Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹைய்யா! நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!.

Featured Replies

hj.gif
 (படம் இணையத்தில் இருந்து)
{இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.} 

ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!"

"டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?"

"என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா"

"என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..."

"ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்." 

 "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?"

"அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலமாவே பார்த்துகிட்டு."பேச்சித்தமிழும் இருக்குடே!" 

"அப்போ! தப்புத்தப்பா எழுதலாம்'ன்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லவில்லையே, இப்படி எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது'ன்னுதான் சொல்கிறேன். அதெல்லாம் பேச்சு மொழின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்.".

"சரி மேட்டருக்கு வா! உனக்கு மொக்கை போடத்தானே தெரியும் எப்படிடா இப்படி திடீர்ன்னு பதிவரான?"

"சிம்பிள் மாமு, சுடுதண்ணி எப்படி வைக்கிறது'ன்னு சுடச்சுட சொன்னா அது மொக்கை, அதையே சுடுதண்ணி வைத்து சுலைமானி எப்படி போடுறதுன்னு சொன்னா அது சமையல் குறிப்பு."

"அப்போ! என்னைப்போல பக்கம் பக்கமா எழுதுனா அது பதிவில்லையா???"

"நீ எழுதுவது கட்டுரை மாமா அதைப்படிக்கவும் ஒருகூட்டம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பக்கம்பக்கமா எழுதினால் அதையெல்லாம் உட்க்கார்ந்து படிக்கிற அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு நேரம் இல்லை."

"அப்படின்னா  எப்படி எழுதனும்னு சொல்ற?"

"எதைச்சொன்னாலும் நச்'ன்னு நாலு வார்த்தையில் சொல்லிடனும், அதே சமயம் வாசகர்களைக் கவரும் வகையிலும் இருக்கவேண்டும். அப்பறம் பாரு வாசகர்கள் பின்னூட்டம் வந்து குவியும்."

"நானும் நல்லாதாண்டா எழுதுகிறேன், ஆனால் ஒருவாசகர்கூட பின்னூட்டம் போடுவதேயில்லை, ரொம்ப கஷ்டமா இருக்குடா மச்சி!"

"டேய்! மாமா இதற்கெல்லாம் மனசு உடைந்துவிடக்கூடாது. நீ ஒரே மாதிரியான பதிவை மட்டும்தான் எழுதுற, நகைச்சுவை-கிண்டல்,கேலி'ன்னு பல ரகமான பதிவுகளை எழுது மாமு, அப்பறம் பாரு!.  இப்ப நீ எழுதுவது ஒரு விதமான வாசகர்களை மட்டுமமே கவருகிறது, வித விதமாக எழுதினால் பலவிதமான வாசகர்களையும் கவரும்."

"ஓ! இப்படி வேற இருக்கா? நான் என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே கட்டுரையா எழுதுகிறேன் மச்சி! வாசகர்களின் வருகையே இல்லை மச்சி!ரொம்ப பீலிங்கா இருக்கிறது."

"அப்படி இல்லை மாமா, மனசுல உள்ளதை அப்படியே எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு 'போர்' அடிச்சிடும். பாதியிலையே விட்டுட்டுப் போய்டுவாங்க. நகைச்சுவையையும் கற்பனையையும் கலந்து எழுதினால் அது காவியம், இப்பலாம் வாசகரை கவர மசாலாவையும் கலக்கனும் மாமு!"

"அப்ப நான் எழுதுவதெல்லாம் பதிவே இல்லை என்று சொல்கிறாயா?"

"நீ எழுதுவது பதிவுதான் மாமா, ஆனால் அதை முழுவதையும் படிக்க முடியலையே, பாதியிலையே நிறுத்திட வேண்டி இருக்கு, ஒரு விறுவிறுப்பும் இல்லை நகைச்சுவையும் இல்லை. பக்கம் பக்கமா சொல்லாமல் சொல்லவேண்டியதை சுருக்கமா சொல்லுங்கிறேன்."

"சரி எப்படி எழுதினால் வாசகர்கள் பின்னூட்டம் போடுவார்கள். சொல்லு அப்படியே செய்கிறேன்."

"திரும்பத்திரும்ப அதையேதான் கேட்க்கிறாய், மாமா வாசகர்கள் பின்னூட்டத்திற்காக மட்டும் பதிவு எழுதக்கூடாது. பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். பிடித்தவர்கள் பின்னூட்டம் போடுவார்கள் மற்றவர்கள் படித்துவிட்டுப் போய்டுவார்கள".

"சரிடா மச்சி! வாசகர்கள் எப்படிப்பட்ட பதிவுகளை ரசித்து பின்னூட்டம் போடுகிறார்கள்?"

"மாமா, வாசகர்களில் பின்னூட்டம் போடுபவர்கள் பலவிதம். சிலர் முழுப்பதிவையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுவார்கள், சிலர் மேலோட்டமாகவும், சிலர் பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டும் பின்னூட்டம் போடுவார்கள்."

