Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழர்களின் கருப்புப் பக்கங்கள் சில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர்களின் கருப்புப் பக்கங்கள் சில

எழுதியது இக்பால் செல்வன் *** Saturday, January 12, 2013
 
Canada-5616.jpg
 
ஆசிய - ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே அதிகளவு தமிழர்கள் வாழும் நாடாக கனடா அறியப்படுகின்றது. குறிப்பாக டொராண்டோ மாநகர் மற்றும் அதனைச் சுற்றியப் பகுதிகளில் அதிகளவு தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலான தமிழர்கள் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 1980-களுக்கு பின்னர் கனடாவில் குடியேறியவர்கள் ஆவார்கள். 
 
கடந்த 30 ஆண்டுக் கால வரலாற்றில் கனடாத் தமிழர்கள் தமக்கே உரிய பல வளர்ச்சிகளையும், இடத்தையும் பிடித்துள்ளனர். பல சாதனைகளையும் ஆற்றியுள்ளனர். குறிப்பாக கனடாத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய வகையில் கனடா பாராளமன்றத்துக்கு ராதிகா சிற்சபையீசன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளார். 
 
அதே சமயம் கனடாத் தமிழர்களில் கணிசமான தொகையினர் செய்து வரும் பல சட்ட விரோத செயல்களால் தமக்கே என கருப்பு அத்தியாயங்களையும் எழுதி வைத்துள்ளார்கள். வந்தேறு சமூகங்கள் பலவற்றிலும் இத்தகைய குற்ற செயல்கள் மிகுந்து காணப்படவே செய்கின்றன. தமிழர்கள் மட்டுமல்ல, ஏனைய சமூகங்களான கருப்பினத்தவர், இஸ்லாமியர், சீனர்கள், சீக்கியர்கள் என அனைவரிடத்திலும் எதோ ஒரு வகையிலான குற்றங்கள் இடம் பெற்றே வருகின்றன. இருந்த போதும் யாம் சார்ந்த தமிழ் சமூகத்தின் குறைகளை சுட்டிக் காட்டவும் பதிவு செய்யவும் விரும்புகின்றேன். 
 
குண்டர்கள்: சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கனடாவில் செயல்பட்ட பல குண்டர்கள் அமைப்புக்கள் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்போம். ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்வது, கடத்தல்களில் ஈடுபடுவது, கிரடிட் கார்ட் மோசடி, வங்கி மோசடி, காப்பீடு மோசடி, போதை வஸ்துக்கள் கடத்துவது, விற்பது, பாலியல் தொழில், மக்களை மிரட்டி பணம் வசூலிப்பது, தீவிரவாத நடவடிக்கைகள் எனப் பற்பல குற்றங்களில் தமிழர்களும் ஈடுபட்டே வந்தனர். ஆனால் கனடாவை ஆளும் கன்சேர்வேடிவ் அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர் பல குற்றங்களை குறைத்தும், ஒழித்தும் வருகின்றனர். 
 
அவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக பல குண்டர்கள் அமைப்புக்கள் ஒழிக்கப் பட்டன. 2001- ம் ஆண்டு 51 தமிழ் குண்டர்கள் கைதாகினார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் வல்வெட்டித் துறை அமைப்பு எனப்படும் அமைப்பின் தலைவர் கைலேஷன் தனபால சிங்கம் ஆவார். மற்றுமொருவர் ஜோதிரவி சிற்றம்பலம் என்பவர் ஆவார், இவர் கண்ணன் அமைப்பு என்பதின் தலைவர் ஆவார். இவர்கள் பலர் நாடுக் கடத்தப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
ஆனால் பிற மறைமுக மோசடிகள் இலைமறை காயாக நடந்தேறியே வருகின்றன எனலாம். 
 
வாகன விபத்து மோசடிகள்: அவற்றில் அண்மையில் சிக்கிய விடயம் போலி வாகன விபத்துக்களை ஏற்படுத்தி காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பறிக்கும் முறை. இத்தகைய பணியில் தமிழர்கள் பலரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினரை கடந்த மார்ச் மாதத்தில் டொராண்டோ காவல்துறையினர் கைது செய்தனர். இத்தகைய குற்றங்களால் சுமார் 130 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பிற மாநிலங்களை விடவும் ஒண்டாரியோ மாநிலத்தில் வாகனக் காப்பீட்டு மாதத் தவணைத் தொகையும் மிகுதியாகி விட்டது. 
 
