Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன் புகைப்படங்கள் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது…

குருடர்கள் தவிர்ந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், ஒன்றாக இணைத்து பேச வைக்கும் வல்லமை புகைப்படத்திற்கு உண்டு.

ஒரு மனிதன் பேசுவதைவிட அவனுடைய உடல் மொழியின் மூலமாக அவன் உள்ளத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் உடலியல் மொழி ஆய்வாளர்.

புகைப்படங்களை ஆதாரமாக வைத்து நடந்துள்ள சம்பவங்களை கண்டறிவது ஒரு கலையாக இருக்கிறது, கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் என்ற ஓவியம்தான் இயேசுநாதர் வாழ்வின் கடைசி நேரத்தின் வரலாறாக இருக்கிறது.

செல்வன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சுடப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிறீத்துவின் கடைசி இராப்போசனம் போல பாலச்சந்திரனுடைய கடைசி நேரங்களை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.

இனி, கிடைத்துள்ள மூன்று புகைப்படங்களும் சொல்லும் செய்திகளை மேலே சொல்லப்பட்ட உதாரணங்களை ஆதாரமாக வைத்துப் பார்க்கலாம்.

அவரை நயவஞ்சகமாக முறையில் போலியான பேரம் பேசல் ஒன்றினால் கைது செய்திருக்கிறார் என்பதற்கான,

முதலாவது ஆதாரம் :

வன்முறையாக கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அணிந்திருந்த சேர்ட்டை கழற்றி கைகளை கட்டியிருப்பார்கள், ஆனால் சேர்ட் இடுப்பில் கட்டப்பட்டுள்ளது.

சேர்ட் கழற்றப்பட்டது கைதுதான் என்பதைக் காட்டுகிறது, ஆனால் கைகள் கட்டப்படாமல் விடப்பட்டது பெரும் சதி ஒன்று நடந்துள்ளதைக் காட்டுகிறது.

ஆதாரம் 02

அவருக்கு போர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள போர்வையான நீல நிறமான சாரம்.

அவர் கைது செய்யப்பட்டு ஒன்று அல்லது இரண்டு தினங்கள் அந்தப் பங்கரில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்பதற்கு இதுதான் நல்ல ஆதாரம்.

இந்தச் சாரத்தை போர்த்தியபடிதான் பங்கர் பலகையிலேயே அவர் படுத்து எழுந்துள்ளார், அதுதான் அவர் தோளில் இருக்கும் போர்வை.

படுத்து எழுந்தவருக்கு காலை உணவாக பிஸ்கட்டும், அருகில் இருக்கும் ஆரஞ்சு நிற கப்பில் தேநீர் அல்லது குடிபானம் கொடுத்துள்ளார்கள்.

அதற்குள்ளால் ஊடுருவும் காலைச் சூரிய ஒளி அதிகாலை அவர் பிஸ்கட் உண்பதைக் காட்டுகிறது, இந்த பங்கர் ஒரு வெளியான இடத்தில் உள்ளது.


ஆகவே சிங்கள இராணுவம் கோபம் கொண்டு போரில் சுட்டபோது அவர் இறக்கவில்லை என்பது தெரிகிறது.

மேலிடத்து உத்தரவுக்காக இராணுவம் காத்திருந்துள்ளதையே அவர் சாப்பிடும் உணவு, போர்வை இரண்டும் காட்டுகிறது.

இராணுவத்தினர் அல்ல அவருக்கு மேல் தூரப்பார்வையுடன் உத்தரவிட்ட தலைமைக்கட்டளையாளரே இந்தச் செயலின் கதாநாயகன் என்பது தெரிகிறது.

ஆனால் அந்தக் கட்டளையாளர் ஒருவராக இருந்தால் ஒரு சில மணி நேரத்தில் முடிவு செய்திருப்பார், ஆனால் அவருக்கும் மேல் ஒருவர், அதற்கும் மேல் ஒருவர் என்று பல கட்டளையாளர் இருந்திருப்பதே இந்தத் தாமதத்தின் காரணம்.

இந்த இரகசியத்தை போர்வை இலகுவாக அம்பலமாக்குகிறது.

ஆதாரம் 03

பிரச்சனையின் மையமே இதில்தான் இருக்கிறது, கையை கட்டிய கைதிக்கும், கட்டாத கைதிக்கும் உள்ள வேறுபாடு.

ஏற்கெனவே ஒரு எட்டுவயது சிறுவனை பிளாஸ்டிக் வயரினால் பின்புறம் கைகளை கட்டி நிலத்தில் உட்கார வைத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால் பாலச்சந்திரனுக்கு அப்படி செய்யப்படவில்லை… ஏன்..?

