Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி அய்யா சாமியும் ஈழப் போராட்டமும்

Featured Replies

அப்பாவி அய்யா சாமியும் ஈழப்போராட்டமும்

--------------------------------------------------------------------------------------

[ முன்னறிவித்தல்: இதில் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னிடம் சொல்லலாம். கருத்துப் பிழைகள் இருந்தால் அய்யாசாமியிடம் சொல்லலாம். அவருடைய முகவரி c/o ரிம் கோற்றன்]

நல்ல ஒரு மாலைப்பொழுது. சூரியன் மெல்ல மெல்லக் கீழிறங்கி வர மேகப் பெண் வெட்கத்தில் சிவக்கத் தொடங்கிவிட்டாள். அவர்களுக்குள் என்ன சில்மிஷமோ.... நேரம் செல்லச் செல்ல அவள் செம்மை கூடிக் கொண்டிருந்தது. நானும் எதையெதையோ எண்ணிக்கொண்டு ரிம்கோற்றனில் ஒரு கோப்பி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தேன். சமர் காலம் என்பதால் நேரம் 6 மணியைத் தாண்டியும் வெளிச்சம் இருந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் அவர் வந்தார். அவர் அய்யா சாமி. ஆதிவாசியையும் விட ஒரு அப்பிராணி. மெல்லத்தான் பேசுவார். "அண்ணை மஹாராஜா" என்ற படி வந்தவர் ஒரு டபிள் டபிள் எடுத்துக் கொண்டு என்னுடன் தொத்திக் கொண்டார். மெள்ள மெள்ளக் கதை பரவி நாட்டு நடப்புகளுக்குள் கால் வைத்ததும் தான் தாமதம் குடிச்ச கோப்பி சூடாயிருந்ததோ என்னவோ அவரும் சூடாகிப் போய்விட்டார். " கெப்பிட்டிக் கொல்லாவில 50 ,60 சிங்களச் சனம் செத்துப் போட்டுதுகள் கேள்விப் பட்டியளோ " என்று கேட்டேன்.சிறிது நேரம் சும்மா இருந்தவர், மெள்ளக் கதைக்கத் தொடங்கினார். " கேள்விப்பட்டனான்... அவங்களே செய்து போட்டு புலியள்ல பழி போடுறாங்கள்" என்றவர் "நாங்கள் தான் செய்ததெண்டாலும் அது பிழையில்லை..." எண்டார்.

" என்ன அய்யாசாமி இப்படிச் சொல்லுறியள் மக்களைக் கொல்லுறது.... " சொல்லி முடிக்கவில்லை சீறிப் பாய்ந்த சிங்கம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எண்டு ஓடிவிடும் . அப்பிடி ஒரு சினப்பு .அவரைச் சொல்லவிட்டிட்டு "மெள்ள மெள்ள .." என்று இடைக்கிடையே அமைதிப் படுத்தினேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னவோ ஏதேவென்று 911 அடிச்சாலும் எண்டு உள்ளூற உதறலெடுத்தது என்னவோ உண்மைதான்.அவர் தொடங்கினார். "என்னண்ணை பொது மக்கள் எண்டு சொல்லுறியள் ... இஞ்சை தமிழ்ப் பக்கத்தில செத்ததெல்லாம் புலியள் எண்டோ சொல்லுறியள்... வங்காலையில கழுத்தில சுருக்குப் போட்டுத் தூக்கிவிட்டது புலியளையோ... அல்லைப்பிட்டியில அடிச்சும் சுட்டும் கொண்டது புலியளையோ.... கிபீரில வந்து எத்தனயோ மைலுக்கு மேல நிண்டு குண்டு போட்டு புலியள மட்டும் கொண்டு போட்டுப் போறாங்களோ...ஆமிக்காரங்களைக் கொண்டு

குண்டடிச்சுக் கொல்லுறது பத்தாதெண்டு சிங்களக் காடையளைக் கொண்டு வெட்டியும் குத்தியும் கொல்லுறது புலியள மட்டுமோ... பத்தாததுக்கு காட்டிக் குடுக்கிற கும்பல் தங்களின்ர சனத்தையே காட்டிக்குடுக்கவும் கற்பழிக்கவும் திரியுதுகள்.... இவை கொல்லுறது எல்லாம் புலியள் எண்டுறியள் ....அப்படியே ஒரு கதைக்குப் புலியள் தான் எண்டு ஒத்துக்கொண்டாலும் ஒரு லச்சத்துக்கு மேல கொண்டு போட்டாங்கள்.... பிறகேன் பதவி யேற்கிற ஒவ்வொரு சிங்கள இராணுவத் தளபதியும் புலியள் எண்ணி ஒரு 15000 தான் இருக்கினம் ..அவையைக்கொல்லுறது ஒரு பெரிய விசயம் இல்லை எண்டு சவுடால் விடுறாங்கள்... " என்றவர் மூச்சு வாங்கவும் கோப்பியைக் குடிக்கவும் ஒரு இடை வெளி விட்டார்.

இதை விட்டால் சந்தர்ப்பம் கிடையாதென்று நானும் இடையில் புகுந்து ஒரு கேள்வி கேட்டன். "அவங்கள் செய்யிறாங்கள் எண்டு நாங்களும் செய்யிறதே?"

குடிச்ச கோப்பியைக் குடிக்கவிட்டிருக்கலாம். பிழை விட்டிட்டனோவென்று பிறகு யோசித்து கவலைப்பட்டேன். அப்பிடி ஒரு சூறாவளி போல எழும்பினார். கத்தரினா நவத்திரத்தினா போல வந்துபோன கண்ட கண்ட சூறாவழியெல்லாம் பிச்சை வாங்க வேணும். அப்பிடியொரு சுழட்டுச் சுழட்டி விட்டார்.

