Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளாந்த தமிழீழ விளையாட்டு செய்திகள்

Featured Replies

பொற்பதிக்கும் பாடும் மீனும் விளையாடியதை பார்க்க கனவு மாதிரிகிடக்கு .

முப்பது வருடத்திற்கு முதல் இதே மைதானத்தில் பொற்பதியை வென்று பாடும்மீனுடன் இறுதி போட்டியில் தோற்றோம்.பொற்பதி மிக திறமான டீமை பொறுக்கி எடுத்து கொண்டுவந்தும்  எங்களிடம் தோற்றத்தை  ஏற்கமுடியாமல் பலகாலம் கொழுவிக்கொண்டு திரிந்தார்கள் .அவர்களது கோச் இன் பெயர் MR.SIVAKURU. எங்களுக்கு கோச்சும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை .

  • தொடங்கியவர்

அம்பாறை மாவட்ட பெட்மின்டன் சம்பியனாக கல்முனை பிரதேச அணி

 

01(767).jpg

 

அம்பாறை மாவட்ட பெட்மின்டன் விளையாட்டுப் போட்டியில் கல்முனை பிரதேச அணி சம்பியனாகியது. இந்த போட்டிகள்  சம்மாந்துறையிலுள்ள விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அக்கரைப்பற்று, நிந்தவூர், அம்பாறை, காரைதீவு, கல்முனை, உஹன மற்றும் சாய்ந்தமருது ஆகிய ஏழு பிரதேச செயலக கழகங்கள் பங்குபற்றின.

 

இதன் இதிறுப் போட்டியில் அம்பாறை மற்றும் கல்முனைப் பிரதேச அணிகள் மோதின. இதில் மூன்றுக்கு பூச்சியம் என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கல்முனை பிரதேச அணி வெற்றி பெற்றது.

 

இந்த போட்டி தொடரில் மூன்றாம் இடத்தை காரைதீவு பிரதேச அணி சுவீகரித்துக்கொண்டது. கல்முனை பிரதேச செயலகம் சார்பாக கல்முனை எவரெஸ்ட் விளையாட்டு கழகம் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59124-2013-02-18-08-02-07.html

  • தொடங்கியவர்

பாடும்மீனிடம் தோற்றது விக்னேஸ்வரா

 

F01(53).jpg

 

யாழ்.கால்ப்பந்தாட்ட லீக் மஹிந்தன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக தமது அங்கத்துவ அணிகளுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தி வருகின்றது.

 

 

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் அணியினை எதிர்த்து கரவெட்டி விக்னேஸ்வரா அணி மோதியது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பாடும்மீன் அணி முதல் பாதியாட்டத்தில் 2 கோல்களைப் போட்டது.


இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களினைப் போட்டு தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. இறுதிநேரத்தில் கரவெட்டி விக்னேஸ்வரா அணி கோல் ஒன்றைப் பெற்று ஆறுதலடைந்தது. இறுதியில் பாடும்மீன் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

F02(53).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59223-2013-02-19-15-17-12.html

  • தொடங்கியவர்

96ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்

 

S01(107).jpg

 

யாழ். மாவட்டத்தின் பொன் அணிகள் இரண்டும் 96ஆவது தடவையாக துடுப்பாட்டக் களத்தில் மோதவுள்ளன. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கிரிக்கெட் போட்டிகளில், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

 

மட்டுப்படுத்தப்படாத பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட பொன் அணிகள் போர், இம்மாதம் 22, 23 ஆகிய தினங்களில் 96 ஆவது போட்டியாக நடைபெறவுள்ளது. பொன் அணிகள் போரின் 95 வருட வரலாற்றில், 32 போட்டிகளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் 16 போட்டிகளிலுல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியும் வெற்றிபெற்றுள்ளதுடன், 29 போட்டிகள் சமநிலையிலும், 18 போட்டிகள் முடிவு தெரியாமலும் முடிவடைந்துள்ளது.


இறுதியாக கடந்த 2012ஆம் வருடம் நடைபெற்ற போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியும் வெற்றிபெற்றது.  96ஆவது பொன் அணிகள் போரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு றிசாந்தன் ரியூடரும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு ரி.நிமலேந்திராவும் தலைமை தாங்குகின்றனர்.

