Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்டத்தட்ட 530 ஆண்டுகளின் பின்னர் கார் பார்க்கில் கண்டறியப்பட்டது ரிச்சாட் III மன்னனின் உடலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_65700812_87f13eaf-9ab0-4dc0-89ed-9db0af

 

இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள்
நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள்
கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம்
ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.


பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண்
விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட்
1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார்.



130204115850_richard_304x171_universityo

நகர மையத்து கார் நிறுத்துமிடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.


அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற
மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட
இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன.


வளைந்த முதுகெலும்பு கொண்ட இந்த எலும்புக்கூட்டை
அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் தோண்டி எடுத்த பின்னர் அதிலே
விஞ்ஞானிகள் பலவிதமான அறிவியல் பரிசோதனைகளை நடத்தி அது மன்னர் மூன்றாம்
ரிச்சர்ட் என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

 

_65682907_richardcomp.jpg


மன்னர் ரிச்சர்ட் தோற்றது இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஆகும்.

 

தமிழில் :  பிபிசி தமிழ்

 

ஆங்கிலம்: http://www.bbc.co.uk/news/uk-england-leicestershire-21328380

Edited by nedukkalapoovan

கனடிய மரபணு பரிசோதனை இந்த ஆய்விற்கு உதவியுள்ளதாம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

.......இங்கிலாந்தில் இரு பெரும் பலம் மிக்க பிரபுக்கள் குடும்பங்களான லங்காஸ்ட்டர் மாளிகையின் (அல்லது குடும்பத்தின்) (House of Lancaster) ஆதரவாளர்களுக்கும் யோர்க் மாளிகையின் (அல்லது குடும்பத்தின்) (House of York) ஆதரவாளர்களுக்கும் இடையேயான  உள்நாட்டுப்போர் ஒன்று 30 வருடங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது.

 

லங்காஸ்ட்டரின் சின்னம் சிவப்பு ரோஜாவாகவும், யோர்க்கின் சின்னம் வெள்ளை ரோஜாவாகவும் இருந்ததால், இந்த சண்டையானது 'ரோஜாக்களின் சண்டை' (war of the roses) என அழைக்கப்பட்டது.


1485 ம் ஆண்டு லங்காஸ்ட்டர் குடும்பத்தின், ஹென்ரி ரியூடர் (Henry Tudor), போஸ்வோர்த் எனும் இடத்தில் நடந்த (battle of Bosworth) யுத்தத்தில் யோர்க் குடும்பத்தின் 3 ம் ரிச்சர்ட் (Richard III) என்பவரினை வீழ்த்தி உள்நாட்டுப்போரினை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

 

எலிசபெத் எனும் யோர்க் மாளிகைப் பெண்ணை மணந்து, பகைக்கு முடிவு கட்டி, 7 ம் ஹென்ரி (Henry VII) என்ற பெயரில் இங்கிலாந்தின் அரியணை ஏறியதுடன், ரியூடர் மாளிகை (அல்லது குடும்பம்) (House of Tudor) என்னும் புதிய வம்சம் ஒன்றினை உருவாக்கினார்.

 

மன்னர் 7 ம் ஹென்ரிக்குப் பின்னர் அவரது மகன் 8 ம் ஹென்ரி அரியணை ஏறினார்.

 

நீண்ட காலமாக வழக்கில் இருந்த ரோம் (வத்திக்கான்) கத்தோலிக்க திருச்சபையுடனான (போப்பாண்டவர்) தொடர்பினை முறித்த வகையில் இங்கிலாந்து அரசர்களிடையே பிரசித்தமான ஒருவராக மன்னர் 8 ம் ஹென்ரி விளங்குகின்றார்.

 

மன்னர் 8 ம் ஹென்ரி இங்கிலாந்து திருச்சபையினை (Church of England) ஸ்தாபித்தார். 

 

(இதனால் தான் மன்னர் ரிச்சர்ட் தோற்றது இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஆகும் என குறிப்பிடுகின்றனர்)

........

 
Source From: பிரித்தானிய வாழ்வு  (Life in UK Test Book's Tamil Translation)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள தகவல்கள். இணைப்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.