"அடப்பாவிங்களா! இப்படி வேற செய்கிறார்களா? இப்படி படிக்காமல் வரும் பின்னூட்டத்தினால் என்ன பயன்? படிக்காமல் போடும் ஆயிரம் பின்னூட்டங்களை'விட , படித்துவிட்டுப் போடும் ஒரேயொரு பின்னூட்டமே போதும்டா மச்சி!"

"டேய், என் சிங்கி மாமா, பின்னூட்டம் என்பது ஊக்கமருந்து மாதிரி, அது எப்படி வந்தால் என்ன? சிலர் நல்லாருக்குன்னு சொன்னால்தானே , நீயும் சந்தோஷமா அடுத்தப்பதிவை எழுத போவ...அது எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம், 'அனுபவி' அது போதும்."

"இப்படி  வரும் பின்னூட்டம், எழுத்தாளனின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டது இல்லையே! அதனால் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதும் எழுத்துக்கு என்ன பயன்?"

"எழுத்தை மதிக்கிறார்களோ இல்லையோ! ஆனால் எழுத்தாளன் மதிக்கப்படனும், அவன் மனமுடைந்துப் போகக்கூடாது, எப்பவும் தொடர்ந்து எழுதணும், ஊக்கமது எந்த உருவத்தில் வந்தாலும் சரி அதையே படிக்கல்லாக நினைத்துகொண்டு தனது அனுபவங்களை எழுதணும் , இன்றைய எழுத்தாளனின் அனுபவம்தான் நாளைய இந்தியாவின் இலக்கியம்."

"ஆமாம், இப்ப என்னத்தாண்டா சொல்ல வர..."

"எழுத்தாளன் எழுதணும், அவரவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட 'திறமை'  இருக்கும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும். அவரவர்களுக்கென்று ஒரு 'ஸ்டைல்' இருக்கும் அப்படியே அதன்படியே எழுதவேண்டும். ஏகப்பட்ட குறிச்சொல் இருக்கிறது கதை, கவிதை, தொடர்கதை, சரித்திரம், அரசியல், தமிழ், நகைச்சுவை, சமையல், சினிமா, புனைவுகள், நிகழ்வுகள், மருத்துவம், கணினி, சாதி, மதம், சிந்தனை, பாடல்கள், பொது, நாவல்கள் என பலவகைகள் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனின் மனதிலும் இப்படி ஏதாவது பிரிவில் எழுதும் திறமை இருக்கும். அதை மறைக்காமல் அப்படியே எழுதவேண்டும்.
அவரவர் சொந்த கற்பனையை யாரும் குறைச் சொல்லபோவதில்லை, நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும், அதனை காலபோக்கில் சரிசெய்துகொண்டு மீண்டும் எழுதவேண்டும் என்றுதான் சொல்கிறேன்."

"நன்றிடா மச்சி! இனி நான் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், பின்னூட்டம் வந்தால்தான் எழுதவேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றிக்கொண்டு எழுதுகிறேன். யார் என்னச்சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன் தடையென்றால் மிதித்துச் செல்கிறேன், எனது எழுத்துப்பயணத்தை இனி யாருக்காகவும் எதற்காகவும் நிருத்தமாட்டேன்."

"ம்ம்ம்ம் சரி மாமா, இனி தன் மனதில் தோன்றுவதை தங்குதடையில்லாமல் எழுதுடா, எழுத்தாளர்கள்தான் தமிழின் வேர்கள் நாம் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் செத்துவிடும். நம் சிந்தனையை இழைத்து தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயிர்காப்போம்."

******நன்றி******
 
  • கருத்துக்கள உறவுகள்

அடோய்... நீங்க, எங்கேயிருந்து... வாறீங்கள்.
முதலில், அடையாள அட்டையை காட்டுங்கோ பாப்பம்.
அதுக்குப்... பிறகு தான்... வரவேற்பா, ஆப்பா... என்று தெரியும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை பிழைத்துக்கொள்வீர்கள் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ போங்கப்பா.நீங்க இதுன்கிரீங்க அவுக அதுன்கிறாங்க நான் எது என்னே புரிய மாட்டேங்குது.ஒரே அதுவா இருக்குப்பா.நிங்க அதுவா?இதுவா?இல்ல அவுக இதுவா அதுவா?எதுவா இருந்தாலும் பரவாயில்லை.இதுவா இருக்க கூடாது.(ஒஹ்ஹ்ஹ் நான் தான் பிழையா?சரி இதுவா இருந்தாலும் அதுவா இருக்கக் கூடாது.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழீழன் நல்ல ஒன்றை கையாள்கின்றீர்கள்.தமிழ் எங்கள் தாய் மொழி என்பதை தாண்டி எமக்கு பேச்சையும் மூச்சையும் தந்தது.நாம் தமிழராய் பிறந்ததால் அடைந்த மகிழ்வைத் தவிர அடைந்த துயரங்களே மிகவும் அதிகம்.மாறவேண்டும்.எனக்கு மிகவும் கேவலமாக உள்ளது என்னை தாண்டிச்செல்லும் என்னவனை விட எப்போதோ கண்ட ஒரு வெள்ளையனின் கையை வில்லங்கமாய் குலுக்குகிரேனேஎன.இதுதான் எம் விழுமியமாய் நாம் பழகிப்போனோமோஎன .உதாரணத்துக்கு எத்தனையோ பாலியல் கொடுமைகள் என் தேசத்தில் எம் சகோதரிகளுக்கு நடந்தும் கண்டுகொள்ளாமல் டெல்லியில் நடந்ததை எம் கொல்லைக்குள் நடந்தது போல துடித்தெழுந்து பலதிரிகள் திறந்து நாட்கணக்கில் விவாதிக்கும் களஉறவுகள் போல.

