Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர், ரகுமான் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞர், ரகுமான்  சந்திப்பு
 
Kalaignar+Vs+Rahman.jpg

அறிவிப்பு :இது முழுக்க முழுக்க வெறும் கற்பனை கலந்த நகைச்சுவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

இடம்: கோபாலபுரம் கலைஞரின் இல்லம்

நேரம் :காலை 10 மணி

செக்யூரிட்டி செக்கப் எல்லாம் முடித்து விட்டு கையில் அலிகார் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தோடு கலைஞரின் வரவேற்பு அறைக்குள்ளே நுழைகிறார் ரகுமான்.

ரகுமான்: அஸ்ஸலாமு அலைக்கும்..

கலைஞர்: (ஆற்காட்டாரைப் பார்த்து) அந்த தம்பி என்னய்யா சொல்லுது?

ஆற்காட்டார்: உங்க மீது சாந்தி உண்டாகட்டும்னு சொல்றாரு தலைவரே!

கலைஞர்: சாந்தியா? யாருய்யா அது?

ஆற்காட்டார்: ஆகா! மறுபடியும் வாயக்குடுத்து வம்ப இழுத்துடாதிய தலைவரே!

கலைஞர்:வாங்க தம்பி. உக்காருங்க.அது என்ன கையில.

ரகுமான்: இது அலிகார் பல்கலைக்கழகம் எனக்கு குடுத்த டாக்டர் பட்டம் தலைவரே! நீங்க வரச்சொன்னதா ஆற்காட்டார் போன் செஞ்சாரு. அத்தோட இதையும் உங்கள்ட காட்டிட்டு வாழ்த்து வாங்கிட்டுப் போவலாமுனு வந்தேன்.

கலைஞர்: டாக்டர் பட்டம் வாங்க மொத்தமா எவ்ளோ செலவு ஆனிச்சி தம்பி?

ஆற்காட்டார்: தலைவரே! எல்லாரும் உங்கள மாதிரின்னு நெனக்காதிய. இவங்களுக்கெல்லாம் அவங்களா தேடிவந்து குடுப்பாங்க. ஆனா நம்ம ஆளுங்க வாங்குற‌ டாக்டர் பட்டமெல்லாம்.........

கலைஞர்: சரிய்யா!சரிய்யா! கம்பெனி சீக்கிரெட்ட வெளிய சொல்லாதய்யா. தம்பி என்ன சாப்புடுறீய?

ரகுமான்: ஒன்னும் வேணாம் தலைவரே.

கலைஞர்: அட சும்மா கூச்சப்படாதிங்க. லெமன் ஜூஸ் சாப்புடிறீயலா? ஹேய்! கோன் கிதர். தோ கிளாஸ் நிம்பு பாணி தியோ!

ரகுமான்: என்ன தலைவரே! ஹிந்தி பேசுறீய?

கலைஞர்: அது ஒன்னுமில்லப்பா! நம்ம சின்னப்பேராண்டி ஹிந்திகிளாஸ் போறாரு. அவருகிட்ட கத்துகிட்டது தான்.

ஆற்காட்டார்: என்ன தம்பி முழிக்கிறீய! நாளைக்கு அவரும் டெல்லிக்குப் போவனும்ல. டில்லிக்கு போயி தமிழ்ல பேசி ஒரு டீ கூட வாங்க முடியாது. அப்பறம் எங்க கோ'டீ வாங்குறது. ஹேய்! ஜல்தி ஆவ். ஹிஹி! எதுக்கும் முன்னேற்பாடா நம்ம பேரனையும் ஹிந்தி படிக்க வச்சிருக்கேன்.

ரகுமான்: அப்ப தலைவரே, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், ரயில் முன்னாடி படுத்தேன்னு பக்கம் பக்கமா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதறதெல்லாம்????

