Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளோரன்ஸ் கசேயும் றிசானா நபீக்கும்- காப்பற்றப்பட்டவருக்கும் கைவிடப்பட்டவருக்குமான ஒப்பீடு

Featured Replies

புளோரன்ஸ் கசே

பிரான்சின் வடபகுதிலுள்ள பா து கலேPas-de-Calais)மாவட்டத்தில் இருக்கும் பெத்துயின்(Béthune)என்ற ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த 39வயதுப் பெண்.

கடந்த 23.01.2013 புதன்கிழமையும் 24.01.2013வியாழக்கிழமையும் அவர் பிரான்சிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஒருவராக இருந்தார்.பிரான்சிலுள்ள முக்கியமான அனைத்து காட்சி ஊடகங்களிலும் அவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகின.

பிரான்சின் தற்போதைய அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் என்று அனைத்து தரப்பினரும் அவரைப்பற்றி பேசினார்கள்.

இத்தனைக்கும் அவர் பிரெஞ்சுக் குடியரசைச் சேர்ந்த ஒரு சராசரிப் பெண்;.

ஆனால் அந்நிய நாடொன்றில் ஆபத்தில் சிக்கியவர்.இலங்கையின் றிசானாவைப் போல.

ஆதாவது 2003 ம் ஆண்டு தனது 29 வது வயதில் மெக்சிக்கோவுக்குச் சென்ற புளோரன்ஸ் கசே தனது காதலனானIsrael Vallarta என்ற மெக்சிக்கருடன் சேர்ந்து zodiac என்ற பாதாள உலகக் குழுவின் மூலமாக ஆட்கடத்தல் கொலை கொள்ளை உட்பட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ம் திகதி மொக்சிக்கோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

mexico-2.jpeg?w=300&h=204அவர் கைது செய்யப்பட்ட போது அவர்களது வீட்டிலிருந்து பணயக்கைதிகளாக இருந்த சிலர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ம் திகதி கைது செய்யப்பட்ட புளோரன்ஸ் கசேயை மறுநாள் ம் திகதி கைது செய்ததாக மெக்சிக்கொ காவல்துறையினர் ஊடகங்களுக்கு புனையப்பட்ட காட்சிகளுடன் காண்பித்தனர்.

2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மெக்சிக்கோ சிட்டி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அவருக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் இடம்பெற்ற மேல்முறையீட்டு வழக்கில் 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி அது 60 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

mexico1.jpeg?w=645புளோரன்ஸ் கசேயின் காதலனே குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதும் ஊள்ளுர் அரசியல் தலையீட்டின் (புளோரன்ஸ் கசேயை வெளியே விட்டால் தங்களுக்கும் குற்றச் செயலில் ஈடுபட்ட சோடியாக் குழுவிற்க்கும் இடையே உள்ள தொடர்பை வெளியே சொல்லிவிடுவார் என்று உள்ளர் அரசியல் வாதிகள் பயந்தனர்காரணமாக மெக்சிக்கோ காவல்துறையினர் புளோரன்ஸ் கசேயை இந்தக் குற்றச்சாட்டுக்களுக்குள் சிக்க வைத்தனர் என்பது உண்மையாக இருந்தாலும் நீதிமன்றம் அதை ஏற்கமறுத்தது.

மெக்கோவிலிருந்த பிரெஞ்சுத் தூதரகம் புளோரன்ஸ் கசேயின் வழக்கு விபரங்களை பிரெஞ்சு அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பிரான்சின் அப்போதைய அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி இந்த விடயத்தில் தலையிட்டார்.

பிரெஞ்சுக் குடியரசின் அரசிலமைப்பு சட்டப்படி தனது குடிமக்கள் ஒவ்வொருவரினதும் நலன்களை பேணுவதும் அவர்களது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதும் முதன்மையான கடமை என்ற அடிப்படையில் இந்த தலையீடு அமைந்தது.

ஆனால் புளோரன்ஸ் கசேயை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிரெஞ்சு சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டும் என்ற அப்போதையபிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசியினுடைய கோரிக்கையை அப்போதைய மெக்சிக்கோ அரசுத்தலைவர் Felipe Calderon 2009 ம் ஆண்டு ஜூன் மாதம் 22 ம் திகதி நிராகரித்துவிட்டார்.