 

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அணித் தலைவர் முரளி வெற்றிக்கிண்ணப் இருபது – 20 போட்டியில் போட்டியில் அரையிறுதியில் யாழ்.மாவட்ட அணி சார்பாக 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து சிறப்பாட்டக்காரர் விருது பெற்றதுடன், வர்ண விருதும் பெற்றார்.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணித்தலைவர் இந்தாண்டு நடைபெற்ற போட்டிகளில் இரண்டு அரைச்சதங்கள் உட்பட, மானிப்பாய் இந்துக் கல்லூரியுடன் இரண்டு இனிங்ஸிலும் 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 10 இலக்குகளை வீழ்த்தி பலமான பந்துவீச்சாளராகவும், மற்றும் அவ்வணி வீரன் எஸ்.மதுஷன் தொடர்ச்சியாக 3 அரைச்சதங்கள் (82, 75, 62) பெற்று துடுப்பாட்ட வரிசையை அலங்கரிக்கின்றனர்.

 

பயிற்சியாளர் ஏ.எஸ்.நிசாந்தனின் பயிற்றுவிப்பினால், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் களத்தடுப்பு வியூகம் அமைத்து சிறப்பாகச் செயற்படக்கூடிய ஆற்றல் பெற்றது என்று சொல்லப்படும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும், பயிற்சியாளர் ஆர்.குகனின் பயிற்றுவிப்பின் மூலம் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சில் அதிரடியாக மாறற்ங்களை எடுத்து எந்தநேரத்திலும் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் திறமை கொண்ட வட்டுக்கோட்டை யாழ்;ப்பாணக் கல்லூரியும் மோதுவதே இப்போட்டியின் மேலும் ஒரு சிறப்பு.


பொன் அணிகளின் திறமைசாலிகளினை காண்பதற்காக யாழ்.மாவட்ட துடுப்பாட்ட ரசிகர்களின் கண்கள் அனைத்தும் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் பிக்நெல் மைதானம் நோக்கி திரும்பவுள்ளன.

 

S02(88).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59219-96----.html

  • தொடங்கியவர்

கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டிக்கு ஊரெழு றோயல் அணி தகுதி

 

a1(2069).jpg

 

யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஊரெழு றோயல் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

 

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம், பருத்தித்துறை கால்பந்தாட்;ட லீக்கின் அனுமதியுடன் யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட கால்;பந்தாட்டச் சுற்றுப்போட்டியை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வருகின்றது.


இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில்  ஊரெழு றோயல் அணியும் பாஇஷயூர் சென். அன்ரனீஸ் அணியும் மோதின.

 

அடுத்தடுத்து கோல்களை போட்ட ஊரெழு றோயல் அணி 7 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுற்றுப்போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. றோயல் அணி சார்பாக கஜகோவன், சயந்தன் தலா 3 கோல்களைப் போட்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59241-2013-02-20-04-43-43.html

  • தொடங்கியவர்

வென்றது பாடும்மீன் பி. அணி

 

F01(55).jpg



ஆட்டத்தில் பெரும் பகுதியை தன் வசப்படுத்தி வைத்திருந்த சென்.மைக்கல் அணி கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை தவறவிட, அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாடும்மீன் அணி வெற்றிபெற்றது.

 

யாழ்.கால்ப்பந்தாட்ட லீக் மஹிந்தன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக அங்கத்துவக் கழகங்களிக் இளைஞர் அணிகளுக்கிடையில் வலிகல் முறையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடத்தி வருகின்றது.


நேற்று மாலையில் நடைபெற்ற போட்டியில் உரும்பிராய் சென்.மைக்கல் அணியினை எதிர்த்து பாடும்மீன் பி. அணி மோதியது. போட்டியின் தொடக்கம் முதல் சென்.மைக்கல் அணியின் கைகளிலேயே ஆட்டம் இருந்து. கோல் கம்பத்தினை நோக்கி அடித்த பந்துகள், மயிரிழையில் 7 தடவைகள் கோல் பெறத் தவறிவந்தது.