ஆற்காட்டார்: அட அதுவா! அது ஒரு பெரிய காமெடி தம்பி.. தலைவர் ஒரு தடவ சென்னையிலேந்து திருச்சிக்கு ஒருகூட்டத்துக்கு போறதுக்காக ட்ரைனில‌ டிக்கெட் எடுக்காம வித்அவுட்ல போயிருக்காரு. அந்த சமயம் பாத்து டால்மியா புரத்துல செக்கிங் ஏறிட்டாங்க. இதப் பாத்த தலைவரு அவங்க கண்ணுல படாம எஸ்கேப் ஆகி ஓடியிருக்காரு. தலைவரு பாஞ்சி ஓடுறத‌ பாத்த‌ பாத்த டிடிஆர் இவர வெரட்டிக்கிட்டு ஓட,தலைவர் அவரசரத்துக்கு பதுங்க எடம் இல்லாம ரயில் எஞ்சின் முன்னாடி போயி உள்ளார ஏற முயற்சி பண்ணும் போது கால் தவறி தண்டவாளத்துல விழுந்துட்டாரு. வேகமா ஓடியாந்த டிடிஆர் தலைவர்கிட்ட வந்து ஹிந்தில ஏதோ கேட்க அதற்குத் தலைவர், ஒன்னுமே புரியல தமிழ்ல பேசுய்யா, தமிழ்ல பேசுய்யான்னு கத்த அங்க கூட்டம் கூடிடிச்சி. உடனே தலைவர் ஹிந்தி ஒழிக அப்டின்னு கத்திக்கிட்டே தண்டவாளத்துல படுத்துட்டார். கூட இருந்த உடன்பிறப்புகளும் சேர்ந்துபடுக்க ரணகளமாயி பேப்பர்ல, கலைஞர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்னு போட்டோ வந்திடுச்சி.அத வச்சே இத்தன எலக்சனையும் தலைவர் ஓட்டிட்டார்.

கலைஞர் : யோவ் பூனைய மடில கட்டிக்கிட்டு சகுணம் பாத்தக் கதயா, நீ ஒரு ஆள் போதும்யா என்னய‌ கவுக்கறதுக்கு.

(லெமன் ஜூஸ் வருகிறது. அனைவரும் குடிக்கிறார்கள்)

ரகுமான்: சரி தலைவரே நான் கெளம்பறேன். நன்றி.

ஆற்காட்டார்: தலைவரே! என்ன சும்மா இருக்குறீய, மேட்டர போடுங்க.

கலைஞர்: தம்பி, இருங்க! அதுக்குல்ல என்ன அவசரம். உக்காருங்க. நான் இப்ப புதுசா ஒரு கதை ஒன்னு எழுதியிருக்கேன். அதச் சொல்றேன். கேட்டுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

ரகுமான்:(என்னது கதையா! ஆகா, நல்லா மாட்டிக்கிட்டோமே! எப்டி எஸ்கேப் ஆவுறது) இல்ல தலைவரே! எனக்கு அவசரமா ஒரு வேலையிருக்கு, நான்... கெளம்பறேன்..,

என எழ முயன்ற ரகுமான் தோளைப் பிடித்து அழுத்தி “அட சும்மா கேளுங்க தம்பி” என கரகரக்கும் குரலில் சொல்கிறார் ஆற்காட்டார். அவரது பிடியைக் கண்டு அதிர்ந்த ரகுமான் அப்படியே சேரில் அமந்துவிடுகிறார்.

கலைஞர்: என்ன தம்பி கேக்குறீயலா?

ரகுமான்:(கத கேக்க மாட்டேன்னு சொல்லி ஆற்காட்டாருகிட்ட அடி வாங்குறத விட விதியேன்னு கதையக் கேட்டுட்டு உசுரோட ஊடு போய் சேந்திர வேண்டியது தான்) சரி தலைவரே! சொல்லுங்க.

ஆற்காட்டார்: தலைவரே!ஒரு அடிமை சிக்கிட்டான், நீங்க கதைய ஆரம்பிங்க. நான் போய் கதவ சாத்திட்டு வாரேன்.

கலைஞர்: தம்பி! அயோத்திக்குப்பத்தில இருந்து தான் நம்ம‌ கதை ஆரம்பிக்குது. அங்க சோமன், தட்சிமன்,வ‌ரதன்னு அண்ணன் தம்பி 3 பேரு. சோமனோட மனைவி கோதை. ஒரு நாளு கோதயப் பாத்துக்குறச் சொல்லி தட்சிமன்கிட்ட சொல்லிட்டு மீன்புடிக்க கட்டுமரத்த‌ எடுத்துக்கிட்டு சோமன் கடலுக்குள்ள போயிடுறான். கோத அவங்க வீட்டு வாசல்லயே ஆப்பக்கட வச்சி யாவரம் பண்ணிக்கிட்டு இருக்குது.அந்த நேரத்துல தட்சிமன் சரக்குகடைக்குப் போயி புல்லா சுண்டக்கஞ்சிய குடிச்சிட்டு ஆப்பக்கட வாசல்ல மல்லாந்துடுறான். இந்த நேரம் பாத்து கந்துவட்டி காவண‌ன் வந்து, தனியா இருக்கிற கோதகிட்ட “வட்டிக்காசு தர வக்கு இல்ல உனக்கெல்லாம் யாவாரம் ஒரு கேடான்னு” அவகிட்ட ஒரண்ட இழுத்து கோத வச்சிருந்த ஆப்பச்சட்டிய அடுப்போட தூக்கிகிட்டு போயிடுறான்.

