Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின்

Featured Replies

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 25 யுூன் 2006 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யுூ தெரிவித்துள்ளார். லீ குவான் யுூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நு}லிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்புூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நு}லின் தலைப்பாகும். "ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களான ஹவான் பூக் குவாஸ் வாரன பெர்னாண்டஸ் மற்றும் சுமிகேரான் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நு}லின் லீ குவான் யுூவின் வாழ்வை வழிப்படுத்திய நிகழ்வுகள் பற்றியும் அவர் சிங்கப்புூரை ஆண்ட விதம் பற்றியும் அவர் அளித்த செவ்விகள் அடங்கியுள்ளன. அந்த நு}லில் சிறிலங்காவைப்பற்றி இப்படித்தான் லீ குவான் யுூ கூறியிருக்கிறார்: எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான்; ஆகவேண்டும். நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள். அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம். பழைய பிலிப்பைன்ஸ், பழைய இலங்கை, பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் பலநாடுகளைப் பாருங்கள். இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் நான் போயிருக்கிறேன். 1956ம் ஆண்டில் முதன்முதலாக கொழும்புக்குச் சென்றிருந்தபோது அது சிங்கப்புூரை விடச்சிறப்பான நகரமாக இருந்தது. சிங்கப்புூர் மூன்றரை வருடகாலம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குக்கீழ் இருந்ததும் கொழும்பானது மவுண்ட் பேட்டனுடைய தென்கிழக்காசிய கட்டளைப்பீடத்தின் மையமாக அல்லது தலைமையகமாக இருந்ததும்தான் அதற்குக் காரணமாகும். அவர்களிடம் ஸ்ரேலிங் பவுண்களில் சேமிப்புகள் இருந்தன. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன.

கல்வியுூட்டப்பட்ட திறமைசாலிகள் இருந்தனர். அமெரிக்க மிதவாதிகளும் பிரித்தானிய மிதவாதிகளும் சொல்வதை நீங்கள் நம்புவதானால் அவர்கள் செழித்தோங்கியிருக்கவேண்டும

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.

- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ

சிங்கப்புூர் மலேசியாவில் இருந்து பிரிந்து

ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை

நான் (லீ குவான் யுூ) முன்வைத்தேன்.

"இல்லை வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்"

என்று அவர் (துங்கு அப்துல் ரஹ்மான்) சொன்னார்.

பலவீனமான தலைவர்களையும்

தவறான தலைவர்களையும் கொண்டிருந்ததாலேயே

அவர்கள் (சிறிலங்கா மக்கள்) வெற்றிபெறத்தவறிவிட்டார்கள்.

எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள்.

அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம்.

"இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது"

- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ

உலகமே வியக்கும் ஒரு அழகிய தேசத்தை மட்டுமல்ல

வெற்று தேசத்தை வெற்றி தேசமாக்கிய

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ அவர்களது

சாதாரண வார்த்தைகள் அல்ல இவை

அவரது மன உணர்வுகளாகவே கருதுகிறேன்.

அவரது பேச்சுகளில் வரும் ஒவ்வொரு

சொல்லிலும்

அவரது செயல் வடிவங்களும் இருக்கும்.

இன்னும் காலத்தை விரயமாக்காது

சிந்திப்பார்களா?

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.- சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யுூ

ஞாயிற்றுக்கிழமை 25 யுூன் 2006 ஞானேஸ்வரன்

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் - என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யுூ தெரிவித்துள்ளார்.

லீ குவான் யுூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நுாலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். லீ குவான் யுூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்பது சிங்கப்புூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நுாலின் தலைப்பாகும்.

"ஸ்றெய்ற் ரைம்ஸ்" சஞ்சிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களான ஹவான் பூக் குவாஸ் வாரன பெர்னாண்டஸ் மற்றும் சுமிகேரான் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நுாலின் லீ குவான் யுூவின் வாழ்வை வழிப்படுத்திய நிகழ்வுகள் பற்றியும் அவர் சிங்கப்புூரை ஆண்ட விதம் பற்றியும் அவர் அளித்த செவ்விகள் அடங்கியுள்ளன. அந்த நுாலில் சிறிலங்காவைப்பற்றி இப்படித்தான் லீ குவான் யுூ கூறியிருக்கிறார்:

எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான்; ஆகவேண்டும். நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள். அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம்.

