Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சம் நிறைந்த 3ம் ஆண்டு நினைவலைகள் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘வரலாற்று மூலமாய்’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா!….

Velupillai-011.gif

 

ஒரு நாட்டினது அல்லதுஇனத்தினது வரலாற்றை அறிவதற்கும் அளவிடுவதற்கும் ஆராய்சியாளர்கள் நாடுவது சான்றுகளேயாகும். இவை புரதான கட்டிடங்கள, சிற்பங்கள், கோயில்கள், ஓவியங்கள், ஏட்டுச் சுவடிகள், நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், எனப்பலவகைப்படும். இவைகள் யாவும் தொல்லியற்சான்றுகள் எனப்படும். இவை வரலாற்று மூலங்களாய் நின்று அந்தநாட்டின் அல்லது மறைந்த சாம்ராஜ்சியங்களின் தொன்மையை பெருமையை அறியவைக்கும் சான்றுகளாகின்றன. இவ்வகையில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்கோவில் எனப்படும் ‘தஞ்சைப்பெருங்கோவில்’ என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த இராஜஇராஜசோழனதும் சோழ சாம்ராஜ்சியத்தினதும் அன்று வாழ்ந்த தமிழரின் பெருமையையும்  சந்தேகத்திற்கு  இடமின்றி  நிரூபிக்கும்  சான்றாக என்றும் விளங்குகின்றது.

 

இவ்வகையில் ஈழத்தமிழரின் வரலாற்றில் ‘வல்வைப்பெருங்கோவில்’ எனப்படும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவிலும் அதனை அமைந்த சந்ததியினரும் பெரும்வரலாற்றைப் படைத்தவர்களாகவும். அதன்மூலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாகவும் மாற்றமடைந்து காணப்படுகின்றனர்.

 

‘இன்றைய சம்பவங்களே நாளைய சரித்திரங்கள்’ இவ்வகையில் நமது கண்முன்னே நடந்த சரித்திரமாய் பெரும் சகாப்த்தமாய் விரிந்த வர்தான் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். இவருடைய ஆட்சிமுறை உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இராணுவம், கடற்படை, வான்படை, காவல்துறை நுண்கலை, கல்வி சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, என பலதுறைகளையும் இன்னும் பலதையும் உள்ளடக்கிய ஆட்சிமொழியாகத் ‘தமிழ்மொழி’யே அவர்காலத்தில் ஈழத்திலே அரசோட்சியது.

 

நானூற்றி ஐம்பத்திரண்டு (452) வருடங்களுக்குமுன் 1561 இல் நாற்பத்திரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்தை அரசாண்ட 7ம்செகராச சேகரன் என்னும் ‘முதலாம்சங்கிலி’ மன்னன் பலத்தபோராட்டத்தின் பின் அந்நியரான போர்த்துக்கேசரிடம் தனது அரசைப்பறி கொடுத்தான். இவனே உலகத் தமிழினத்தின் இறுதித் தமிழ் மன்னன் ஆவான். இவன் காலத்தின் பின் அரசாண்டதாக கூறப்படும் பண்டாரவன்னியன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்போர் சிலஅரசநிர்வாகப் பிரிவுகளின் அல்லது சமஸ்தானங்களின் அதிகாரிகளாகவே வரலாற்று ஆசிரியர்களால் கணிக்கப்படுகின்றனரேயன்றி அவர்கள் இறைமையும் தன்னாட்சியும் கொண்ட ஒருநாட்டின் முடிசூடிய அரசர்களல்ல என்பதே வரலாறு.

 

வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் எண்ணியபடி ஈழத்தமிழர்களுக்கென தனியான நிலப்பிரதேசம், தனியான நிர்வாகப்பிரிவு, தனியான படைப்பிரிவு, தனியான தேசியக்கொடி, என்பனகொண்டு தனிஅரசாகவும் தனித்துவ மாகவும் இறமைகொண்ட ஈழத்தினை அரசாண்டவர். இவருடைய ஆட்சியின் தாக்கம் இந்தியஉபகண்டம், தென்னாசியா என்பவற்றைக் கடந்து சர்வதேசம் வரை வியாபித்திருந்தது. இதன்மூலம் பாடு பொருளாகவும் பேசுபொருளாகவும் மட்டுமின்றி  உலகவிற்பன்னர்கள் பலரும்   பார்ப்பதற்கு விரும்பிய இவரின் அதிசயவாழ்க்கை ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகின்றது. ஏனெனில் தனது தமிழீழ நாடுகடந்;த அதிசயமான அசுரசாதனைகளையும்  பெரும் அரசியல் மாற்றங்களையும். இவர் தனது காலத்தில் செய்திருந்தார். குறிப்பாக தான் ஆட்சிபுரிந்த தமிழ்ஈழத்தின் அயல்நாடுகளான இந்தியா சிறிலங்கா  என்பவற்றின் ஆட்சியாளர் யார்? என்பதை தீர்மானிக்கும் வல்லமையையும் பெற்ற King macker ஆகவும் இவர் திகழ்ந்தார்.