"செய்ய வேணும் ...நல்லாச் செய்ய வேணும்... சிங்கள காடை அரசாங்கமும் சில மொட்டையளும் (பிக்குகள்... இது ஆதிவாசி போல சிலருக்கு விளங்குவதற்காக நான் போட்டது) தான் தமிழனைக் கொல்லத் துடிக்குது எண்டு நீங்கள் நினைக்காதையுங்கோ.... நீங்கள் ..ஆருக்காக இப்ப வக்காலத்து வாங்கிறீங்களோ ( வாங்கினனானோ?...அவர் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்) ..அவையும் தான்... இல்லை எண்டால் இப்ப ஒரு லட்சத்துக்கும் மேல தமிழர் செத்துப் போட்டினம்...பல லட்சம் எங்களை மாதிரி நாடில்லாமல் அகதியளா அலையிறம்... இந்த மக்களான மக்கள் ...புத்தனை வழி படுற மக்கள்... அகிம்சையான மக்கள் ..தமிழனுக்கு நாடு குடுக்க வேண்டாம்... கொலையாவது செய்யாமல் இருங்கோ எண்டு எந்த அரசாங்கத்தையாவது கேட்டவையோ... இல்லை அப்பிடிப் பட்ட ஒரு அரசாங்கத்தையாவது தெரிவு செய்தவையோ.... கிடையவே கிடையாது.... தமிழனைக் கொல்லவேணும் எண்டுற காமதுறுவையும் ஜேவிபிக்காரனையும் பார்லிமென்றுக்குத் தெரிஞ்சு அனுப்புறது... உந்த மக்கள் தான்...பிறகு எப்பிடி உவையில இரக்கம் வரும்....''

சொல்லி நிறுத்தியவர் மடக்கெண்டு கோப்பியை ஒரு உறுஞ்சு உறுஞ்சினார்... பாவம் தொண்டைத் தண்ணீ வத்தியிருக்கும்... தொடர்ந்தார். "நாங்கள் இவ்வளவு காலமும் அவங்களின்ர இடத்துக்கையோ போய் சண்டை போட்டனாங்கள். அவையள் தான் எங்கட இடத்துக்க வந்து இவ்வளவு கொலையும் கொள்ளையும் பாலியல் வல்லுறவும் நடத்துறாங்கள்... இனி சண்டை எங்கட இடத்துக்க இருக்கக் கூடாது... ஈராக்கில அமெரிக்கா செய்யிறதைப் போல காஸ்மீரில இந்தியா செய்யிறதைப் போல அவங்கள் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அப்பாவிச் சனத்தை கொண்டு போடுறாங்கள். ....ஒரு ஆமிக்காரன் செத்தால் 50 சனத்தைக் கொல்லுறாங்கள்...சண்டையை நாங்கள் எங்கட இடத்துக்கை வைச்சிருக்கிறதால தான் அவங்கள் புதிசு புதிசா படைக்கு ஆக்களச் சேத்துக் கொண்டு வந்து சண்டை போடுறாங்கள்... அவங்களின்ர ஊருக்குள்ளேயே சண்டையைக் கொண்டு போக வேணும். அப்பத்தான் வலி எண்டால் என்ன இறப்பு எண்டால் என்ன எண்டு அவங்களுக்குத் தெரியும்.... சமாதானம் தனிய தமிழருக்குத் தான் வேணுமெண்டு இல்லை... சிங்களவருக்கும் வேணுமெண்டு தெரியவேணும்... அதுக்கு அவங்களுக்கும் இந்த வலி வேதனை இறப்பு துக்கம் எல்லாம் தெரிய வேணும்... இப்ப கெப்பிட்டிக் கொலாவையில 50 பேர் செத்த உடன மகிந்த அங்க போறார்...ஆறுதல் சொல்லுறார்... ஆனா இத்தனை லட்சம் தமிழ் மக்கள் செத்தினம் ... ஆராவது அப்பாவித் தமிழ்மக்கள் செத்ததுக்கு கவலை தெரிவிச்சினமே... கிடையவே கிடையாது... எல்லாம் புலிதான் அவையின்ர பார்வையில ... ஆம்பிள்ளைப் புலி பொம்பிள்ளைப் புலி... குட்டிப்புலி ...வயசு போன கிழட்டுப் புலி... எல்லாம் புலிதான்.....

ஜனநாயகம் .நடு நிலமை எண்டு சில விசருகள் சொல்லிக் கொண்டு திரியினம்.....இவையின்ர வீட்டுக்கை போய் அக்கா தங்கையைப் பிடிச்சு இழுத்த பிறகு சொல்லட்டும் எது ஜனநாயகம் எது நடு நிலமை எண்டு.... உலகத்துக்கெல்லாம் ஜனநாயகம் சொல்லிக் குடுத்த இந்தியாவில இப்ப ஜனநாயகம் இல்லை... உலகத்துக்கு இப்ப ஜனநாயகம் சொல்லிக் குடுக்க வெளிக்கிட்ட புதுப் பொலிசுக்காரன் செய்யிறதெல்லாம் எந்த வகையில ஜனநாயகம்.... ஜப்பானில சந்தோஷமாய் அணுகுண்டு போட்டினம்... வியற்நாமில அஜெண்ட் ஒரேஞ் எண்ட குண்டைப் போட்டு சோதிச்சுப் பாத்தினம்.... 911 இல இரட்டைக் கோபுரத்தை அடிச்ச உடன குய்யோ முறையோ எண்டு அலறியடிச்சு ஓடிச்சினம்...ஜனாதிபதி அண்டக்கிரவுண்டுக்க ஓடி ஒழிச்சார்......வலி வேதனை தனக்குத் தனக்கு வரத் தான் அருமை தெரியுது.... இந்திய இராணுவம் ..எங்கட ஊருக்கு வந்து செயின் புளக்கால ஆக்களப் படுக்க விட்டிட்டு ஏறி மிதிச்சினம்.... ஒரு அகிம்சாவாதியும் சொட்டுக் கண்ணீர் விடயில்ல.... அங்கை போய் குண்டடிச்சவுடன.... எத்தனை அழுகை...எத்தனை கதறல்..... ....