பழைய பிலிப்பைன்ஸ், பழைய இலங்கை, பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் பலநாடுகளைப் பாருங்கள். இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் நான் போயிருக்கிறேன். 1956ம் ஆண்டில் முதன்முதலாக கொழும்புக்குச் சென்றிருந்தபோது அது சிங்கப்புூரை விடச்சிறப்பான நகரமாக இருந்தது.

சிங்கப்புூர் மூன்றரை வருடகாலம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குக்கீழ் இருந்ததும் கொழும்பானது மவுண்ட் பேட்டனுடைய தென்கிழக்காசிய கட்டளைப்பீடத்தின் மையமாக அல்லது தலைமையகமாக இருந்ததும்தான் அதற்குக் காரணமாகும். அவர்களிடம் ஸ்ரேலிங் பவுண்களில் சேமிப்புகள் இருந்தன. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன.

கல்வியுூட்டப்பட்ட திறமைசாலிகள் இருந்தனர். அமெரிக்க மிதவாதிகளும் பிரித்தானிய மிதவாதிகளும் சொல்வதை நீங்கள் நம்புவதானால் அவர்கள் செழித்தோங்கியிருக்கவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

செயல்முனைப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட இந்த தமிழ் சிறுபான்மையினர் கடுமையாக உழைத்தார்கள்.

எங்களை என்னும் பார்க்கவில்லை போலிருக்கின்றது! :roll: :roll:

எங்களை என்னும் பார்க்கவில்லை போலிருக்கின்றது! :roll: :roll:

லீ குவான்யூ அவர்களது வலது கரமே

இலங்கை (யாழ்பாண) தமிழரான ராஜரத்தினம்தானே!

யாழ்பாணத் தமிழர் என்று அஜீவன் பிரதேசதவாதத்தை கிளப்பிறார். ஆனா சனம் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று அமெரிக்காவிலை மாலை மரியாதை எல்லாம் குடுக்குது.

இதை யாரிட்டை சொல்லி அழ? :cry:

யாழ்பாணத் தமிழர் என்று அஜீவன் பிரதேசதவாதத்தை கிளப்பிறார். ஆனா சனம் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று அமெரிக்காவிலை மாலை மரியாதை எல்லாம் குடுக்குது.

இதை யாரிட்டை சொல்லி அழ? :cry:

குறுக்ஸ்

இங்கயாவது அழக் கிடச்சுதே?

சந்தோசப்படுங்க........

யாழ்பாணத்தில பிறந்தவர் ஒருவரை

நான் எப்படி கொழும்பில பிறந்தவர் என்று சொல்லுறது?

இதில என்ன பிரதேசவாதம் குறுக்ஸ்?

SRajaratnam.jpg

S. Rajaratnam was born in 1915 in Jaffna, Ceylon (now Sri Lanka) and

was raised in Seremban, Malaysia,

where his father rose from being a supervisor of rubber estates to a plantation owner.

Rajaratnam met Lee Kuan Yew by chance

at the Chinese Swimming Club.

S. Rajaratnam is recognised and recognises himself

as the theoretician and ideologue of the People's Action Party. In his own words,

"the ideas man," "a public relations man… who projects the PAP image."

http://www.viweb.freehosting.net/SRajaratnam.htm

பிறந்த இடத்தை லீகுவான்யூ அவர்களே ஒரு நிகழ்வின் போது குறிப்பிட்டுச் சொன்னார்.

அது 1982 அல்லது 1983 என நினைவு.............

rajaratnam2.jpg

இராஜரட்ணம் & லீ குவான்யூ

இராஜரட்ணம் அவர்களை

லீ குவான்யூ அவர்கள் பல முறை சிங்கப்பூரின் ஜனாதிபதியாக்க முயற்றாலும்

இவர் அதை விரும்பவேயில்லை.

யாழ்பாணத் தமிழர் என்று அஜீவன் பிரதேசதவாதத்தை கிளப்பிறார். ஆனா சனம் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று அமெரிக்காவிலை மாலை மரியாதை எல்லாம் குடுக்குது.

