Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்

Featured Replies

டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர்.

 

டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில்,23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி கெலரின் அறையில், அவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரில் இருவரான, பவன் குப்தா மற்றும் வினய் சர்மா என்ற இருவரும், தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும், வழக்கில், அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.
 

அதேநேரத்தில், மற்ற இருவரான ராம்சிங் மற்றும் அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர், தங்களுக்கு சட்ட உதவி வேண்டும் என, கேட்டனர். இதையடுத்து, நான்கு பேரின் நீதிமன்ற காவலையும், வரும், 19ம் தேதி வரை நீட்டித்த மாஜிஸ்திரேட், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பரிசீலித்த கோர்ட், ஏற்கனவே பிறப்பித்துள்ள, வாரன்ட் அடிப்படையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.

 

மாஜிஸ்திரேட் மேலும் கூறுகையில், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ள பவன் குப்தாவும், வினய் சர்மாவும், இதுதொடர்பாக, தக்க மனுவை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராம் சிங் மற்றும் முகேஷுக்கு சட்ட உதவி அளிக்கப்படும் என்றார். கைதானவர்களில், ஐந்தாவது நபரான, அக்ஷய் தாக்கூரின், நீதிமன்ற காவல், வரும், 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனாலும், மற்றவர்களுடன் சேர்ந்து, அவனும் இன்று கோர்ட்டில் ஆஜராகிறான். கைதான ஆறாவது நபர், சிறார் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும்.குற்றம் சுமத்தப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட்டின் அறையில் ஆஜர்ப்படுத்தப்பட்டாலும், நீதிபதி கோர்ட்டிலேயே உத்தரவுகளை பிறப்பித்தார். கோர்ட் நடவடிக்கை களை, பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என, அங்கு ஆஜராகியிருந்த மீடியாக்களை சேர்ந்த யாருக்கும் உத்தரவிட வில்லை.


நிபுணர்கள் கருத்து : இதற்கிடையில், மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே, பவன் குப்தாவும், வினய் சர்மாவும், தாங்கள் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சட்ட நிபுணர்களோ, டில்லியில் நடந்தது போன்ற கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்ட யாரும், அப்ரூவராக மாற முடியாது என, தெரிவித்துள்ளனர்.
 

அவர் மேலும் கூறியதாவது: ஒரு சில வழக்குகளில், ஆதாரங்களைத் திரட்ட போலீசார் சிரமப்படுவர்; அப்படிப்பட்ட நேரங்களில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களையே, அப்ரூவராக மாறும்படி கேட்டுக்கொள்வர். இதன்மூலம், சாட்சியாக மாறுவோர், தண்டனையிலிருந்து தப்பலாம் அல்லது குறைவான தண்டனை பெறலாம். ஆனால், டில்லி சம்பவத்தில், அதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு, சட்ட நிபுணர்கள் கூறினர்.மகளின் பெயரை வெளியிட கோரிக்கை : டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான மருத்துவ மாணவியின் பெயரை, மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என, அந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தன் சொந்த கிராமத்தில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி

அளித்த அவர் கூறியதாவது:

 

ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலியான என் மகளின் உண்மையான பெயரை அறிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. அவளின் பெயரை வெளியிடுவது, இதுபோன்ற பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, உயிரோடு வாழும் பெண்களுக்கு, தைரியம் கொடுப்பதாக அமையும். என் மகள், தவறு எதையும் செய்யவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்பட்டே, அவள் இறந்தாள். அதனால், அவளின் பெயரை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என, நாங்களும் ஆசைப்படுகிறோம். என் மகளை சீரழித்தவர்களை, நேருக்கு நேர் சந்திக்க, நான் முதலில் விரும்பினேன்.


ஆனால், இப்போது அதை விரும்பவில்லை. கோர்ட் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்பதை நான் கேட்க வேண்டும்; அது போதும். விலங்குகளைப் போல நடந்து கொண்ட, ஆறு பேருக்கும், மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, சமூகத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவ்வாறு, மாணவியின் தந்தை கூறினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-205300924.html;_ylt=ApcmCdVVWgULx9gQkNSeJOGZBtx_;_ylu=X3oDMTQxaHQxNnAxBG1pdANNZWdhdHJvbiBUYW1pbCBOZXdzIEhvbWUEcGtnA2I0M2Y0NDc1LTI4ZjItMzkzYy1hOTIyLTFlYTZiOTMwYjM4OQRwb3MDMgRzZWMDbWVnYXRyb24EdmVyAzY3MTlmZWYxLTU4NDktMTFlMi05NjRmLTlkNGRlOGI5YjY2Yg--;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3

  • தொடங்கியவர்

எனது மகளின் பெயர் ஜோதிசிங் பன்டே தந்தை சாட்சியம்

 

எனது கையைப் பிடித்து, சிரித்தபடி நம்பிக்கையுடன் புறப்பட்டாள்…


கடந்த டிசம்பர் 16ம் திகதி இந்தியாவில் ஆறு போரினால் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக வீதியில் வீசப்பட்டு பின் மரணித்த பெண்மணியின் தந்தை இன்று வெளியான இங்கிலாந்து பத்திரிகையான த சன்டே பீப்பிள் என்ற பத்திரிகைக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

 

பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய பெண்மணியின் தந்தையான 53 வயதுடைய பாட்டி சிங் பன்டே ( விமான நிலைய பாரம் தூக்குபவர் ) தனது மகளின் பெயர் ஜோதி சிங் பான்டே என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

 

வடக்கு இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து குடும்பத்தினருடன் இணைந்து தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார், ஆனால் இறந்த பெண்ணின் 46 வயதுடைய தாயார் இன்னமும் வாயடைத்த நிலையிலேயே இருப்பதால் தம்முடன் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

சம்பவ தினம் மகளைக் காணாமல் பல தடவைகள் தாம் போன் செய்ததாகவும் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் கூறிய பன்டே இரவு 11.15 மணிக்கு டெல்கி வைத்தியசாலையில் இருந்து போன் வந்ததாகவும், தனது மகள் ஜோதி விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார்.