அன்பில்லதவனிட்ட அன்பைப்பற்றிக் கதைக்கக் கூடாது... அகிம்சை தெரியாதவனிட்ட அகிம்சை பற்றிக் கதைக்கக் கூடாது....ஜனநாயகம் இல்லாத இடத்தில ஜனநாயகம் பற்றிக் கதைக்கக் கூடாது.... தலைவர் சொல்லுறது போல ..அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் குடுக்க வேணும்....அது தான் சரி... ... இப்ப சிங்கள ஆமி செய்யுது ... சிங்களக் காடையள் செய்யுது எண்டு பாகு படுத்திப் பாக்கேலாது.... சிங்கள மக்களிட்டை இருந்துதான் இவ்வளவும் வருகுது..... அவைக்கே திருப்பிக் குடுக்க வேணும்... அப்பத்தான் எங்களின்ர வலியும் வேதனையும் அழுகையும் அவைக்கும் விளங்கும்..." மூச்சு விட்டு நிறுத்தியவர் கோப்பி முழுவதையும் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.

" இதை இயக்கம் செய்ய வேணும் இன்னார் செய்ய வேணும் எண்டு நான் சொல்லயில்லை.... மக்கள் செய்ய வேணும்.... எல்லப்புறக் கிராமங்களில எல்லாம் காடையளுக்கு பயிற்சி குடுத்து ஆயுதமும் குடுத்து வைச்சிருக்கிறாங்கள்...அது மாதிரி எங்கட மக்களுக்கும் ஆயுதம் குடுத்து போய் அடிக்க விட வேணும் ..அவங்கள் வந்து.அடிக்குமட்டும் பாத்துக் கொண்டிருக்க வேணுமெண்டு இல்லை.....அமெரிக்காவும் வேற நாடுகளும் வந்திடும் எண்டு சில பேர் பூச்சாண்டி காட்டுகினம்.... மக்கள் செய்யேக்கை பயங்கர வாதியள் எண்டு கொண்டு அவை வந்தால் வரட்டும்... இன்னொரு வியற்நாமின்ரை அனுபவம் எங்களால தான் கிடைக்க வேணுமெண்டால்... கிடைக்கட்டுமன்..." என்றவர் மூச்சு விட இடைவெளி எடுத்தபோது நான் பாய்ந்து குறுக்கிட்டேன்..."தற்செயலா மக்கள் எல்லாம் அழிஞ்சு போயிட்டால் ..." என்று விட்டு அவர் முகத்தைப் பார்த்தேன்..

என்னையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர் "தினம் இப்பிடி செத்துப் பிழைப்பதை விட அது எவ்வளவோ நல்லது.." என்றவர் கோப்பிக் கப்பை எடுத்து வாயில் வைத்துச் சரித்தார்... அது தானே எப்பவோ முடிந்து விட்டது என்று சொல்ல நினைத்தபோது...அவரே புரிந்து கொண்டதைப் போல கோப்பிக் கப்பை கையால் நெரித்தார். அப்போது மின்னல் போல எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஆதிவாசி மட்டும் இப்போ என் முன்னால் நின்றிருந்தால் கப்புக்குப் பதில் ஆதி வாசியின் கழுத்தக் குடுத்திருக்கலாம்...அதுக்குத

(பார்த்து விட்டு சும்மா போகவேண்டாம்....உங்களுடைய வெளங்காத கருத்துகளை சும்மானாச்சும் எழுதிவிட்டுப் போகவும். இல்லா விட்டால் கறுத்தண்ண அய்யாசாமி பிடிச்சு கருவறுத்து விடுவார்.. :roll: :roll: )

-எல்லாள மஹாராஜா-

என்ன எல்ஸ் இப்படி பயமுறுத்துறீங்கள்?? :oops: :roll:

  • தொடங்கியவர்

என்ன எல்ஸ் இப்படி பயமுறுத்துறீங்கள்?? :oops: :roll:[/quote

இரசிகை!

எதைச் சொல்லுகின்றீர்கள்.... கறுத்தண்ண அய்யாசாமியையா...?

அல்லது அய்யா சாமியின் சுடரும் சூறாவளியையுமா ...?

டவுட்டு கிளியர் பண்ணும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

இரசிகை!எதைச் சொல்லுகின்றீர்கள்.... கறுத்தண்ண அய்யாசாமியையா...?அல்லது அய்யா சாமியின் சுடரும் சூறாவளியையுமா ...?

டவுட்டு கிளியர் பண்ணும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

கறுத்தண்ண அய்யாசாமியைத் தான்

சரி அதைவிடுங்க

அய்யாசாமிட கோவம் நியாயமானதுதான் எண்டாலும் அவருடைய சில கருத்துக்களுடன் என்னால் ஒத்துப் போகமுடியவில்லை.

எங்கேடா ஒரிஜினல் வெளிப்படக் காணோமே என்று

நிறையவே குழம்பிப்போனேன். பதில் கிடைத்துவிட்டது எல்ஸ்.

சரி விடயத்திற்கு வருவோம் இது விளையாட்டுக்களம் இல்லை

எங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் வேதனைகளையும், சோதனைகளையும்

மட்டுமல்ல சாதனைகளையும் எடுத்து விவாதிக்கும் களமாக்கிக்

கொள்வோம்.

எல்ஸ் கூறிய ஈழத்து அய்யாசாமி இந்திரலோகத்தில இருந்து

குதித்தவரும் இல்லை, அல்லது நிம்மதியாகச் சுற்றம் சூழ

வாழ்க்கையை மகிழ்ச்சியோடு புலம்பெயர்ந்த தேசத்தில்

வாழ்பவரும் அல்ல...

பிறந்து வளர்ந்த நாட்டிலேயே ஆளும் வர்க்கத்தால்

அவலப்படுத்தப்பட்டு புலம்பெயர்ந்து தனதுஅடையாளங்களை

இழந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதி.

அய்யாசாமியின் குமுறல் வலியினால் எழுந்ததேயன்றி

வலுவினால் அல்ல...

இது எந்த ஒரு ஒடுக்கப்படும் இனத்திற்கோ, மனிதனுக்கோ

இயல்பாகவே எழும் நியாயமான கேள்விகள்.

விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஓர் இனத்தின் மூச்சு.

அதே நேரம் எல்ஸின் கேள்வியும் மிகப் பெரியதொரு

சிந்தனைத் தூண்டிலைப் போட்டு நிற்கிறது.

உணர்வுக்கு வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது.

இப்போது இரண்டும் சமஅளவில் இயங்கவேண்டிய தேவையே

அதிகமாகத் தெரிகிறது.

ஆக இங்கு எடுத்து நோக்க வேண்டிய விடயம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் உறவுகள்

உணர்ச்சி மேலீட்டால் அசட்டுத்தனமாக உளறுவதை (எல்ஸைப்போல.......

மன்னர் மன்னவன் வீர தீர கூரை கோபுர ஜெக ஜால எல்லாள மகாராஜன்)

நிறுத்தி விட்டு (ஆதிவாசியைப்போல்)

அரசியல் சாதுரியத்துடன் ஆக்கபுூர்வமாக தொடர்ந்து

செய்யவேண்டியவை நிறையவே உள்ளன.

உதாரணத்திற்கு தாயகத்தை நோக்கிய அங்கு வாழும் மக்களுக்கான

பாதுகாப்பை சர்வதேசங்களிடம் வலியுறுத்த வேண்டிய

தேவை மிகப்பாரியதாகப் படுகிறது. ஒரு நாள் உரிமைக்குரலிலோ,

101 மணிநேர உண்ணாவிரதத்திலோ,

அல்லாவிடின் ஒரு கறுப்பு வாரத்திலோ.....

சர்வதேசக் கவனத்தை முழுமையாக ஈர்த்துவிட முடியாது.

அகிம்சைப் போராட்டங்களின் தொடர்நிலையே தாயகத்தில்

வாழும் தமிழரை இனவாதப் பேயிடமிருந்து காப்பதற்கு

மாபெரும் அரனாக அமையப்போகிறது என்பதை நாளைய

வரலாறுகள் பதிவாக்கும்.

எல்ஸின் அய்யாசாமியில் ஆரம்பித்திருக்கும் ஆதங்கமானது

குமுறல்களோடு நின்று விடாமல் விவேகமான நடவடிக்கைகளிலும்

நகர்வதே நன்மை பயக்கும்.

(யோவ் எல்ஸ் உம்மோட சபையிலேயே என்வாலினால்

சரியாசனம் போட்டுள்ளேன் சின்ன விண்ணப்பம் என் வால்

நுனியில் தீப்பந்தம் சொருகி விளையாடவேண்டாம்.

ஏற்கனவே கடக வடக யோசியன் வளர்த்த ஓமகுண்டத்தில்

தீய்த்தெடுத்து விட்டார்கள்)

வெந்து நொந்த ஆதிவாசி

எல்லாளன் நல்லாத் தான் எழுதி இருக்கியள்,

வினை, எதிர்வினை என்ற சுழல், எது நோக்கி நகர்கிறது என்பதிலயே நடை பெறும் சம்பவங்களைப் பார்க்க வேண்டும். நடிபெறுபவை வெறும் உணர்வு மேலீட்டால் நடை பெறாமல் , ஈழத் தமிழரின் இறுதி இலக்கை நோக்கி எதிர்வினைகளை நகர்த்துவதாகா இருக்க வேண்டும்.

நடை பெறும் சம்பவங்கள் சர்வதேசம்,( வாசிக்க அமெரிக்கா), இந்தியா பிராந்திய வல்லாதிக்கச் சக்தி,தமிழ் நாடு ,சிறிலங்கா இவை எல்லாவற்றைன் எதிர் வினைகளையும் நாம் எதிர்பார்க்கும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற்றோமா என்பதை இனி வரும் எதிர் வினைகள் தீர்மானிக்கும்.வரலாற்றின் இயங்கியலைப் புரிந்து கொண்டவர்களாலயே வரலாற்றின் திசையைத் தீர்மானிக்க முடியும்.வரலாற்றின் திசையைத் தீர்மானிப்பவர்களாலயே வரலாறு படைக்கப் படுகிறது.

எல்ஸ் மகாராஜா நல்லா எழுதி இருக்கிறீங்க :P

அய்யாசாமி அப்பாவி சாமியா இல்லையா எண்டு எனக்கு தெரியாது ஆனால் அவருடைய கருத்துகள் எல்லா ஈழத் தமிழருக்கும் (ஒரு சில புல்லுருவிகளை தவிர்த்து) வரக்கூடியவையே

அய்யாசாமி சொல்லுறது சரிதானே போரை சிங்கள தேசத்தை நோக்கி நகர்த்துவது சிறந்ததே எமது இழப்புகள் பற்றி அவைக்கும் கொஞ்மாவது தெரிய வேண்டாமா

பி. கு : இந்தக் கருத்த நான் ஒன்றும் எல்ஸின'ர பயமுறுத்தலுக்கு பயந்து வைக்கவில்லை :evil: (இப்ப கறுப்பண்ண அய்யாசாமி ஒண்டும் செய'யமாட்டார் தானே எல்ஸ் :wink: :P )

  • தொடங்கியவர்

இது விளையாட்டுக்களம் இல்லை

எங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் வேதனைகளையும், சோதனைகளையும்

மட்டுமல்ல சாதனைகளையும் எடுத்து விவாதிக்கும் களமாக்கிக்

கொள்வோம்.

அய்யாசாமியின் குமுறல் வலியினால் எழுந்ததேயன்றி

வலுவினால் அல்ல...

எல்ஸின் கேள்வியும் மிகப் பெரியதொரு

சிந்தனைத் தூண்டிலைப் போட்டு நிற்கிறது.

ஆதி! உங்களுடைய சந்தேகமும் கேள்வியும் என்னிடமும் இருந்தன. அதையே அய்யாசாமியிடம் கேட்டேன். நீண்டதொரு விளக்கத்தையே தந்து விட்டார்.

என்ன .... எல்லாள மஹாராஜாவின் கஜானாவிலிருந்து 2 டொலர் 50 காசுகள் தினமும் காலியாகிக் கொண்டிருக்கின்றது.......