இதை யாரிட்டை சொல்லி அழ? :cry:

தலையை கொண்டுபோய் - சுவரில அடிச்சு - யாரிட்டையும் சொல்லாம - நீங்களே அழுங்க!

சிங்கபூர் என்பதே - இடைல உருவாகி - மிக வேகத்தோட வளர்ந்தநாடு - என்பதுதானே - எல்லாரும் அறிந்தது.......

அப்பிடியான நாட்டின் வளர்ச்சியில பங்களித்து இருப்பவங்க - ஒவ்வொரு திசையிலிருந்து வந்து - ஒற்றுமையா- செயற்பட்டாங்க என்னு தானே அர்த்தம் .......

இந்த திசையில் இருந்து இவர் -வந்தார் என்றால் - உடன பிரதேச வாதமா?

அமெரிக்காவை கண்டு பிடிச்சது கொலம்பஸ் என்று - இருக்கிறதையும் மாத்த சொல்லுங்க - அமெரிக்காவுக்கு -குறுக்காலபோவான்!

- அதுவும் பிரதேசவாதம் தானே ! 8)

அமெரிக்கால பிறக்காத கொலம்பஸ் - எப்பிடி - அமெரிக்காவை கண்டு பிடிக்கலாம்?

நான் சொல்லல ......உங்க பார்வையில - அது! 8)

மேற்கோள்:

அஜீவன் பிரதேசதவாதத்தை கிளப்பிறார். ஆனா சனம் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று அமெரிக்காவிலை மாலை மரியாதை எல்லாம் குடுக்குது.

இந்த தலைப்பில் வாற விடயங்கள் ...... அதுதான் - லீ குவான்யூ க்கும் - இராஜ ரத்தினத்துக்கும் -

அவர் தன்னோட பட்டறிவில - ஒப்பிட்டு - இன்னொரு நாட்டு பிரச்சினை பத்தி கருத்து சொன்னதுக்கும் -

அஜீவன் அண்ணாக்கு அமெரிக்கால மாலை போட்ட விடயத்தை - நீங்க இங்க இழுக்கிறதுக்கும் - எனி ரீஸன் - இருக்கா ?

சொல்லுங்க - வாசிக்க ஆவலாய் உள்ளோம்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

இது கூடப் புரியவில்லையா? குறுக்ஸ் தன்னையும் கூப்பிட்டு மாலை போட்டு வரவேற்கச் சொல்கின்றார் :wink: :P

இது கூடப் புரியவில்லையா? குறுக்ஸ் தன்னையும் கூப்பிட்டு மாலை போட்டு வரவேற்கச் சொல்கின்றார் :wink: :P

அப்பிடி போடுங்க - ஆட்லறி செல்லை! (அரிவாளை என்று எவ்ளோ காலம்தான் - சொன்னதை திருப்பி சொல்லிகிட்டு இருக்கிறது) 8)

மோகன் அண்ணாட்டை சொல்லி யாழ் களம் சார்பாக குறுக்ஸ் அண்ணாக்கு ஒரு மாலையை போட்டு விடுங்களன் :wink: :P

சிங்கன்புூரைப் பற்றிக் கதைச்சதாலை எனக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது. சொல்லுறன்.

லீ குவான் யுூ இலங்கைக்கு வந்த நேரத்திலை (இருபது வருசத்துக்கு முந்தி) ஜே ஆரிட்டைச் சொன்னாராம்

உங்கடை நாட்டை எனனட்டைத் தாங்கோ இருபது வருசத்திலை ஒரு சிங்கப்புரா மாத்திக் காட்டுறன் எண்டு.

அதுக்கு நரி (JR) சொல்லிச்சுதாம் நீங்கள் சிங்கப்புூரை என்னட்டைத் தாங்கோ நான் ஆறு மாசத்திலை இலங்கையைப் போலை மாத்தித் தாறன் எண்டு

அன்புடன்

மணிவாசகன்

எனக்கு மாலையும் வேண்டாம் மரியாதையும் வேண்டாம். சுத்திப்பாக்க போற போற இடங்களில் பிறீயா தண்ணி சாப்பாடு தங்குமிடவசதி போக்குவரத்து உதவிகள் இருந்த அந்தமாதிரி எல்லோ. அது தான் அஜீவனின் வடஅமெரிக்க அனுபவங்களை எழுதினதை பாத்தவுடனை வயித்தப் பத்தி எரிஞ்சது. :lol:

அப்ப கெதியா பால்/தண்ணியை குடியுங்க குறுக்ஸ் அண்ணா இல்லாட்டி அல்ஸர் வரப்போகுது :wink:

வர்ணன் அண்ண, கொலம்பஸ் எந்த இனத்தவர் என்றதிலும் சில சர்ச்சைகள் இருக்கு.

