Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் வர்த்தகப் பொருளாகும் தண்ணீர்

Featured Replies

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

MILLIONS LACK SAFE WATER

sanitation-map-grey.pngsanitation-map-grey.png
343

million without water access in:

(click a region)

  • Africa

01_water_2012.jpg

More than 3.4 million people die each year from water, sanitation, and hygiene-related causes. Nearly all deaths, 99 percent, occur in the developing world.3

Lack of access to clean water and sanitation kills children at a rate equivalent of a jumbo jet crashing every four hours.1

Of the 60 million people added to the world's towns and cities every year, most move to informal settlements (i.e. slums) with no sanitation facilities.7

780 million people lack access to an improved water source; approximately one in nine people.2

"[The water and sanitation] crisis claims more lives through disease than any war claims through guns." 9

An American taking a five-minute shower uses more water than the average person in a developing country slum uses for an entire day.9

Over 2.5X more people lack water than live in the United States.2

More people have a mobile phone than a toilet.2

 

http://water.org/water-crisis/water-facts/water/

  • தொடங்கியவர்

தமிழகத்திலும் சரி தமிழீழத்திலும் மழை நீர் சரியான முறையில் சேகரிக்கப்படுவதில்லை

 

உலகின் மிகப்பெரிய "கான்கிரீட்" கால்வாய்கள் நீர்பாசன திட்டமான நர்மதா திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது குஜராத்.

 

 

 

  • தொடங்கியவர்

ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா!

 

'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!

 

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

 

Tamil_News_large_343970.jpg

 

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''

 

- நாமும் கலங்கித்தான் போனோம்.

 

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

 

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

 

http://news.vikatan.com/index.php?nid=4401#cmt241

  • தொடங்கியவர்

- ஒவ்வொரு புலம்பெயர் தமிழர் ஊர்ச்சங்கங்கள், முன்னால் பாடசாலை மாணவர் அமைப்புக்கள் ஒவ்வொரு ஊரை தத்தெடுத்து மரம் நட்டால், தாயகத்தில் வரட்சியை குறைக்கலாம்.

 

- மழைகாலத்தில் நீரை சேமிக்க ஊரில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு வருடாந்தம் முறையான கவனிப்புக்களை மேற்கொண்டால் வெள்ள அவலத்தை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எல்லா நகர்களிலும் மே மாதத்தில் நாற்பது டொலருக்கு வீட்டு கூரை மழை நீர் சேமிப்பு கொள்கலன்கள் விற்பார்கள்.

வாங்கி பொருத்தினால் புல் தரை, வீட்டு தோட்ட பாவனைகளுக்கு உதவும்.

 

இதுவா விக்?

 

http://gardenwatersaver.com/how-it-works/

  • தொடங்கியவர்

கனடாவில் எல்லா நகர்களிலும் மே மாதத்தில் நாற்பது டொலருக்கு வீட்டு கூரை மழை நீர் சேமிப்பு கொள்கலன்கள் விற்பார்கள்.

வாங்கி பொருத்தினால் புல் தரை, வீட்டு தோட்ட பாவனைகளுக்கு உதவும்.

 

 மிக நல்ல ஆலோசனை. இவ்வாறான ஒப்பீட்டளவில் மலிவான அதேவேளை செய்முறைக்கு உகந்த நீர் சேமிப்பு திட்டங்களை தாயகத்தில் அமுல்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

 

Tamil_News_large_617861.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நீர் உறிஞ்சப்படுவதை தடுங்கள்: ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை

 

சென்னை குடிநீருக்காக வழங்கப்படும் கிருஷ்ணா நதிநீர், ஆந்திர எல்லைக்குள் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும்படி, அம்மாநிலத்திற்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னைக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக, தமிழகம் மற்றும் ஆந்திர தலைமைச் செயலாளர்கள் அளவிலான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஆந்திர தலைமைச் செயலாளர் மின்னி மேத்யூ ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்களுடன் இருமாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தின் தரப்பில், கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் 600 கன அடி நீர், தமிழக எல்லைக்குள் நுழையும் போது வெறும் 150 கன அடி என்ற அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எல்லை வழியாக கிருஷ்ணா நீர் பயணிக்கும் போது, அதிக இடங்களில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் தமிழகம் மிகவும் பாதிக்கப்படுவதாக எடுத்துக்கூறப்பட்டது. இதை ஆந்திர அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 2012-13ம் ஆண்டு ஆந்திரா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில், பாக்கி நீரான 8.24 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி வலியுறுத்தப்பட்டது. ஆந்திர தரப்பில், காளஹஸ்தி பகுதியில் தமிழகத்தின் சார்பில் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டது.