அந்த நேரம் கடல்லேந்து திரும்புன சோமன்கிட்ட இந்த செய்தியை கோத சொல்லிடுது. உடனே கடுப்பான சோமன், எங்கே என் உடன்பிறப்பு தட்சிமன் அப்டின்னு கேக்க, அதுக்கு கோத,"தோ பாருய்யா உன் ஒடம்பொறப்ப, புல்லா சுண்டக்கஞ்சிய அட்சிகினு மல்லாந்து கெடக்கீது, நீ இன்னா செய்வியோ மருவாதயா என் ஆப்பச்சட்டியும் அடுப்பையும் இட்டாந்தா உன்னான்ட குடும்பம் நடத்துவேன், இல்லாகாட்டி என் ஆத்தா வூட்டுக்கு போறேன் சொல்லிட்டு பொட்டிய கட்டிடுது". நேரா கந்துவட்டி காமணன்கிட்ட போன சோமன் அவன அடிச்சி போட்டுட்டு ஆப்பச்சட்டிய தூக்கிகிட்டு வந்துடுறான். ஒடனே காமணன் இத குப்பத்து ப‌ஞ்சாயத்துல சொல்லி நீதி கேக்க, சோமனையும் தட்சிமனையும் 14 மாசம் குப்பத்த விட்டே தள்ளிவச்சிடுறாங்க பஞ்சாயத்துகாரங்க.

பஞ்சாயத்து முடிஞ்சி போவும்போது அங்க கெடந்த வ‌ரதனோட புது செருப்ப ல‌வட்டிக்கிட்டு போயிடுறான் சோமன். விசயம் தெரிஞ்சி ஓடியாந்த வரதன் அவன்கிட்ட இருந்து செருப்ப புடிங்கிகிட்டு வந்து அந்த செருப்பாலயே பஞ்சாயத்து பேசுன பெரியமனுசங்கள அடி அடின்னு அடிக்கிறான். திடீர்னு..,

ஆற்காட்டார்: தலைவரே! நான் கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் போயி கதவ சாத்திட்டு வர்றதுக்குள்ளே இங்க நீங்க ராமாயணக் கதய அப்டியே ரீமேக் பண்ணி ரீல் ஓட்டிக்கிட்டு இருக்கியலே! இது ஏற்கனவே ராமாயணம்கிற பேருல படமா வந்திடுச்சி. அதுல கதாநாயகன் பேரு ராமன்.

கலைஞர்: ராமனா? யாருய்யா அது?

ஆற்காட்டார்: ஆகா! வேணாம் தலைவரே! ஏற்கனவே ராமன இழுத்து வாயக்குடுத்து வடஇந்தியாவரைக்கும் வாங்கி கட்டிக்கிட்டது பத்தாதா? வேற ஏதாவது புதுக் கதயச்சொல்லுங்க தலைவரே! அங்க பாருங்க நீங்க சொன்ன கதயக் கேட்டு தம்பி தூங்க ஆரம்பிச்சிட்டாரு. தம்பி முழிச்சிக்கிங்க. தலைவர் அடுத்த கதய சொல்லப்போறாரு. கேளுங்க.

ரகுமான்: என்னது அடுத்தக் கதயா? (இந்தக் கதைக்கே பாதி கோமா நெலக்கி போயிட்டேனே! இனி அடுத்த கதையக் கேட்டா சங்குதான். என்னிக்கோ பண்ணின பாவம், அதுக்கு இன்னிக்கு தண்டனை) சொல்லுங்க தலைவரே சொல்லுங்க.

கலைஞர்: தம்பி! இந்தக் கதையில மொத்தம் 5 அண்ணன் தம்பி, அவுங்க 5 பேரும் சேந்து ஒரு பொண்ண கட்டிக்கிறாங்க..,ஒரு நாளு 5 அண்ணன் தம்பிகளும் சேர்ந்து கிளப்புக்கு போயி மூனு சீட்டு ஆடும் போது...