ஆனாலும் 2009 ம் அண்டு ஓகஸ்ட் மாதம் புளோரன்ஸ் கசேயின் விடுதலைக்காக அரசியல்வாதிகள் இராஜதந்திரிகள் சட்டவாளர்கள் கல்விமான்கள் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டதுஇந்தக் குழுவினர் புளோரன்ஸ் கசேக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பின்னணி அவற்றின் உண்மை தன்மை மற்றும் வழக்கின் போக்கு அதிலுள்ள சட்ட ரீதியான சாதக பாதகங்கள் என்று அனைத்தையும் ஆராய்ந்தனர்.

இராஜதந்திர ரீதியாக மெக்சிக்கோ அரசாங்கத்துக்கு புளோரன்ஸ் கசேயின் விடுதலைக்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

2010 ஏப்ரல் மாதம் புளோரன்ஸ் கசேயை கைது செய்து செய்த போது மெக்சிக்கோ காவல்துறை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்பட்டது.அவரை கைது செய்த போது மீட்கப்பட்டதாக கூறப்படும் பணயக்கைதிகளின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டன.

ஆனாலும் மெக்சிக்கோ அரசாங்கம் எந்த சமரசத்துக்கும் வருவதற்கும் மறுத்ததுடன் புளோரன்ஸ் கசேயின் கருணை மனுவையும் நிராகரித்தது.

இதற்கு பதிலடியாக பிரான்ஸ் அரசாங்கம் பிரான்சில் நடைபெறவிருந்த ‘L’Année du Mexique en France’என்ற கலாச்சார நிகழ்வை 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ம் திகதி இரத்துச்செய்தது.

2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி புளோரன்ஸ் கசேயின் சார்பில் அவரது வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மெக்சிக்கோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு மெக்சிக்கோ உச்ச நீதிமன்றத்தால ஏற்றுக்கொள்ளபட்டு விசாரணை நடைபெற்றபோது காவல்துறையினர் சட்டத்துக்கு புறம்பான முறையிலும் அரசியல் சார்பு நிலையிலும் செயற்பட்டதும் புளோரன்ஸ் கசேயின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதும் ஏற்றுக்கொள்ப்பட்டது.

2012 மார்ச் மாதம் 21 ம் திகதி இந்த வழக்க்pன் தீர்ப்பு வழங்கப்பட்டது

நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் புளோரன்ஸ் கசேயின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தனர்.ஆயினும் அவரை விடுதலை செய்வதா இல்லையா என்பதை உச்ச நீதி மன்றத்தின் பிறிதொரு அமர்விலே தனியான விசாரணை நடத்தப்பட வேண்டும் கூறிவிட்டனர்.

இதற்கிடையில் 2012 ஜூலையில் மெக்சிக்கோவில் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சியை சேர்ந்த Enrique Pen Nietoபுதிய அரசுத்தவைராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போல பிரான்சிலும் புதிய அரசுத்தலைவராக பிரான்சுவா ஹொல்லாந் தெரிவுசெய்யப்பட்டார்.

பிரான்சின் புதிய சோசலிசக் கட்சி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் லோரண்ட் பபூசுக்கு புளோரன்ஸ் கசேயை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.

mexico-3.jpg?w=300&h=207இந்த நிலையில் கடந்த 23.01.2013 ம் திகதியன்று புளோரன்ஸ் கசேயின் வழக்கு மீண்டும் மெக்சிக்கோ உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கொண்ட அமர்வில் மறுபடி விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைதான் புளோரன்ஸ் கசேயின் விடுதலையை தீர்மானிக்கக் கூடியதும் இந்த வழக்கின் இறுதி விசாரணையுமாக இருந்ததால் இதன் தீர்ப்பு பிரான்சிலும் மெக்சிக்கோவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது

இறுதியில் நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் புளோரன்ஸ் கசேயின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதையும் காவல்துறையினரனின் சட்ட வரம்பை மிறீய நடவடிக்கைகளையும் கண்டித்துடன் அவரை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலைசெய்யுமாறு தீர்ப்பளித்தனர்.

