Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்திய உறவுகளில் தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தாது - டலஸ் அழகப்பெரும!

Featured Replies

இலங்கை இந்திய உறவுகளில் தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தாது - டலஸ் அழகப்பெரும! 

[saturday, 2013-02-09 08:34:12]
dullas%20alahapperuma-290113-seithy-150.

தமிழக அரசியல் வாதிகளின் நடவடிக்கைகளினால் இலங்கை இந்திய உறவு பாதிப்படையாது என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தோ்தல்களில் வெற்றிபெற முடியாத தமிழக அரசியல்வாதிகளினால் தமது அரசியல் இருப்பை நீடித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீர்த்திக்கு எந்த இழுக்கும் ஏற்படப் போவதில்லை, இந்தியாவில் தமிழகத்தின் இனவாத அரசியல்வாதிகள் சிலர் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான உறவில் எவ்விதமான விரிசலும் ஏற்படப் போவதில்லை. தேர்தல்களில் வெற்றிபெற முடியாத தமிழகத்தின் அரசியல்வாதிகள் சிலர் தமது அரசியலிருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இவ்வாறான இனவாத ரீதியான ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

  

தமிழகத்தில் இவ்வாறான இனவாத ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது முதற்தடவையல்ல. கடந்த காலங்களிலும் இவ்வாறு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த நடவடிக்கைகள் காரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் எந்தவித விரிசலும் ஏற்படவில்லை இந்தியாவில் தமிழகத்தில் உள்ளதைப் போன்று இலங்கையிலும் சில இனவாதப் பரிவுகள் செயற்பட்டு வருகின்றன. எனவே இது புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=75632&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.