 

பின்னர் ஆந்திர மாநில அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தங்கள் மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், இவ்விஷயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

மேலும், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநில இன்ஜினியர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். இக்குழு அவ்வப்போது அளிக்கும் அறிக்கையின்படி, சென்னைக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

கடந்த 1983ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி., தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஆந்திரா தனது கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.yahoo.com/%E0%AE%A8-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D-103700627.html

- ஒவ்வொரு புலம்பெயர் தமிழர் ஊர்ச்சங்கங்கள், முன்னால் பாடசாலை மாணவர் அமைப்புக்கள் ஒவ்வொரு ஊரை தத்தெடுத்து மரம் நட்டால், தாயகத்தில் வரட்சியை குறைக்கலாம்.

 

- மழைகாலத்தில் நீரை சேமிக்க ஊரில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு வருடாந்தம் முறையான கவனிப்புக்களை மேற்கொண்டால் வெள்ள அவலத்தை தவிர்க்கலாம்.

 

 

 

எமது பிரதேசத்தில் வயல் வெளிகளில் முன்னோர்களால் நடப்பட்ட நிழல்தரும் அனைத்து மரங்களும் விறகுத்தேவைக்காக வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன, தனது வீட்டு எல்லைக்குள் மட்டும் மரங்களை நட்டு பராமரிக்கும் எமது மக்களின் போக்கு மிகவும் வருந்ததக்கது. 

  • தொடங்கியவர்

ஊரை விட்டு வெளியேறும் விவசாயிகள்

 

  • தொடங்கியவர்

பயனற்று போகும் தடுப்பனணகள்

 

  • தொடங்கியவர்

மழை வேண்டி ஒப்பாரி:

 

திருச்சி உறையூரை அடுத்த அரவானூர் கிராமத்தில், மழை வேண்டி, முச்சசந்தியில் ஒப்பாரி வைக்கும் வினோத சசடங்கை, ஊர் பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு செசய்தனர்.

 

ELARGE_20130124005917992108.jpeg



http://tamil.yahoo.com/photos/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-24-1-2013-1359005600-slideshow/%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B1-photo-200818343.html

  • தொடங்கியவர்

கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...

 

இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்...

 

காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்...

அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்...

முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்...

பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை காயவைத்தானே அப்போது எங்கே போனது உங்கள் குரல்...

 

"என்னை வாழவைத்த தமிழக மக்கள்" என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது திரு ரஜினி அவர்களே உங்களை வாழவைத்த இந்த மக்கள் இன்று நீரில்லாமல் சாகிறார்களே, வயலெல்லாம் காய்கிறதே ஒரு வார்த்தையாவது காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று கேட்கும் துணிவு உங்களுக்கு உள்ளதா?...

 

தமிழ்நாட்டில் இதுவரை விவசாயம் பொய்த்துபோனதால் 10ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீரை தாருங்கள் என்று எந்த நடிகரிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை...


சேவை வரிக்கு எதிராக குரலிருக்கு எங்கள் விவசாயிக்கு எங்கே உங்கள் குரல்...

 

குற்றப்பத்திரிக்கை, ஆணிவேர், தேன்கூடு இவற்றிக்கு எங்கே போனது உங்கள் கருத்துரிமை?...


40 ஆண்டுகால நண்பருக்கு குரல் ரஜினி அவர்களே நாற்பதாண்டுகாலம் உங்களை வாழவைக்கும் தமிழக விவசாயி நீரின்றி சாகிறான் எங்கே உங்கள் குரல்?..

 

 

-முகநூல்



735003_10200319926899066_148695753_n.jpg

  • தொடங்கியவர்

சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது.

 

சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

சீன வெளியுறவு அதிகாரி ஹாங் லீ குறிப்பிடுகையில், இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றில் நீரின் வேகம் குறையாது. தற்போது கட்டப்பட உள்ள அணையிலிருந்து நாங்கள், மின்சாரம் தயாரிக்கவில்லை என்றார்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116070

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைகள்

 

 