 

இந்நிலையில் சுதாகரித்துக் கொண்ட பாடும்மீன் அணி கிடைத்த சந்தர்ப்பங்களை கோலாக்க தவறவில்லை. இறுதியில் பாடும்மீன் பி அணி அடுத்தடுத்து கோல்களைப் போட்டு 4:2 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றிபெற்றது.

 

F02(55).jpg



http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59392-2013-02-22-08-52-42.html

  • தொடங்கியவர்

யாழில் பொன் அணிகள் போர் துடுப்பாட்ட போட்டி

 

a1(2077).jpg



சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் 96ஆவது துடுப்பாட்டப் போட்டிகள் இன்று காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

 

 

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள பொன் அணிகள் போர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணித்தலைவர் றிசாந் ரியூடர் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தார். அதற்கிணங்க தற்போது முதலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது.



a2(1682).jpg



http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59403-2013-02-22-09-37-51.html

  • தொடங்கியவர்

விநாயகாபுரம் மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டி
 
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு.திகோ.விநாயகாபுரம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
 
விளையட்டு போட்டிகள் அதிபர் சோ.பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக  திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன்  கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர் டாக்டர் ஏ.உதயசூரியன் அவர்களோடு திருக்கோவில் பிரதேச கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வை.ஜெயச்சந்திரன், எஸ்.மகேந்திரகுமார் திரு.எஸ் இராஜேந்திரன் திரு.சி.நடராசா, எம்.கேந்திமூர்த்தி (கணக்காளர்) வி.ஜயந்தன்(கோட்டக்கல்விப்பணிப்பாளர் பொத்துவில்) ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இவ்வருடம் முதலாம் இடத்தினை மருதம் இல்லத்தினரும் இரண்டாம் இடத்தை நெய்தல் இல்லமும் மூண்றாம் இடத்தை குறிஞ்சி இல்லமும் பெற்றுக் கொன்டன.
 
http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2886:2013-02-22-08-08-26&catid=58:local&Itemid=386

  • தொடங்கியவர்

பொன் அணிகள் போர் சமநிலையில் முடிந்தது

 

DSCF7502.JPG

 

பாலசிங்கம் தனுசன் - பிராங் கிளின்டன் 9ஆவது விக்கெட்டிற்காக தமக்கிடையில் பகிர்ந்த 122 ஓட்டங்களும், கூடவே பந்துவீச்சாளர்களின் துல்லிமான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தில் பொன் அணிகள் போரில் ஆதிக்கம் செலுத்தியது சென். பற்றிக்ஸ் கல்லூரி. இருந்தபோதிலும் யாழ்ப்பாணக் கல்லூரி வீரர்களின் பொறுப்பான இறுதிநேர ஆட்டத்தினால் போட்டி சமநிலையில் முடிந்தது.

 

 

பொன் அணிகள் போர் எனப்படும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட 96ஆவது போட்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்று வந்தது.


நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் இனிங்ஸில் 55 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் புஸ்பராஜா அபிராஜ் 56, மதுசன் 34 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக வோஸிங்டன் லூவிஸ் கிளின்டன், அஜித் டர்வின் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.


பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 108 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்திருந்தது. அணித்தலைவர் ரிசாந்த ரியூடர் 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

 

நேற்று சனிக்கிழமை இரண்டாம் நாளில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. தொடர்ந்து இலக்குகளை இழந்த போதும் 9ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த பாலசிங்கம் தனுசன் 55, பிராங் கிளின்டன் 66 ஓட்டங்களைப் பெற்று, தமக்கிடையில் 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.


இந்த இணைப்பாட்டத்தின் மூலம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 92 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

 

பந்துவீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பாக அணித்தலைவர் துரைராஜசிங்கம் நிமலேந்திரா 5 இலக்குகளையும், விஜேந்திரன் சோபிநாத் 3 இலக்குகளையும் கைப்பற்றினர்.


120 ஓட்டங்கள் பின்னலையில் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முன்வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தில் 70 ஓட்டங்களுக்கு 1 இலக்கு இழந்த நிலையில் இருந்தது.

