Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஸானா விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்தது: ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By General 

2013-01-09 21:52:37  

ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ரிஸானா நபீக் மீது சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவையாவன, 

மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கின் பெற்றோரும், குடும்பத்தினரும் என்னுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட காலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நானும், அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் சிலரும் நீதித்துறையும், சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றத்தடுப்புப் பிரிவினரும், ரிஸானா நபீக்கின் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தோம். 

ஜனாதிபதி இது தொடர்பில் சவூதி அரேபிய மன்னருக்கு கருணை மனுவொன்றின் மூலம் உருக்கமான கோரிக்கையை விடுத்திருந்த அதேவேளை நான் இறந்த குழந்தையின் பெற்றோருக்கு கருணை மனுவொன்றை சவூதி அரேபிய தூதரகத்தின் ஊடாக நீண்ட காலத்திற்கு முன்பே அனுப்பியிருந்தேன். 

இறைமையுள்ள நாடான சவூதி அரேபியாவின் நீதித்துறைக்கு நாம் மதிப்பளித்து நடந்து கொண்டோம். அந் நாட்டின் சட்டத்தின்படி கொலை குற்றம் சாட்;டப்பட்ட ஒருவரை, மரணித்தவரின் பெற்றோர் மன்னிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனடிப்படையில் நாம் மரணித்த குழந்தையின் பெற்றோரையும், குடும்பத்தினரையும் அவர்களது கோத்திரத்தாரையும் அணுகினோம். 

சில தினங்களுக்கு முன்னர் கூட நீதியமைச்சில் சவூதி அரேபிய தூதுவரிடம் ரிஸானா நபீக்கின் நிலைமையை பற்றி நான் எடுத்துக் கூறி அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் குறித்து வினவிய பொழுது அவர் நம்பிக்கையூட்டும் பதிலை எனக்கு அளித்திருந்தார். ஜனாதிபதியும் மீண்டும் வேண்டுகோள் விடுத்ததோடு, சட்டமா அதிபரும் அங்கு ரிஸானாவின் விவகாரம் தொடர்பில் சென்று வந்தார். 

நீதியமைச்சர் என்ற முறையில் நானும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் ரிஸானாவின் விடுதலைக்காக மேற்கொண்டிருந்தேன். 

ரிஸானாவின் வயதை கூடுதலாக காட்டி போலிக் கடவுச் சீட்டு மற்றும் பிரயாண ஆவணங்களை தயாரித்து சவூதி அரேபியாவிற்கு அனுப்பிய நபர்களை கைது செய்து அவர்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. 

இவ்வாறிருக்கத்தக்க அரசாங்கமும், மனித உரிமை அமைப்புகளும் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் மிகவும் பரிதாபத்துக்குரிய முறையில் ரிஸானா நபீக் மரண தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அளிக்கின்றது. 

அவருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வு கிட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதோடு, அவரது மறைவினால் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ள அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மூதூர் உட்பட திருகோணமலை மாவட்ட மக்களுக்கும், பொதுவாக இலங்கையர் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2476

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வு கிட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதோடு, அவரது மறைவினால் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகியுள்ள அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மூதூர் உட்பட திருகோணமலை மாவட்ட மக்களுக்கும், பொதுவாக இலங்கையர் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

 

ஐநா வரைக்கும் தமிழர்களுக்கு எதிராக திரிந்தீர்கள்.. எப்ப என்ன ஆச்சி.. ராஜ பக்சே ஒரு எட்டு அந்த நாட்டிற்கு போய் பேசலாம் இல்லை.. அவருக்கு உடம்பு வருத்தமோ என்னவோ..!

டிஸ்கி:

போகட்டும் .. பியூட்டி என்ன என்றால் சாவதற்கு முன்பே சங்கு ஊதறாங்கப்பா.  நல்ல பழக்கம் ...அப்படியே மெயின்டன் பண்னுங்கோ...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இப்போது செய்யவேண்டிய வேலை, சவூதி அரேபிய நாட்டுடன் இருக்கும்  இராஜதந்திர உறவுகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும்.நாம் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை இதுவே திமிர் பிடித்த சவூதி மக்களுக்கு நாம் புகட்டும் பாடமாக அமையும். இது ஒன்றும் நிறைவேறாத விடையம் இல்லை. பல்வேறு இன்னல்களையும் கொடுமைகளையும் தாங்கி தமது விடுதலைப்போரில் நிலையெடுத்த, தமிழினத்தின், கடந்தகால அனுபவங்களில் இருந்தே சிங்களம் பாடம் படிக்கலாம். இச்செய்தியை வாசிக்கும்போது, எமது தேசியத்தலைர் மேதகு, வேலுப்பிள்ளை பிரபாகரது தேவை தமிழினத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைத்தீவுக்குமே என்பது புரிகிறது. 