இத்தகையக் குற்றத்தில் ஈடுபட்ட பலரும் டொராண்டோவுக்கு அருகாமையில் இருக்கும் மார்க்காம் பகுதியில் வசிக்கும் தமிழர்களே என டொராண்டோ காவல் துறையினர் கூறி இருந்தனர். பெரும்பாலும் அங்காடிகளில், கடைத் தெருக்களில் இத்தகையோர் அங்கு வரும் அப்பாவித் தமிழர்களோடு உரையாடி நட்பு பூண்டு பின்னர் அவர்களை ஆசை வார்த்தைக் காட்டி இத்தகைய குற்றங்களில் ஈடுபடுத்துகின்றனர். இத்தகைய இடைத்தரகர்கள், பின்னர் பிசியோதெராபி மையங்கள், வாகன விற்பனர்கள் எனப் பலரும் கூட்டாகவே இக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஸ்காபுறோ, மார்க்காம் பகுதிகளில் இருக்கும் பேரங்காடிகளில் இத்தகைய இடைத்தரர்கர்களைக் காணக் கூடியதாகவே இருக்கும் என ஒரு இலங்கை நண்பர் கூறினார். அவர் மேலும் கூறும் போது பல  தமிழர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும், சிலர் திடு திடுவென வசதி வாய்ப்புக்களைப் பெற்று விடுவார்கள். புது வீடு, கார்கள், விலையுயர்ந்த ஆடைகள், சர்வதேச சுற்றுலா எனப் போவார்கள். அப்போதே தெரிந்து விடும் அவர்கள் மறைமுகமாக என்னவோ செய்கின்றார்கள் என. இருந்தாலும் அத்தகையோர் கனடாத் தமிழர்களில் ஒரு பிரிவினரே எனவும், பலர் கனடாவின் சட்ட திட்டங்களை மதித்து நேர்மையாகவே வாழ ஆசைப்படுகின்றார்கள் என அவர் கூறினார். 
 
கைதானவர்கள் நிர்மலராசன் கனகலிங்கம், விநோதா ராஜசிறிகுமார், பாசிலாத ஒமர், பிரகலாதன் சிதம்பரநாதன், மிதுன் இந்திரகுமரன், கிரிஷ்ணாஜித் ரமேஷா, நிஷாந்த் கணேசமூர்த்தி, அருண்குமார் ரவீந்திரன், மகேஷ்வர் விஜயகுமார், சோதிலிங்கம் விஜயகுமார், கயாந்தினி விஜயகுமார், சிரிமயிலன் சிரிவிக்னேஸ்வரன், பிரசாத் திருச்செல்வம், நிஜந்தன் நாகேந்திரன், நிரோஜன் குலசாகரன், பிரதீப் கிருஸ்ணப்பிள்ளை, சுஜன் சிவகுமாரு, சந்திரகுமரன் தரமரத்னம், கஜேந்திரன் விஜயகுமார், சஜீவன் சிவகுமரு, பரராஜசிங்கம் அம்பலயாணர், ஜனார்த்தன் ரட்ண்சிங்கம், ஆர்திக் அண்டோனிடோ, ஆண்ட்ரூ ஜேசுதாசன், அர்ஜன் மகேந்திரராஜா, விஜிதரன் செல்வராஜா ஆகியோர் ஆவார்கள்.

 
வங்கி மோசடிகள்: அது மட்டுமில்லாமல் தமிழர்களிடையே காணப்படும் மற்றுமொரு குற்ற செயல் வங்கி மோசடிகளில் ஈடுபடுவதாகும். வங்கிகளில் போலி ஆவணங்களைக் கொடுத்து பல லட்சம் டாலர்களுக்கு கடனட்டை வாங்குவதும், பின்னர் அதனை திருப்பிச் செலுத்தாது ஏப்பம் விடுவதும் காணப்படுகின்றது. குறிப்பாக 2010-ஆம் ஆண்டு டொராண்டோவுக்கு அருகாமையில் இருக்கும் அஜாக்ஸ் பகுதியில் இத்தகைய குற்றம் செய்யும் ஒரு கும்பலைக் கைது செய்தனர் காவல் துறையினர். அவர்கள் ஏமாற்றிய தொகை என்பது பத்து லட்சம் டாலர்களுக்கும் அதிகமாகும். அவர்கள் குடும்பமாக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதானவர்கள் குகன் நேசன், ரமணன் கனகராஜா, ரஜிதா கனகராஜா, ஹரிஹரன் நேசராஜா, ஆனந்தா நீராஞ்சன், ஜெய பாலன் ஆவார்கள். 
 