"கொலம்பஸ் இத்தாலியர் (ஜெனோவா பிரதேசத்தவர்) அமெரிக்காவை கண்டுபிடிச்சவர்" என்று எங்காவது எழுதுவதை கண்டிருக்கிறியளா?

"கொலம்பஸ் இத்தாலியர் அமெரிக்காவை கண்டுபிடிச்சவர்" என்று எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறியளா?

ஏன் ராஜரத்தினம் தமிழீழத்தவர் என்று சொல்லி பெருமைப்படுவதை தவிர்த்து யாழ்ப்பாணத்தவர் என்று சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒட்டுமொத்த தமிழீழத்தின் பெருமையை பறைசாற்ற முயலுங்கள். யாழ்பாணத்தின் பெருமையை அல்ல. அதுவும் முக்கியமாக ஒரு யாழ்பாணத்தவர் இன்னொரு யாழ்பாணத்தவர் அதை செய்தார் இதை செய்தார் என்று சொல்வதை தவிருங்கள். தமிழீழத்தவர் செய்தார் என்று சொல்லுங்கள். தென்தமிழீழத்தவர்கள் வேண்டும் என்றால் அது வடதமிழீழத்து பங்களிப்பு என்று சொல்லட்டும் அதை பெருமையோடு எற்றுக் கொள்ளுங்கள்.

அப்ப கெதியா பால்/தண்ணியை குடியுங்க குறுக்ஸ் அண்ணா இல்லாட்டி அல்ஸர் வரப்போகுது :wink:

:P :( :P

வர்ணன் அண்ண, கொலம்பஸ் எந்த இனத்தவர் என்றதிலும் சில சர்ச்சைகள் இருக்கு.

"கொலம்பஸ் இத்தாலியர் (ஜெனோவா பிரதேசத்தவர்) அமெரிக்காவை கண்டுபிடிச்சவர்" என்று எங்காவது எழுதுவதை கண்டிருக்கிறியளா?

"கொலம்பஸ் இத்தாலியர் அமெரிக்காவை கண்டுபிடிச்சவர்" என்று எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறியளா?

ஏன் ராஜரத்தினம் தமிழீழத்தவர் என்று சொல்லி பெருமைப்படுவதை தவிர்த்து யாழ்ப்பாணத்தவர் என்று சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒட்டுமொத்த தமிழீழத்தின் பெருமையை பறைசாற்ற முயலுங்கள். யாழ்பாணத்தின் பெருமையை அல்ல. அதுவும் முக்கியமாக ஒரு யாழ்பாணத்தவர் இன்னொரு யாழ்பாணத்தவர் அதை செய்தார் இதை செய்தார் என்று சொல்வதை தவிருங்கள். தமிழீழத்தவர் செய்தார் என்று சொல்லுங்கள். தென்தமிழீழத்தவர்கள் வேண்டும் என்றால் அது வடதமிழீழத்து பங்களிப்பு என்று சொல்லட்டும் அதை பெருமையோடு எற்றுக் கொள்ளுங்கள்.

அன்பு குறுக்ஸ்

தமிழீழம் என்ற பேச்சே இங்கு வரவில்லை.

ஆரம்பத்தில் அது ஈழம்

பின்னர்தான் தமிழீழம்.

இராஜரத்தினம் அவர்களைப்பற்றி எழுதியதில்

இந்த குறுகிய வாதமும் பிரதேச வாதமுமல்ல

பிரச்சனை............

இதன் முக்கியமே வேறு........

நான் கூட யாழ்பாணத்தவன் அல்ல.

நான் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவன்.

இல்லாவிட்டால்

என் பிரதேசத்துக்காக நான் பேசுவதாக நீங்கள் கருதுவீர்கள்.

