Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ், வைகோ.திருமாவளவன்

Featured Replies

இலங்கை விவகாரம்: கைகோர்க்கும் ராமதாஸ், வைகோ.திருமாவளவன்

மேலும் வாசிக்க....................................................

http://thatstamil.oneindia.in/news/2006/06...6/13/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 16 ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க கட்சியினருக்கு வைகோ அழைப்பு

தமிழ்நாடு முழுவதும் ஈழத் தமிழர்களுக்காக ஜூன் 16ஆம் நாள் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வருமாறு கட்சித் தொண்டர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர்கள் விவரிக்க இயலாத துன்ப துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். சிங்கள அரசு அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்தை தமிழர்கள் மீது நடத்தி வருகிறது. தமிழர் வாழும் பகுதிகளில் நாள்தோறும் தமிழ் இளைஞர்களும், தாய்மார்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்.

தமிழர் பகுதிகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் என்கிற இடத்தில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அப்புதை குழிகளில் இருந்து அழுகிப்போன சடலங்களும், எலும்புக்கூடுகளும், தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தாங்கள் செய்யும் கொடுமைகளை மூடி மறைத்துவிட்டு சமாதானப் பாதைக்கு தயாராக இருப்பதாக சிங்கள அரசு சர்வதேச நாடுகளை ஏமாற்றும் வெளிவேடம் போடுகிறது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை இன்னொரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனை என்று இந்தியா கை கழுவக்கூடாது- முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தமிழர்களோடு தொப்புள் கொடி உறவு கொண்டுபபஉள்ள இலங்கை தமிழர்கள் வதைபடுவதை, ஆயிரக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்குபபவரும் நிலையில் இந்திய அரசு இலங்கையில் சிங்கள அரசுக்கு சார்பு நிலையை மேற்கொள்வது போன்ற ஒரு தோற்றத்தை இலங்கை அரசு தந்திரமாக ஏற்படுத்துகிறது.

இலங்கையில் உள்ள உண்மை நிலையை இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களை தமிழ் மக்களுடைய உணர்வுகளை நேரடியாக விருப்பு வெறுப்பு இன்றிக் கண்டு அறிவதற்கு இந்தியாவில் இருந்து அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், அதுபோல இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியா வருவதற்கும், இந்தியாவில் பிரதமரையும், மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கும் உடனடியாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வருகிற 16 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கிறது. மதுரையில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கின்றேன். அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்களும், கழக முன்னணியினரும் பங்கேற்கிறார்கள். ம.தி.மு.கழகத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு வர இந்திய-சிறிலங்கா அரசுகள் உதவ வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக வர இந்தியா மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணைந்து உதவ வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியச் செயலாளர் து. ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அகதிகளாக வருகின்ற ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக வந்தடைவதற்காக இணைந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் ராஜா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் தனியார் படகுகளில் ஏறி வரும்போது பல ஆயிரம் பணத்தை கொடுத்து வருகிறார்கள். இதற்கு தீர்வுகாண மத்திய- மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேசி தீர்வுகாணவேண்டும்.

இலங்கை அரசு அகதிகளை பாதுகாப்பாக அனுப்பிவைக்கவேண்டும். இல்லையேல் இந்திய அரசு அகதிகளை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யவேண்டும்.

மண்டபம் அகதிமுகாமை மீண்டும் சீரமைத்து அகதிகளை தங்கவைக்கவேண்டும்.

அவர்களின் குழந்தைகளுக்கு படிக்க வசதியும் மருத்துவ வசதியையும் செய்து கொடுக்கவேண்டும்.

மத்திய மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகை பற்றி அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து திருத்தி அமைக்கவேண்டும்.

அகதிகள் அதிகமாக தங்கி உள்ள மண்டபத்தில் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த முதல்-அமைச்சரிடம் தெரிவிக்க இருக்கிறோம்.

