Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரங்கன் போய்விட்டான் !

Featured Replies

kuperan.jpg?fit=500%2C350

ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப்பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவன் தனது இயக்கப்பெயருடனேயே பழகினான்.அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான். பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில்வைத்திருந்து அதன்பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சிமுகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள்.அப்படியான ஒரு

தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது.அங்குதான் அவன் குபேரான மாறினான்.அவனின் இயக்கப்பெயர் குபேரன்.அதிலும் ‘சிரிப்புக்குபேரன்’ என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும். 3வது பயிற்சிஅணியில் பயிற்சிபெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்தவீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சிமுகாமின் 6வது 9வது பயிற்சிஅணிகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டராகவும்’ விளங்கினான்.பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான்.அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான்.தாயகம்வந்ததும் யாழ்அணியில் குபேரனும் ஒருவனாகிறான்.

தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான்.அதன்பின் யாழ்கோட்டைமீதான் முற்றுகைப்போரில் முக்கியபங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பாராஅண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கியவீரர்களில் ஒருவானாகவும் ரங்கன் விளங்குகின்றான். அதன்பின் பாலாஅண்ணையுடனேயே இந்தியாவந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான்.கேட்டால் ‘அமைப்பைவிட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு
இங்கு இருப்பதாகவும்’ சென்னையில் சொல்லிக்கொண்டிருந்தான்.விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனைவாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிகநிறைய சித்திரவதைகளும் நடந்தேறின.அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களைவைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.

முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும்மேற்பட்டோர்) மரணதண்டனையை நீதிமன்றம் வழங்கியது.புலன்விசாரணையை தலைமைதாங்கி நடாத்திய கார்த்திகேயன் ‘இது வாய்மையின் வெற்றி’ என்று புளகாங்கிதம் அடைந்ததார்.அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன்.ஆனாலும் பின்னர்நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான்.ஆனால் இந்த காலத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடிஇருக்கின்றான். அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழவிடுதலைமீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காணமுடிந்திருந்தது.ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்துகொண்டே இருப்பான்.

முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்துவிட்டுபோன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது.ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை.மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று வேலை செய்யதொடங்கிவிட்டான்.இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கிவிடமுடியாத ஒரு உற்சாகமனிதன் அவன். இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது.அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான்.அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்துவிட்டது. அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது. இறுதிவரைக்கும் தமிழீழநினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.

ச.ச.முத்து

http://rste.org/2012/12/29/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/

Edited by akootha

இறந்தவருக்கு அஞ்சலி அனால் இவரது கதைதான் புரியவில்லை இந்திய பிரதமர் கொலை வழக்கு விபரங்களில் இவரது விவரங்களை படித்தாக எனக்கு நினைவில்லை விபரங்கள் இருந்தால் இணைத்து விடலாம் அல்லவா ?

  • தொடங்கியவர்

ராஜீவ் காந்தி கொலையில், சந்தேக நபர்களாகக் கைதான முருகன் நளினி போன்றவர்களுடன் கைதாகிய நடராஜா ராஜசூரியர் (ரங்கன்) நேற்றிரவு லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

சிறுவயதிலேயே புலிகள் இயக்கத்துக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்தவேளை ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டார். கைதான ரங்கனுக்கு, பழ.நெடுமாறன் ஐயா , வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் வைகோ அவர்கள் உதவினார்கள். இவர்கள் உதவியால் விடுதலையான, ரங்கன் பின்னர், பிரித்தானியாவில் வசித்துவந்தார். லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர், முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்கவேண்டும் என்று கூறிவந்தார்.

பல வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்த ரங்கன் சில மாதங்களுக்கு முன்னர், தாம் குறிப்பிட்டதுபோல, முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்க விரும்பி அவரை லண்டனுக்கு அழைத்துள்ளார். வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பல தகவல்கள் தவறானவை. ஆனாலும் குபேரனிற்கு அஞ்சலிகள்.85 ம் முதன் முதலாக பலாலி முகாமை சுற்றி காவலரண் அமைக்கும் பணியில் என்னோடு வந்து வசாவிளான் ஒட்டகப்புலம் முகாமில் ஒன்றாக இருந்தவன். பின்னர் ராஜுவ் கொலையுடன் சட்பந்தப் பட்ட சிவராசன் குழுவினருடன் பெங்களுரில்  ரங்கநாத்தின் வீட்டில் தங்கியிருந்த போது குபேரன் வெளியே பெற்றோல் வாங்க போயிருந்தான்  அவன் திரும்பி வந்போது ரங்கநாத் வீடு சுற்றி வழைக்கப்பட்டிருந்தது அங்கிருந்து தப்யோடி தமிழ் நாட்டிற்குள் வர முயன்றபோது வழியில் வைத்தே காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தான்.பொன்னம்மான்  ஊருக்கு வந்தது  86ம் ஆண்டு  நாவற்குழி முகாம் தாக்குதலிற்கு சில காலத்திற்கு முன்னர். குபேரன் 84ல் இருந்தே யாழில்தான் இருந்தான். லண்டனில் வசித்த இவர் ஏற்கனவே  திருமணமாகி மறமுறிவு பெற்றவர். அண்மையில்தான் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய லண்டனிற்கு அழைத்திருந்தார். இவரது மரணம் நடந்த வேளை நான் இலண்டனில் நின்றிருந்தேன் மரண வீட்டிற்கு போவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

ஜனனம்: 29.12.63 மரணம்: 27.12.12
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
ரங்கன் மற்றும் குபேரன் என அழைக்கப்படும் நடராஜா இராஜசூரியர் இன்று 27.12.12 காலமானார்.
அன்னார் நடராஜா, தனபாக்கியம் (இந்தியா) ஆகியோரின் அன்பு மகனும், இராஜமோகனா (ரதி - இலண்டன்), இராஜயோகன் (ரமணன் -கனடா), இராஜாம்பிகை (ரூபி - இலண்டன்), இராஜபிரகாஸ் (ருத்திரா - இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்தித் (இலண்டன்), சகுந்தலா (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்), சமரன், சரித்திரா (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி, மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். . லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர்,வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் - மைத்துனர் - இலண்டன்
07850648395

இராஜாம்பிகை - ருபி - சகோதரி - இலண்டன் - 07413726545

இராஜயோகன் - ரமணன் - சகோதரன் - கனடா -
00 1 4389 309 241

இராஜபிரகாஸ் - ருத்திரா - சகோதரன் இந்தியா -
00 91 44 245 10 468

Edited by sathiri

தகவலுக்கு நன்றி சாத்திரி  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.