இந்த தூக்கு தண்டனைக்கும் தேசியதலைவருக்கும் என்ன தொடர்பு?

மெக்காவுக்கு குண்டு வைத்து இருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.வி.சசி, என்னுடைய கருத்து என்னவெனில் முடிவெடுப்பதில் உள்ள துணிச்சலை கூறுகிறேன். வரலாற்றிலிருந்து பாடங்களை சிங்களம் இன்னமும் கற்றுக்கொள்ள மறுக்கின்றது.

அவர்கள் உணர்ச்சிவசபப்டுவதில்லை( தமிழ் பெண்களை வேட்டையாடுவதை தவிர).

 

கசப்பான உண்மை என் எனில் அவர்களுக்கு தெரியும் ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு முஸ்லிம் நாடே மன்னிக்கவில்லை இதில்   சட்டதிட்டங்கலை மீறி மூக்கை நுளைத்து உடைபடுவதை விட ஆற விட்டு தங்கள் ஆதாயத்தை தொடர்ந்து பெறத்தான்  நினைப்பார்கள்.

 

 

புலிகள் உடனே உணர்ச்சிவசப்படுவார்கள்( அவசர அறிக்கை) முன்பு அவர்களிடம்   அறிக்கை போர் செய்வதில்லை ஆனால் சமாதாணம் என்ற ஒன்று வந்ததும்  கண்ட கண்ட ஊடகங்களுக்கு பேட்டியும்  படமும் காட்ட வெளிக்கிட்டு விட்டார்கள்.

 

ஒரு காலத்தில் புலிகள் தங்கள்  தாக்குதல் வெற்றிகளை தமிழ்மக்களை நோக்கியே பிரச்சாரப்படுத்துவார்கள்  பின்னடைவில் அது  வெளிஉலகத்துக்கும் தங்களை வெல்லமுடியாத சக்தியாக காட்டிக் கொள்ளமுற்ப்பட்டார்கள்.

 

ஒருமுறை வன்னியில் திலிபன் நினைவாக மருத்துவமனை ஒன்றுக்கு அடிக்கல் நாட்டுவிழா தமிழ்ச்செல்வனும்  வந்தார் அப்போது பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்வி ஒன்றுக்கு    அவர் கூறியது இனி  சிங்களத்தால்;  ஒரு கட்டுமானத்தையும் அசைக்கமுடியாது  சொல்லி கொஞ்ச காலத்தால் அவர் விமானத்தாக்குதலில் பலி .

 

 

நீங்கள் சொல்லுவது போல் பிரபாகரன்  ஆட்சியில் இருந்தால்  இந்த ஒருவருக்காக 1 லட்ட்சம்  தமிழர்கள் சவுதியில்  வேலைசெய்வதை கூட பொருட்படுத்தாமல் அணைவரையும் நாட்டுக்கு திரும்ப சொல்லி  சுய கெளரவத்தை  காப்பாற்றி இருக்கலாம் ஆனால்  1 லட்சம் தமிழர்களுகும் வாழ்நாள் முழுவது  பிரபாகரனாலோ அல்லது புலிகளாலோ  சாப்பாடு போட முடியாது...

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ வி சசி, முப்பது வருசமா போர் நடந்து பொருளாதாரத் தடை வந்தபோது பிரபாகரன்தானே முப்பது லட்சம் தமிழர்க்கும் சோறுபோட்டவர்.

கப்பல் வரும் சாமான் எல்லாம் இறங்கும், இறங்கிய சாமான் களஞ்சியத்துக்கு போகும் களஞ்சியத்தில் இருக்கும்  பழையை  சாமான்கள்( date  முடியும் நிலை அல்லது முடிந்த) சாமான் எல்லாம் வெளியே  யூனியனுக்கு போகும் யூனியனில் இருந்து சங்ககடைக்கு போகும்........

 

 

கொழும்பில் இருந்து தனியார் லொறிகள் வரும். பற்றி , சிமேந் உரம் , மருந்து போன்ற முக்கிய  சாமனை சிங்களவன் தடைசெய்து இருப்பான், சாக்கிலெட், கோலா, போன்ற வெளிநாட்டு  சாமன்களை புலிகள் தடைசெய்து இருப்பார்கள்( புலிகளின் பாண்டியன் கடைகளில் அவை விற்க்கபடும்) அது பிரச்சனையில்லை உள்ளுர் உற்பதியை ஊக்கப்படுத்தலாம்..