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத‌ மஹாபாரதம்ங்க பேர்ல நான் சின்னப்புள்ளயா இருக்கும் போதே எங்க ஆயா சொல்லியிருக்கு. என்ன தலைவரே! இதுக்குத் தானா கஷ்டப்பட்டு எங்கயுமே போவாத ரகுமான போன போட்டு இங்க வரச்சொன்னேன்? நல்லா கதயா சொல்லுங்க தலைவரே!

கலைஞர்: இருய்யா,இருய்யா! ஆங்! ஐடியா வந்திடுச்சி. இந்தக் கதையில 2 அண்ணன் தம்பி..,

ஆற்காட்டார்: ஏங்க! உங்களுக்கு அண்ணன் தம்பி கதைய வுட்டா வேற எதுவுமே தெரியாதா? அங்க பாருங்க ரகுமான, கசாப்பு கடையில மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆடு மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்காரு.

கலைஞர்: அட இருய்யா அவசரப்படாதே, அண்ணன் தம்பி கதை என் வாழ்க்கையோட கலந்ததுயா.அவங்க இன்னிக்கு அடிச்சிக்கிவாங்க, நாளைக்கி சேர்ந்துகுவாங்க. அதே மாதிரி தான் இந்தக் கதையும் ரொம்ப ரொம்பப் புதுசு. தம்பி படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா? "பாசப் பச்சோந்திகள்"

ஆற்காட்டார்: அப்படி போடுங்க தலைவரே! அருமையான டைட்டில். நீங்க கதைய ஆரம்பிங்க. நான் அந்தப் பக்கமா போயி இந்தப் படத்த தயாரிக்க எவனாவது இளிச்சவாயன் சிக்குறானான்னு பாத்துட்டு வாரேன்.

 

 

கலைஞர்: தம்பி படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா? "பாசப் பச்சோந்திகள்"

ஆற்காட்டார்: அப்படி போடுங்க தலைவரே! அருமையான டைட்டில். நீங்க கதைய ஆரம்பிங்க. நான் அந்தப் பக்கமா போயி இந்தப் படத்த தயாரிக்க எவனாவது இளிச்சவாயன் சிக்குறானான்னு பாத்துட்டு வாரேன்.

கலைஞர்: ஏய்யா புது ஆளத்தேடுற! என்னோட முந்தைய படம் "அலியின் ஆசை" யைத் தயாரிச்சாங்கள்ள சாந்தினி புரொடக்சன், அவங்களயே இந்தப் படத்துக்கும் புக் பண்ணுய்யா!

ஆற்காட்டார்: ஏது மறுபடியும் அவங்களயா? தலைவரே! உங்க அலியின் ஆசை படத்தைத் தயாரிச்ச அந்த சாந்தினி பட நிறுவனர் இப்ப லட்சாதிபதி ஆயிட்டார்.

கலைஞர்: கேட்டுக்குங்க தம்பி! நம்ம படத்தையும் எடுத்து ஒருத்தர் லட்சாதிபதியா ஆயிருக்கார்.

ஆற்காட்டார்: நாசமா போச்சி! அதுக்கு முன்னாடி அவர் கோடீஸ்வரரா இருந்தாரு. சரி அவங்க தலையெழுத்த யாரால மாத்த முடியும். சரி தலைவரே! நீங்க கதைய ஆரம்பியுங்க. ரகுமான் தம்பி என்ன ரொம்ப நேரமா உங்ககிட்ட இருந்து எந்தவிதமான ரியாக்சனும் இல்ல.என்ன ஆச்சி.

ரகுமான்: ஒன்னுமில்ல சார்.(அட ஆண்டவா! பக்ரீத்துக்கு வந்து மாட்டிக்கிட்ட ஆடு மாதிரி ஆயிப்போச்சே என் நெலம)

ஆற்காட்டார்: தம்பி! உங்க மைன்ட் வாய்ஸ‌ நான் கேட்ச் பண்ணிட்டேன். பரவாயில்ல,சும்மா கேளுங்க தம்பி.