 

‘தேமதுரத்தமிழேசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்ற ‘மகாகவி’பாரதியின் கனவை நனவாக்கியவர் உலகத்தில் ‘மேதகு’ வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவர்தான்.

 

1973 மார்ச் 22இல் சிங்கள அரசால் நேரடியாக குறிவைக்கப்பட்ட ‘பிரபாகரன்’ மீது ஐந்து வருடங்களின் பின் 1978 மே 19 இல் இலங்கைப் பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புலித்தடைச்சட்டத்தின் மூலம் ஸ்ரீலங்காஅரசால் பகிரங்க போர்ப்பிரகடனம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து சிறிதும் பெரியதுமான பல படையெடுப்புக்களை பிரபாகரன் என்னும் தமிழீழ அரசுமீது ஸ்ரீலங்கா மேற்கொண்டபோதும் எம்முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியில்  ஐநாவின் ஆதரவுடன் பன்னாட்டுப் படைகளின் உதவியுடனும்  ஈராக்மீது அமெரிக்கா தொடுத்த போரில் ‘மன்னர்’ சதாமின் ஆட்சியினை அகற்றியது. அதே போல ஐநாவின்செயலாளர், செயலாளரின் செயலாளர், பன்னாட்டு உலக இராணுவ வல்லுனர்கள் மற்றும் பிராந்திய  உலகவல்லரசுகளும்;   இணைந்;;து ‘பிரபாகர’ ஆட்சியை எம்மண்ணில் இருந்து அகற்றின.

 

எனினும் ஆறுஇலட்சம் மக்கள்படையை தன்னகத்தே வைத்திருந்த சதாமை உயிருடன் கைதுசெய்தது போல் நவீன’தமிழ்சக்கரவர்த்தி’ யான பிரபாகரனை இன்றுவரை கைதுசெய்ய முடியவில்லை. இறுதியாக 2009 மே 19 இல் பிரபகரனது கட்டுப்பாட்டில் இருந்த கரையா(ர்) முள்ளிவாய்க்காலில் அவரை அழித்துவிட்டதாக ஒருஉடலைக் காட்டி ஸ்ரீலங்காஅரசாங்கம் பிரச்சாரம் செய்தது. எனினும் அதனை நம்ப யாரும் தயாராகஇருக்கவில்லை.

 

இந்நிலையில் எப்பொழுதும் போல் ‘யார் இந்தப் பிரபாகரன்’? என்னும் கேள்வி உலகளாவியரீதியில் எழுந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும் பதில் இலகுவாகியது! ஆனால் அதன்பின்னால் இருந்த மர்மம்? பிரபாகரனிடம் எழுந்த அந்த சத்தியஆவேசம்! அவரை உருவாக்கிய காரணங்கள் எனப்பல கேள்விகள் உருவாகின. இவற்றுக்கான விடையைத் தேடினால் விஸ்வரூபமாகத் தெரிவது தான்’திருவேங்கடம் வேலுப்பிள்ளை’அப்பா. ஆம் அத்தனை கேள்விகளுக்கும் ஒரேபதில் இவர்தான்.

 

இவர் ஓருசாதாரண மனிதர் அல்ல! இவருக்குள் மறைந்திருந்த பல சிறப்புக்களும் திறமைகளும் பிரபாகரன் ஊடாக வெளிவந்தன. அதனால்தான் சர்வதேசத்தில் தமிழுக்கு முகவரி தந்து உலகத் தமிழினத்தின் தேசியத் தலைவராக உயர்ந்த தனயன் பிரபாகரனிற்க்கு தந்தையாகி இன்று தமிழினத்திற்;கே ‘மாதந்தை’ ஆனார்.

 

பிரபாகரனைப்பற்றி அறியவேண்டும் என்றால் முதலில் வேலுப்பிள்ளை அப்பாவைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஒருமனிதனை உருவாக்குவதில் ‘பரம்பரை மரபணுக்களும் சமூகச் சூழலுமே’ பெரும்பங்கு வகிக்கின்றன. என வேலுப்பிள்ளை அப்பாவை எனக்கு சுட்டிக்காட்டிய ‘பேராசிரியரும் மூத்த சமூகவிஞ்ஞானியுமான ‘கார்த்திகேசு சிவத்தம்பி’ யின் கூற்று இவ்விடத்தில் கட்டாயம் குறிக்கப்படுதல் வேண்டும்.

