Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் உயர்பீடம் அமைக்க முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tna_001.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கோரிவந்த நிலையில் அது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.

 

எனினும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இந்த உயர் பீடத்தில் உள்ளடக்கப்படவுள்ளதுடன் இந்த கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து மாவட்ட ரீதியிலும் குழுக்களை அமைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்த கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரம் (ஜனா), சிவாஜலிங்கம், சுரேஸ்பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஆனந்தசங்கரியும், புளோட் சார்பில் பவான் ஆர்.ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

http://tamil24news.com/news/?p=45900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவையள் இந்த கட்சியை பதிவு செய்ய முன்னர் ஈழத்தில் தமிழ் இனத்தின் இருப்பு கேள்வி குறியாகி விடும்போல இருக்கு ...

இது ஒரு வேதனையான விடையமாக இருந்து வருகிறது. அதை நேரகாலத்துடன் தீர்த்துவைக்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை. :)

வடக்கிலாவது தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அவசியமானதும் அவசரமானதுமான நடவடிக்கை இது

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலாவது தமிழர் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அவசியமானதும் அவசரமானதுமான நடவடிக்கை இது

 

உதாரணத்துக்கு, வடக்கை எடுத்தோமானால்...

அதில் உள்ள, யாழ் மாநகராட்ட்சியை எடுப்போம்.

அங்கு.. எத்தனை ***** உள்ளது?

அதில் எததனை... ஒட்டுக்குழு, காட்டிக் கொடுக்க‌ உள்ளது?

உண்மையான விடுதலை விரும்பிகள் யார்?

என்று... உங்களால்... கூறமுடியுமா?

யாழ் மக்கள் எவ்வளவு, பெரிய அச்சத்துடன் வாழ்கின்றார்கள் என்று தெரியுமா? மணிவாசகன்.

 

நியானி: இழிவான பதம் தணிக்கை

Edited by நியானி

இந்தப் பதிவு செய்யும் பிரச்சினைக்கே தீர்வாகான முடியாது சிங்கள அரச பயங்கரவாதிகளைப் போல் இழுத்தடிக்கும் சம்பந்தன் - சுமந்திரன் - மாவை குழுவினர் , தமிழர் பிரச்சினைக்கு எப்படி தீர்வுகாணப் போகிறார்களோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு செய்யும் பிரச்சினைக்கே தீர்வாகான முடியாது சிங்கள அரச பயங்கரவாதிகளைப் போல் இழுத்தடிக்கும் சம்பந்தன் - சுமந்திரன் - மாவை குழுவினர் , தமிழர் பிரச்சினைக்கு எப்படி தீர்வுகாணப் போகிறார்களோ தெரியவில்லை?

 

இவர்களால்.... தீர்வு கிடைக்கும் என்று நீங்கள்... நம்பினால்,

"கடல் வத்துமென்று, ஒற்றைக்காலில் நின்ற... கொக்கு, குடல் வற்றிச் செத்த" கதையாய் முடியும்.

Edited by nunavilan

இவர்களால்.... தீர்வு கிடைக்கும் என்று நீங்கள்... நம்பினால்,

"கடல் வத்துமென்று, ஒற்றைக்காலில் நின்ற... கொக்கு, குடல் வற்றிச் செத்த" கதையாய் முடியும்.

 

 

இல்லை தமிழ்சிறி! இவர்கள் தாமாகவே முன்வந்து அரசியலுக்கு வந்தவர்கள். எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேறு தெரிவுகள் இல்லாத நிலையில்  தான் வேறுவழியில்லாத தெரிவாக இவர்கள் இருந்தார்கள். அதை அவர்களும் ஒற்றைக்காலில் நின்று ஏற்றுக்கொண்டார்கள்.

எனவே அவர்களுக்கு பல கடமைகள் உண்டு! அதைச் செய்ய முடியாது என்றால் தாமாகவே முன்வந்ததுபோல் தாமாகவே விலத்த வேண்டும்.

தீர்வுக்காக தாம் பாடுபடுவதாக அவர்கள் தான் கூறிவருகிறார்கள். எனவே அவர்களை நான் நம்புவது / நம்பாதது என்ற நிலைக்கு அப்பால் அவர்களது கூற்றின் நம்பகத் தன்மையை, அவர்களது திறமையை, அவர்களது பலவீனங்களை, குறிப்பாக அவர்களது பொறுப்பை  அவர்கள் உணரும் வகையிலே எனது கருத்துக்கள் அமைகின்றது.

 

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.