Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 இன் சில எதிர்வு கூறல்கள்

Featured Replies

இரண்டாவது தடவையாக அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபாமா தனக்கென்று சில முத்திரை பதிக்கும் திட்டங்களை முன்னெடுப்பார்.

 

 

அவரின் இராஜாங்க செயலாளர் தெரிவான ஜோன் கெரி உலக அரசியலில் எவ்வாறான செயற்பாட்டுக்களை எடுப்பார் என்பதில் இஸ்ரேலிய மற்றும் ஆசிய நிலவரங்கள் தங்கி உள்ளன.

 

அமெரிக்க பெருளாதாரமே அமெரிக்கர்களின் பார்வையில் ஒபாமாவை பற்றிய விம்பத்தை உருவாக்கும்.

  • தொடங்கியவர்

2012 இலேயே சிரிய அதிபர் பதவியை துறப்பார் என கூறப்பட்டது, நடக்கவில்லை. முக்கிய காரணம் உருசியா.

 

ஆனால், அதிபர் அசாத்தின் பிடியும் உருசிய ஆதரவும் நலிந்தே உள்ளன. எனவே அசாத் பதவியில் இருந்து அகற்றப்பட்டக்கூடும்.

 

இருந்தாலும் சிரியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? அங்கு அல்கைடா கை ஓங்குவதை மேற்குகலம் ஏற்குமா? உருசியா மத்தியகிழக்கில் உள்ள தனது ஒரே தளத்தை இழக்குமா? என்ற கேள்விகள் உள்ளன.

Edited by akootha

  • தொடங்கியவர்

தை மாதத்தில் இஸ்ரேலில் நெத்தனயாஹூவும் புரட்டாதியில் ஜெர்மனியில் மேர்க்கலும் தேர்தலில் வெல்லுவார்கள்.

 

ஈரான் மீதான யுத்தத்தை இஸ்ரேல் முன்னெடுக்க நெத்தனயாஹூ முயலுவார். ஆனால், ஒபாமா ஆதரவு தரமாட்டார் என பரவலாக நம்பப்படுகின்றது.


மெர்க்கல் ஐரோப்பிய பொருளாதாரத்தை மீட்க மேலும் தொடர்ந்து முயற்சிப்பார்.

  • தொடங்கியவர்

கியூபாவின் அதிபர் பிடல் காச்ரோவோவும் வெனிசுவேலா அதிபர் சாவசும் உயிர் துறப்பார்கள்.

 

 

மகிந்த இராஜபக்செயும் தனது இரு நட்பு தலைவர்களை இழப்பார்.

 

அது இந்த நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டையும் செல்வாக்கையும் அதிகரிக்கும். கியூபாவின் மீதான அமெரிக்க பொருளாதார தடை நீங்கி வெனிசுவேலா நாட்டு மசகு எண்ணெய் வளம் அமெரிக்காவின் கைகளுக்கு செல்ல ஆரம்பிக்கும்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் 2008இல் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, ஐரோப்பிய பொருளாதார சிக்கல்கள், சீனாவின் பொருளாதாரம் என்பன இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் சரியச்செய்யும். அத்துடன் பிரதம நீதியரசர் மீதான அரசியல் நடவடிக்கைகள் முதலீடு உட்பட்ட மேற்குகல முதலீட்டு  நிலைப்பாட்டில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

 

இரானின் பொருளாதார தடை நீடிக்கும், அது இலங்கையில் மசகு எண்ணெய் விலையை உயர்த்தும், அது பொருளாதரத்தை மேலும் பாதிக்கும்.


குறையும் ஏற்றுமதி அதிகரிக்கும் பணவீக்கம் என்பன இலங்கை ரூபாவில் மேலும் சரிவை ஏற்படுத்தும்.

  • தொடங்கியவர்

துடுப்பெடுட்டாத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் சச்சின் ஓய்வு பெறுவார். தென் ஆபிரிக்கா தொடர்ந்தும் முதாலவது இடத்தில் இருக்கும். இலங்கை துடுப்பெடுத்தாட்டம் மேலும் சரியும்.

 

 

பிரித்தானியர் ஆண்டி மாறி (Andy Murray) விம்பிள்ட்டனை  வெல்லுவார்.


கால்ப்பந்தாட்டத்தில் ஆர்ஜெண்டீனியர் லயனல் மேசி தனது அபார விளையாட்டை தொடருவார். ஆனால், தனது 2012 சாதனையை முறியடிக்க மாட்டார்.

  • தொடங்கியவர்

சாம்சங் தொடர்ந்தும் கைத்தொலைபேசி தொழில்நுட்பத்தில் ஆப்பிளுக்கு சவாலாக இருக்கும். பிளாக்பெரி 10 எதிர்பார்த்த வெற்றியை தராது, ஆனால் நிறுவனங்கள் தொடர்ந்தும் பிளாக்பெரியை விரும்பும்.

 

 

சிலேட்டு + மடிக்கணணி = சேர்ந்து உருவான கணனிகள் பிரபல்யம் அடையும்.

 

7" மடிக்கணனிகள் மிகவும் பிரபல்யம் அடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வு கூறல்

இங்கிலாந்து இன்னும் பல கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும். இந்த வருட Ashes தொடரையும் கைப்பற்றும்.

Little Master சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்.