 

எனினும் இரண்டாவது இலக்கு இழகப்பட்டதிலிருந்து தொடர்ந்து இலக்குகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, துடுப்பாட்ட வீரர்கள் போட்டியினை சமப்படுத்துவதற்கு சிரமப்பட்டனர். பின்வரிசை வீரர்கள் தடுப்பாட்டம் மேற்கொண்டு போட்டியை சமப்படுத்தினர்.


போட்டி நிறைவடையும்போது யாழ்ப்பாணக் கல்லூரி அணி 6 இலக்குகள் இழப்பிற்கு 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் லோகேஸ்வரன் மாதவரூபன் 31, மிதுசன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக அஜித் டாவின் 3, வோஸிங்டன் லூவிஸ் லிவிங்டன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.


பொன் அணிகள் போரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பிராங் கிளின்டனும், போட்டியின் சிறப்பாட்டக்காரராக அவ்வணியின் அணித்தலைவர் ரிசாந்த ரியூடரும், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த பந்துவீச்சாளர்களாக யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த முறையே புஸ்பராஜா அபிராஜ், அணித்தலைவர் துரைராஜசிங்கம் நிமலேந்திரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

DSCF7473.JPG



DSCF7476.JPG

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59509-2013-02-24-11-17-04.html

  • தொடங்கியவர்

கமலயோகேஸ்வரன் சிலோஜனின் பந்துவீச்சினை பார்வையிட்ட சனத்ஜெயசூரிய

 

DSCF7667.JPG



கொக்குவில் இந்து கல்லூரி துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிலோஜன் அதிகப்படியாக 130 கிலோமீற்றர் என்னும் வேகத்தில் பந்துவீசி வருகின்றார்.

 

 

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இலங்கை துடுப்பாட்ட அணியின் தெரிவுக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய - சனத்ஜெயசூரிய துடுப்பாட்ட நிறுவகத்தின் அணி வீரர்களும் யாழ்ப்பாண வீரர்களும் விளையாடிய சிநேகபூர்வ பயிற்சி போட்டியினை நேரடியாக கண்டுகளித்தார்.


யாழ். மாவட்டத்திலேயே மிதவேகத்தில் பந்து வீசி வரும் கொக்குவில் இந்து கல்லூரி வீரன் கமலயோகேஸ்வரன் சிலோஜனின் பந்துவீச்சினை நேரடியாக சனத்ஜெயசூரிய பார்த்தார்.

 

தொடர்ந்து நடைபெற்ற வீரர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய சனத்ஜெயசூரிய,


தேசிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி போட்டி நிகழ்வானது யாழ். மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்படுகின்றது.

 

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் எனது நிறுவகத்தின் வீரர்கள் வருகை தந்து யாழ்ப்பாணத்திலுள்ள வீரர்களுடன் பயிற்சி போட்டிகளில் விளையாடுவார்கள் இதன் மூலம் வீரர்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஏற்படுவதுடன், யாழ். மாவட்டத்திலுள்ள திறமைமிக்க துடுப்பாட்ட வீரர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றார்.


கமலயோகேஸ்வரன் சிலோஜனை தமது அக்கடமியில் இணைத்து வேகப்பந்துவீச்சுக்கான பயிற்சியளித்து, அவரின் வேகப்பந்துவீச்சுத் திறமையினை அதிகரித்து தேசிய அணிக்கு ஏற்றவிதத்தில் தயார் செய்வதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் வீரர்கள் அடையாளம் காணப்படவேண்டும், அதற்காக யாழ்ப்பாண மாவட்ட வீரர்கள் கடுமையாக அர்ப்பணிப்புடன் துடுப்பாட்ட போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

DSCF7579(1).JPG



http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59560-2013-02-25-15-12-08.html

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் 23ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் இடம்பெற்றது.

 

 

விளையாட்டு நிகழ்வில் கலைப்பீடம் 249 புள்ளிகளுடன் முதலிடத்தையும், விஞ்ஞானபீடம் 209 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், முகாமைத்து வணிக பீடம் 173 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தினையும் பெற்றன.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59565-2013-02-25-15-33-08.html

 

 

  • தொடங்கியவர்

பருத்தித்துறை சென். தோமஸ் அணி சம்பியன்

 

P01(148).jpg

 

பருத்தித்துறைப் பிரதேச செயலகங்களின் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தில் நடைபெற்றது.