கலைஞர்: தம்பி! இந்தக் கதை சென்னிக்குளம் அப்டிங்கற ஊருல இருந்து ஆரம்பிக்குது. அந்த ஊருல சரியார் அப்டின்னு ஒரு பெரியவர் ஒரு பொட்டிக்கடை வச்சி நடத்திக்கிட்டு வர்றார். அந்தக் கடையில் செந்தாமரை அப்டின்னு ஒருத்தர் வேலைக்கு சேர்றார். அவர் சேர்ந்த பிறகு அங்க யாவரம் நல்லா சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுது. கொஞ்ச நாள் கழிச்சி சரணாகதி அப்டின்னு ஒருத்தர் அதே கடையில வேலைக்கு சேர்றார். ஒரு தடவ ஏதோ ஒரு விசயத்துல‌ செந்தாமரைக்கும் சரியாருக்கும் பிரச்சினையாகி, செந்தாமரை சரணாகதி சேர்ந்து தனியா ஒரு மளிகைக் கடைய ஆரம்பிக்கிறாங்க. கொஞ்ச நாள்லயே மளிகைக் கடை நல்ல டெவலப் ஆயிடுது. நல்ல டெவலப் ஆன நெலயில செந்தாமரை மரணமடைகிறார். அந்த சந்தர்பத்த பயன்படுத்தி அங்க இருந்த கல்லாப்பெட்டியில சரணாகதி உக்காந்துடுறாரு.

அவர் குடும்பமும் அந்தக் கடைக்குள்ள புகுந்து மிட்டாய் பிஸ்கட்டுன்னு ஏகத்துக்கும் சாப்புட ஆரம்பிச்சிடுது. கணக்கு ஒரு மாதிரி வர்றத பாத்துட்டு வேக்காடு மாடசாமின்னு ஒருத்தர கணக்கு புள்ளையா அந்தக் கடையில உக்கார வைக்கிறாரு சரணாகதி.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத..,இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

கலைஞர்: சும்மா இருய்யா, சுவாரஸ்யமா கத போய்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணாதே! அந்த சரணாகதிக்கு 2 புள்ளைங்க. ஒரு மகன் பேரு தலக்கறி, இன்னொரு மகன் பேரு சுடலை. இதுல தலக்கறி பீடாக்கடையும், சுடலை சோடாக்கடையும் வச்சி நடத்திக்கிட்டு வாறாங்க. சரணாகதியோட இன்னொரு சொந்தக்காரங்களுக்கு ரெண்டு புள்ளைங்க. அவங்க ரெண்டு பேரும் அந்த மளிகைக்கடைக்குப் பக்கத்துலயே ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸூம், ஒரு 16 MM பட புரொஜக்டரும் அவங்க வச்சிருந்தாங்க. அவங்களுக்கு என்ன வேலையின்னா அந்த மளிகைக் கடைக்கி வெளம்பர நோட்டீஸ் அடிச்சிக்குடுப்பாங்க. அதாவது மைதா மாவு வாங்கினா மசாலாப்பொடி இலவசம், கடலப்புண்ணாக்கு வாங்குனா கருப்பட்டி இலவசம்னு நோட்டீஸ் அடிச்சி வெளியிடுவாங்க. அது மட்டுமில்லாம சுத்துவட்டார கோயில்கள்ல திருவிழா வந்தா அங்க போயி திரையக் கட்டி 16 MM படம் ஓட்டுவாங்க. படத்துக்கு நடு நடுவே அந்த கடை வெளம்பரத்தையும் போட்டுக்குவாங்க. இவங்களோட வளர்ச்சியப் புடிக்காத வேக்காடு மாடசாமி இவங்க எந்த ஊர் திருவிழாவுக்கு படம் ஓட்டப்போனாலும் பின்னாடியே போயி அந்த ஊர்ல இருக்குற கரண்டு கம்பத்துல உள்ள பியூஸ வெட்டிவிட்டுட்டு வந்திடுவார்.

ஆற்காட்டார்: தலைவரே!..., தலைவரே! இந்தக் கதய எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே!

