Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை

ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சுமார் 85 சதவீதமான சிங்கள் வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அச்சபை வலியுறுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=3053

ஹலால் உணவு வகைகளை அந்த முத்திரை இல்லாமல் விற்க முடியும் என்கிறது சிங்களம்.
ஆனால் அதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. காரணம் எவ்வாறு அந்த உணவு ஹலாலா இல்லையா என நுகர்வோருக்கு தெரியும்? முத்திரை வேண்டும்தானே? மேற்குலக நாடுகளிலேயே அவ்வாறு தான் அனுமதிக்கப்படுகின்றது.
 
இந்த பணம், ஹலால் விற்று வரும் பணம், வேறு ஏதாவது நோக்கங்களுக்கு பயன்படும் என்றால் அதை வேறு விதமாக அணுகுவதுவது தான் நியாயமாக தெரிகின்றது.

கலால் என்பது சுகாதார முத்திரை அல்ல. அதன் இருப்பை நுகர்வோரும், விநியோகஸ்தரும் தீர்மானிக்க வேண்டும். அதை தடுக்கவோ, நிறைவேற்றவோ அரச சட்டங்கள் முயல கூடாது.

cartoon.jpg

ஹலால் முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் எனக்கு உடன்பாடில்லை.

 

இதை எல்லோர் மீதும் திணிப்பதை அனுமதிக்க முடியாது. மிருகங்கள் மனிதாபிமான முறையில் கொல்லப்படல் வேண்டும்.

 

இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய உணவகங்களில் இதை விற்றால் பிரச்சனை இல்லை. 

 

அதெப்படி எல்லா இறைச்சி உணவுக்கும் இந்த சான்றிதழ் இருக்கவேண்டும் என்று கேட்பது.

 

 

ஹலால் என்பது மிருகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் பொருந்தும், அதில் மருந்துகளும், அழகு சாதன பொருட்களும் கூட அடங்கும்.

 

ஹலால் என்பது ஊடாக இஸ்லாமிய முறைப்படி தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் முறை.

 

"Halal" is an Arabic word meaning "lawful" or "permissible", and the term not only covers food and drink, but also to all matters of daily life. When it comes to halal food, most people think of meat foods only. However, Muslims must ensure that all foods, particularly processed foods, pharmaceuticals, and non-food items like cosmetics, are also halal. Frequently, these products contain animal by-products or other ingredients that are not permissible for Muslims to eat or use on their bodies.

 

http://en.wikipedia.org/wiki/Halal

இந்த ஹலால் அதை நம்புரவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப் படவேண்டும். 

 

இதை முநேடுக்கும் புதுபால சேனா சங்கத்துக்கு எனது ஆதரவு என்றும் இருக்கும்.

குருணாகலில் முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

 

குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சதார் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் 1983ஆம் ஆண்டைப் போன்று வன்முறைகள் வெடிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3079

குருணாகலில் முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

 

குருணாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சதார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் 1983ஆம் ஆண்டைப் போன்று வன்முறைகள் வெடிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3079

எப்பிடியோ கிழக்கு மாகாணத்தில் பேச கக்கீமுக்கும் எதையாவது தயார் செய்த்துவைக்கத்தானே வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

 

முஸ்லிம்களுக்கு எதிராக வாரியப்பொலவில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.

 

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாரியபொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பீ நாவின்னவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி கைவிடப்பட்டுள்ளது.

 

ஹலால் தொடர்பாக வாரியப்பொல நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்எம். பௌசியியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர் ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் வாரியப்பொல அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ். பீ. நாவின்னவுக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அறிவித்தார்.

 

இதனையடுத்து வாரியப்பொல நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள், வாரியப்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிங்கள வர்;த்தக சங்க உறுப்பினர்கள், வாரியப்பொல பிரதேச சபையின் தவிசாளர் ஆனந்த, வாரியப்பொல நகரிலுள்ள பிரதான விஹாரைகளின் விஹராதிபதிகள் உள்ளிட்ட பலரை அழைத்து சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன விசேட கடந்த சனிக்கிழமை கூட்டமொன்றை நடத்தினார்.