 

அவ்வகையில் ‘பிரபாகரன்’ என்னும் மாபெரும் சகாப்தத்தை ஆராய்வதற்கு உறுதியான கல்வெட்டுச்சான்று போல் இருந்தவரே வேலுப்பிள்ளை அப்பாதான்.

 

வேலுப்பிள்ளைஅப்பா 1918 இல்வெளிவந்த ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’புத்தகத்தில் குறிக்கப்பெற்ற ‘திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை’ அவர்களின் வழிவந்தவர். இப்பரம்பரை வழியில் இவரதுபெயரை ஏழாவதாக நாம் காணலாம். ஆனால் வல்வெட்டித்துறையின் மூத்தவரலாற்று அறிஞரான மறைந்த அரு.செங்கல்வராசா எழுதிவைத்த பதிவுகள் மற்றும் 1850 – 1880 களில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் பெற்றிருந்த சட்டத்தரணியும் அன்று பிரபல்யமாயிருந்த ‘பிறிமன்’ (freeman) பத்திரிகையின் பதிப்பாசிரியருமான திரு. கூல்ட் (Gould) பற்றி வல்வை ந. அனந்தராஜ் எழுதிய ‘கூழ் நியாயம்’ மற்றும் பா.மீனாட்சிசுந்தரம் எழுதிய’வரலாற்றில் வல்வெட்டித்துறை’ எனும் நூல்களின் மூலமும் வல்வெட்டித்துறையில் கிடைத்த வேறுசில ஆவணங்களின் மூலமும் இவரின்வம்சத்தில்  இவருடைய பெயர் பன்னிரண்டா வதாகவும் இவருடைய புகழ்பெற்ற மைந்தனான தமிழரின் ‘தேசியத்தலைவர்’ ஆன பிரபாகரனது பெயர் பதின்மூன்றாவதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு பதிவிற்குள்ளாக்கப்பட்டுள்ள இவர்களது வம்சமானது வாழையடி வாழையாக பெரும்வரலாறாகவே வளர்ந்து வந்துள்ளமை கண்கூடானது.

 

வல்வெட்டித்துறையின் தலையாரிக் குடும்பமாகவும் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக்குடும்பமாகவும் தமிழீழத்தின் முதன்மைக் குடும்பமாகவும் உயர்ந்த இவர்களது குடும்பத்தவரின் வாழ்வு போலவே ‘மாதந்தை’ என போற்றப்படும் திரு.வேலுப்பிள்ளை அப்பாவுடைய வாழ்வும் போற்றுதற் குரியது. 17ம் 18ம் 19ம் 20ம் 21ம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக   ஐந்து நூற்றாண்டுகள் தம்மை அடையாளப்படுத்திவரும் அற்புதமான குடும்பத்தில் வந்த ஏனையவர்களைப் போலவே இவரும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பனவற்றின் ஊடாக மிளிர்ந்து அன்பு அடக்கம் அஞ்சாமை ஆளுமை என்பனவற்றின் மூலம் வாழ்வாங்கு வாழ்பவர் ஆகின்றார்.

 

தனது  குடும்பப்பெருமைகளை தவிர்த்து இறுதிவரை தனது பெயரிலேயே வாழ்ந்து வந்தது தான் இவரின் மிகப் பெரிய சிறப்பாகியது. சிறிய செயல்களையே பெரிதுபடுத்தும் இவ்வுலகில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த தனதுமைந்தனுடைய ‘பிரபாகரன்’ என்னும் பெயரை எவ்விடத் திலும் பயன்படுத்தாத இவரின்பண்பினை வியப்பதற்கு வார்த்தைகளேதுமில்லை.

 

‘நான் என்னுடைய சுகத்தையெல்லாம்  அர்ப்பணித்து நாட்டுக்காக (தமிழ்இனத்திற்காக) வாழப்போகிறேன். என்னை என்னுடைய வழியில் போகவிட்டு விடுங்கள்.’ என 1971 செப்டம்பரில்; கூறிய பதினேழுவயது நிறையாத தனதுமகன் பிரபாகரனிடம். ‘எங்களிற்கு கொடுத்து வைக்கவில்லை உன்னைப்போல் இனத்திற்காக அர்ப்பணித்து வாழுவதற்கு’ சந்தேசமாகச்செய்’ ஆனால் நான் ஒரு அரசாங்கஊழியன். எனவே நீயும்நானும் இனி இணைந்து வாழமுடியாது.’ எனக்கூறி போராடப்புறப்பட்ட மகனிற்கு வீட்டைவிட்டு வெளியேற 1971இலேயே விடையளித்தவர்தான்  இந்தத்தந்தை. அதனால் தான் இவர் ‘மாதந்தை’ இதனைவேறு எந்தத்தந்தையாலும் எக்காலத்திலும் செய்யமுடியாது.  இவ்வாறான இந்தத்’தந்தையின்ஆசி’ தான் மைந்தனை உலகம் போற்றும் ‘உத்தமன்’ ஆக்கியது.