இருந்தாலும் குறிப்பாக இலங்கையரை

நான் சந்தித்து பேசும் போது

தங்களை தாங்கள் வாழும்

இலங்கையின் பகுதியை சொல்லியே அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

இதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.

யாராவது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டால்?

உங்கள் நாட்டைச் சொல்வீர்கள்.

பின்னர் நீங்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டால்?

நீங்கள் உங்கள் நாட்டை மட்டும் சொல்லிக் கொண்டு

பிரதேசத்தை சொல்லாமல்

உங்கள் நாட்டை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால்

நிச்சயம் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள். :P

அந்த முடிவு என்ன முடிவு என்பதை

நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. :P

இல்லாவிடில் நீங்கள் அந்த நாட்டைப் பற்றியே தெரியாதவர்

இவர் பொய் பேசுகிறார் என்றே

கணிப்பிடுவார்கள்.

உங்கள் பிறப்பு சான்றிதழை ஒரு முறை பாருங்கள்.

பெரும் பகுதி :.......................... பிரிவு:.......................

பிறந்த திகதியும் இடமும்: ...........................

பெரும் பகுதி மற்றும் பகுதி என்பதை எல்லாம் தமிழீழம் என்று குறிப்பிட முடியுமா?

இது ஒரு நாட்டிலுள்ள பகுதிகளின்

மக்கள் தொகை கணிப்பீடு சம்பந்தமான பிரச்சனை இது...........

அதன் பின்னரே உங்கள் பெயர் இருக்கும்.

இதைவிட முக்கிய பகுதி

இதுதான்

தாய் அல்லது தந்தையின் இனம் என்ற பகுதி:

அதில்

இலங்கையரை:-

சிங்களவர் - இலங்கை தமிழர் - இந்தியத் தமிழர் - இலங்கை சோனகர்( இஸ்லாமியர்) - இந்திய சோனகர்

பறங்கியர் ( யுரேசியன் ) எனத்தான் குறிப்பிட வேண்டும்.

இதையெல்லாம் உங்களால் மாற்ற முடியுமா...............?

நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்று மட்டும் குறிப்பிட்டால்

அதற்கேற்ற விதத்தில் என் பதிலைத் தரலாம்.

புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

இருந்தாலும்

இராஜரத்தினம் ஐயாவை என்னால் ஏன் மறக்க முடியாது

என்பதற்கு ஒரு காரணமுண்டு.

நான் சிங்கப்பூருக்கு போன காலத்தில் என் சீன தொழில் அதிபர்

என்னிடம் சொன்ன வார்த்தைகளை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

நான் அவரோடு இணைந்து உருவாக்கிய கலை உலகம் இது:-

Academy Video Productions Pte Ltd

http://www.academyvideo.com.sg/

நான் சிங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த

காலத்தில் எதிர்பாராதவிதமாக Academy Video மைக்கல் போவை சந்தித்தேன்.

என் மேல் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக

தன் நிறுவனத்தில் பணிபுரிய அழைத்தார்.

நான் ஆரம்பத்தில் மறுத்தாலும்.............

நட்பு காரணமாக அவரது கலையகத்துக்கு போய் வரத் தொடங்கினேன்.

இதனால் இவரது நிறுவனத்தை பராமரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

என் பணி கண்ட போது ஒரு நாள் நெகிழ்ந்து போய் சொன்னார்.

"லீ குவான்யூவுக்கு ஒரு இராஜரத்தினம் போல

எனக்கு நீ" என்றார்.

chinese_web.jpg

ajeevan & Michel Poh

சீனர் ஏனைய இனத்தவரை மதிப்பதில்லை.

அவர்கள் ஒருவரது நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை கண்டு கொண்டால்.............

பிறகு சொல்லவே வேண்டாம். :wink:

அதன் பின்னர்தான்

யார் அந்த இராஜரத்தினம்

என்ற தேடல் எனக்குள் தொடங்கியது.

நெடு பயணத்தில் ஓர்நாள்-குறும்பட இயக்குனர் அஜீவன்!