கோப்பி வாங்கிக் கொடுப்பது எனது வேலையாகி விட்டது....

அய்யாசாமியின் வார்த்தைகளிலேயே அவரின் வாதத்தைத் தருகின்றேன். முதலிலேயே சொன்னது போல எழுத்துப் பிழைகள் என்னிடமும் கருத்துப் பிழைகள் அவரிடமும் சென்று சேரட்டும்.

" தமிழர் சரித்திரமே தெரியாதா ஆளா இருக்கிறீங்க அண்ணை மஹாராஜா....(கிழிஞ்சுது யாவாரம்.... ஆதிவாசியால இன்னும் எனக்கு எத்தனை பேச்சுகளோ?)

" இலங்கையின் கரையோரம் முழுக்க எப்படி தமிழ் மக்கள் வாழ்ந்தினம் எண்டு யோசிச்சுப் பாத்தீங்களே. அதுக்கு அங்கையங்கை கட்டி வைச்சிருக்கிற சைவக் கோயில்கள் தானண்ணை ஆதாரம்... திருகோணமலையில கோணேஸ்வரம்... மட்டக்களப்புல மாமாங்கப் பிள்ளையார்...மாத்தளையில முத்து மீனாட்சியமன் ஆலயம்.. அங்கால சிலாபத்தில முன்னீஸ்வரம் உடப்பு முந்தல் எங்கை பார்த்தாலும் தமிழரும் சைவக்கோயில்களும் ...

இண்டைக்கும் இந்தப் பகுதியெல்லாம் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கினம் ...ஏன் நீர்கொழும்பிலயும் இருந்ததெல்லாம் தமிழ் ஆக்கள் தான் ....கிறிஸ்தவத்துக்கு மாறி இப்ப மெள்ள மெள்ள சிங்களவராய் மாறிக்கொண்டு வருகினம்....பெர்னாண்டோ பிள்ளை ...இப்ப பெர்னாண்டோ புள்ளே ஆகி விட்டார்.....

தமிழற்றை வரலாற்றைப் பார்த்தால் .....யாழ்ப்பாண ராச்சியம் அரசு அந்தஸ்த்துடன் இருந்தது என்றாலும் வேறு பல இராட்சியங்களும் குறைந்த அந்தஸ்துடன் பிரதானி ஆட்சிப் பிரதேசங்களாக இருந்திருக்கு..... வன்னியில் வன்னிமைகள்.. பல இருந்திருக்கின்றன... மட்டக்களப்பிலும் அப்படியான ஒரு ஆட்சி இருந்திருக்கின்றது...

இலங்கையின் கடைசி மன்னன் சிறீ விக்கிரம ராஜ சிங்கன் ....சிங்களவரை நம்பி கண்டியில ஆட்சி செய்ய இல்ல... 1815 இல அவன் வெள்ளையரிட்ட தோக்குமட்டும் அவனோட இருந்த தமிழர்கள் எல்லாம் இப்ப எங்கை....

சிங்களவர்களில் இப்ப இருக்கிற நாயக்க பரம்பரை தென் இந்தியப் படையெடுப்புகளில இலங்கைக்கு வந்த தென்னிந்தியர்களான நாயக்கர்கள் ஆகக் கூட இருக்கலாம். ரத்வத்தை பரம்பரை என்பது கூட மன்னர்களால் வழங்கப் பட்ட பட்டப் பெயராய் இருக்கலாமேயொழிய அது ஒரு சிங்கள பரம்பரைப் பேர் இல்லை.....

மகிந்தரும் சங்கமித்தையும் வந்து தான் இலங்கையில் புத்த சமயத்தைப் பரப்பிச்சினம் எண்டது வரலாறு ....அப்போதிருந்த மன்னன் தேவ நம்பிய தீசன் ... இவன் என்ன மதம் இல்லாத மன்னனாகவா இருந்தான்...

அப்போ இங்கே இருந்த சமயம் என்ன....(கவனிக்க அரசு இராஜதானியெல்லாம் அமைச்சு ஆட்சிசெய்த ஒரு நாகரீகம் மிக்க மக்கள் அங்கிருந்தார்கள்...)

இராமாயணம் முழுக்க முழுக்க கட்டுக்கதை இல்லாமல் சில அரசர்களின் கீர்த்தியைப் பதிவு செய்ய எடுக்கப் பட்ட முயற்சியாய் இருக்கலாம்.... அப்போது இலங்கையின் புகழ் வடமானிலம் வரை பரவியிருந்திருக்கலாம்....வட மானில அரசகுமாரன் ராமா என்பவனது புகழை புகழ்ந்தெழுத முற்பட்ட கள்ளன் வால்மீகி இலங்கையையும் வெற்றி கொள்ளும் வலுவுடையவன் என்பதைக்காட்ட இராமாயணம் என்னும் ஒரு காவியத்தை எழுதியிருக்கலாம்.

இலங்கையுட்பட தென் மானிலங்களுக்கு பயணப்பட்டே இருக்காத வால்மீகி தான் கேள்விப்பட்ட விடயங்களையும் தனது கற்பனை மூலமும் அதைச் செய்திருக்க முடியும்.

அக்காலத்தில் தென் மானிலங்களில் நாகரீகம் குறைந்த அல்லது வட மானிலத்தில் வாழ்ந்தவர்களால் அவ்வாறு நினைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்திருக்கலாம். அதனாலேயே அவர்கள் குரங்குகளாகச் சித்தரிக்கப் பட்டிருக்கலாம்....

இலங்கையில் வாழ்ந்தவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்திருந்தமையால் அரக்கர்களாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றார்கள். இராவணன் சைவன் என்பதும் சிவனிடமே வரம் வாங்கியவன் என்பதுவும் இராமாயணத்திலே சொல்லப்பட்ட சில குறிப்புகள். இராவணனை வெற்றி கொண்டான் ராமா என்பதை நம்பவைப்பதற்கே அவனுக்கு(ராமாவுக்கு) இறைவனின் அவதாரப் பூச்சு பூசப்பட்டிருக்கின்றது...

