Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை புலிகளும் இலங்கை புலிகளும் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி - விமல் வீரவன்ச

Featured Replies

வெள்ளை புலிகளும் இலங்கை புலிகளும் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி - விமல் வீரவன்ச 

[Thursday, 2013-01-31 08:07:49]
wimal-seithy-150.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வெள்ளைப்புலிகளும் இலங்கைப்புலிகளும் இணைந்து சூழ்ச்சி செய்துக்கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஐனாதிபதி பராக் ஒபாமாவின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்குள் வந்துள்ளனர். அவர்கள் மார்ச மாதம் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மணித உரிமை கூட்டத்திற்கு இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிப்பதற்காக தகவல்கள் சேகரிக்கவே இவர்கள் இங்கு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

  

திம்பிரிகாசாயவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள பாடசாலைகள் 130 மாணவர்களுக்கான பாட நூல்களும் வழங்கிவைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சவ்சிரிபாயவில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்காவிலிருந்து வருகைதந்துள்ள மூவரும் இலங்கைக்கு எதிரான தகவல்களை திரட்டுவதற்காகவே வருகைதந்துள்ளனர். அவர் வடக்குக்குச் சென்று பிரிவினைவாதிகளையும் அமெரிக்க நன்கொடை நிதியம் பெறும் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர்.

இவர்கள் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு சாட்சிக்காரர்களைத் தேடி வந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் அரங்கேற்றிய நாடகம் தோற்றுப்போனதாலேயே மீண்டும் ஒரு நாடகத்தினை அரங்கேற்றவே வருகைதந்துள்ளனர்.

இந்த நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர், படைத்தளபதிகள் மற்றும் அதிகாரிகளும் யுத்த காலத்தில் அநீதி இழைத்தவர்கள் என்ற போர்வையில் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் மேலும் ஒரு நிகழ்ச்சி நிரலை இலங்கைக்கு எதிராக செயற்படுத்தவே இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் இலங்கையின் தற்போதைய ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவர்களிடமிருந்து தகவல் சேகரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முக்கிய சாட்சிக்காரர்களாக உள்ளனர்.

அந்நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு சான்றாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்கியமை சாட்டாகக் கொண்டு இவர்கள் மேலும் பொய்த் தகவல்களைச் சேகரிப்பதற்கே இங்கு வந்துள்ளனர். பராக் ஒபாமாவுக்கும் அவரது அதிகாரிகளுக்கும் அங்கு நித்திரைகொள்ள முடியவில்லை.

இலங்கை வரும் பிரதிநிதிகளிடம் சாட்சி சொல்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை இங்கு உள்ள சில எதிர்கட்சி அரசியல்வாதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சில முகவர்களும் முயற்சிக்கின்றனர். ஷிரானி பண்டாரநாயக்க குற்றம் இழைத்தவர் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலம் அவர் பதவி நீக்கப்பட்டார்.

சரத் பொன்சோகாவை பயன்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமை தீர்மானத்தை நிறைவேற்ற சாட்சிக்காரராகவும் பாவித்தார்கள். அவர் இலங்கைக்கு எதிராகவும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக இலங்கை ஊடகங்களில் தெரிவித்த கருத்தே சில வெளிநாட்டு சக்திகளுக்கு சாட்சியாக அமைந்தது.

மேலும் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்று யுத்தக் குற்ற பலியை சுமத்தி ஜ.நா. மனித உரிமை பேரவையிலும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினார்கள். இத்திட்டத்திற்கு சில வெளிநாடுகளில் உள்ள வெள்ளை புலிகளும் அந்த நாட்டில் வாழும் இலங்கைப் புலிகளும் சூழ்ச்சி செய்து வருகின்றனர்" என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=74957&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.