அஜீவனுக்கும் ஊடகத்திற்குமான புரிதல் பதின்ம வயதினிலே ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் பிறந்து, இயந்திர பட்டப்படிப்பு பயின்று, ஊடகம் சுழலும் வாழ்வில் மனம் நுழைந்து கிடந்தாலும் சிங்கப்பூருக்கு வந்து சில ஆண்டுகள் படிப்பு சார்ந்த வேதியியல் தொழிற்நுட்பத்தில் பிழைத்து, பிறகு சில ஆண்டுகள் நிரந்தரமாக தன்னை தனக்குப் பிடித்த வேலைக்குள் இழைத்திருக்கிறார். சீன முதலாளியிடம் வேலை செய்ய, நேர்மை, நம்பிக்கை மற்றும் திறமை ஆகியவற்றை அதிகமாகக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் அவர், தனது பழைய முதலாளி 14 வருடங்கள் கழிந்தும் இன்னும் தன் மேல் கொண்டிருக்கும் அன்புக்கு அவற்றை சாட்சியாக்குகிறார். அஜீவனின் அன்றைய வழிகாட்டுதல் அந்த சீனரின் இன்றைய மாபெரும் வெற்றி!

http://www.academyvideo.com.sg/profile.htm

நன்றி:சிங்கை குமார்http://yemkaykumar.blogspot.com/2005/05/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெற்றவனுக்கு தன் பிள்ளை சிறப்பாக அமைந்து விட்டால் "அவன் பிள்ளையடா" என்பது போன்றோ, அல்லது உறவினர்களுக்கு " அவன் என் பெரியப்பா மகன்" என்று சொல்வதில்லையா! அதில் ஒரு சிலாகிப்பு எல்லோருக்குமே உண்டு. அதைப் பிரதேசவாதம் என்று ஒதுக்கி விட முடியவில்லை.

தமிழர் சாதனை செய்தால் யாழ்களத்தில் கூட அறிமுகம் இல்லாவிட்டாலும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதைப் பார்க்கின்றோம். அதனால் அதை ஒரு இனவாதமாகக் கொள்ளாலாமா?

எனவே ராஜரத்தினம் யாழ்பாணத்தவன் என்று சொல்வதில் எவ்வித தப்புமே இல்லை. அதில் பிரதேசவாதம் என்று ஒன்றுமே இல்லை. நாம் மற்றவர்களுக்காக ஏன் பயப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

அஜீவனுக்கு நன்றிகள்.................பல விடயங்களை சிறப்பாக களத்தில் தந்ததுக்கு.............அன்பான களஉறவுகளுக்கு...................தயவுசெய

  • கருத்துக்கள உறவுகள்

லீ குவான் யுூவிற்கு வலதுகரமாய் இராயரத்தினம் இருந்தது போல ஈழத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யே பி யெயரட்டணம் என்கிறவர் ஒரதர் தான் அதே லீ குவான் யுூவிற்கு அரசியலில் பெரிய தலைவலியாகவும் இருந்தார் சிங்கையில் இரந்த காலங்களில் அவரை பற்றி கௌ;விப்பட்டிருக்கிறேன் ஆனால் முழுமையான விபரங்கள் தெரியாது அயிவன் தெரிந்தால் கூறுங்கள்.

லீ குவான் யுூவிற்கு வலதுகரமாய் இராயரத்தினம் இருந்தது போல ஈழத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யே பி யெயரட்டணம் என்கிறவர் ஒரதர் தான் அதே லீ குவான் யுூவிற்கு அரசியலில் பெரிய தலைவலியாகவும் இருந்தார் சிங்கையில் இரந்த காலங்களில் அவரை பற்றி கௌ;விப்பட்டிருக்கிறேன் ஆனால் முழுமையான விபரங்கள் தெரியாது அயிவன் தெரிந்தால் கூறுங்கள்.

jbjeya_comp1.jpg

ஜோசுவா பென்ஜமின் ஜெயரட்ணம்

நான் சிங்கையில் இருக்கும் போது

இவர் மட்டுமே ஒரே ஒரு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்..............எதிர்க்கட்சி

அஜீவனுக்கு நன்றிகள்.................பல விடயங்களை சிறப்பாக களத்தில் தந்ததுக்கு.............அன்பான களஉறவுகளுக்கு...................தயவுசெய

பிரிவு எண்டது எப்பவோ வந்திட்டுது..

அதைப் பேப்பரில எடுக்கிறக்கு தான் உவளவு பிரச்சினை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.