மெச்சிக்கோவின் தென்பகுதியிலுள்ள தெப்பப்பன் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த புளோரன்ஸ் கசே இந்த தீர்ப்பால் தனது வருட சிறை வாழக்கையில் இருந்த வெளியே வந்தார்.

மெச்சிக்கோவில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரான்ஸ் அரசாங்கம் அவரை உடனடியாக பிரான்சுக்கு அழைத்துவந்துள்ளது.

பிரான்ஸ் அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் மெச்சிக்கோ உச்ச நீதின்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளதுடன் புளோரன்ஸ் கசேயின் விடுதலைக்கு உழைத்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்

ஆனால் புளோரன்ஸ் கசேயின் விடுதலை மெக்சிக்கோவில் ஓரு தரப்பினரை ஆத்திரமடையவைத்துள்ளது

அங்குள்ள Stop the Kidnapping Associationஎன்ற ஆட்கடத்தலுக்கு எதிரான அமைப்பின் தலைவியானMiranda de Wallacகொல்லபட்டவர்கள் மறக்கப்பட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இவரின் விடுதலை தமது வலியை அதிகரிக்கின்றது என்றும் பணமும் அதிகாரமும் குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

புளோரன்ஸ் கசே நல்லவரா கெட்டவரா என்ற விவாதக்கு அப்பால் பிரெஞ்சுக் குடியரசு தன்னுடய பிரஜை ஒருவரை காப்பாற்றுவதற்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கை தான் முக்கியத்தவம் பெறுகிறதுஇரண்டு அரசுத்தலைவர்கள் ஒரு நடவடிக்கை குழு மெக்சிக்கோவிலுள்ள பிரெஞ்சு தூதரகம் என்று ஒரு சாதாரண பெண்ணின் விடுதலைக்காக அதிக முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதுமுன் கூட்டிய பரப்புரைகள் ஊடகவிளம்பரங்கள் இல்லாமல் இந்த விடுதலை யதார்த்தமான வழிகளில் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறதுமுன் கூட்டிய ஊடகப்பரப்பரை என்பது இந்த விடயத்தை சிக்கலாக்கிவிடும் என்பதில் பிரான்ஸ் கவனமாக இருந்தது.

புளோரன்ஸ் கசே விடயத்தில் ஒரு குடியரசு தன்னுடைய குடிமக்களின் நலன்களை யாருக்கும் விட்டுக்கொடுக்காது என்பதை பிரான்ஸ் உணர்த்தியிருக்கிறது.

இப்போது நாம் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட இலங்கை சகோதரி றிசானா நபீக்கின் விடயத்துக்கு வருவோம்

risana.jpeg?w=300&h=1212005-ஆம் மே மாதம் 15 ம் திகதி 17 வயதே நிரம்பிய றிசானா சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து390 கிமீ மேற்கில் உள்ள தவாத்மி நகரில் உள்ள ஒரு அரபுக் குடும்பத்தில் பணிக்குச் சேர்க்கப்படுகிறார்;. அவர் அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் கவனித்ததோடு அங்கே இருந்த நான்கு மாத குழந்தை ஒன்றையும் கவனித்து வந்தார். 2005 ஆம் ஆண்டு மே25-ஆம் திகதி றிசானா நபீக் அந்தக் குழந்தைக்குக் புட்டிப் பால் ஊட்டிய போது எதிர்பாராத விதமாக அக் குழந்தை மூச்சு முட்டி இறந்து போனது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த சௌதி காவல் துறையினர் குழந்தை இறந்தமைக்கான காரணத்தைக் கூறவே இல்லை.றிசானாவை அச்சுறுத்தி மிரட்டி தானே கொலை செய்ததாக‘ ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக்கொள்கிறதுஇந்த விடயம் அதாவது ரிசானாவின் ஒப்புதல் வாக்குமூலம் அப்போது சவுதியிலுள்ள பெரும்பாலான ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது.