இவர்களை வேறு நாட்டிடம் ஒப்படைப்பதா இல்லையா என்ற பேரம் பேசல் நடந்துள்ளது, அதுதான் இராணுவம் காத்திருந்திருக்கிறது, பின்னர் சுடும்படி உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சியம்.

எனவே இவர் மரியாதைக்குரிய கைதியா இல்லை சாதாரண கைதியா என்ற குழப்பம் நிலவியிருக்கிறது.

கைகளையும் கண்களையும் கட்டாமல் சுடப்பட்டதானது சூடு விழும்வரை அவருக்கு அப்படியொரு அபாயம் இருப்பது தெரியவில்லை என்பதை உணர்த்துகிறது.

ஆதாரம் 04

பாலச்சந்திரனின் முகத்தில் தனது பெற்றோர் குறித்த கவலையும், கலவரமும் பெரியளவில் காணப்படவில்லை, அப்படியொரு கவலை இருந்திருக்குமானால் அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டிருக்கமாட்டார்.

அதற்குப் பின் அவர் ஆவலாக வெளியே பார்க்கும் விழிகள் யாராவது வருவார்களா என்ற எதிர் பார்ப்புடன் விரிகிறது.. ஆகவே பெற்றோர் நலமாக இருக்கிறார்கள் என்ற உறுதி அவருடைய நெஞ்சில் இருக்கிறது.

ஆனால் அவருடைய நிலத்தைப் பார்க்கும் விழிகளும், தூரப்பார்க்கும் பார்வையும் இந்த ஆபத்தில் இருந்து தப்பிவிட வேண்டும் என்ற எண்ணமும், யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை தெளிவாக பிரதிபலிக்கிறது.

ஆதாரம் 05

கிடுகினால் வேயப்பட்ட இந்த பங்கரின் கிடுகுகளைப் பார்த்தால் இது இரண்டொரு தினங்களில் போடப்பட்ட முள்ளிவாய்க்கால் பங்கர் போல காணப்படவில்லை, கிடுகுகள் மழை வெய்யில் அடிபட்டு பழையதாக இருக்கிறது, ஆகவே போர் நடந்த களத்திற்கு வெகு தொலைவில் இருந்த கொலை முகாமாக இருக்க வேண்டும்.

பங்கருக்கு மேலே மடித்தபடி காணப்படும் இன்னொரு நீலச் சாரம் தெரிகிறது, கைதான பலர் நீலச்சாரங்களுடன் இருப்பது முன்னரே புகைப்படங்களாக வெளியாகியுள்ளளன.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நீல நிறம் இந்த போரின் வெற்றி நிறமாக பயன்படுத்தப்பட்டு இந்த சாரங்கள் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

நீல நிறச்சாரம் கடைசி நேரம் கைதானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது, நடேசன் புலித்தேவன் போன்றவர்களுடைய உடலில் இந்த நீலநிறச் சாரம் இல்லை.

ஆதாரம் 6

சுடப்பட்டு விழுந்து கிடக்கும் புகைப்படம் ஐந்த சூடுகளும் அருகாக வைத்து சுடப்பட்டுள்ளது, அதே உடுப்புடனேயே கிடக்கிறார் ஆனால் சாரத்தை மட்டும் காணவில்லை.


சூடு விழுந்த இரத்தம் பின்புற உடலில் இருந்து வெளியே ஆறாக ஓட முன்னரே இறப்பின் புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது.

அருகில் சப்பாத்துக் கால்களும், செருப்பும் தெரிவது அதிகாரிகளும், சாதாரண இராணுவமும் இருந்துள்ளதைக் காட்டுகிறது.

புகைப்படத்தில் ஒருவருடைய தலை நிழல் விழுகிறது ஆகவே படம் எடுத்த கருவி அருகில் உயரமான வாகனம் ஒன்றில் நின்று எடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

அவர் பங்கரில் இருந்து எங்கோ அந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடலத்தில் இருந்து நிழல் நீண்டு போகவில்லை ஆகவே மதியம் சுடப்பட்டுள்ளார்.

புகைப்படத்தை எடுத்தவர் இராணுவத்தை சேர்ந்தவரே.. புகைப்படம் வெளியே வந்திருக்கிறதென்றால் இராணுவத்திற்குள் பிளவு நிலவுகிறது.

ஆதாரம் 7

மே 17 விடயம் முடிந்துவிட்டதென்றால் தடயவியல் ஆய்வு பாலச்சந்திரன் 19ம் திகதி பகல் 12.01 மணிக்கு சுடப்பட்டதாகக் கூறியுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ சிரியாவில் இருந்து இலங்கை சென்றதன் பின் இது நடந்துள்ளது.

ஐ.நா செயலர் பான் கி மூன் இலங்கை போனதற்கும் இதற்கும் இடையில் கால அளவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை, 23 ம் திகதி ஐ.நா செயலர் சென்றுள்ளார்.