இவ் வகை குற்றங்களில் இரு வகை காணப்படுகின்றன ஒன்று பொது மக்களை அணுகி ஆசை வார்த்தைக் கூறி அவர்களை குற்றங்களில் ஈடுபடச் செய்து, அவற்றில் ஒரு தொகையை கமிசனாகப் பெறுவது. மற்றொன்று முதியவர்கள் உட்பட பலரின் சுய விவரங்களைத் திருடி அவர்களுக்குத் தெரியாமலேயே கிரடிட் கார்ட், வங்கிக் கடன் போன்றவற்றை பெற்று ஏமாற்றுவதாகும். ஆனால் காவல் துறையினர் இத்தகையக் குழுக்களில் ஒரு சொற்பமானவர்களை கைது செய்துள்ளனர். இலை மறை காயாக இன்னும் பலர் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டே வருகின்றனர். 
 
போலிக் கிரடிட் கார்ட்கள்: மேற்சொன்ன வங்கி மோசடி செய்வோர் பலரும் போலிக் கிரடிட் கார்ட்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் குற்றங்களிலும் ஈடுபட்டும் வருகின்றனர். இத்தகையானவர்கள் மேற்சொன்னது போலவே பல அறியாதோரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி போலிக் கிரடிட் கார்ட்களை உருவாக்கி பின்னர் கடைகளில் கிப்ட் கார்ட்கள், பொருட்கள் முதலியவற்றை வாங்கி அவற்றை பின்னர் விற்றுக் காசாக்கிக் கொள்வார்கள். சில சமயம் சாதாரண கடைகளில் வாடிக்கையாளர்கள் தமது கடனட்டை, டெபிட் கார்ட்களை பயன்படுத்தும் போது அவற்றை அவற்றின் ரகசிய எண்ணோடு பிரதி எடுக்கக் கூடியவாறு கருவிகளைப் பொறுத்திவிடுவார்களாம். பின்னர் அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவார்கள். இத்தகைய சம்பவம் ஒன்று எனது தமிழ் நண்பருக்கே நடந்துள்ளது. ஸ்காபுறோவில் இருக்கும் எஸ்ஸோ பெற்ரோல் பங்கில் அவரது கடனட்டையை பயன்படுத்தி அடுத்த நாளே அவரது கணக்கில் இருந்து பணம் காணமல் போக ஆரம்பித்தது. நல்ல வேளையாக வங்கியிடம் முறையிடப்பட்டு அவரது கனட்டை மோசடி தடுக்கப்பட்டது. இத்தகையக் குற்றங்களில் பல தமிழர்கள்  மட்டுமில்லாமல் பாகிஸ்தானியர்கள், வங்கதேசிகள், இந்தியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட டொராண்டோவைச் சேர்ந்த இரு தமிழர்களை, சிவரூபன் ஞான்பண்டிதன், ராகவன் பத்மநேசன் ஆகியோரை நியுயோர்க் காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். 
 
தீவிரவாத தொடர்புகள்: கனடாத் தமிழர்களில் பலர் தமிழ் புலிகள், சிங்கள அரசு தம்மை அச்சுறுத்துவதாகக் கூறியே அகதி அந்தஸ்து கோரி கனடாவின் வதிவுரிமையைப் பெற்றவர்கள். இருந்த போதும் கணிசமான தமிழர்கள் தமிழ் புலிகள் அமைப்புக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளை செய்து வந்துள்ளார்கள். பலர் பணம் வழங்கி வந்தனர். சிலரோ தமிழ் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள், தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொடுத்து வந்தனர். அவ்வாறு கைதாகியவர்களில் இருவர் தான் பிரதீபன் நடராஜா, சுரேஷ் ஸ்கந்தராஜா ஆவார்கள். 
 
இவ்விருவரையும் கனடா அரசாங்கம் அமெரிக்காவுக்கு நாடுகடத்த தீர்மானித்துள்ளது, இவ்விருவரும் தமிழ் புலிகள் அமைப்புக்கு ஏவுணைகள், ஏகே-47 முதலியவற்றை நியுயோர்க்கில் இயங்கி வரும் கள்ள மார்க்கெட்டில் இருந்து பெற்றுக் கொடுக்க முயன்றுள்ளனர். இவர்களில் சுரேஷ் ஸ்கந்தராஜா என்பவர் பல மென்பொருள்கள், தொலைத் தொடர்பு சாதனங்களை பெற்றுக் கொடுத்துள்ளாராம். 
 
ஏற்கனவே இந்த ஆண்டில் தொடக்கத்தில் ரமணம் மயில்வாகனன் என்பவர் கைதாகி பின்னர் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று விசாரித்தனர். தற்சமயம் அவர் அமெரிக்காவில் சிறையிலிடப்பட்டுள்ளார். இவ்வாறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் பலரும் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் என்பதும் அதிர்ச்சியான மற்றுமொரு விடயமாகும். 
 
கனடாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் இத்தகைய குற்றங்களை குற்றமாகவே கருதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் நாம் சார்ந்த சொந்த நாடுகளில் இருந்துக் கொண்டு வரப்பட்ட சிந்தனையாக்கம், பழக்க வழக்கங்களே ஆகும். ஏனெனில் பலர் குற்றம் என்பதை அறியாமலேயே குற்றம் செய்வோரால் பலியாக்கப்படுகின்றனர். மேலும் பலர் எவ்வித அச்சமும் இன்றி பல குற்றங்களில் ஈடுபடுவதோடு தாம் சார்ந்த சமூகத்தில் இருப்போரை ஏமாற்றியும், ஆசைக் காட்டி குற்றங்களில் ஈடுபடுத்தியும் வருகின்றனர். இவற்றின் ஆபத்துக்களை அப்பாவி மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் சட்டத்தை மதித்து வாழ்வதே நாட்டுக்கும், நமக்கும் நல்லதாகும். குறுக்கு வழியில் சொத்து சேர்க்க முயல்வது, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. அது அவர்களை மட்டுமில்லாமல் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் அவப் பெயரை உண்டாக்கவல்லது என்பதை உணர வேண்டுகின்றேன். 
 

 

Edited by கிருபன்

 கனடாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் இத்தகைய குற்றங்களை குற்றமாகவே கருதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் நாம் சார்ந்த சொந்த நாடுகளில் இருந்துக் கொண்டு வரப்பட்ட சிந்தனையாக்கம், பழக்க வழக்கங்களே ஆகும். ஏனெனில் பலர் குற்றம் என்பதை அறியாமலேயே குற்றம் செய்வோரால் பலியாக்கப்படுகின்றனர். மேலும் பலர் எவ்வித அச்சமும் இன்றி பல குற்றங்களில் ஈடுபடுவதோடு தாம் சார்ந்த சமூகத்தில் இருப்போரை ஏமாற்றியும், ஆசைக் காட்டி குற்றங்களில் ஈடுபடுத்தியும் வருகின்றனர். இவற்றின் ஆபத்துக்களை அப்பாவி மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் சட்டத்தை மதித்து வாழ்வதே நாட்டுக்கும், நமக்கும் நல்லதாகும். குறுக்கு வழியில் சொத்து சேர்க்க முயல்வது, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. அது அவர்களை மட்டுமில்லாமல் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் அவப் பெயரை உண்டாக்கவல்லது என்பதை உணர வேண்டுகின்றேன்.
 

 

சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தால் கனடா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் ஒன்ராறியோ மாநிலம் கிரீஸ் போன்ற ஒரு வங்குரோத்து நிலையில் உள்ளது. படித்தும் நல்ல சம்பளங்கள் உள்ள வேலைகள் தமக்கு தெரிந்தர்களுக்கு மட்டுமே வழங்கும் சந்தர்பங்கள் அதிகரித்து வருகின்றன.

 

 

எந்த சட்டவிரோத செயலிலும் எம்மவர்கள் எடுக்கும் பணத்தை விட அது சம்பந்தப்பட்ட தமிழர்கள் அல்லாதவர்களும், சட்டத்தராணிகளும் பணம் சம்பாதித்து விடுகிறார்கள். சில சமயங்களில் சட்டமே எம்மவர்களை சட்டச்சிக்கலில் மாட்டியும் விடுகின்றது.


அதையும் உணர்ந்து எமது சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

 

குறிப்பாக வேலை வாய்ப்புக்களை உருவாக்க, வேலைகளை எடுக்க, சிறு தொழில்களை ஆரம்பிக்க உதவலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு புலி கிலி கிளப்பாவிட்டால் சம்பளம் வராது.

சுரேஷ் சிறி பற்றி எழுதி இருக்கும் விடயம் தவறு.  

அதற்கு இக்பால் செல்வன் ஆதாரம் தருவாரா?

நாடு கடத்தபட்டவர்கள் சிறி லங்காவில் ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து திரிகிறார்கள்.  அதை பற்றி ஏன் எழுதவில்லை?

கிருபன் அண்ணா,  பரபரப்பு கட்டுரையில் பல ஓட்டைகள்.

 

ஓட்டைகளைக் கனடா உறவுகள்தான் சொல்லவேண்டும்..

கனேடிய பத்திரிகைளில் வந்த செய்திகள் தான் இவை .சம்பவங்கள் பெயர்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் அதை சரியான மிகையாக எழுதியுள்ளார்கள் .

