Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது தாக்குதல்

Featured Replies

உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

 

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க கலந்து கொண்டு வெளியேறியதன் பின்னரே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58959-2013-02-15-06-05-30.html

இந்திய போலி ஜனநாயக அரச காட்டுமிராண்டிகளின் ஆதரவுடன் சிங்கள அரச - இராணுவ பயங்கரவாதத்தின் அதி உச்ச காட்டுமிராண்டித் தனம் இந்தத் தாக்குதல்.

  • தொடங்கியவர்

வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் அட்டகாசம்;

தொடர்கிறது போராட்டம்


வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நுழைந்து ஊடகவியலாளர்களின்  கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=729651839215300099



வடக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

 

வலி. வடக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இனந்தெரியாதோர் தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்.தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இன்று காலை இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்துக்கு வந்த இனந்தெரியாதோர் அடித்து தாக்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளையும் கிழித்தெறிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3041



15(140).jpg



11(667).jpg



2013-02-15%2009_30_28.jpg



2013-02-15%2009_30_37.jpg

  • தொடங்கியவர்

யாழில் எதிர்க்கட்சித் தலைவர் உரையின் பின்னர் தாக்குதல்

 

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்று காலை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அவ்விடத்தை விட்டு சென்றதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இச் சம்பவத்தில் உதயன் பத்திரிகையின் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது கமெராவையும் இனந்தெரியாத நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர்.


இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3042

  • தொடங்கியவர்

உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் அட்டகாசம்; உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவும் உடைப்பு


வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நுழைந்து ஊடகவியலாளர்களின்  கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

 

வலி.வடக்கில் தமது நிலங்களை விடுமாறு கோரி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் போது போராட்ட இடத்திற்குள் நுழைந்த இராணுவ சீருடை அணிந்தவர்கள் உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் கமராவையும் பறித்து சென்றுள்ளனர்.


அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் போராட்டம் முற்றுப்பெறாது தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

 

எனினும் சில மணித்தியாலங்களில் அவர் வெளியேறியதும் போராட்ட இடத்தில் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் கலந்து கொண்டிருந்த மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு தாக்கியுள்ளனர்.  மக்கள் குறித்த நபர்களைப் பிடித்து காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.


எனினும் அவர்கள் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டதனையடுத்து இராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

 

அதனையடுத்து போட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவ சீருடையுடன் நுழைந்தவர்கள்  உதயன் இணையத்தள ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் அதனையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

சம்பவத்தினையடுத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தினை மேற்கொண்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=654211839315156219

  • தொடங்கியவர்

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்கினர் : சரவணபவன் எம்.பி. குற்றச்சாட்டு

 

உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் 'எல்லாம் முடிஞ்சது போ.. போ" எனக் கூறிய வண்ணம் வந்தனர்.

 

 

எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர்.


அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர்.

 

இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சரவணபவன் எம்.பி..


இச்சம்பவத்தில் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நடராஜா மதியழகன், வலி. தென்மேற்கு பிரதேச சபை தலைவர் எஸ்.ஜெபநேசன் ஆகிய இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3043

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சரவணபவன் எம்.பி..

தமிழன் செய்தால் பயங்கரவாதம்.....அவர்கள் செய்தால் ஜனநாயகம்

ஆசியாவின் அதிசயம் - சிறீ லங்கா  

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.