ஆனால் கடந்த 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3-ம் திகதி நீதி மன்றத்தில் வைத்து றிசானா தான் கொலை செய்யவில்லை எனவும் காவல்துறையினரின் மிரட்டல்களுக்குப் பணிந்தே தாம் ஒப்புக் கொள்ள நேரிட்டதாகவும் கூறினார்

சம்பவம் நடந்த அன்று குழந்தைக்கு தான் பாலூட்டிய போது அதற்கு இருமல் நோய் இருந்ததாகவும்  திடீரென அது இருமியதால் பால் புரைக்கேறி அதனது மூக்காலும் வாயாலும் வடிந்ததாகவும் தான் அந்த குழந்தையை தனது கையில் குப்புற படுத்தி அதனதுடைய பிடரியில் தட்டியதாகவும் குழந்தைகளுக்கு புரைக்கேறும் போது தனது ஊரிலுள்ள வயதானவர்கள் அவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன் என்றும் றிசானா நீதிமன்றத்தில் கூறியதாக கொல்வ் நீயுஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இவற்றை எல்லாம் செவி சாய்க்காத நீதி மன்றம் கடந்த 2007  ஜூன் 16-ல் றிசானாவுக்கு மரணத் தண்டனை விதித்துத் தீர்ப்பு எழுதியது.

தமிழ் மாத்திரமே அறிந்த றிசானாவின் வாக்கு மூலத்தைப் பெற எந்தவொரு மொழிப் பெயர்ப்பாளர்களையும் நீதிமன்றம் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை கன்னட மொழிபேசும் ஒருவரே அவருக்கு மொழிபெயர்ப்பாளாராக நியமிக்கப்படுகிறார்.அத்தோடு அவருக்குச் சார்பாக யாரும் வாதாடவும் முன்வரவில்லை.

ரியாத்திலிருந்த சிறீலங்கா தூதரகம் இது பற்றி அறியாத அல்லது அக்கறையற்ற நிலையிலேயே இருந்தது.

இந்த நிலையில் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு முதன் முதலான இந்த விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

ஆதன் பின்னர் ரியாத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலர் றிசானா சார்பாக மறு விசாராணை செய்ய முறையிட்டனர்.அந்த முறையீட்டில் வழக்கில் பல்வேறு கோளாறுகளையும் சுட்டிக் காட்டினார்கள்.

றிசானா பணியாற்றும் போது அவளுக்கு 17 வயது மட்டுமேஅத்தோடு அவள் வீட்டு வேலைக்கு என்று தான் அழைத்து வரப்பட்டாள் .ஆனால் அவளைப் போதிய பயிற்சியில்லாத குழந்தை பராமரிப்பு வேலைக்கு அமர்த்தியது குடும்பத்தாரின் குற்றமாகும்அத்தோடு அவள் அந்தக் குடும்பத்தின் குழந்தையை வேண்டும் என்றே பழி வாங்குவதற்காகக் கொலை செய்தால் என்ற குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லைஏனெனில் குற்றம் நடந்த போது அவள் வேலைக்குச் சேர்ந்து பத்து நாட்கள் மட்டுமே ஆகி இருந்தன என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது.இந்த நிலையிலும் ரியாத்திலுள்ள சிறீலங்கா தூதரகமும் சரி சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கமும் சரி இந்த அபலைச் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை கண்டுகொள்ளவேயில்லை.

ஆனால் இந்த முறையீடுகள் எல்லாம் சௌதியின் மதவாத சட்டத்தின் முன் எடுபடாமல் போய்விட்டதுமேல் முறையீட்டு விசாரணைகளில் சௌதியின் உச்சநீதி மன்றம் மரணத் தண்டனையை உறுதி செய்தது.

றிசானா என்ற இலங்கை சிறுமி அநியாயமாக கொல்லப்படப் போகிறார் என்று ஆசிய மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்த நிலையில் தான்சிறீலங்காவிலுள்ள முஸ்லீம் தலைவர்கள் ஓடிச்சென்று சிறீலங்கா அரசுத்தiலைவரை சந்தித்து றிசானாவை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்தனர்

றிசானா தூக்கிலிடப்படும் நாள் வரை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிப்பதாகவும் சிறீலங்கா அரச தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது.சவுதி மன்னிரிடமே சிறீலங்காவின் அரசுத்தலைவர் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

குறிப்பாக சொல்வதானால் றிசாiனாவை விடுவிப்பதற்கு காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையை விட அதற்கு கொடுக்கப்பட்ட பரப்புரை முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் அதிகமாக இருந்தது.