குண்டர்கள் என விபரிக்கபட்ட கைலேஷ் ,ஜோதிரவி இருவரையும் எனக்கு தெரியும் .கைலேஷ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் எமது கொமிட்டியில் வேறு இருந்தார் (90 களில்) .

குற்றங்களின் தற்பாரியம் தெரியாமல் சும்மா விலாசத்திற்கும் பணத்திற்கும் அள்ளுப்பட்டவர்கள் தான் பலர் .

கனேடிய பத்திரிகைளில் வந்த செய்திகள் தான் இவை .சம்பவங்கள் பெயர்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் அதை சரியான மிகையாக எழுதியுள்ளார்கள் .

குண்டர்கள் என விபரிக்கபட்ட கைலேஷ் ,ஜோதிரவி இருவரையும் எனக்கு தெரியும் .கைலேஷ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் எமது கொமிட்டியில் வேறு இருந்தார் (90 களில்) .

குற்றங்களின் தற்பாரியம் தெரியாமல் சும்மா விலாசத்திற்கும் பணத்திற்கும் அள்ளுப்பட்டவர்கள் தான் பலர் .

உங்க கூட்டம் என்றால் கண்டிப்பா தப்பு செய்திருக்க வாய்ப்பில்லை. இது பிழையான  இது தகவல்  :icon_idea:

பொதுவாக இளையவர்களுக்கு உள்ள பல ஆசைகள் காரணமாக பலரும் தவறான வழியில் செல்ல முனைகின்றார்கள். எனவே முதாலவது தேவை பெற்றோர் கவனம் / அறிவுரை.

 

அடுத்தது சமூகம். எமது    இளையவர்களுக்கு  CTC, CYTA.. போன்ற அமைப்புக்கள் உதவுகின்றன. ஆனால், போதுமான அளவு பணமும் மற்றைய உதவிகளும் இல்லை.

 

எனவே குடும்பங்களையும் சமூகத்தையும் முன்னேற்றும் உதவும் நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே இளையவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

ஓட்டைகளைக் கனடா உறவுகள்தான் சொல்லவேண்டும்..

 

இதில் எம்மவர்களின் பங்களிப்பை கூறியுள்ளார்கள்  :D 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114490

  • கருத்துக்கள உறவுகள்
எம்மவர்களை விட பல மடங்கு குற்றங்களை புரிந்த வியட்நாமியர்கள்,ஜமேக்கர்கள் போன்ற குழுக்களை நாடு கடத்தவில்லை.நாட்டில் எம்மவர்கள் சிறிலங்கா அரசால் சித்திரவதை செய்யப்படுவார்கள் என தெரிந்தும் ஹாப்பர் அரசு அவர்களை  பிடித்து அனுப்பியது.
 
குழுக்கள் எப்படி வந்தது என root cause தேடும் கனேடிய அரசு அவ் இளைஞர்களை இலங்கைக்கு நாடுகடத்தாமல் நல்வழிப்படுத்தி இருக்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்
அவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக பல குண்டர்கள் அமைப்புக்கள் ஒழிக்கப் பட்டன. 2001- ம் ஆண்டு 51 தமிழ் குண்டர்கள் கைதாகினார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் வல்வெட்டித் துறை அமைப்பு எனப்படும் அமைப்பின் தலைவர் கைலேஷன் தனபால சிங்கம் ஆவார். மற்றுமொருவர் ஜோதிரவி சிற்றம்பலம் என்பவர் ஆவார், இவர் கண்ணன் அமைப்பு என்பதின் தலைவர் ஆவார். இவர்கள் பலர் நாடுக் கடத்தப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இவர்களில் A.K கண்ணன் எண்டு ஒருத்தர் இருந்தவரா? அவர் இப்போது ஊரிலே மண் எத்துற டிப்பர் ஓடித் திரிவதாக ஊர் போய்வந்த கனடா நண்பன் சொன்னான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இவர்களில் A.K கண்ணன் எண்டு ஒருத்தர் இருந்தவரா? அவர் இப்போது ஊரிலே மண் எத்துற டிப்பர் ஓடித் திரிவதாக ஊர் போய்வந்த கனடா நண்பன் சொன்னான் :lol:

 

கஷ்டப்பட்டு உழைப்பவரை மெச்சத்தானே வேண்டும். கனடாவில் இருந்தால் பிறர் உழைப்பில் அல்லவா காலத்தைப் போக்கியிருப்பார்.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான தகவல்களுக்கு நன்றிகள் விக்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.