ஏன் அவ்வளவு தொலை தூரங்களுக்குப் போக வேண்டும்...கடல் வியாபாரமாக இந்தியா இலங்கைக்கு வந்த அராபியர் இவ்விரு நாடுகளிலும் கரையோரம் முழுவதும் குடியிருந்த மக்களுடன் திருமணம் செய்தே சோனகர் உருவாகினர். இவர்கள் மதத்தால் மாறு பட்டாலும் இவர்களும் தமிழர்கள். அதிக பட்சம் இவர்களின் தாய் தமிழ்ப் பெண்ணாகவே இருந்திருக்கின்றாள். இலங்கையின் கிழக்கு வாழைச் சேனை மட்டக்களப்பு பகுதிகள் மற்றும் மேற்கு புத்தளப்பகுதிகளும் இந்தியாவின் காயல் பட்டினம் நாகப் பட்டினம் போன்ற பகுதிகளும் நல்ல எடுத்துக் காட்டு...

இவர்களும் தமிழர்கள் என்பதற்கப்பால் வேறு பிரிவு எதுவும் இல்லை. தமிழ் கிறிஸ்தவர்களைப் போலவே தமிழ் முஸ்லீம்கள்..... அவ்வளவே....

ஆகவே நீங்கள் இப்ப செய்ய வேண்டியதெல்லாம் இலங்கையின் உண்மையான வரலாற்றைத் தோண்டி எடுக்க வேண்டியது தான். இலங்கையின் காரையோரங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் காலத்துக்குக் காலம் படையெடுத்து அனுராத புரத்தையும் கைப்பற்றி முழு இலங்கையை ஆண்டார்கள் என்பதுவும்.....வரலாறு.

தென்னிந்திய மன்னர்களும் படையெடுப்பை அடிக்கடி செய்தார்கள் என்பதும் காலத்துக்குக் காலம் அவர்களுடன் வந்த தமிழர்கள் இலங்கையில் தங்கி விட்டார்கள் என்பதுவும் கூட ...வரலாறே..

சிங்கள மன்னர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்ததென்பதற்கு வரலாறு கிடையாது....ஆகவே தமிழர்கள் இல்லாத ஒன்றுக்காகப் போராடவில்லை என்பதும் 1619இல் ஒல்லாந்தர்களிடம் இழந்த இராட்சியத்திற்காகப் போராடுகின்றார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்..."

புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது... உங்கள் சந்தேகங்களையும் கருத்துகளையும் எழுதுங்கள்.... அய்யாசாமியிடம் கேட்டு எழுதுகின்றேன்... ஆதாரங்களையும் தருகின்றேன்.

மறுப்பிருந்தால் ஆதாரங்களுடன் எழுதுங்கள். அற்லீஸ்ட் தமிழர் வரலாற்றை என்றாலும் விளங்கிக் கொள்ளலாம். நாங்கள் ஒன்றும் வெத்து வேட்டுகளோ.... விளங்காத பயல்களோ ஒன்றும் இல்லை என்பதை இளைய தலைமுறை விளங்கிக் கொள்ள வேண்டும்.

படித்து விட்டு உங்கள் வெளங்காத கருத்துகளை எழுதிவிட்டுப் போங்கள் ..கறுத்தண்ண அய்யாசாமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள். :cry: :cry:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

இரசிகை... உங்களிடம் இருக்கும் ஒத்துப் போக முடியாத கருத்துகள் என்ன.... தெரிந்தால் அடிச்சு நெளிச்சு :):lol: ஒத்துப் போக வைத்து விடலாம்....என்ன சொல்லிகிறீர்கள்....

சம்மட்டியுடன் -எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

எல்லாளன் நல்லாத் தான் எழுதி இருக்கியள்,

வினை, எதிர்வினை என்ற சுழல், எது நோக்கி நகர்கிறது என்பதிலயே நடை பெறும் சம்பவங்களைப் பார்க்க வேண்டும். நடிபெறுபவை வெறும் உணர்வு மேலீட்டால் நடை பெறாமல் , ஈழத் தமிழரின் இறுதி இலக்கை நோக்கி எதிர்வினைகளை நகர்த்துவதாகா இருக்க வேண்டும்.

நடை பெறும் சம்பவங்கள் சர்வதேசம்,( வாசிக்க அமெரிக்கா), இந்தியா பிராந்திய வல்லாதிக்கச் சக்தி,தமிழ் நாடு ,சிறிலங்கா இவை எல்லாவற்றைன் எதிர் வினைகளையும் நாம் எதிர்பார்க்கும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

நாரதர் ...சரியாகச் சொன்னீர்கள்.... எத்தனை நாளைக்குத் தான் குண்டுகள் போட எங்களின் தலையைக் காட்டிக் கொண்டிருப்பது.....

சிங்களவருக்கும் சண்டை எப்படி இருக்கும் என்று மன்னர் காலங்களுக்குப் பின்னர் மறந்து போயிருக்கும்...

நாங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது....

மேலும் அமெரிக்கா இந்தியா இனித் தான் புதிதாக வர வேண்டுமென்பதல்ல....அவர்கள் ஆயுதங்களும் அறிவுரைகளும் ஏற்கனவே வந்து தான் இருக்கின்றது....

இதை இல்லை என்று சொல்பவர்களையிட்டு எதுவும் சொல்வதற்கில்லை...

இனி வேண்டுமென்றால் ஆள்பல ரீதியில் வருவார்கள்.... வெள்ளை ரத்தமும் மஞ்சள் ரெத்தமும் எங்கள் வயல்களில் பாய வேண்டுமென்பது விதி என்றால் அவ்வாறே நிகழும்...

எதற்காகவும் என்கள் போராட்டத்தை விட்டுக் கொடுக்காத தலைமை எங்களுக்கு இருக்கின்றது...

அமெரிக்கா எல்லாத் தோணியிலும் கால் வைத்திருக்கும் இது தான் சரியான நேரம் ...போராட்டத்தை சிங்களப் பகுதி நோக்கி நகர்த்துவதற்கு...