 
தமிழ் நாட்டின் தலையாய 8 பிரச்சனைகள் என்ன? இந்த கேள்விக்கு நம் மனதில் 8ஆ இருக்கிறது? 100க்கும்மேல்,1000க்கும் மேல் இருக்கிறது என்று நமக்கு தோன்றலாம். ஆனால் தமிழ் நாட்டின் முன்னேற்றம், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
இரண்டாவது பிரச்சனை இதுவும் தண்ணீர் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர், Tஅச்மc, சாராயம், குடி சம்பந்தப்பட்ட பிரச்சனை, கல்லச்சாராய பிரச்சனை. Tஅச்மc மூடிவிட்டால் கல்லச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும். அதன் மூலம் சாவு நிகழும் என்று கூறியே Tஅச்மc ஒவ்வொரு மூலையிலும் திறந்துவிட சிறுவர் முதல் பெரியவர் வரை குடித்து, குடிப்பதே தவறு அவ்வாறு குடித்தால் அளவாக குடிக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற அளவுக்கு குடிக்கிறார்கள். 
 அடுத்த பிரச்சனை, திரைப்படமும், நடிகர் ரசிகர் மன்றமும். எல்லா திரைப்படமும், நடிகர் மன்றமும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நடிகர் மன்றம் என்ற பெயரில் நடிகர்களை கடவுளைப்போல் துதிபாடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். திரைப்படம் என்ற பெயரில் பணம் பண்ண வேண்டும் என்ற கருத்தில், மனித மனதை புண்படுத்தி, திரைப்படம் எடுத்து, மனிதர்களை தவறாக நடத்தி செல்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது மூன்றாவது பிரச்சனை.
 
நான்காவது பிரச்சனை, மின்சார பற்றாக்குறை. அதிரதமான வளர்ச்சி, தொழில் வளர்ச்சி. கடந்த 3௪வருடங்களாக இது உலகமயமாக்க, தமிழ் மாநிலம் அதிக அளவில் பயன்படும். அதற்கு மின்சாரம் இல்லை.
ஐந்தாவது பிரச்சனை, இது உலகமயமாக்கலில் சேர்ந்து வருகின்ற கலாச்சார குழப்பங்கள். பல மாநிலங்களிலிருந்தும், பல நாட்டிலிருந்தும், தமிழ் நாட்டில் நம்மோடு சேர்ந்து வாழ்கிறதை நாம் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பட்ட பெயரோடு இருக்கிறோம். யாரையும் நாம் வெறுத்து ஒதுக்கும் பழக்கமோ, பண்போ நம்மிடம் இல்லை. ஆனால் இதன் மூலம் நாம் நமது பண்டைய ஆழமான வேரூன்றிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நீர்த்து போக செய்து கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் வருகிறது.
 
ஆறாவது பிரச்சனை, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான இளைஞர்கள் பொறியியல் மற்றும் பலதரப்பட்ட படிப்பு படித்துவிட்டு, கிராமப்புறங்களில் இருந்து கொண்டு, சரியான வேலை கிடைக்காமல், சிறிய குறைகளை வைத்துக் கொண்டு, அதை பெரியதாக மனதில் வைத்துக் கொண்டு பின்தங்கி இருப்பது.
 
ஏழாவது பிரச்சனை, விவசாயிகளுக்கு அவர்கள் உழைப்புக் கேற்ற ஊதியம், வருமானம் கிடைப்பதில்லை. ஆதலால்,அவர்கள் முக்கியமான விவசாய தொழிலை கைவிட்டு மற்ற தொழிலிற்கு செல்கிறார்கள். இது மிகப்பெரிய பிரச்சனை.
 
அடுத்ததாக, தரமான கல்வி, சரியான கல்வி மாணவர்களுக்கு சென்று அடைகிறதா என்பது அடுத்த பிரச்சனை.  

 

 

http://www.valamaanatamizhagam.com/p8_2.html

 

 

 

 

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் ஷட்டர்களில் துளைகள் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வீணாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

 



உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் நீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மூன்று நாட்களுக்கு நீர் திறந்துவிடப்படும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

 

  • தொடங்கியவர்

சென்னையில் லஞ்சம் வாங்கியதாக 2 விஞ்ஞானிகள் கைது

 

சென்னையில் குடிநீர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு பணம் வாங்கி கொண்டு உரிமத்தை புதுப்பிக்க முயன்ற விஞ்ஞானிகள் இரண்டு பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

 

வாட்டர் சிஸ்டம் எனப்படும் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விநாயக மூர்த்தி. நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ உரிமத்தை புதுப்பிக்க தேசிய தர நிர்ணய கழகத்தை அணுகியுள்ளார். அப்போது கழகத்தில் விஞ்ஞானிகளாக பணிபுரியும் பி.என்.முரளி மற்றும் வி.வெங்கட்நாராயணன் ஆகிய இரண்டு பேரும் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தாமல், உரிமையாளரிடம் பணம் பெற்றுக் கொண்டு நிறுவனத்துக்கு உரிமம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

முன்னதாக சிபிஐ அதிகாரிகளுக்கு இது குறித்த தகவல் கிடைத்துள்ளது. தகவலை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்த போது விஞ்ஞானிகள் இருவரும் பணம் பெறும் போது பிடிப்பட்டனர்.

 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் விஞ்ஞானிகள் வீட்டை ஆய்வு செய்து 15 லட்சம் ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

http://puthiyathalaimurai.tv/two-scientist-arrested-in-chennai-for-getting-bribe

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.