ஆனால் கடந்த மாதம் ம்திகதி காலை 11.48 மணிக்கு தவாத்மி நகரில் வைத்து சவுதி அரசாங்கம் பொது மக்கள் மத்தியல் வைத்து றிசானவின் தலையை துண்டித்து மரணத் தண்டனையை நிறைவேற்றிவிட்டது.

சுவதி அரேபிய சட்டப்படி இந்த விடயத்தில் மன்னர் தலையிட்டு மரணதண்டனை கைதியை காப்பாற்ற இடம் இல்லை என்று இப்போது சொல்லப்படுகிறது;

ஆனால் றிசானா பால் புகட்டும் போது இறந்து போன அந்தக் குழந்தையின் பெற்றோர் பொது மன்னிப்புக் கொடுத்தால் அல்லது ரத்தப் பணம் பெற முன் வந்தால் றிசானாவுக்கு உயிர் தப்ப ஒருவாய்ப்பிருந்ததுஆனால் கல் நெஞ்சம் கொண்ட அந்தப் பெற்றோர் றிசானா சார்பாகச் சென்றவர்களையும் சிறீலங்கா அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவே மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சிறீலங்கா அரசுத்தலைவர் நினைத்திருந்தால் சவுதி மன்னர் மூலமாக அந்த குடும்;பத்தை அழைத்து பேசியிருக்க முடியும்.மன்னர் பேச அழைத்தால் மறுப்புச் சொல்லக் கூடியவர்கள் சவுதி அரேபியாவிலே இல்லை என்பது தான்யதார்த்தம்.

ஓரு ஜனநாயகக் குடியரசு தனது குடிமக்களை காப்பாற்ற அவர்கள் என்னதான் குற்றமிழைத்தாலும் இதைத்தான் செய்யும்.பிரான்ஸ் புளோரன்ஸ் கசே விடயத்தில் இதைத்தான் செய்தது.

சவுதியை மெக்சிக்கோவுடன் ஒப்பிட முடியாது என்று சிலர் கூறலாம்ஆனால் தன்னை ஜனநாயக சேசலிசக் குடியரசு என்று பெருமையடிக்துக் கொள்ளும் சிறீலங்கா அரசை எதனுடன் ஒப்பிடுவது?

மேச்சிக்கோ சிட்டியில் இருந்த பிரெஞ்சு தூதரகம் புளோரன்ஸ் கசேக்கு(அவருக்கு ஸ்பானியல் மொழி தெரியும்வேண்டிய சட்ட உதவிகளை ஆரம்பத்திலிருந்தே செய்து கொடுத்தது.ஆனால் றியாத்தில் இருந்த சிறீலங்கா தூதரகம் என்ன செய்தது?

ஈழத்தில் கிருஷாந்தி கோணஸ்வரி இசைப்பிரியா முதலான பல்லாயிரக்கணக்கான தமிழ்பெண்களின் உயிர்வாழும் உரிமைமை பறித்த ஒரு அரசாங்கம்  றிசானா நபீக் என்ற ஏழை தமிழ் முஸ்லீம் பெண்ணை காப்பாற்றியிருக்குமா என்ன?நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

சிவா சின்னப்பொடி

http://sivasinnapodi.wordpress.com/2013/01/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(ஈழத்தில் கிருஷாந்தி கோணஸ்வரி இசைப்பிரியா முதலான பல்லாயிரக்கணக்கான தமிழ்பெண்களின் உயிர்வாழும் உரிமைமை பறித்த ஒரு அரசாங்கம் றிசானா நபீக் என்ற ஏழை தமிழ் முஸ்லீம் பெண்ணை காப்பாற்றியிருக்குமா என்ன?நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்)

 

