Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளை திருப்பியனுப்பமாட்டோம்: இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகளை திருப்பியனுப்பமாட்டோம்: இந்தியா

 
INDIA_EMPLEM1.jpgஇந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை  அகதிகளை நாடு திரும்பும்மாறு கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இந்திய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,

'தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று, இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு இந்திய அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் உள்ள சிறிலங்கா அகதிகள் முகாம்களை பார்வையிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எந்தவிதமான கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை.

இலங்கையில் யுத்தத்தின் போது போதும், அதற்குப் பிந்தைய காலகட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீட்டுவசதி, தொடருந்து, வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழ் அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் உதவும். இந்த விவகாரத்தில், இந்த நடைமுறை மட்டுமே தற்போது வழக்கத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திரும்பும்படி நாம் கட்டாயப்படுத்த மாட்டோம்' என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.