Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தை பிறந்தாலும் விழி திறக்காத தமிழர் புனர்வாழ்வுக் கழகம்!

Featured Replies

 

சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனவாத, இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்தபோது, தமிழ் மக்கள் மீது பொருளாதார, மருந்துத் தடைகளை விதித்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தோற்றம் பெற்றதுதான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation).

08012013%20002.jpg

பாதிக்கப்படும் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது, தங்களைக் கவனிப்பதற்கு யாருமே இல்லை என்று அவர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்கியது மட்டுமல்ல, சிறீலங்காவின் சட்டவிதிகளின் கீழ் அதனையரு அமைப்பாகப் பதிவு செய்து தமிழ் மக்களுக்கான உதவிகளைப் புரிவதற்கும் அனுமதியளித்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு கட்டமைப்பாக இது இல்லாது போனாலும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் இதில் இணைந்து பணியாற்றவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இதில் இணைந்திருந்தார்கள்.

08012013%20003.jpg

தாயகத்தில் மட்டும்தான் இதன் உதவிப் பணிகள் இடம்பெற்றபோதும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிளைகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் வியாப்பித்து மிகப்பெரும் தொண்டு நிறுவனமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மாற்றமடைந்தது. தாயகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்போதும் தயாராகவே இருந்தார்கள் என்பதைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அவர்கள் வழங்கிய தொடர்ச்சியான உதவிகள் உறுதிப்படுத்தின.

08012013%20004.jpg

1980களின் நடுப்பகுதியில் ஆரம்பமான இதன் பணிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல இயற்கை அனர்த்தம், மீள்கட்டுமானம், பொருளாதார வளர்ச்சி என விரிந்த பல சேவைகளை தமிழர் தாயகமெங்கும் வழங்கியது. 2004ம் ஆண்டின் இறுதியில் ஆழிப் பேரலையின் போது இந்த அமைப்பு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. சிறீலங்கா உட்பட பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்கங்களினால் கூட அந்தப் பேரழிவில் இருந்து மீண்டெழ முடியாது மூச்சுத்திணறியபோது, ஒரு சில நாட்களுக்குள் அந்தப் பாதிப்பில் இருந்து மக்களையும், மண்ணையும் மீட்டெடுத்தமை கண்டு உலகமே மூக்கில் விரல்வைத்தது. இவர்களின் பணியை எதிரியான சிறீலங்கா அரசே பாராட்டியதையும், விருது வழங்கிக் கௌரவித்தையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இயற்கையின் இந்தப் பேரழிவில் இருந்து இனபேதமின்றி சிங்கள மக்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவிகள் பல புரிந்ததும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

08012013%20005.jpg

அதன் பின்னர் மகிந்த அரசு பாரிய இன அழிப்புப் போரை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டபோது தினமும் இடப்பெயர்வுகளும், அவலங்களும் எனத் தொடர்ந்தபோதும் சோர்வின்றி அந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இறுதிநாள் வரையும் களத்தில் நின்று ஆற்றியபணிகள் வரலாற்றின் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியவை. இந்தப் பணிகளின்போதும், சிறீலங்கா அரசின் கைகளில் அகப்பட்டும் உயிரிழந்துபோன தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் பலர்.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழர் அமைப்பு இன்று என்ன செய்கின்றது?

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் இன்றும் அவல வாழ்விற்குள் வாழும் நிலை ஏன் வந்தது? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அந்த அவலத்தில் இருந்து மீட்டெடுத்திருக்க வேண்டிய ‘முதற் கடமையும் பொறுப்பும் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம்’ ஏன் அவர்களைக் கைவிட்டு ஒதுங்கிப்போனது?

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களுக்கான உதவிகளை வழங்கக்கூடிய கட்டமைப்புக்கள் எவையும் தாயகத்தில் இல்லாதுபோன நிலையில், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டுமே அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால், அந்த மக்களுக்கு எந்தவொரு உதவிகளையும் அது இன்றுவரை ஏன் செய்யவில்லை?