  • தொடங்கியவர்

வணக்கம் anni lingam, தங்களைப்போல் எனக்கும் பேசப்பிடிக்கும்.மௌனம் அதைவிடப்பிடிக்கும்.அதிலும், மௌனமான இந்நேரத்தில் மௌனம்தான் பிடிக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

 

யாழில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்காக... இலவச‌ கொப்பி, பேஸ்ற் ரெக்னிக்கை அறிமுகப் படுத்த உள்ளேன்.

பழைய உறுப்பினர்களுக்கு, க‌ட்டணம் வசூலிக்கப்படும்.

நண்பர்களே....ஒரு உதவி......மேற் குறிப்பிட்ட தலைப்பில்..படம் உதவி இணையத்தில் இருந்து....என்று குறிப்பிடப் பட்டுள்ளது.....இந்த இணையத்தை...எவ்வாறு தேடி...படங்களை பெறுவது.....யாராவது உதவுங்களேன்.....தமிழ் கதைகளுக்கு ஏற்ப படங்கள் இருப்பின் நல்லது..

 

அல்வாயன். உதவி செய்ய... நாம் காத்திருக்கின்றோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்...நண்பர் தமிழ் சிறீ......எதிர்பார்க்கிறேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்...நண்பர் தமிழ் சிறீ......எதிர்பார்க்கிறேன்.....

 

இரண்டு வழிகள் உள்ளது அல்வாயன்.

முதலாவது... நீங்கள் என்ன படத்தை தெரிவு செய்யப் போகின்றீர்கள் என்பதை, கூகிழில் தேடுங்கள். உ-ம் மல்லிகைப் பூ என்று வைத்துக்கொண்டால்.... மல்லிகைப் பூ என்று தமிழில், எழுதி கூகிழில் தேடும் போது... பலவிதமான மல்லிகைப் பூ படங்கள் வரும். அதில் உங்களுக்கு பிடித்த படத்தை கிளிக் பண்ணும் போது.... உங்களது படம் மட்டுமே கணனித் திரையில் தெரியும்.

இப்போ படத்திற்கு அருகில், உங்கள் மௌசின் இடது பக்கத்தை... அமத்திக் கொண்டு படத்தின் மேல் மௌசை கொண்டு போகும் போது, படம் இள நீலநிறத்துக்கு மாறி விட்டதென்றால்... படம் மௌசில் கொப்பி(பிரதி) எடுக்கப் பட்டுவிட்டதென்று அர்த்தம். அதனை உங்கள் பதிவில் கொண்டுவந்து, மௌசின் வலது பக்கத்தை அழுத்தும் போது... Paste அல்லது Einfügen என்று காட்டும், அந்த இடத்தில்... மௌசின் அம்புக்குறியால் வலது பக்கம் கிளிக் பண்ணும் போது, படம் பதியப் பட்டு விடும்.

 

இரண்டாவது முறை. பீபீகோட் மூலம் இணைப்பது.

கீழே தரப்பட்ட இணைப்பை அழுத்தும் போது... (இந்த இணைப்பு யாழின் மேலே, திண்ணையின் வலது பக்கத்தில் உள்ளது)http://www.yarl.com/forum3/index.php?amp;&app=forums&module=extras&section=legends&do=bbcode கூகிழ் இமேஜ் என்று ஒரு தெரிவு காணப்படும். அதனை கொப்பி பண்ணி, உங்கள் பதிவில் இணைத்துவிட்டு, அம்புக்குறிக்குள் உள்ளதைத் தவிர மிகுதியை கவனமாக அழித்துவிடவும்.(அழிக்கும் போது... தேவையில்லாத இடைவெளியோ... அநாவசியமான எழுத்துக்களோ.. (ஐம்ஜி)(/ஐஎம்ஜி) என்ற பகுதிக்குள் இருக்கப் படாது. இப்போது... நீங்கள் கூகிளில் தேடிய படத்தின் மேல் உள்ள சட்டத்தில் தெரியும்....http://www.  என்று தொடர்ந்து வரும் எழுத்துக்களை கொப்பி பண்ணி... ஐஎம்ஜி என்ற இரண்டு அடைப்புக்கு நடுவில் பதிய... உங்கள் படம் இணைக்கப் பட்டு விடும்.

இந்த முறையில் செய்து பார்க்கவும், மேலதிக உதவி... தேவை என்றால் கேட்கவும்.3e-150x150.jpg

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.