 

யாழ்ப்பாணத்தை  பொருளாதரத்தில் கொண்டு இழுத்தது தனியார் வியாபரிகளே( அவர்களும் மாசம் மாசம் அள்ளி கொடுத்தும் சில நேரம் அடங்கவில்லை)

 

 

Edited by I.V.Sasi

 ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

 

பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

 

ஆனால் செய்யமாட்டார் .

 

விடுதலைக்கு முயற்சிக்க இல்லை. இந்த அறிக்கை எல்லாம் முஸ்லீம் மக்களை ஏமாற்றவே, மீண்டும், மீண்டும்.

Edited by akootha

ஐ வி சசி, முப்பது வருசமா போர் நடந்து பொருளாதாரத் தடை வந்தபோது பிரபாகரன்தானே முப்பது லட்சம் தமிழர்க்கும் சோறுபோட்டவர்.

 

இதில் நான் புலிகள்  சாப்பாடு போடவில்லை என குறையாக சொல்லவில்லை ஆனால்   புலத்தில் சுகமாக வாழுபவர்கள் இனி போராட்டத்தை வழுவாக எடுத்து செலுவார்கள் என்ற பிரபாகரனின் தூரநோக்கு போன்று பிழையான நோக்காவே   சவுதி விடையத்தில் இருந்து இருக்கும் என சொல்கிறேன்.

Edited by I.V.Sasi

நீங்கள் சொல்லுவது போல் பிரபாகரன்  ஆட்சியில் இருந்தால்  இந்த ஒருவருக்காக 1 லட்ட்சம்  தமிழர்கள் சவுதியில்  வேலைசெய்வதை கூட பொருட்படுத்தாமல் அணைவரையும் நாட்டுக்கு திரும்ப சொல்லி  சுய கெளரவத்தை  காப்பாற்றி இருக்கலாம் ஆனால்  1 லட்சம் தமிழர்களுகும் வாழ்நாள் முழுவது  பிரபாகரனாலோ அல்லது புலிகளாலோ  சாப்பாடு போட முடியாது...

 

 

நான் இதுவரையில் இந்த செய்தியை படிக்கவில்லை உங்களால் அதை இங்கே இணைக்க முடியுமா?

 

 

Edited by மல்லையூரான்

இதில் நான் புலிகள்  சாப்பாடு போடவில்லை என குறையாக சொல்லவில்லை ஆனால்   புலத்தில் சுகமாக வாழுபவர்கள் இனி போராட்டத்தை வழுவாக எடுத்து செலுவார்கள் என்ற பிரபாகரனின் தூரநோக்கு போன்று பிழையான நோக்காவே   சவுதி விடையத்தில் இருந்து இருக்கும் என சொல்கிறேன்.

 

ஐவிசசி,

புத்திசாலிகளுக்கு மட்டுமே தூரநோக்கு இருக்கும். மேலும் நீங்களும் அந்த நோக்கத்திற்கு உதவுவதே உங்கள் வாழ் நாளில் நீங்கள் புலத்தில்  செய்யக்கூடிய புண்ணியம்.

நான் இதுவரையில் இந்த செய்தியை படிக்கவில்லை உண்களால் அதை இங்கே இணைக்க முடியுமா?

 

நீங்கள் இடையில் வந்து செய்தியின்  இணைப்பை தர்ச் சொன்ன?

 

நான் எழுதிய கருத்து அது(உ+ம்) என்று.

நீங்கள் இடையில் வந்து செய்தியின்  இணைப்பை தர்ச் சொன்ன?

 

நான் எழுதிய கருத்து அது(உ+ம்) என்று.

 

நீங்கள் முன்வைத்த உதாரணம் வெறும் இட்டுகட்டு மட்டுமல்ல அந்த பந்தியில் எழுதுயிருப்பவை எல்லாமே முன்னுக்குபின் முரணானவை. 

 

என்ன செய்ய. எதையாவது வாயில் வந்ததை எல்லாம் எழுதி பெயர் எடுக்கிறீர்கள்.

 

சிலர் தாங்கள் நினைப்பதை எல்லாம்தான் பிரபாகரன் செய்தார் என்று எழுதுகிறார்கள். நீங்கள் கனவில் கண்டவற்றை எல்லாம் அது சும்மா ஒரு பகிடிக்கு எழுதின உதாரணம் என்று சொன்னால் நீங்கள் அவர்களை விட "ஒரு ஆயிரம் மடங்கு மேல்". :unsure:

 

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_diaspora

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.