அது பற்றிய அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பிவைத்து உள்ளோம். அதே அறிக்கையை மத்திய அரசுக்கும் அனுப்ப இருக்கிறோம் என்றார் பாண்டியன்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 16 இல் ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டம்: நெடுமாறன், இராமதாஸ், வைகோ, கொளத்தூர் மணி, திருமாவளவன் பங்கேற்பு

தமிழ்நாடு முழுவதும் எதிர்வரும் ஜூன் 16 ஆம் நாளன்று ஈழத் தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு நடத்த உள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிங்கள முப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் தப்பிப் பிழைத்து இந்தியாவில் அகதிகளாகக் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தப்பி வர வழியில்லாமல் தவிக்கின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (16 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்துக் கட்சிகள், அனைத்து தமிழர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1. இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களைக் கண்டறியவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் கூற வும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிக் குழு ஒன் றினை உடனடியாக அனுப்ப வேண்டும்.

2. இந்தியப் பிரதமரை சிங்களத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் குழு பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் வே.ஆனைமுத்து, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் பொழிலன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சௌந்தரராசன் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க பொருளாளர் மாணிக்கம், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சேலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் இளமுருகனார் கலந்து கொள்கிறார்கள். தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் சி.முருகேசன் பங்கேற்கிறார்கள்.

கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காந்தி கலந்து கொள்கிறார்கள். சிவகங்கையில் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மெல்கியோர், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் தமிழ்க் கூட்டமைப்பு

நேற்று வைகோவை சந்தித்தனர்

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் படுகொலைகள், இடம்பெயர்வுகள், சொத்தழிவுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்புகளை ஆரம்பிக்கவுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சந்திப்புக்கான முதல்கட்டமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தினக்குரலுக்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினாலும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசமான அழிவுகள் தொடர்பாக இந்தியத் தலைவர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம். இச் சந்திப்புகளுக்கான முதல் கட்டமாக இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை அவரது அலுவலகமான தாயகத்தில் சந்தித்து பேச்சுகளை நடத்தினோம்.

இச் சந்திப்பில் இலங்கையில் நடக்கும் இன அழிப்புகள், தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வருவது, போர் நிறுத்த உடன்படிக்கையில் எட்டப்பட்ட விடயங்களை அரசு நிறைவேற்றாமை, தமிழர் விடுதலைப் போராட்ட சக்திகளையும் மக்களையும் படுகொலை செய்துவரும் அரச படைகளினதும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களினது நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பாக அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக நாம் விளக்கினோம்.

அத்துடன், இவ்வாறான அரசினதும் அரச படைகளினதும் பயங்கரவாத செயற்பாடுகள் மிக மோசமான யுத்தமொன்றுக்கே வழிவகுக்குமெனவும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் நாம் வைகோவுக்கு எடுத்துக் கூறினோம்.

இதேவேளை, இலங்கைத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் தொடர்பாக நாம் இந்திய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தவுள்ளோம் என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புப் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு தஞ்சம் கோரிவரும் தமிழ் அகதிகளின் நிலைமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் காணப்படும் உண்மை நிலையை அறியவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கவும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கள அரசியல் தலைவர்கள் இந்திய பிரதமரை வழமையாக சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்திய பிரதமரை சந்திக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் உட்பட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

-தினக்குரல் 12/06/2006

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் பாமக கலந்துகொள்ளாது

பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் நாளை தமிழகமெங்கும் நடத்தவிருக்கிற ஆர்ப்பாட்டங்களில் தனது கட்சி பங்குபெறாது என அறிவித்திருககிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதிலும், அவர்கள் மீது ஏவிவிடப்படும் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும் தனது கட்சி உறுதியாகவிருந்தாலும் சில அரசியல் காரணங்களுக்காக பாமக நாளைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாது என திண்டிவனத்தில் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் நிலையினை நேரில் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அங்கே செல்லவேண்டும், மேலும் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இந்திய பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சில அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இணைந்து தமிழகமெங்கும் நாளை ஆர்ப்பாட்டங்கள் நடத்தவிருப்பதை நாம் நேயர்களுககு ஏற்கெனவே கூறியிருக்கிறோம்.

பழ.நெடுமாறன்தான் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு, அதில் பாமகவும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறவிருப்பதாக கூறியிருந்தார்.

நெடுமாறனின் அறிக்கை வெளியாவதற்கு முதல்நாளே இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்லவேண்டும் என தனியொரு அறிக்கை விட்ட டாகடர் ராமதாசோ ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளமுடியாதென்கிறார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.