பயங்கர வாதிகள் என்று சொல்வார்கள்... இது ஒன்றும் புதிதல்லவே.... இராக்கில் 50 ,60 உயிர்கள் தினமும் போகின்றது... இவர்கள் செய்யாததையா நாங்கள் செய்யப் போகின்றோம்... எங்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இவர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றார்கள்....

உலகில் எங்கெங்கெல்லாம் ..குருதி ஓடுகின்ரதோ அங்கங்கெல்லாம் இவர்கல் இருப்பார்கள்... இல்லையென்ரு சொல்லட்டும் பார்ப்போம்...

ஆகவே இவர்கல் கதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளத் தேவையில்லை....யாரை நம்பி நாம் ஆயுதத்தைக் கையிலெடுத்தோம்....அதே நம்பிக்கை இறுதி வரை இருக்க வேண்டும்...

எங்களுக்கு சுதந்திரம் தருவதற்கு இவர்கள் எல்லாம் மாமனா மச்சானா...?

கடமையைச் செய்வோம்...பலன் கிடைத்தே தீரும்..எதிர்காலச் சந்ததி படித்து மகிழ ஒரு வீரதீர வரலாறு படைப்போம்..

வெற்றி உணர்வுடன்

-எல்லாள மஹாராஜா

  • தொடங்கியவர்

எல்ஸ் மகாராஜா நல்லா எழுதி இருக்கிறீங்க :P

அய்யாசாமி அப்பாவி சாமியா இல்லையா எண்டு எனக்கு தெரியாது ஆனால் அவருடைய கருத்துகள் எல்லா ஈழத் தமிழருக்கும் (ஒரு சில புல்லுருவிகளை தவிர்த்து) வரக்கூடியவையே

அய்யாசாமி சொல்லுறது சரிதானே போரை சிங்கள தேசத்தை நோக்கி நகர்த்துவது சிறந்ததே எமது இழப்புகள் பற்றி அவைக்கும் கொஞ்மாவது தெரிய வேண்டாமா

பி. கு : இந்தக் கருத்த நான் ஒன்றும் எல்ஸின'ர பயமுறுத்தலுக்கு பயந்து வைக்கவில்லை :evil: (இப்ப கறுப்பண்ண அய்யாசாமி ஒண்டும் செய'யமாட்டார் தானே எல்ஸ் :wink: :P )

நித்திலா ,..... இவ்வளவு தெளிவாகச் சிந்திக்கத் தெரிந்த உங்களைக் கறுத்தண்ண சாமி ஒன்றும் செய்ய மாட்டார்...

நடுநிலமை. ஜனநாயகம். அகிம்சை என்று பேசிக்கொண்டிருப்பவர்களின் குரல் வளையைத் தான் பிடித்துக் குதறி எடுப்பார்.....

அகிம்சை என்று கால்பேசில் பேசப் போனபோது சிங்களவர் தந்த பரிசு தலையில்...பொல்லடியும் சேட்டுக் கிழிப்பும் .... தமிழர் தோலில் செருப்புப் போடுவோம் என்ற வசவும் தான்......

ஜனநாயகம் என்ற நீரோட்டத்தில் திம்பு...சிம்பு என்று நீச்சலிடிக்கப் போனபோது சிங்களவர் தந்த பரிசு.....இரத்த ஆறாக ஓடியது வடக்குக் கிழக்கில்....

திருப்பி அடித்தபோது...அரவணைப்பு ..ஒப்பந்தம்...

இப்படித்தான் உலகம் இருக்கின்றது...அவர்களிக்குப் பிடித்த பாசையில் பேசும் போது தான் அவர்களுக்குப் புரிகின்றது...

வெள்ளையன் பீரங்கியை கொண்டு வந்து வைத்திருந்த போது வீர வேல் வெற்றி வேல் என்று...விட்டில்களாகப் பாய்ந்து விழுந்தபோது விட்டது உயிரை மட்டுமல்ல... உயிரிலும் மேலான சுதந்திரத்தையும் தான்......

அமெரிக்கா இந்தியா வந்து விடுமென்று பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு....... அவர்களுடைய ஆயுதங்களும் ஆலோசனைகளும் ஏற்கெனவே தாராளமாக வந்து விட்டது....இனியும் ஒன்று செய்ய முடியுமென்றால் ஆட்பலத்தை அனுப்பி வைக்க வேண்டும்....

வெள்ளை இரத்தமும் மஞ்சள் இரத்தமும் எங்கள் வயல்களுக்குப் பாய வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தாராளமாக அது நடக்கட்டும்....

அமெரிக்கர்களை வெற்றி கொண்ட வியற்நாமியர்கள் ஒன்றும் தேவர்கள் அல்ல.....அவர்கள் அதை எப்படி அடைந்தார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டு...

இயற்கைக்காடுகள் மலிந்த வியற்நாமியர்கள் விடுதலைக்குப் பின் வந்த 30,40 ஆண்டுகள் மரப் பொருட்களை இறக்கு மதி செய்தார்கள்.... காரணம் வாள் போட முடியாத அளவிற்கு சன்னங்கள் மரங்களில் பாய்ந்திருந்தமையே.. மரங்களில் மட்டுமல்ல மனிதர்களிலும் தான்.....

அமெரிக்கா இன்று ஆப்கானிஸ்தான் ஈராக் என்று கால்களை வைத்து விரலைச் சுட்டுக் கொண்டிருக்கின்றது....இன்னும் ஈரான் வட கொரியா என்று கால்களை அகல வைக்கும்...அமெரிக்காவின் ஆணவம் அவ்வாறே செய்யத் தூண்டும்...

ஈழத்திலும் வாலாட்ட விரும்பினால் செய்யட்டும்... அதன் வாலை நறுக்குவதற்கு இது தான் சந்தர்ப்பம்....