 

 

இதில் பருத்தித்துறை சென். தோமஸ் அணி சம்பினாகியதுடன், இரண்டாமிடத்தினை வல்வை கழுகுகள் அணி பெற்றுக்கொண்டது. -

 

See more at: http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59859-2013-03-02-08-06-27.html#sthash.leij0rms.dpuf

  • தொடங்கியவர்

வதிரி பொம்மர்ஸ் அணி சம்பியன்

 

V01(72).jpg

 

கரவெட்டிப் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது.

 

 

இறுதிப் போட்டியில் வதிரி பொம்மர்ஸ் அணியினை எதிர்த்து அல்வாய் மனோகரா அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளின் சமமான பலத்தின் வெளிப்பாட்டினால் 12:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் முடிவுற்றது.


இரண்டாவது பாதியாட்டத்தில் தனித்திறமை வெளிக்காட்டி பொம்மர்ஸ் அணி இரண்டாவது பாதியினை 13:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு, இறுதியாக 25:18 என்ற மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

 

V02(57).jpg

 

- See more at: http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/59860-2013-03-02-08-11-05.html#sthash.ACA7ngFe.dpuf

 

  • தொடங்கியவர்

தேசிய ஹொக்கி சுற்றுப்போட்டி யாழில் ஆரம்பம்



2(2042).jpg



இலங்கை  பாடசாலைகள் ஹொக்கி சம்மேளனத்தின் ஏற்பாட்டில், 19வயதுப் பிரிவு ஆண், பெண் இருபாலாருக்குமான தேசிய ஹொக்கிச் சுற்றுப்போட்டி நாளை புதன்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

இப்போட்டி எதிர்வரும்; 9 ஆம் திகதி சனிக்கிழமை வiர் நடைபெறவுள்ளது.


இலங்கை முழுவதிலும் இருந்து 42 பாடசாலைகளின் ஹொக்கி அணிகள் இந்த சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/60057-2013-03-05-12-28-21.html

  • தொடங்கியவர்

கால்பந்தாட்ட போட்டியில் றோயல் அணி சம்பியன்

 

Slide3.jpg

 

வதிரி பொமர்ஸ் விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்திவந்த யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான விலகல் முறை கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் றோயல் அணி சம்பியனாகியுள்ளது.

 

 

சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது, ஊரெழு றோயல் அணியும் பொலிகண்டி விண்மீன் அணியும் மோதிகொண்டன


ஆட்ட நேர முடிவுவரை  இரு அணியும் கோல்கள் எதுவும் பெறாததினால், போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது.

 

சமநிலை தவிர்ப்பு உதையிலும் முதல் சுற்றில் இரு அணிகளும் 3:3 என்று கோல்கள் பெற்று வெற்றியாளர் தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தனர்.


இருந்தும் இரண்டாவது சமநிலை தவிர்ப்பு உதையில் சிறப்பாகச் செயற்பட்ட றோயல் அணி, 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இழுபறியில் இருந்த யார் சம்பியன் என்ற தெரிவை முடிவுக்கு கொண்டு வந்தது.

 

இறுதிப்போட்டியின் நாயகனாக, தொடரின் நாயகனாகவும் றோயல் அணியின் எஸ்.சயந்தனும், சிறந்த கோல் காப்பாளராக விண்மீன் அணியின் என்.திணேஸூம் தெரிவு செய்யப்பட்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/60030-2013-03-05-07-08-40.html

  • தொடங்கியவர்

107ஆவது 'வடக்கின் மாபெரும் போர்'



'வடக்கின் மாபெரும் போர்' என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் - சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே 7ஆம் திகதி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் பெய்து வந்த மழை காரணமாக பிற்போடப்பட்டு, 14 ஆம் திகதி நடத்துவதற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

106 வருட போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இவ்வருடம் 107ஆவது போட்டியாக வடக்கின் மாபெரும் போர் அமையவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் இரு அணிகளின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி தமது ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

 

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டம் என்னும் போது, அதற்கு இலங்கை ரீதியில் நல்ல வரவேற்புள்ளது. காரணம் அதன் வரலாறு நீண்ட காலம் கொண்டதாகும். இலங்கையில் பெரும் துடுப்பாட்டப் போட்டிகள் அறிமுகமாகும் போது ஆரம்பமான போட்டியாக வடக்கின் மாபெரும் போர் இருக்கின்றது.


