Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வலயங்கள் படைகளுக்கே உரியது; அடித்துக் கூறினார் யாழ்.படைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாதுகாப்பு வலயங்கள் படைகளுக்கே உரியது; அடித்துக் கூறினார் யாழ்.படைத் தளபதி
 
வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் பிரதேசங்கள் படைகளுக்குரியவை. அந்தப் பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டா. அவற்றைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு நேற்று அடித்துக் கூறினார் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. யாழ்.நகரிலுள்ள சிவில் நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
பலாலியில் படையினரால் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
 
இராணுவத்தால் விடுவிக்கச் சாத்தியமான நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டே வருகிறன. பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது எமது முகாம்களை பின்நகர்த்தியுள்ளோம்.
 
ஆனால் பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய பிரதசங்களில்தான் பிரச்சினை. ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பிரிகேட்டுக்கள் பலாலிக்குள் இப்போது உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இதனால் இராணுவ முகாம்கள் அமைப்பதற்குக் காணிகள் தேவைப்படுகின்றன. இதற்காக நாங்கள் மேற்படி பிரதேசங்களைச் சுவீகரிக்க வேண்டிய தேவையுள்ளது.
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பனவற்றை விஸ்தரிப்புச் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பலாலி விமான நிலையத்தைச் சுற்றி சிறிய முகாம்கள் அமைக்க முடியாது. விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை முன்னர் இருந்தது. 
 
எனவே அவற்றைக் கருத்திற் கொண்டு பெரிய முகாம்களை அமைக்க வேண்டிய பாதுகாப்புத் தேவை இருக்கின்றது. விமான நிலைய விஸ்தரிப்புக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படுவது பலாலியில் மட்டும் நடக்கவில்லை. கொழும்பு கட்டுநாயக்காவிலும் நடந்ததுதான்.
 
நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தற்போதையை பெறுமதிக்கு ஏற்ப காணிகளுக்குரிய நஷ்டஈட்டை வழங்கியே அவற்றைச் சுவீகரிக்கிறோம்.
 
இராணுவத்தினரால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களே சுவீகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.
 
12 பெப்ரவரி 2013, செவ்வாய் 8:35 மு.ப

கட்டுநாயக்கா விமான நிலைய பாதுகாப்பு வேலி ஓடுபாதையிலிருந்து 50 முதல் 200 m தூரத்துக்குள்ளேயே  உள்ளது. மக்கள் குடியிருப்புக்கள்  பாதுகாப்பு வேலியிலிருந்து 50 m தொலைவில் உள்ளன. அங்குள்ள சிங்களவரின் வீடுகள் அருகில் சிங்கள இராணுவமே உள்ளது.

எனவே சிங்களப் பயங்கரவாதி ஹத்துருசிங்க ஒப்பிடுவதானால் பொருத்தமாக ஒப்பிட வேண்டும். இங்கும் தமிழ் இராணுவம் இருந்தால் பிரச்சினை இருக்காது. மேலும் 50 முதல் 200 m தூரத்துக்குள்ளேயே பாதுகாப்பு வேலி அமைக்கப்படுமானால் - இப்போது சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காணிகளில் 80 % ஆனவற்றை விடுவிக்க வேண்டியிருக்கும்



மேலும் இலங்கை முழுவதும் தமிழருக்கே சொந்தம். எனவே கடந்தகால நிகழ்வுகளில் அடிப்படையில், வந்தேறு குடிகளான சிங்கள கயவர்கள்  அனைவரதும் காணிகள் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பூனை இல்லா இடத்தில் சுண்டெலி முளத்துக்கு முளம் வளை கட்டி விளையாடத்தான் செய்யும்..!

 

இந்த பாதுகாப்பு வலயங்கள் பற்றி புலிகள் பேச்சு வார்த்தைகளில் முன்னுரிமை கொடுக்கேக்க எங்கட மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் என்ன சொன்னவை தெரியுமோ.. எத்தனையோ விசயம் கிடக்குது.. இவைக்கு இதுதானா முக்கியம். இவைக்கு பேச விருப்பமில்லை.. காலம் கடத்தினம் என்று. அதுமட்டுமல்ல... இவை போராட வெளிக்கிட்டதாலும்.. இருக்கிறதாலும்.. தான் அது.. இருக்குது என்று. இப்ப.. என்ன சொல்லப் போகினம்...???! புலம்பெயர் மக்கள் போராடிற படியால் தான் அங்க பாதுகாப்பு வலயம் இருக்கென்று சொல்லுவினமாக்கும்..???!  கோத்த பாய அடி எடுத்துக் கொடுத்திருக்கிறாரில்ல....! :(:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.