இராக்கில் தினமும் 50 ,60 உயிர்கள் பறிக்கப் படுகின்றது....உலகில் எங்கெங்கு இரத்த ஆறு ஓடுகின்றதோ அங்கெல்லாம் அமெரிக்கா நிற்கின்றது...அவர்களே எங்களுக்கு மட்டுமில்லை... உலகத்துக்கே கற்றுக் கொடுக்கின்றார்கள்.....

சிங்களப் பகுதிகளை நோக்கி யுத்தத்தை நகர்த்துவதற்கு இதுதான் சந்தர்ப்பம்....

மன்னர் காலத்துக்குப் பின்னர்.. யுத்தத்தின் வலியை சிங்களவர் மறந்து போய் விட்டார்கள்.... மீண்டும் நாங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.....

உலகம் என்ன சொல்லும் என்று அஞ்சத் தேவையில்லை... அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ அதனை நாம் செய்கின்றோம்....

மிஞ்சி மிஞ்சிப் போனால் பயங்கரவாதிகள் என்று சொல்வார்கள்.... அது ஏற்கனவே கேட்ட கதை தானே.

எங்களுக்குத் தேவையானதை நாங்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்... மற்றவர்கள் தருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க இது ஒன்றும் பிச்சையல்ல...

அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் சுதந்திரத்தைத் தர இவர்கள் என்ன மாமனா...இல்லை மச்சானா....

ஆயத்தத்துடன் -எல்லாள மஹாராஜா-

(ஆயுதத்துடன் என்று வாசிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன் :):lol: )

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அமுக்கு கன்னி வெடியை

கன்னி வெடியுடன் - புத்தன்

ஜயோ,நான் ஜனநாயகவாதி,காந்தியவாதி நான் அகிம்சை வாதி,

ஆனால் என்னுடைய ஆயுதம் போதி மரத்திற்கு கீழே இருக்கு....

  • தொடங்கியவர்

அப்படி அமுக்கு கன்னி வெடியை

கன்னி வெடியுடன் - புத்தன்

ஜயோ,நான் ஜனநாயகவாதி,காந்தியவாதி நான் அகிம்சை வாதி,

ஆனால் என்னுடைய ஆயுதம் போதி மரத்திற்கு கீழே இருக்கு....

புத்தன்....! மொட்டைகளை முதலில் களத்திலிருந்து அப்புறப்படுத்துவது ....முக்கியம்....

இஸ்லாமியப் பயங்கர வாதம் என்று சொல்லப்படுவதைப் போல ....

பெளத்தப் பயங்கரவாதம் ...இலங்கையில் இருக்கின்றது...

ஆயுதம் தூக்குவதற்கு சிங்கள அடிமட்ட இளைஞர்களைத் தூண்டுவது.... இந்த மொட்டைகளின் ...பெளத்தப் பயங்கரவாத.... தூண்டுதலே...

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்து.... அதிக பட்ச உணர்வு பூர்வமான ....கள நிலைமையை இந்த மொட்டைகள் தூண்ட முயற்சித்ததை மறக்க வேண்டாம்....

பெளத்தம் இல்லையென்றால் .....சிங்களப் பேரினவாதம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.....

அன்று துட்டகைமுனு முதல்.....இடையில் வந்த அநகாரீக தர்மபாலா முதல் ஜே ஆர் வரை அவர்களின் ஆயுதம்.... சிங்களப் பெளத்த நாடு என்பதே......

எமது போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னகர்த்த....இவர்களைக் களத்தில் இருந்து அகற்றுவது முக்கியமானது......

உணர்ச்சிக் கொந்தளிப்பு தோன்றலாம்.... ஆனால் எந்தக் கொந்தளிப்பும் ஆயுதத்தின் முன்னால் அடங்கி விடும்....

ஆலோசனையுடன்

-எல்லாள மஹாராஜா-

அய்யாச்சாமி மட்டுமல்ல பல தமிழர்களின் (எமது உறவுகளை கொல்லும்போது இங்கிருந்து ஆற்றாமையால் துடித்த புலம்பெயர்ந்த தமிழர்களின்) எண்ணவோட்டமும் இதுதான். என்னதான் கவலை தெரிவித்தாலும் உள்மனதில் (சிங்களவர்களும் படுகொலைகளின் வலியை இன்று உணர்ந்திருப்பார்கள் என்ற) சிறு சந்தோசம். ஆனால், இன்று புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்து, ஜன(நாய்)அகம் என்று தமிழர்களுக்கெதிரான சக்தி(எட்டப்பர்கள்) பலமமாக காலூன்றி விட்டது. எமக்கெதிராக உள்ள பெரியபணி அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும். ஒவ்வொருவரும் தனக்கேன் உந்தப் பிரச்சினை என்று ஒதுங்கியதால்தான் இன்று உந்தஅளவுக்கு வந்திருக்கிறது. இப்படியான பொதுமக்களைத்தாக்கும் சம்பவங்கள் இராஜதந்திரரீதியில் எமக்கு பின்னடைவு. கண்டனம் தெரிவித்த நாடுகள் கூட(அமெரிக்காவைத்தவிர) புலிகளை குற்றஞ்சாட்டவில்லை. இதனால் தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் அரசு பொய்யான ஆதாரங்களை முன்வைத்து சர்வதேச ஆதரவை தம்பக்கம் திருப்ப முயற்சி செய்கிறது. இதனால் அவர்களின் பிரச்சாரத்தை முறியடிப்பதோடு, எமது நோக்கம் இறுதி விடிவை நோக்கியதாக இருக்கவேண்டும். :idea:

(இது எனது கருத்து மட்டுமே)

  • தொடங்கியவர்

இன்று புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்து, ஜன(நாய்)அகம் என்று தமிழர்களுக்கெதிரான சக்தி(எட்டப்பர்கள்) பலமமாக காலூன்றி விட்டது. எமக்கெதிராக உள்ள பெரியபணி அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும்

வாழ்த்துக்கள் சுபித்திரன்.....

இதுதான் இன்று புலம் பெயர் மக்களின் முன்னுள்ள பாரிய பணிஅனைவரும் கருத்திலெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை.....

-எல்லாள மஹாராஜா-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.