வடக்கின் மாபெரும் போர் போட்டி என்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு திருவிழா போன்று கொண்டாடப்படும். ஒவ்வொரு அணிகளின் ரசிகர்கள் யாழ்ப்பாணத்தின் முழு இடங்களிலும் வெற்றி கோஷங்கள் எழுப்பிய வண்ணம், மேள தாளங்களுடன் செல்வார்கள்.

 

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட போட்டியில் மோதவுள்ள அணிகளுக்கு பெண் ரசிகைகளின் ஆதரவுகளாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு வேம்படி மகளிர் கல்லூரி  பெண் ரசிகைகளும், சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண் ரசிகைகளும் ஆதரவு வழங்குவது வழமை. பெண் ரசிகைகளின் ஆதரவானது, வடக்கின் மாபெரும் போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கு மேலதிக உத்வேகத்தைக் காலம் காலமாகக் கொடுத்து வருகின்றது.


இது வரையிலும் நடைபெற்ற 106 போட்டிகளில், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 33 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிகளைப் பொறித்துள்ளதுடன், 38 போட்டிகள் சமநிலையிலும், 1 போட்டி மழையினால் கைவிடப்பட்டும் உள்ளதுடன் 7 போட்டிகளுக்கு முடிவுகள் தெரியாத நிலையில் இருக்கின்றது.

 

107 ஆவது போட்டிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு பூபாலசிங்கம் டர்வினும், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு ஜெயகுமார் அமிடஜனும் தலைமை தாங்குகின்றனர்.  சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளிலும் மிகவும் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டி நிற்கின்றது.


விளையாடிய 14 போட்டிகளில் 5 இனிங்ஸ் வெற்றி உட்பட 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 4 போட்டிகளை சமநிலைப்படுத்தியும், 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. வெற்றியின் பின்னணியில் இருப்பது அவ்வணியின் அபரவிதமாக துடுப்பாட்ட பலம். அதற்கேற்க பந்துவீச்சாளர்களும் கைகொடுக்க வெற்றிகளை இவ்வருடம் சுலபமாகச் சுவைத்து வந்தது.

 

போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் விமர்சனங்கள் இருந்தாலும், வடக்கின் மாபெரும் போட்டி என்னும் போது, வீறுகொண்டு எழும் அணியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி விளங்குகின்றது. இவ்வருடம் நடைபெற்ற போட்டிகளில் 7 போட்டிகளில் பங்குபற்றியுள்ள அவ்வணி 3 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளை வெற்றிதோல்வி இல்லாத நிலையிலும் முடித்துள்ளது.


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் தனிப்பலம் பந்துவீச்சும், களத்தடுப்பாகவும் இருக்கின்றது. யாழ்ப்பாணம் மத்திய அணியின் துடுப்பாட்டம் குறிப்பிட்ட சில வீரர்களின் தோல்களில் சுமத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு வடக்கின் மாபெரும் போர் போட்டியிலும் முன்னைய சாதனைகள் எதாவது ஒன்று முறியடிக்கப்பட்டு வருகின்றமை வழமை அவ்வாறு இவ்வருடமும் சாதனைகளை நிலைநாட்டுவதற்கான களத்திற்காக இரு அணி வீரர்களும் காத்திருக்கின்றது.

 

இரு அணிகளின் ரசிகர்கள் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த துடுப்பாட்ட ரசிகர்களின் சிந்தனையும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தை நோக்கியதாகவே இருக்கும் என்து உண்மை.