மேலே எழுதிய அத்தனைக்கும் முதல் கடைசிவரிகளுடன் மட்டும் முடித்திருக்கலாம்.சிங்களவனின் குணம் நாம் அறிந்ததே.ஆனால் இலங்கை இசுலாமிய தமிழர்கள் அறிந்துகொள்ள ரிசானா வின் படுகொலை உதாரணமாக கொள்ள முடியும்.ஆனாலும் பேசுவது தமிழானாலும்சிங்களவன்தான் எம் தோழன் எனப்பேசும் அவர்களை என்ன சொல்வது.ரிசானா வின் அம்மாவின் பேட்டிகூட புலிகளால் பிரச்சனை.அதனால் கணவனால் வேலை செய்யமுடியவில்லை.அதனால் தான் மகளை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினோம் என்ற மாதிரியே அமைந்திருந்தது.2002-2005 காலப்பகுதி சமாதானம் நிலவிய நேரங்கள் எனக்கு தெரிய முஸ்லிம் களுக்கு பிரச்சனைகள் புலிகளால் நேர்ந்ததாக அறியவில்லை.தங்களின் தவறுகளையும் இலகுவாக புலிகளின் தலைகளில் போட்டு விடும் பழக்கத்தை கைவிட்டு காலத்தின் சூழலை புரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.

 

(ஈழத்தில் கிருஷாந்தி கோணஸ்வரி இசைப்பிரியா முதலான பல்லாயிரக்கணக்கான தமிழ்பெண்களின் உயிர்வாழும் உரிமைமை பறித்த ஒரு அரசாங்கம் றிசானா நபீக் என்ற ஏழை தமிழ் முஸ்லீம் பெண்ணை காப்பாற்றியிருக்குமா என்ன?நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்)

 

மேலே எழுதிய அத்தனைக்கும் முதல் கடைசிவரிகளுடன் மட்டும் முடித்திருக்கலாம்.சிங்களவனின் குணம் நாம் அறிந்ததே.ஆனால் இலங்கை இசுலாமிய தமிழர்கள் அறிந்துகொள்ள ரிசானா வின் படுகொலை உதாரணமாக கொள்ள முடியும்.ஆனாலும் பேசுவது தமிழானாலும்சிங்களவன்தான் எம் தோழன் எனப்பேசும் அவர்களை என்ன சொல்வது.ரிசானா வின் அம்மாவின் பேட்டிகூட புலிகளால் பிரச்சனை.அதனால் கணவனால் வேலை செய்யமுடியவில்லை.அதனால் தான் மகளை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பினோம் என்ற மாதிரியே அமைந்திருந்தது.2002-2005 காலப்பகுதி சமாதானம் நிலவிய நேரங்கள் எனக்கு தெரிய முஸ்லிம் களுக்கு பிரச்சனைகள் புலிகளால் நேர்ந்ததாக அறியவில்லை.தங்களின் தவறுகளையும் இலகுவாக புலிகளின் தலைகளில் போட்டு விடும் பழக்கத்தை கைவிட்டு காலத்தின் சூழலை புரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு.

தமிழர்களில் பெரும்பான்மையானோர் கூட ":இல்லாத" அல்லது "இருந்த ஆனால் மிகைப்படுத்தப்பட்ட" .  "புலிப் பிரச்சினையைக்"   காட்டி எப்படியாவது வெளிநாடு ஓடிவிடவேண்டும்  என்று எண்ணும்போது  ரிசானாவின் தாய்  "புலிகளால் பிரச்சனை" என்று சொல்லியிருந்தாலோ அல்லது சொல்ல வைக்கப்பட்டிருந்தாலோ அது ஒப்பீட்டளவில் ஒன்றும் பெரிதல்ல என்பது என் கருத்து...........

  • கருத்துக்கள உறவுகள்

புளோரன்ஸ் கசேயும் றிசானா நபீக்கும்- காப்பற்றப்பட்டவருக்கும் கைவிடப்பட்டவருக்குமான ஒப்பீடு

சிவா சின்னப்பொடி

ஒரு பத்திரிகையாளரின்  பேட்டியிலிருந்து:

 

 

இந்த விடுதலைக்காக உழைத்தவர்கள் பத்திரிகையாளர்களே.

 

பிரேஞ்சு அரசாங்கம் பெரிதாக இதற்கு  உழைக்கவில்லை.

