் 2 மணியளவில் ஒன்று கூடிய மக்கள் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்தைத் தாங்கியவாறு பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி பேரணியாகப் புறப்பட்டனர்.

 

தொடர்ந்து பேரணி 341 rue des Pyrénées 75020 Paris இல் அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தின் முன்றிலைச் சென்றடைந்தது. அங்கு விசேடமாக அமைக்கப்பட்ட கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படம் வைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.யோசெப் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு துணைவியார் மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

 

இதனையடுத்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு சுமந்த 'உறுதி என்றால் பரிதி' என்ற பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இந்த இறுவெட்டை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்கள் வெளியிட்டுவைக்க கேணல் பரிதி அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

 

நிகழ்வில் பிரான்சு நாட்டு கட்சி மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருந்தனர். பிரான்சின் La courneuve மாநகரசபை உறுப்பினர் (Anthony Russel ; La courneuve conseillor municipal) பேசும் போது " பிரான்ஸ் அரசு பிரான்சில் இருந்து ஸ்ரீ லங்கா தூதராலயத்தை நகர்த்த வேண்டும். இவ்வாறான படுகொலையை செய்யும் நாடாகிய ஸ்ரீ லங்காவின் தூதராலயத்தை பிரான்சில் வைத்திருப்பது மனித வுரிமை சட்டத்தை எழுதிய பிரான்சுக்கு இழிவையே தேடி தரும் என்றார்.

 

குர்திஸ்தான் மக்கள் பிரதிநிகள் (Murat Roni ; Kurdhistan Makal Munnani) பேசும்போது, தாம் தமிழர்களின் போராட்டத்தின் நிழலிலேயே வளர்த்தவர்கள் என்றும் தாம் தமிழர்களுக்கு நடந்த படுகொலையை தமது மக்களுக்கு நடந்ததாக பார்பதாகவும், தாம் எவ்வாறு குர்திஸ்தான் மக்கள் விடுதலை வேண்டி நிக்கின்றதோ அதே போல் தமிழீழ மக்களும் விடுதலையை தேடி நிற்பவர்கள், ஆகவே தமிழர்களின் போராட்டத்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தனர்.

 

புரட்சிவாத சோசலிசக் கட்சியைச் சேர்ந்த Mons Jacques (Parti de Solidarité Revolutionaire) பேசும் போது, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் போல் மேர்பி என்ற நாடாளுமன்றத்தின் ஊடாக பலதடவை தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் தெரிவித்திருந்தோம். மக்கள் போராட்டங்கள் ஊடாகத்தான் நாங்கள் விடுதலை அடையமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் சென்ற புதன்கிழமை யுனெஸ்கோ அலுவலகத்தின் முன்பாக பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திலும் நாங்கள் கலந்துகொண்டோம். தமிழர் போராட்டத்தில் தொடர்ச்சியான பங்களிப்பு என்றும் இருக்கும் என்றார். இந்நிகழ்வில் ஆயிரம் வரையான மக்கள் கொட்டும் மழைக்கு மழைக்கு மத்தியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

46444_313223715448214_900998774_n.jpg

 

 

 

 

15598_313224172114835_662161868_n.jpg

 

 

 

 

548615_313224685448117_1552166474_n.jpg

 

 

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.