Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன்'

Featured Replies

வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

 

புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வழங்குவதற்கு விரும்புவதாகவும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

'எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன். உங்கள் தேக ஆரோக்கியம் விரைவில் குணமடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55587-2012-12-26-07-45-06.html

 

 

  • தொடங்கியவர்

வெளிசுவேலா அதிபர் - அமெரிக்காவிற்கு எதிரானவர்.அவருக்கு மகிந்தார் ஆதரவு தருகின்றார்.
இரானின் அதிபர் -  அமெரிக்காவிற்கு எதிரானவர்.அவருக்கு மகிந்தார் ஆதரவு தருகின்றார்.

 

இருந்தும் மகிந்தாவிற்கு அமெரிக்கா ஆதரவு தந்த வண்ணம் ஆனால் சரியான தருணம் பார்த்தவண்ணம் உள்ளது என நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பிரதமரே அமெரிக்காவில் போய் சிகிச்சை பெறுகிறார். இவர் நிபுணரை அனுப்பப்போறாராம். :D

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரமா மேல அனுப்பிற பிளான் போல :(

  • தொடங்கியவர்

நிறைய எண்ணெய் வளம் கொண்ட நாடு - வெனிசுவேலா. ஆனால், தலைவர் சாவஸ் கியூபா நாட்டுடன் அதிக உறவு கொண்டவர். கியூபா நாட்டின் மருத்துவமும் சிறந்தது.

 

சிங்களம், கியூபாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது. கியூபா ஊடாக வெளிசுவேலாவை கைக்குள் போடா முயலுகின்றது.


அத்துடன் வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலத்தீன் அமெரிக்க வாக்குகளை வெல்லவும் எண்ணுகின்றது.

பணத்துக்காக ஆசை அளவுக்கு மேல் போனதால்லை, நகேஸ் அரசன் என்று நினைனத்து வாசல் காவலாளியில் இருந்து ஒவ்வொருவராக விழுந்து கும்பிட்டுக்கொண்டு வந்து கடைசியில் சென்பக பாண்டியனை கண்டு கும்பிட்டது போல, இலங்கை சிற்றர்சர்கள் சரியான அரசனை கடையில் விழுந்து கும்பிடுவார்கள். நாம் அன்றுவரை பொறுமை காக்கலாம்.

  • தொடங்கியவர்

The full letter is as follows:

 

His Excellency Hugo Chavez
President of the Bolivarian Republic of Venezuela

 

Excellency,

 

I have learnt that you are currently undergoing medical treatment in the Republic of Cuba and wish to convey my sincere good wishes for your early recovery.

 

While the prayers and good wishes of the people of Venezuela and those of your friends throughout the world, including Sri Lanka, will undoubtedly aid your speedy recovery, I wish to offer to your Excellency the expertise of a doctor from my country who, I believe, will be significantly instrumental in the early restoration of your good health.

 

In the meantime, the Government and people of Sri Lanka join me in continuing to hope and pray for your Excellency’s well-being.
 

Please accept Excellency, assurances of my highest consideration.

 

Mahinda Rajapaksa
President of the Democratic Socialist Republic of Sri Lanka

 

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி அனுபவம் இருப்பதாக தெற்கின் தகவல்கள் கூறுகின்றன-

Mahinda%20shock_CI.jpg


 

வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேசிற்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர் ஒருவரை அனுப்பி வைக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

 

ஹியூகோ சாவேஸ் புற்று நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்று நோயை குணப்படுத்துவதற்காக ஹியூகோ சாவேஸ் அண்மையில் கியூபாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

 

கியூபாவில் ஹியூகோ சாவேஸிற்கு பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

புற்று நோயைக் குணப்படுத்தக் கூடிய ஓர் மருத்துவர் தம்மிடம் இருப்பதாகவும், அவரினால் நோயைக் குணப்படுத்த முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

குறித்த மருத்துவரின் சேவையை வழங்குவதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மருத்துவரின் சேவையை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெனிசுலா ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கூடிய விரைவில் நோய் குணமாக வேண்டுமென இதயபூர்வமாக வேண்டுவதாக ஜனாதிபதி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நாட்டு மக்களும், அரசாங்கமும் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸிற்காக பிரார்த்தனை செய்து வருவதாக ஜனாதிபதி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதே வேளை புற்று நோய் குறித்த அனுபவங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு இருப்பதாகவும் இந்த வைத்தியரின் திறமை பற்றி அவருக்கு நேரடி அனுபவத்தினூடான நம்பிக்கை இருப்பதாகவும் தெற்கின் சில தகவல்கள் கூறுகின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86964/language/ta-IN/article.aspx

ஹியூகோ சாவேசிக்கும் மகிந்தாவுக்கு தலையில் வந்த அதே வருத்தமா?

 

அட கறுமம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.