ஏனெனில்  இன்னும் 1200க்கு மேற்பட்டட பிரெஞ்சுக்காறர்கள் இவ்வாறு பல்வேறு நாட்டு  மற்றும் பயங்கரவாதிகளின் சிறைகளில் உள்ளனர்.  அவர்களையெல்லாம் மறந்தாயீடுச்சு.

 

ஆனால் இதன் நன்மையை  அரசியல்வாதிகள் அறுவடை  செய்கிறார்கள்.

இந்நாள் ஐனாதிபதியிலிருந்து முன்னைநாள் ஐனாதிபதிவரை ஓடோடிச்சென்று வரவேற்று உணவருந்தி  மகிழக்காரணம்  தாம தான் இதன் காரண கர்த்தாக்கள் என மக்களுக்கு காட்டவே. 

 

அவர் இன்னொன்றையும் குறிப்பிட்டார்.

 

புளோரன்ஸ் கசே இன்னும் விடுதலையாகவில்லை

அரசியல்வாதிகளின் சிறையில் இருக்கிறார் என்று.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

ஒரு பத்திரிகையாளரின்  பேட்டியிலிருந்து:

 

 

இந்த விடுதலைக்காக உழைத்தவர்கள் பத்திரிகையாளர்களே.

 

பிரேஞ்சு அரசாங்கம் பெரிதாக இதற்கு  உழைக்கவில்லை.

ஏனெனில்  இன்னும் 1200க்கு மேற்பட்டட பிரெஞ்சுக்காறர்கள் இவ்வாறு பல்வேறு நாட்டு  மற்றும் பயங்கரவாதிகளின் சிறைகளில் உள்ளனர்.  அவர்களையெல்லாம் மறந்தாயீடுச்சு.

 

ஆனால் இதன் நன்மையை  அரசியல்வாதிகள் அறுவடை  செய்கிறார்கள்.

இந்நாள் ஐனாதிபதியிலிருந்து முன்னைநாள் ஐனாதிபதிவரை ஓடோடிச்சென்று வரவேற்று உணவருந்தி  மகிழக்காரணம்  தாம தான் இதன் காரண கர்த்தாக்கள் என மக்களுக்கு காட்டவே. 

 

அவர் இன்னொன்றையும் குறிப்பிட்டார்.

 

புளோரன்ஸ் கசே இன்னும் விடுதலையாகவில்லை

அரசியல்வாதிகளின் சிறையில் இருக்கிறார் என்று.

 

பத்திரிகையாளர்களும் பத்திரிகைகளும் மட்டும் தான் இதற்காக அதிக முயற்சி எடுத்தன என்று கூறுவது தங்களையும் தாங்கள் சாhந்த ஊடக நிறுவனங்களையும் பிரபலப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகும்.உண்மையில் அரசில்வாதிகள் பல்கலைக் கழக பேராசிரியர்கள் இராஜதந்திரிகள் சட்டவாளர்கள் ஊடகவியலாளர்கள் என்று பல்தரப்பினரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு தான் இந்த விடுதலைக்காக உழைத்தது.
அதேபோல மற்ற நாடுகளிலும் தீவிரவாத அமைப்புக்களிடமும் சிக்கியுள்ளவர்கள் பற்றி பிரான்சின் வெளிநாட்டு உளவுத்துறை முதல் அந்தந்த நாட்டு தூதரங்கள் எதோ ஒரு மட்டத்தில் தொடர்புகளை பேணி தகவல்களை திரட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
பிரெஞ்சு குடியரசினுடைய அரசியலமைப்பு அதன் குடிமக்களுடைய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கிறது.சார்க்கோசியும் ஹொல்லாந்தும் தங்களது குடிமக்களை காப்பாற்றுவதில் யார் முந்துவது என்பதில் போட்டி போடுகிறார்கள் என்று சொல்லலாம் உண்மையில் அதற்கான அழுத்தங்களை மெக்சிக்கோ அரசுக்கு கொடுத்தார்கள்.
அதுக்காக மகிந்தவின் ரேஞ்சில் வைத்து அவர்களை பார்க்கக் கூடாது விசுகு.

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.