ஐ.நா இந்தப் புகைப்படங்கள் குறித்து கருத்துரைக்க மறுத்திருப்பது 19ம் திகதி இது நடந்திருக்கிறது என்பதால்தானா என்பது அடுத்த சந்தேகம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முன்னரே கேள்விப்பட்டதைப் போல மிகப்பெரிய சர்வதேச பேரம் பேசல்கள் நடந்துள்ளன என்பதை படங்கள் காட்டுகின்றன.

இலங்கை தொடர்பாக எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய சிக்கல்களின் கொள்கை வகுப்பாளர்களே பிள்ளைகளை கொல்லும் தூரப்பார்வை திட்டங்களை வகுப்பார்கள், த லாஸ்ற் எம்பரர் திரைப்படத்தில் ஜப்பானிய இராணுவம் மன்னர் குலத்தின் வாரிசுகளை அழித்தது போன்ற மிக நெடிய தூரப்பார்வை இதில் இருக்கிறது.

சிறிய சக்தி மிக்க ஈழத் தமிழினத்தின் முன்னால் சூத்திரதாரிகள் பிரமாண்டமான சக்திகளான இருக்கிறார்கள் என்பதை படம் காட்டுகிறது.

சுடப்பட்ட பாலச்சந்திரன் கெதியற்று நிற்பதைப் போலவே சர்வதேசத்தின் முன் ஈழத் தமிழினமும் கெதியற்று நிற்பதை உணரவும் இப்படங்கள் போதுமானவையாக உள்ளன.

பாலச்சந்திரன் சூடப்பட்ட படம் முதலிலும் கைது செய்யப்பட்ட படம் பின்னரும் வந்திருப்பது, இதற்குப் பின்னால் மாயக்கரமொன்று இருப்பதையே காட்டுகிறது.

இதன் ஆதியும் அதுவே அந்தமும் அதுவே..

அலைகள் புகைப்பட நோக்கு 21.02.2013

http://www.alaikal.com/news/?p=122881#more-122881

புகைப்படத்தை எடுத்தவர் இராணுவத்தை சேர்ந்தவரே.. புகைப்படம் வெளியே வந்திருக்கிறதென்றால் இராணுவத்திற்குள் பிளவு நிலவுகிறது.

 

இந்தப்பிளவுகள் நிச்சயம் உள்ளன.

இவை ஒருநாள் எல்லா உண்மைகளையும்  வெளியில் கொண்டுவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக இராணுவம் வேலை செய்கிறார்கள்.பணம் அதிகம் கொடுக்கப்படும் போது ஆதாரங்கள் கை மாறும்.இராணுவத்தில் ஜே.வி.பி ஐ.தே.க, சரத் குழுக்கள் அரசுக்கு எதிரானவை.இவர்களிடம் இருந்து ஆதாரங்களை பெறுவது  அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களிடம் இருந்து பெறுவதை விட இலகுவானது.

ஆகவே சிங்கள இராணுவம் கோபம் கொண்டு போரில் சுட்டபோது அவர் இறக்கவில்லை என்பது தெரிகிறது.

 

மேலிடத்து உத்தரவுக்காக இராணுவம் காத்திருந்துள்ளதையே அவர் சாப்பிடும் உணவு, போர்வை இரண்டும் காட்டுகிறது.

 

இராணுவத்தினர் அல்ல அவருக்கு மேல் தூரப்பார்வையுடன் உத்தரவிட்ட தலைமைக்கட்டளையாளரே இந்தச் செயலின் கதாநாயகன் என்பது தெரிகிறது.

 

ஆனால் அந்தக் கட்டளையாளர் ஒருவராக இருந்தால் ஒரு சில மணி நேரத்தில் முடிவு செய்திருப்பார், ஆனால் அவருக்கும் மேல் ஒருவர், அதற்கும் மேல் ஒருவர் என்று பல கட்டளையாளர் இருந்திருப்பதே இந்தத் தாமதத்தின் காரணம்.

 

LTTE Leader Velupillai Prabhakaran’s 14 year old son Balachnadran Prabhakaran had been killed after surrendering to the army on a direct order of Defence Secretary Gotabhaya Rajapaksa.

 

http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=1989%3Amajor-general-kamal-gunaratne-had-murdered-balachandran-on-gotabhayas-order&catid=46%3Aexclusive&Itemid=113

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"மகிந்த ராஜபக்ஷ சிரியாவில் இருந்து இலங்கை சென்றதன் பின் இது நடந்துள்ளது"

 

முப்படைத் தளபதியோ அல்லது பாதுகாப்பு அமைச்சரோ

போர்க்காலத்தில் எங்கிருந்தாலும்

போர்க்குற்றங்களுக்கு அவர்களே பொறுப்புக் கூறல் வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.