Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த பொதுக் கூட்டத்தை நடத்த பொலிஸார் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், அதன் பின்னணி தொடர்பில் காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை

நடத்தப்படவிருந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாட்டில் சில பேரினஜாதக் குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சித்து இன முரண்பாடொன்றை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.

இந்த இனவாதக் குழுவின் பின்னணி என்ன? இந்தக் குழு முஸ்லிம்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்? முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகளா? பள்ளிவாசல்களில் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றனவா? ஹலால் சான்றிதழ் ஏன் எதற்கு? அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை விமர்சிக்க இந்தக்குழுவுக்கு யோக்கியதை இருக்கின்றதா? ஊடக பலத்தினால் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் இந்த காவிப்பயங்கரவாதிகளின் அனைத்து வாதங்களையும் அலசும் அறிவார்ந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையிலேயே பொலிஸார் தலையிட்டு இடைநிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி தேசிய தப்ஹீத் ஜமா அத் அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.ஸஹ்றான் மௌலவியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்நிகழ்வை நிறுத்தியதற்கு காத்தான்குடியிலுள்ள பொது நிறுவனங்ளோ அல்லது அமைப்புகளோ காரணம் அல்ல, காத்தான்குடியிலுள்ள சிறு குழுவினர் விரும்பாததால் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஏற்கனவே நிகழ்வு தொடர்பில் முறையாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் அனுமதி எடுத்திருந்தோம். ஆனாலும் இதைப் பொலிஸார் நடத்த விடவில்லை. காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் தொலைபேசி மூலமும் ஸ்தலத்திற்கு வருகை தந்தும் பொலிஸாருடன் பேசியும் இந்தக்கூட்டத்தை நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வு பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல. கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் பொதுபல சேனா போன்ற சில பேரினவாதக்குழுக்கள் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன விரிசலை ஏற்படுத்த முனைகின்றன. அது தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காகவும் இஸ்லாத்தில் ஹலால் ஏன் ஏதற்காக? என்பதை விளக்குவதற்குமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே தவிர, பிரச்சினைகளை உருவாக்கும் நோக்கமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நிகழ்வுக்கு மக்கள் வருகை தந்திருந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2729:2013-02-17-19-05-53&catid=54:local&Itemid=458

கூட்டத்தை கூட்டை பயங்கரவாதத்தை விதைக்க முனைந்த அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டு விசாரிக்கப் படவேண்டும்.

பயங்கரவாத தடை சட்டம் என்பது முதன்மையாக தமிழர்களை அழிக்க மட்டுமே பாவிக்கப்படும் கருவி.

 

நேற்றும் மூன்று தமிழர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதானார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.