 

கலைஞர்: சும்மா இருய்யா..,ஒரு நாளு பக்கத்து ஊரு திருவிழாவுக்கு படம் ஓட்டப் போகும் போது க‌ரண்டு போயிட்டதால படம் ஓட்ட முடியாம அந்த ரெண்டு பேரும் வேற ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது ஒரு பட்டிமன்றம் வச்சிறலாம்னு சொல்லி காண்டா வெளக்க கொளுத்திக்கிட்டு பட்டிமன்றத்த ஆரம்பிச்சாங்க. என்ன தலைப்புன்னா "செரிமாணத்திற்குச் சிறந்தது தலக்கறி விக்கிற பீடாவா? சுடலை விக்கிற சோடாவா? " அப்டின்னு பட்டிமன்றத்த போட்டு கடைசியில , செரிமாணத்திற்குச் சிறந்தது சுடலை விக்கிற சோடாதான்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. இந்த விசயத்த‌ கேள்விப்பட்ட தலக்கறி தன்னோட ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து அந்த தம்பிகளோட பிரிண்டிங் பிரஸ்ஸ அடிச்சி நொறுக்கிட்டாங்க. சரணாகதியும் அவங்கள அந்த எடத்துலேந்து கடைய காலி பண்ணச்சொல்லிட்டார்.

தன் கடைக்கு இனிமேல் நோட்டீஸ் அடிக்க வேண்டாமுன்னு அந்த ஆர்டரையும் கேன்சல் பண்ணிட்டார். அதுமட்டுமில்லாம அவங்களுக்குன்னு தனியா ஒரு பட புரொஜக்டரையும் வாங்கி அவங்களுக்குப் போட்டியா கம்மிவெலயில படம் ஓட்ட ஆரம்பிக்கிறாரு சரணாகதி. அத்தோட அவங்க கடையில வேல பாத்தா ஆப்பரேட்டர்ல இருந்து, கூட்டிப்பெருக்குற ஆயா வரைக்கும் இவங்களோட புதுக்கடைக்கு இழுத்துக்கிறாங்க.இந்த நிலையில அவங்க கடைக்கு எதிரில செவப்பு சாந்துன்னு ஒருத்தர் புதுசா கடை ஆரம்பிக்கிறாரு. இந்தத் தம்பிக செவப்புச்சாந்து கடைக்கு வெளம்பரம் பண்ண ஆரம்பிக்கிறாங்க. நோட்டீஸூம் அடிச்சி வெளியிடுறாங்க, அதுமட்டுமில்லாம சரணாகதி கடையில எல்லா பொருளுமே எக்ஸ்பெயரி ஆனது,கலப்படம் அப்டி இப்டின்னு கிளப்பிவுடுறாங்க.

ஆற்காட்டார்: தலைவரே! இந்தக் கத....

கலைஞர்: சும்மா இருய்யா. அப்பறம் கேளுங்க தம்பி,அந்த தம்பிக பண்ணுற வெளம்பரத்தால சரணாகதி கடைக்கி யாவரம் கொறய ஆரம்பிச்சி செவப்புச்சாந்து கடைக்கி கூட்டம் கூடுது. இதனால ஒருமுடிவுக்கு வந்த சரணாகதி அந்த ரெண்டு தம்பிகளையும் அழைச்சி மீண்டும் தன் கடைக்கே நோட்டீஸ் அடிக்கிற வேலையக் குடுத்துடுறாரு. இதப்பத்தி அந்த ஏரியா ஆளுங்க கேட்டதுக்கு, இரும்பு பழுத்தது கரும்பு இனித்தது அப்டின்னு சம்பந்தம் இல்லாம எதை எதையோ அள்ளிவிட்டாரு சரணாகதி.

ரகுமான்: தலைவரே! நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?

ஆற்காட்டார்: என்னது கேள்வியா! தம்பி என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. தலைவர் யார் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார். அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவார்.

ரகுமான்: என்னது, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிக்குவாரா? இது என்ன போங்கு ஆட்டமால்ல இருக்கு.

கலைஞர்: யோவ்! என்னயா சம்பந்தமே இல்லாம இந்த டைலாக்க இங்க கொண்டு வந்து நொழக்கிறே?

ஆற்காட்டார்: அது ஒன்னுமில்ல தலைவரே! போன எபிசோடுல ஒரு உடன்பிறப்பு உங்க கேள்வி பதில் அறிக்கையையும் சேர்த்து ஒரு வாரு வாருனா நல்லா இருக்கும்னு எங்கிட்ட கேட்டார், அதான் கும்பலோட கும்பலா இதையும் சேர்த்து கும்மியடிச்சிட்டேன்.

கலைஞர் : இருக்கட்டும் இருக்கட்டும். அப்பறம் கவனிச்சிக்கிறேன். தம்பி நீங்க ஏதோ கேள்வி கேக்கனும்னு சொன்னியலே! என்னது அது?

