Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்!

இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன ?

அனுஜா 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவலோகநாதன் என்பவரை மணம் முடித்துள்ளார். அப்போது அனுஜாவுக்கு 21 வயதும் சிவலோகநாதனுக்கு 27 வயதுமாக இருந்தது.

பெண் வீட்டார் சுமார் 50,000 ஆயிரம் கனேடிய டொலர்களை செலவு செய்து இத் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதற்கு முன்னதாக அனுஜாவுக்கு இந்த சிவலோகநாதன் யார் என்றே தெரியாது.

திருமணமாகி முதல் மாதத்திலேயே வீட்டின் வாடகை கட்டவில்லை என்ற காரணத்தால், வீட்டை இழந்த சிவலோகநாதன், அனுஜாவின் பெற்றோர் வீட்டின் கீழ் பகுதியில் குடிபுகுந்துள்ளார்கள்.

அடிக்கடி கோபப்படும் சிவலோகநாதன், அனுஜாவை பார்த்துப் பாராமல் அடிப்பது வழக்கம். கன்னத்தில், தலையில் மற்றும் முதுகுப் பகுதியில், இவர் அனுஜாவைத் தாக்கியுள்ளார்.

ஒரு சமயம் பாக்சிங் அடிப்பது போல அனுஜாவின் முகத்தில் கைகளால் குத்தி காயப்படுத்தியுள்ளார். நிலத்தில் வீழ்ந்த அனுஜாவின் தலைமுடியை பிடித்து அவரை தூக்கி மீண்டும் தாக்கியுள்ளார்.

இதனால் பொலிசார் இப் பிரச்சனையில் தலையிடவேண்டி வந்தது. சுமார் 3 தடவை பொலிசார் சிவலோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

ஆனால் அவர் திருந்தியபாடாக இல்லை. ஒவ்வொரு முறையும் பொலிசார் சிறையில் அடைக்கும்போது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அயலவர்கள் அட்வைஸ் பண்ணுவார்களாம்.

இதனால் மனமிரங்கிய அனுஜா, தானே சென்று அவர்மேல் உள்ள குற்றங்களை எல்லாம், நிராகரித்து அவரை பலதடவை சிறையில் இருந்து விடுவித்துள்ளார்.

இருப்பினும் அவர் இறுதியாகக் கைதுசெய்யப்பட்ட வேளை, அவர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை. இதேவேளை அவர் மீது தாம் எந்தக் குற்றத்தையும் சுமத்த விரும்பவில்லை என்று அனுஜா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்ட நபர் மறுத்தால் கூட குற்றவாளியை நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுக்கவே கனேடியப் பொலிசார் விரும்பியுள்ளார்கள்.

இதனை அனுஜா ஆட்சேபித்தும் உள்ளார். இந் நிலையில் சில தினங்களுக்கு முன்னர், பெற்றோர் வீட்டின் கீழ்ப் பகுதியில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அனுஜா சடலமாக காணப்பட்டுள்ளார். பிணையில் வெளியே வந்த, கணவர் சிவலோகநாதன் அனுஜாவை கொலைசெய்துள்ளார்.

கழுத்தை வெட்ட பாவிக்கப்பட்ட கத்தி முதல் அனைத்து தடயங்களையும் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார். சிவலோகநாதனே இக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 28 வயதாகும் இச் சந்தேக நபர் தற்போது கனேடியப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எல்லாத் திருமணங்களும் இவ்வாறு முடிவதில்லை! ஆனால் திருமணம் என்று வரும்போது தமக்கு பிடித்த, அல்லது நன்கு தெரிந்த ஒருவரை எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பது நல்லதல்லவா?

யார் என்றே தெரியாத நபர் ஒருவரை திடீரென்று எவ்வாறு மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறீர்கள்?

முன் பின் தெரியாத நபர் ஒருவரை நம்பி 21 வருடம் அன்பாக வளர்த்த பெண் பிள்ளையை எவ்வாறு அனுப்பிவைக்கிறீர்கள்.

அனுஜாவுக்கு நடந்த கொடுமை இனியும் ஈழத் தமிழர் மத்தியில் தொடரக்கூடாது. தமிழ் பெற்றோர்கள் இதனை ஒரு முன்னுதாரணமாக எடுப்பது நல்லதல்லவா ?

நன்றி – வல்லவன்

 

மூலம்: http://www.vannionline.com/2013/02/blog-post_7427.html

 

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது எமது பெற்றோர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டும் இல்லது இன்றைய இளைய தலைமுறை தங்கள் மனதுக்கு பிடித்தவரை தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கருதினால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கட்டிக்கணும்......

தங்கள் கணவர் கொடுமை படுத்துவதாக நினைத்தால் எமது பெண்கள் இந்த செண்டிமெண்ட் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு சட்ட உதவியை நாட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காதலிச்சா மட்டும் ஏதோ சுத்த பத்தமா வாழ்ந்திடுவினமாக்கும். அங்கும் அடி... தடி... கொலை.. விவாகரத்து.. விட்டிட்டு ஓடுதல்.. கொண்டு ஓடுதல்....திருமணத்திற்கு முன்னான.. பின்னான.. பலருடனான... பாலுறவுகள்....இப்படின்னு போய்க்கிட்டு இருக்குது...!

 

பிரச்சனை.. கலியாணத்திலோ.. காதலிலோ இல்லை. பிரச்சனை சமூக அமைப்பில்.. சமூக அறிவூட்டம் சார்ந்து.. உள்ளது.

 

எமது சமூகம் இன்னும் சரியாக சமூக அறிவூட்டம் பெறவில்லை என்பதையே இந்தச் சம்பவங்கள் இனங்காட்டுகின்றன..! :icon_idea:

காதல் கல்யாண‌த்தின் கொடுமை

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெற்றோரும் தமது குழந்தைகளின், நல்வாழ்வுக்காகவே, திருமணங்களில் அதீத கவனங்கள் எடுக்கிறார்கள். ஆனால், சில வேளைகளில், சரியான 'முன் விசாரிப்புகள்' செய்ய முடியாமல் போகின்றது. தாய், தகப்பனின் வாழ்க்கை முறையை வைத்து, பிள்ளைகளின் குணங்களை எதிர்வு கூறவும் முற்படுகின்றார்கள்! ஆனால், நாட்டு நிலைமைகள், இடம்பெயர்வுகள் என்பவை எமது பழக்க வழக்கங்களையும், நல்ல குணாதிசயங்களையும் மாற்றி விடுகின்றது. இயல்பு வாழ்வுக்குக் திரும்பும்வரை, நாம் இன்னும் பலவற்றை இழந்து போவம்!

 

எந்தப் பெற்றோரும், திருமணங்களில் தாலியைப் பெண்ணின் கழுத்தில் கட்டுவதில்லை. பிள்ளையைத் தானே கட்டவிடுகின்றார்கள்? பெண்ணின் பெற்றோரும் தலையைக் குனிந்து தாலியை ஏற்பதில்லை! பெண் தானே தலையைக் கொடுக்கிறாள்!

 

வெறும் சம்பிரதாயக் கலியாணம் எனினும், பிள்ளைகளுக்கும் சுதந்திரம் இருக்கின்றது! அதற்காகச் சம்பிரதாயக் கலியாணங்களைப் பழிப்பது, அழகல்ல!

 

எனது திருமணம் சம்பிரதாயத் திருமணம் தான்!  மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறோம்! :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.