 

வைத்தியசாலைக்கு ஓடிச் சென்றபோது மகள் கண்களை மூடியபடி இருந்தாள் சிறிது நேரத்தில் கண்களை திறந்த அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிந்தது, அந்தத் துயரை தாங்க முடியவில்லை அவள் என் ஒரேயொரு மகள் என்றார்.

 

சொற்ப நேரத்தில் அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் ஜோதியும் அவருடைய நண்பர் 28 வயதுடைய அவீந்திர பன்டேக்கும் பேருந்தில் நடந்த சம்பவங்களை விபரித்தார்.

 

தொண்டைக் குழாயில் கடுமையான வலியிருப்பதால் தன்னால் பேச முடியவில்லை என்றும் கூறியுள்ளாள், பின்னர் ஒரு கடதாசியில் தனக்க வாழ ஆசையிருப்பதாக எழுதியும் கொடுத்துள்ளாள் மகள்.

 

அதேவேளை ஜோதி போலீசாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார், அதை நானும் கேட்டேன் ஆனால் எனது மனைவிக்கு கூறவில்லை இது மனிதர்கள் செய்யும் செயல் அல்ல மிருகங்களின் செயல் என்றும் புரிய வைத்தேன்.

 

சிங்கப்பூர் புறப்பட்டபோது ஒரு பிரச்சனையும் வராது என்று அவளுக்கு உறுதி கொடுத்தேன் எனது கையைப் பிடித்து, சிரித்தபடி நம்பிக்கையுடன் புறப்பட்டாள், ஆனால் அவளால் திரும்ப முடியவில்லை.

 

அவளுடன் சென்று தாக்குதலுக்குள்ளான அவீந்திர பன்டே அவளுடைய காதலன் அல்ல அவர் ஒரே ஜாதி அல்ல, அவளுக்கு உதவிய நண்பன் என்றும் கூறினார், சிங்கப்பூரில் வைத்திய சிகிச்சையின்போது மாரடைப்பால் மரணித்த ஜோதி இந்தப் பிரபஞ்சத்தின் நடுநாயகமாக நின்று சிரிக்கிறாள்.

 

மரணமடைந்த ஜோதி திருமணத்திற்கு முயலவில்லை படிப்பு முடித்து, பணிபுரியவே விரும்பினாள், மிகக் குறைந்த சம்பளத்தில் நாம் வாழும் ஏழ்மை வாழ்வில் இருந்து எம்மை மீட்கவே அவள் விரும்பினாள்.

 

தனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருப்பதாகக் கூறிய அவர் இனியாவது பெற்றோர் போலீசாரை நம்பியிருக்கக் கூடாது தமது பிள்ளைகளை தொடர்ந்து பெற்றோரே கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

கொல்லப்பட்ட தனது மகள் பெயரை மறைக்குமளவுக்கு தவறுகள் எதுவும் செய்யவில்லை ஆகவே இந்தியப் போலீசார் தனது மகளின் பெயரை வெளியிட வேண்டும் என்றும்; கேட்டு தானே அதை பிரகடனம் செய்துள்ளார்.

 

நேற்று காலம் சென்ற 23 வயது மருத்தவ மாணவியின் நண்பர் ஸீ தொலைக்காட்சிக்க பேட்டியளித்திருந்தது தெரிந்ததே.
இறந்த யுவதியின் பெயரை தாம் மறைத்து வைத்திருப்பதாகவும், நண்பரை அடையாளம் காட்டியதால் பெண்ணின் பெயர் அம்பலமாக வழி பிறந்துவிட்டதாக போலீசார் ஸீ ரீவி மீது வழக்கு பதிவு செய்ததிருந்தனர்.

 

இந்திய சட்டங்களின்படி இறந்த பெண்ணின் பெயரை போலீஸ் வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது, ஆனால் எத்தனையோ கொலைகளின் படங்களை வெளிட்ட இந்திய ஊடகங்கள் இதை மட்டும் வெளியிடாமல் தடுக்கப்படுவது சந்தேகம் தரும் செயலாகவே இருக்கிறது.

 

http://www.alaikal.com/news/?p=120107

  • தொடங்கியவர்

India gang rape victim's father: I want the world to know my daughter's name is Jyoti Singh Pandey


Devastated dad tells The Sunday People he hopes revealing her name will give courage to other women who have survived such attacks.

 

 

 

She is known to the world only as India’s Daughter following her sickening gang rape and murder.

 

But today, with permission of her devastated father, we can reveal her name: Jyoti Singh Pandey.

 

Brave dad Badri, 53, told The Sunday People: “We want the world to know her real name.

 

“My daughter didn’t do anything wrong, she died while protecting herself.

 

“I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter.”

 

 

We interviewed Badri and his family in his ancestral village of Billia in the northern Indian state of Uttar Pradesh.

 

 

 

http://www.mirror.co.uk/news/world-news/india-gang-rape-victims-father-1521289



banda2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.