ரகுமான்: தலைவரே! நீங்க எதுக்காக இவ்ளோ மெனக்கெட்டு எங்கிட்ட இந்த மொக்க‌ கதயச்சொல்லிக்கிட்டு இருக்கிய?

கலைஞர்: நல்லா கேட்டிய போங்க கேள்வி. என் அடுத்தப் படம் பாசப் பச்சோந்திகளை தயாரிக்கிறது சாந்தினி புரொடக்சன், வேலையில்லாம வீட்டுல படுத்துக்கெடக்குற‌ ராம நாராயானன் தான் இயக்குனர், இசை? வேற யாரு நீங்க தான்.

(இதைக் கேட்டவுடன் ரகுமான் திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படாரென கீழே விழுகிறார். ஆற்காட்டார் சோடா தெளித்து எழுப்புகிறார்.)

ரகுமான்: தலைவரே! இவ்வளவு அதிர்ச்சியான செய்தியை என் வாழ்க்கையில இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்ல. நான் இந்த‌ படத்துக்கு இசையமைச்சேன்னா எனக்கு ஆஸ்கார் விருது குடுத்தவங்க என் வீடு தேடிவந்து அதப்புடிங்கிக்கிட்டு போயிடுவாங்க. அதனால என்ன விட்டுருங்க.

ஆற்காட்டார்: என்ன தம்பி இப்படி பயப்படுறீக. தலைவர் இந்த மாதிரி எத்தனையோ கதையெழுதி எத்தன பேரோட கதைய...

கலைஞர்: யோவ்….....,

ஆற்காட்டார்: உயர்த்தியிருக்காருன்னு சொல்ல வந்தேன் தலைவரே!

கலைஞர்: அதான பார்த்தேன். தம்பி கடைசியா என்ன தான் சொல்றிய?

ரகுமான்: இந்தப் படத்த என கடைசி படமாக்கிறாதியேன்னு சொல்றேன்.

கலைஞர்: புரியலையே!

ரகுமான்: தலைவரே! இந்த டாக்டர் பட்டத்த வேனுமின்னாலும் நீங்களே வச்சிக்கிங்க. அதுமட்டுமில்லாம எனக்கு குடுத்த 2 ஆஸ்கார் விருதையும் உங்கள்ட்டயே கொண்டுவந்து குடுத்துடுறேன். என்ன வுட்ருங்கோ.

ஆற்காட்டார்: தம்பி! கதவு சாத்தியிருக்கு. இது ஒன்வே. உள்ள வந்தா வெளியப்போறது ரொம்ப கஷ்டம்.அதனால நீங்களே நல்ல முடிவு பண்ணிக்கங்க.

(இதைக்கேட்டு எழுந்த ரகுமான் குபீரென அங்கேயிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுகிறார். “டேய் புடிங்கடா அவன” என ஆற்காட்டார் கத்துவதைக் கேட்டு செக்யூரிட்டிகள் மெயின்கேட்டைப் பூட்டி விட்டு பாய்ந்து வர, அங்கே இருந்த கொடிக்கம்பத்தைப் பிடிங்கி அதன் உதவியோடு ஜம்ப் செய்து மெயின்கேட்டைத் தாண்டி அங்கு வந்த 13B பஸ் ஜன்னலைப் பிடித்து தொங்கியபடி எஸ்கேப் ஆகிறார் ரகுமான்)

கலைஞர்: என்னய்யா இப்டி ஆயிடிச்சி. சரி போனா போறான் விட்டுடு அவன பொழைக்கத்தெரியாத பய. நீ நம்ம பழையராசாவுக்கு போன போட்டு வரச்சொல்லுய்யா!

(ஆற்காட்டார் போன் போட அங்கே சேது பட காலர் டியூன் கேட்கிறது. “எங்கே செல்லும் இந்தப் பாதை, யாரோ யாரோ அறிவார்”)

ஆற்காட்டார்: (சிரித்தபடி) தலைவரே! நம்ம பழையராசா இன்னும் அலியின் ஆசை அதிர்சியில் இருந்து மீளலைன்னு நெனக்கிறேன். நல்லா ஓடுது பாருங்க ஒரு பாட்டு....,,

-முற்றும்

 

http://kaludai.blogspot.ca/2009/06/2.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.