 

 

htttp://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/60304-107---.html

  • தொடங்கியவர்

யாழ். இந்துக்களின் பெருஞ்சமர் நாளை ஆரம்பம்
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 16:22  0 COMMENTS
-கு.சுரேன்

 

 

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையில் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இரண்டு


நாட்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் யாழ்ப்பாணம்; இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

2008 ஆம் ஆண்டு முதன்; முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டியானது இம்முறை 6 ஆவது தடவையாக நடைபெறவுள்ளதுடன், இது வரையிலும் நடைபெற்ற போட்டிகளில் கொக்குவில் இந்து கல்லூரி அணி ஒரு போட்டியிலும்; மிகுதி நான்கு போட்டிகளும் சமநிலையிலும் முடிவுற்றுள்ளன.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/60464-2013-03-11-10-56-23.html

  • தொடங்கியவர்

தென்மராட்சி வலயப் பாடசாலைகளின் கபடிப் போட்டி முடிவுகள்

 

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 15, 19 வயதுப்பிரிவு ஆண், பெண் இருபாலாருக்குமான கபடிப்போட்டிகள் மட்டுவில் ஸ்கந்தவரோதய கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

 

15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அணி முதலிடத்தையும், இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே சாவகச்சேரி இந்து கல்லூரி, கச்சாய் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.


15 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி அணி முதலிடம் பெற்றதுடன், இரண்டாம் மூன்றாமிடங்களை முறையே கச்சாய் மகா வித்தியாலயம், சாவகச்சேரி டிற்பேக் கல்லூரி ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.

 

19 வயதுப்பிரிவு ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளில் அதே ஒழுங்கில் முதலிடத்தை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி அணியும், மூன்றாமிடம் கச்சாய் மகா வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/60566-2013-03-12-15-25-30.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கரப்பந்தாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் சம்பியன் lg-share-en.gif face.jpg By Priyarasa 

2013-03-20 15:22:25  

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சங்கானை ஞான வைரவர் விளையாட்டுக்கழகமும் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

இரு அணிகளும் ஒரு அணி மற்றைய அணிக்கு சளைத்தவர்கள் இல்லையென மோதிக் கொண்ட போதிலும் ஆட்ட இறுதியில் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் சங்கானை பிரதேச செயலக சம்பினாக தெரிவு செய்யப்பட்டது.

மூன்று சுற்றுக்களைக்கொண்ட இந்தப் போட்டியில் முதல் இரண்டு நேர் சுற்றுக்களையும் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக்கழகம் பெரும் போராட்டத்தின் மத்தியில் 25:21, 25:23 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 

இதேவேளை, அடுத்த மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/sports.php?vid=533

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் மரதன் ஓட்டபோட்டி மற்றும் சைக்கிளோட்ட போட்டி

 

மட்டக்களப்பு தாண்டவன்வெளி சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தின் 40 ஆண்டுகள் நிறைவையொட்டி ஆண்களுக்கான சைக்கிளோட்ட போட்டியும் மரதன் ஓட்டப்போட்டியும் இன்று காலை நடத்தப்பட்டன.

 

 

52 மைல் தூர சைக்கி ஓட்ட போட்டியும் 10 மைல் தூர மரதன் ஓட்டப் போட்டியும் இதன்போது நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலய முன்றலில் ஆலய பங்குத் தந்தை அருட்சகோதரர்

வி.அன்னதாஸ் கொடியை அசைத்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

 

ஆலய முன்றலில் ஆரம்பமான சையிக்கிள் ஓட்டப் போட்டி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று மீண்டும் நகரை வந்தடைந்து வாழைச்சேனை வரை சென்று திரும்பியது.

 

17(108).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/62260-2013-03-31-09-00-52.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் செய்திகளை பகிர விரும்புகிறேன். வரும் மாதங்களில் ஸ்கோர் விபரங்களுடன் சந்திப்பேன்.  மேலதிக விபரங்களுக்கு www.btcluk.com இணைய முகவரியினை பார்வையிடவும். நன்றி 

  • தொடங்கியவர்

யாழ்.இளையோர் தடகளப் போட்டிகள் ஆரம்பம்

 

16(153).jpg



யாழ்.மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் இளையோர் தடகள விளையாட்;டுப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

 

 

பாடசாலை மற்றும் விளையாட்டுக்கழகங்களின் 14, 16, 18, 20, 23 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் மேற்படி தடகள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுகின்றனர்.


இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. 

 

இறுதியாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் போட்டிகள், இவ் ஆண்;டே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

15(210).jpg



18(73).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/62870-2013-04-05-04-56-14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.