விடுதலைப் புலிகளின் ஒரு கட்டமைப்பாக இதனைக் குற்றம்சாட்டி இலங்கையில் இது செயற்பட முடியாது முடக்கப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவுவதற்கு ‘ஆயிரம் வழிகள் இருந்தன, இன்னும் இருக்கின்றன.’ தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது என்பதற்காகவே தமிழீழத் தேசியத் தலைவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு முன்னின்று உதவிபுரிந்தார். இயக்க நிதியில் இருந்தும் உதவிகளையும் புரிந்தார். ஆனால், இன்று அங்குள்ள மக்கள் தனி மனிதர்களின் உதவிகளில், அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக, அவர்கள் மீது தங்கி வாழவேண்டிய இந்த அவல நிலைக்கும் யார் காரணம்?

சாதாரண மழை வெள்ளத்தில் இருந்து கூட அவர்கள் மீண்டெழ முடியாமல் போனதற்கு யார் காரணம்? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வரவேண்டும் என்று ஐ.நா. வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. தமிழர்களுக்கு உதவுகின்ற தார்மீக பொறுப்பைக்கொண்ட புனர்வாழ்வுக்கழகம் இதனை சாதகமாக்கி, தங்கள் மீதான தடைகளை தகர்த்து தாயக மக்களுக்கு உதவுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால், இன்றுவரை அது நடக்கவில்லை.   

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது பணிகளை உணர்ந்து பணியாற்றியிருந்தால் தமிழ் மக்களும், விடுவிக்கப்பட்ட போராளிகளும் யாரிடமும் உதவிகேட்டு எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய அவலம் நேர்ந்திருக்காது. தனி மனிதர்களின் உதவியில் வாழும் அவலம் இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலின்மையே முழுமுதற் காரணம். அதன் பொறுப்புக்களில் இருப்பவர்களே இந்த வரலாற்றுப் பிழைக்கான பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கரம் கொடுப்போம் வடம் பிடிப்போம் என்றும் நம்பிக்கையை விதைத்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றது?

களியாட்டங்களையும், கலைநிகழ்வுகளையும், நினைவு நிகழ்வுகளையும் நடத்துவதற்காகவா இதனைக் கட்டி வளர்க்க மக்களும் விடுதலைப் புலிகளும் துணைநின்றார்கள்? இவ்வாறான செயற்பாடுகளுக்குள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுருங்கிப்போனது வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது.

- ஈழமுரசு

http://www.sankathi24.com/news/25798/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து 3 வருடங்கள் தாண்டும்வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை பற்றி மூச்சுவிடாமல் இருந்துவிட்டு, அவலப்படும் மக்களுக்கு உதவிகளை தனிப்பட்ட ரீதியில் செய்வது நல்லது என்று அறிவுரைகள் வழங்கிவிட்டு, இப்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேல் குற்றம் சாட்டுவது அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த/இருக்கின்ற ரெஜி ஈழமுரசின் பின்னால் உள்ளவர்களின் அரசியலுடன் முரண்பட்டதால் உருவானதா என்ற சந்தேகம் இயல்பாக வருகின்றது.

 

 

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதா?

பதமிழர் புனர்வாழ்வுகழகத்தின் தலைவர் யார்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கரம் கொடுப்போம் வடம் பிடிப்போம் என்றும் நம்பிக்கையை விதைத்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றது?

 

களியாட்டங்களையும், கலைநிகழ்வுகளையும், நினைவு நிகழ்வுகளையும் நடத்துவதற்காகவா இதனைக் கட்டி வளர்க்க மக்களும் விடுதலைப் புலிகளும் துணைநின்றார்கள்? இவ்வாறான செயற்பாடுகளுக்குள் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சுருங்கிப்போனது வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது.

- ஈழமுரசு

http://www.sankathi24.com/news/25798/64//d,fullart.aspx

3502_10200167391936387_156129880_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதா?

 

2007 இல் தமிழர்களின் அரசியல் விடயங்களில் நடந்தவை பற்றி அறிய அக்கறை இருக்கவில்லையா?

 

தொடர்புள்ள திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=31189

2007 இல் தமிழர்களின் அரசியல் விடயங்களில் நடந்தவை பற்றி அறிய அக்கறை இருக்கவில்லையா?