Andy Murray இவ்வருட விம்பிள்டன் சாம்பியன் ஆகா வாய்ப்பு அதிகம்.

விண்வெளி ஆராய்ச்சி மேலும் பல வெற்றிகளை குவிக்கும். செவ்வாய் கிரக Curiocity இன்னும் பல தகவல்களை தரும்.

இது நடக்குமா ?

MR & கோ இந்த வருடத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டும் ( உ + ம் : மத்திய கிழக்கு வசந்தம், போர்குற்றம் )

ஈழம் என்பது வடக்கு கிழக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் என்று நாம் நிறுவ வேண்டும் (முதலில் பொருளாதாரம் பின் அரசியல் )

நாட்டு எல்லைகளுக்கு அப்பால் நின்று சுற்று சூழலை பாது காக்க வல்லரசு நாடுகள் ஒரு திட்டத்தை அமுல் படுத்த வேண்டும்

அல்லலுறும் எம்மக்கள் சகல துன்பங்களும் நீங்கி சுகமாக வாழ வேண்டும்

  • தொடங்கியவர்

தங்கம் உட்பட்ட விலைமதிப்பு கூடிய உலோகங்கள் மீண்டும் விலை கூடும். காரணம் மேற்குலக நாடுகள் பொருளாதார சுமையில் இருந்து மீளாமை, பண தாள்களை அச்சிட்டுக்கொண்டே இருப்பன. அமெரிக்க பொருளாதாரம் சிக்கல் நிறைந்ததாயும் இரு கட்சிகளும் அதை வைத்து அரசியலும் செய்வன.

 

 

ஐரோப்பிய பொருளாதாரம் கிரேக்கம் தொடக்கம் பிரான்ஸ் வரை சவால்கள் நிறைந்தனவாக இருக்கும். எல்லோரையும் காப்பாற்ற ஜெர்மனி மேலும் முயலும். ஆனால், அமேரிக்கா பொருளாதாரம் சீராகாத நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் முன்னேறாது.


இந்திய, சீன, உருசிய,பிரேசில் (BRIC) மற்றும் தென் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் வளரும்.

  • தொடங்கியவர்

இது நடக்குமா ?

MR & கோ இந்த வருடத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டும் ( உ + ம் : மத்திய கிழக்கு வசந்தம், போர்குற்றம் )

ஈழம் என்பது வடக்கு கிழக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதும் என்று நாம் நிறுவ வேண்டும் (முதலில் பொருளாதாரம் பின் அரசியல் )

நாட்டு எல்லைகளுக்கு அப்பால் நின்று சுற்று சூழலை பாது காக்க வல்லரசு நாடுகள் ஒரு திட்டத்தை அமுல் படுத்த வேண்டும்

அல்லலுறும் எம்மக்கள் சகல துன்பங்களும் நீங்கி சுகமாக வாழ வேண்டும்

 

மகிந்த இதுவரை சந்தித்த பலமான எதிரி - சிராணி.சிராணி பண்டாரநாயக்கா ஊடாக மேலும் அழுத்தங்கள் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்குனி 2013இல் பலமாக ஒலிக்கலாம். பொதுநலவாய நாடுகளின் மாநாடு கூட நடக்காமல் போகலாம்.

 

 

தாயக மக்கள் ஏற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர் தமிழ் மக்கள் பலமான முதலீடுகளை செய்வார்கள். நியாமான அரசியல் தீர்வே எமது மக்களை நிம்மதியாக சுதந்திரமாக வாழவைக்கும்.

  • தொடங்கியவர்

Will gold break $2,000?

US/Israel war with Iran?

Unemployment below 7.5%?

 

George Soros gives his forecast for 2013 and shares his price prediction for gold and silver. George is chairman of Soros Fund Management and founded the Quantum Fund with Jim Rogers.

 

  • தொடங்கியவர்

சாதாரண உலகமக்களின் எதிர்பார்ப்பு

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தை மாதத்தில் இஸ்ரேலில் நெத்தனயாஹூவும் புரட்டாதியில் ஜெர்மனியில் மேர்க்கலும் தேர்தலில் வெல்லுவார்கள்.

 

ஈரான் மீதான யுத்தத்தை இஸ்ரேல் முன்னெடுக்க நெத்தனயாஹூ முயலுவார். ஆனால், ஒபாமா ஆதரவு தரமாட்டார் என பரவலாக நம்பப்படுகின்றது.

 

மெர்க்கல் ஐரோப்பிய பொருளாதாரத்தை மீட்க மேலும் தொடர்ந்து முயற்சிப்பார்.

 

மேர்க்கல் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் அவரின் வருகை ஜேர்மனிக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனது வாக்குகளும் அவருக்கில்லை...... :)

  • தொடங்கியவர்
மேர்க்கல் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கின்றேன். ஆனால் அவரின் வருகை ஜேர்மனிக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனது வாக்குகளும் அவருக்கில்லை...... :)

 

முன்வைத்த காலை பின்னால் எடுப்பதும் ஆபத்தும் சவால்களும் நிறைந்தது. கிழக்கு ஜெர்மனியுடன் இணைந்த பொழுதும் சவால்கள் இருந்தன, அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.

 

 

இம்முறை அதிக சிக்கல் நிறைந்தது.ஆனாலும் ஜெர்மானியர்கள் சவால்களுக்கு முகம் கொடுக்க தெரிந்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.