Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வங்கி தாக்குதல் எதிரொலி : யாழ்பாணத்தில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ceylon%20bank.jpg

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கி தாக்கப்பட்டது,  


இதனால் ஆத்திரம் அடைந்த சிங்கள வெறியர்கள் இலங்கை யாழ்பாணத்தில் உள்ள இந்திய தூதர அதிகாரி வீட்டை சூறையாடினார்கள். வீட்டில் இருந்த வீடியோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். 

 
இதுகுறித்து இலங்கை அரசு அதிகாரி கூறும்போது, இந்திய தூதரக அதிகாரி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த சென்றவர்கள் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர், தற்போது, இந்திய தூதரக அதிகாரி வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். 


 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?

[ திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013, 04:48 GMT ] [ தா.அருணாசலம் ]

 

 

சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், தனது பணிகளை முடித்து திரும்பிய துணைத் தூதுவர் மகாலிங்கம், தனது வசிப்பிடம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதை அவதானித்தார்.

அவரது வீட்டில் இருந்த ஒரு வீடியோ பிளேயர், மற்றும் ஒரு தொகைப்பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

இந்தியத் துணைத் தூதுவரின் வீட்டினுள் புகுந்தவர்கள் அங்கு தேடுதல் நடத்தியிருப்பதை உணரமுடிவதாக, அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளும், படுக்கை விரிப்புகளும் கூட கலைத்துப் போடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எதையோ அவர்கள் தேடிவந்திருக்க வேண்டும் என்று தோன்றுவதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் இருந்த அச்சுறுத்தல் சம்பவங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிறிலங்கா ஆயுதப்படைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணைத் தூதுவர் மகாலிங்கம் தூதரகத்தில் பணியில் இருந்தபோது, பட்டப்பகலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்பற ஜன்னல் வழியாக நுழைந்தே அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.

எனினும், இந்தச் சம்பவத்தை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி நிராகரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அது குறித்து எத்தகைய முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130211107762

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.