 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் நாவின்ன,

 

"ஹலால் சம்மந்தமான பிரச்சினை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தோடு முடிந்து விட்டது. ஹலால் சான்றிதழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் முஸ்லிம்களுடைய தூய உணவுப் பொருட்களாக அடையாளப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

 

இதற்காக எதிராக செயற்படுவோர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடந்தையாகவுள்ள நான்கு வர்;த்தகர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறான  மோசமான காரியங்களைச் செய்யத் தூண்டி முழு சிங்கள மக்களுக்கும் அவப்பேற்றை ஏற்படுத்திவிட வேண்டாம். இந்த வாரியப்பொல நகரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்குமானால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்" என்றார்.


அத்துடன், குருநாகல் மாவட்டப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு நலன்குறித்து  நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.இதனை அடுத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தின்  தடை உத்தரவு கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

 

இந்தச் சம்பவம் தொடாபாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தாரும் சிரேஷ்ட அமைச்சருக்கு தெரியப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.


இதேவேளை, வெளி இடங்களிலிருந்து இரண்டு வாகனங்களில் வந்த குழுவினர் நாரமல்ல பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள முயற்சித்தனர். எனினும் பாதுகாப்பு படையினரும் குறித்த பிரதேச மக்களும் பௌத்த மதகுமாரும் அனுமதிக்கவில்லை.

 

இதனால் துண்டுபிரசுரமொன்றை விநியோகித்துவிட்டு, ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தவர்களுக்கு ஏசிவிட்டு சென்றுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/59068-2013-02-17-07-59-11.html

Edited by akootha

ஹலால் தொடர்பிலான குழு செவ்வாய்க்கிழமை கூடும்

 

சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஹலால் தொடர்பிலான குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.

 

 

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் சலக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் ஹலால் தொடர்பில் விரிவாக கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்காக அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளது.

 

இதேவேளை ஹலால் தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இந்த விசேட கூட்டமும் செவ்வாய்க்கிழமையே நடைபெறவிருக்கின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59077-2013-02-17-09-51-47.html

சிங்கள தேசமொன்றில் சிங்கள மக்களின் விருப்பத்துக்கு இடமில்லையா? அய்யகோ... இதை கேட்டாக சிங்கள பவுத்த பிக்குகள கூட இல்லையா? 

 

எல்லா பிக்கு மொட்டை மண்டைகளும் ஹலால் தின்னவேண்டியதுதான? 

வரும் ஐ.நா. மனித உரிமை தொடரில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவை தக்கவைக்க சிங்களம் முயலுகின்றது. அதற்கு இந்த ஹலால் ஆதரவு இருக்கும். அது முடிய ... எதுவும் நடக்கலாம்.

மருதானையில் கக்கீம் போட்ட தானத்தின் சுவை புத்தமத்ததின் பரம்பரிய பண்புகளின் கண்களை மூடிவிட்டது. நாங்களும் அப்படி ஒரு தானம் போட்டிருந்தால் மொட்டைகளின் சப்போட்டை பேற்றிருக்கலாம?

மருதானையில் கக்கீம் போட்ட தானத்தின் சுவை புத்தமத்ததின் பரம்பரிய பண்புகளின் கண்களை மூடிவிட்டது. நாங்களும் அப்படி ஒரு தானம் போட்டிருந்தால் மொட்டைகளின் சப்போட்டை பேற்றிருக்கலாம?

 

இல்லை என்றே எண்ணுகிறேன்.

 

காரணம் முஸ்லீம் மக்களுக்கு இங்கே ஆதரவு இல்லை, சில முஸ்லீம் 'தலைவர்களுக்கே' ஆதரவு. அதேபோன்று சிங்கள அமைச்சரவையில் டக்ளசும் கருணாவும் உள்ளனர்.

ஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா

 

H02(48).jpg



H04(15).jpg



H03(27).jpg

cartoon-of-the-day--19-2-2013-600-1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.