 

வேலுப்பிள்ளை அப்பா தலைவர் பிரபாகரனைப்பற்றி எழுதித் தந்த ஒருகுறிப்பு

Appa-001.gif

 

1971 முதல் 1985 வரை குடும்பப்பற்று  பாசமெல்லாவற்றையும் மனதில் அடக்கிவைத்து ஆசைமகனுடன் நேரடியகக பேசாமல் பார்க்காமல் இருந்தவர்தான்  வேலுப்பிள்ளைஅப்பா. 14 வருடங்களின் பின் தனது நெருங்கியஉறவினர் ஒருவரது திருமணத்திற்கு மகன் வருவானா தன்னுடன் கதைப்பானா? என ஏக்கத்துடன் சென்ற அவர் தன் அன்பிற்குரிய மகனை அங்கே சந்தித்தார். மகனே முன்வந்து பாசமுடன் உரையாடி தந்தைக்குரிய மரியாதையைக் கொடுத்ததும்; அதனைத் தொடர்ந்து இருவரும் அன்புருக உரையாடியதும் இவர்களது உறுதியான குணத்திற்கும் பாசத்திற்கு ஏங்கிய இரக்கமான மனதிற்கும் அடையாளமான சம்பவமாகும்.

 

பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை என எல்லோராலும் சுட்டப்பட்ட  போதும் மெல்லிய புன்சிரிப்புடன் விலகிக் கொள்ளும் இவர்.’நான்தான் பிரபாகரனின் தந்தை’ என உறுதியுடன் கூறியவாறு மைந்தனின் பெயரில் நிமிர்ந்து நின்றதும்  எழுந்து நடந்ததும் வாழ்நாளில் ஒருமுறைதான். அது 2009 மே 21ம் நாள்   மெனிக்பாம் முகாமில் இராணுவத்தின்முன் அதுதான் வேலுப்பிள்ளையப்பா. ஆம் அவர் எப்பொழுதும் ‘திருவேங்கடம் வேலுப்பிள்ளைதான்’  ஒருபோதும் பிரபாகரன் வேலுப்பிள்ளை அல்ல.

 

‘ஒருமையில் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’ (அறத்துப்பால் 126)

 

என இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வள்ளுவன் சொன்ன ஒரு குறளுக்கு மட்டும்அல்ல. அறத்துப்பாலில் உள்ள அத்தனைவரிகளுக்கும்  உதாரணம் கொண்ட ஒரு ‘மகாபுருஷர்’ வேலுப்பிள்ளை அப்பா மட்டும் தான்.

 

மாபெரும் எழுச்சியை ஈழத்தில் உண்டாக்கியது மகனின் வாழ்வு. மாபெரும் அதிர்ச்சியை உலகத்தில் உண்டாக்கியது அப்பாவின் சாவு! இது வெறும் சாவல்ல! பெரும் சகாப்பத்தின் திறப்பு!

 

வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் குடிகொண்டிருந்த அத்தனை திறமைகளின் பெருமைகளின் ஆரம்பஊற்று திருவேங்கடம்வேலுப்பிள்ளை அப்பாதான். உலகம் புரிந்துகொண்டது.’பிரபாகரப்பெருமையின்’மர்மவிடை இதன்பின்தான்  அவிழ்ந்து கொண்டது.

 

ஆம் இவர்வழியாக தனயனும் அவர்வழியாக தமிழனும் பெருமைப்படவேண்டிய ஆகர்ஷசக்தியே ‘வேலுப்பிள்ளை அப்பா’

 

இவர்களின் காலத்தில் நாங்களும் வாழுகிறோம்.
இவர்களின் பெருமைகளை எப்பொழுதும் பேசுவோம்.

 

நன்றியுடன்
அன்புள்ள அப்பாவிற்காக
தமிழ்நீ.பொன்.சிவகுமாரன்

 

http://tamil24news.com/news/?p=38172

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள் 

நினைவு அஞ்சலிகள் 

இவர்களின் காலத்தில் நாங்களும் வாழுகிறோம்.
இவர்களின் பெருமைகளை எப்பொழுதும் பேசுவோம்.

‘மாதந்தை’ திருவேங்கடம் வேலுப்பிள்ளை அப்பா! அவர்களிக்கு வீரவணக்கம்!

ஒரு வீரம் மிகுந்த தலைவனை பெற்ற தந்தைக்கு நினைவுநாள் வணக்கங்கள் !!!



150210_369042776524625_604450062_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்.!

58657_319045154866070_1361589187_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.