 

தொடர்புள்ள திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=31189

 

இருந்தபடியால் தான் அந்த கேள்வியை எழுப்பினேன்.

 

 

இணைப்பில் அப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தமிழர் அமைப்பு இன்று என்ன செய்கின்றது? என்ற கேள்விக்கு பதிலாக.

1977  இல் நடந்த  இனக்கலவரத்தினால்   பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் 

பொருட்டு  தமிழ்  அகதிகள் புனர்வாழ்வுக்  கழகம் (T .R .R .O ) ஆரம்பிக்கப்பட்டு ,
நன்றாக  இயங்கியது .இவர்கள்தான்  டொலர்  பாம் ,கென்ட் பாம் போன்ற  இடங்களில்  குடியேற்றங்களை  செய்து  பின்நாளில்   காந்தியத்திடம்  கொடுத்தவர்கள் . T R R O  விற்கு 
 
80களின்  ஆரம்பத்தில்  நெருக்கடி  வந்த  பொழுது   தமிழ்  அகதிகள்  என்பதிற்கு  பதிலாக The  Refugees  Rehabilitation  Organaisation  Ltd என்று  மாற்றி கா .விஸ்வலிங்கம்  ஐயாவின் தலைமையில் (83-july 86)வட -கிழக்கு  முழுவதும் சிறப்பாக  இயங்கியது .இவரது
மறைவை தொடர்ந்து  Prof .கா .சிவத்தம்பி  தலைமையில்  இயங்கியது .
 
 
 
 
நெருக்கடி ஏற்படும்  போது எமது  அடிப்படை  கொள்கை ,நோக்கம் மாறாமல் (விடுதலைப்  போராட்டமாக 
இருக்கலாம் ,மக்கள் சேவையாக இருக்கலாம் )இலக்கை  நோக்கி செல்ல நாம்  மாற வேண்டும் .
 
80களில் காந்தியம்  அமைப்பு  போராட்டகுழுவுடன்( PL O T )  தொடர்பு  கொண்டிருந்ததால் அது 
இல்லாது  அழிக்கப்பட்டது ,அனைவருக்கும் தெரியும் .(இதன்  பின்னணியில் சர்வோதயமும் ,ஆரியரெட்னவும் சதி  செய்தனர் .)
 
 
எமது  கண்  முன் இவ்வளவு  நடந்தும் கடந்தகால  நிகழ்விலிருந்து  பாடம் கற்கவில்லை .
தமிழர்  புனர்வாழ்வுக் கழகம்  இயங்க  முடியாததட்குரிய  காரணங்கள் 
1.வெளிநாடுகளில்  அந்த  நாட்டின்  சட்டத்திற்கு  அமைவாக இயங்கவில்லை ,அதாவது 
வெளிப்படைத்தன்மை ,கணக்குவழக்கு ,பணப்  பரிவர்த்தனை என்பன .
2.புலிகளுடன்  சேர்ந்து  செயற்பட்டது .(நாங்கள்  என்னதுதான்  காரணங்கள் சொன்னாலும்  வெளிநாடுகள் அதை கேட்கபோவதில்லை .)
  
 
அண்மையில்  டொராண்டோவில் Canadiyan Fund for Tamil Refugees Rehabilitation அமைப்பினுடைய Charitable உரிமையை  மத்திய அரசு நீக்கியிருந்தது .(ஒழுங்கான  பணப்பரிமாற்றம் இல்லை )
 
 
ஆகவே  எங்களில் பிழையை  வைத்துகொண்டு , நாங்கள்  மற்றவர்களை குற்றம்சாட்டி பழகிவிட்டோம் .

 

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் ஒரு அங்கமாக  புனர்வாழ்வு கழகம் இயங்கியதால் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்த போது இவர்களும் தடை செய்யப்பட்டார்கள். புலிகளை தடை செய்யாத அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட புனர்வாழ்வு கழகத்தின் பணத்தை முடக்கியுள்ளன. 
 
ஈழமுரசு எப்படி புனர்வாழ்வுகழகம் செயற்படலாம் என சொன்னால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.