Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை மாற்றம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை மாற்றம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை

 

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்படுதல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரை அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட எல்லைக் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் வேலைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். 

அதன் இறுதிக்கட்ட தீர்மானம் எடுக்கப்பட்டு நேற்று புதன்கிழமை அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதன் பிரதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான பி.ஸ்.எம்.சார்ள்சுக்கும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரியநேத்திரன் தெரிவித்தார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், 

´குறிப்பிட்ட பிரதேச செயலகங்களின் எல்லைகள் ஏற்கனவே இருந்ததன் படியே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளது. இதுவே எங்களது முடிவாகும். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு மட்டுமல்ல. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் முடிவாகும். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன ரீதியான பிரதேச செயலகங்களை உருவாககக் கூடாது என்பது எங்களது முடிவாக இருக்கிறது. எமது மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 4 முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளும் 10 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளன. 

நான்கு தவிர 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 26,300 ஏக்கர் விவசாய நிலங்கள் முஸ்லிம் மக்களுக்கு உள்ளதுடன் 832 ஏக்கர் நிலங்களின் முஸ்லிம் மக்கள் குடியிருக்கிறார்கள். ஆகவே எங்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இல்லை. அவர்கள் எங்கும் வாழலாம்´ என்று தெரிவித்தார். 

எல்லை நிர்ணயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் டடலகே மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகள் மீள நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த 24ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றிருந்தது. 

அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கு ஒவ்வொரு தரப்பும் பரிந்துரைகளை முன்வைக்கும் படியும், ஜனாதிபதி முடிவுகளை அறிவிப்பார் என்றும் பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருந்தார். 

அதற்கமைவாக மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற ஆராய்வுகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், ஏனைய தமிழ் கட்சிகள் தனித்தனியாக தமது பரிந்துரைகளையும் முன்வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பிட்ட எல்லை நிர்ணயத்தில், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு எனும் 211பி கிராம சேவையாளர் பிரிவின் ரிதிதென்ன, ஜயந்தியாய, ஓமடியாமடு, பாலம்பக்கேணி, ஆலங்குளம், புவனேசபுரம், மேலாண்டகுளம் ஆகியன கோரளைப்பற்று மத்தியுடன் இணைக்கப்படுகிறது. இதில் சுமார் 12ஆயிரத்து 500க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது. 

அதேபோன்று, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி எனும் 610 குடும்பங்களைக் கொண்ட 210ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவின் குளத்துமடு, குடாமுனைக்கல், குளவால்சேனை, பெட்டைக்குளம், புணானை மேற்கு 240 குடும்பங்களைக் கொண்ட 210 ஈ கிராம சேவையாளர் பிரிவின் புணானை, மயிலந்தனை, சாளம்பைச்சேனை, முள்ளிவட்டவான், புணானை அணைக்கட்டு ஆகிய கிராமங்கள் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுடனும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதிலும் சுமார் 11ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உள்வாங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=34640

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.