Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை 'வளைத்துப் போட' சம்பூர் திட்டத்துக்கு அனுமதி? – அலரிமாளிகை சந்திப்பில் முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India-srilanka-flag.jpg

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக, சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து, அலரி மாளிகையில் நேற்று நடந்த அவசர கூட்டம் ஒன்றில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மின்சக்தி அமைச்சின் செயலர் எம்.எம்.சி. பேர்டினான்டோ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

சம்பூரில் இந்தியாவுடன் இணைந்து அனல்மின் நிலையத்தை அமைக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் 2011ம் ஆண்டு கையெழுத்திட்ட போதும், இந்தத் திட்டம் இன்னமும் ஆரம்பித்து வைக்கப்படவில்லை. 

பல்வேறு காரணங்களைக் கூறி சிறிலங்கா அரசாங்கமே இதனை இழுத்தடித்து வந்தது. 

சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா முட்டுக்கட்டை போடுவது புதுடெல்லிக்கு கடுப்பேற்றியுள்ளது. 

இந்த விவகாரம் வரும் ஜெனிவா கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியாவைச் செயற்படத் தூண்டலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதால், இந்த விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிப்பது குறித்து அலரி மாளிகையில் ஆராயப்பட்டுள்ளது. 

இந்திய - சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த சம்பூர் அனல்மின் திட்டத்தை இனிமேலும் தாமதமின்றி வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அதேவேளை, இந்திய நிறுவனத்தின் தற்போதைய உடன்பாட்டு வரைபுக்கு இணங்குவதால் சிறிலங்காவுக்கு பாரிய பொருளாதார நட்டம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள போதும், ஜெனிவாவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனிடையே, சம்பூர் அனல்மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டால், சிறிலங்காவுக்கு ஆண்டுக்கு 10 தொடக்கம் 14 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்படும் என்று மின்சக்தித்துறை சார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உற்பத்தியாகும், மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அலகு ஒன்றுக்கு 13 ரூபா வழங்குவதே அதிகமானது. 

இந்தநிலையில், சம்பூரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு அலகு ஒன்றுக்கு 18 ரூபாவை வழங்குவது அதிகமானது. 

நுரைச்சோலை அனல்மின் திட்டத்தின் இரண்டாவது,மூன்றாவது கட்ட விரிவாக்கப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சம்பூரில் அனல் மின்நிலையம் தேவையற்றது என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

இளிச்சவாய் இந்தியன் ஏமாந்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் என்றும் கதைத்தார்கள். இங்கே கூடங்குளம்.. அங்கே சம்பூர்.. கிறிட்களை (கடலுக்குள்ளால்) இலங்கைத் தீவுடன் இணைத்துவிட்டால், பின்னர் இலங்கை வாலாட்ட முடியாது. தன்னை அறியாமலே இலங்கை இந்தியாவின் தாளத்திற்கு நடனமாட வேண்டி வந்துவிடும்.

 

அதனால்தான் இலங்கை பிடி கொடுக்குதில்லை.

 

மறுவளமாக தமிழ்நாடும் பாதிக்கப்படும். ஏனென்றால் சம்பூரில் இருந்தும் தமிழகத்திற்கு மின்சாரம் போகும். உற்பத்தி ஏற்ற இறக்கத்தை வைத்து யார் யாரிடம் பெறுகிறார் என்பது மில்லி செக்கன் கணக்கில் நிர்ணயிக்கப்படும்.

 

ஆனால் தமிழ்நாடு இதைவிட பாதிப்படைய வாய்ப்பில்லை.. ஏற்கனவே ஒருநாளுக்கு இரண்டு மணிநேர மின்சாரம்தான் கிடைக்கிறதாம்.. :rolleyes: அதைப்போல கூடங்குளத்தின் மின்சார உற்பத்தியைக் கணக்கிடும்போது சம்பூர் பெரிதல்ல. இதுதான் இந்தியாவின் பலே திட்டம்.. :D

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.