Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந்துவைப்பார்

Featured Replies

பொது பல சேன அமைப்பினால் தலைமைத்துவ நிறுவகமொன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவகம் காலியில் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

 

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு, தலைமைத்துவ நிறுவகத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/60019-2013-03-05-05-58-33.html

  • தொடங்கியவர்

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் : முஜிபுர் ரஹ்மான்

 

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசு தடுக்காவிடின் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோமென ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

 

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டில் நாளுக்கு நாள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஓர் அமைப்பு செயற்படுகின்றது.


இதேவேளை, அவ்வமைப்பு பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ், இராணுவம் போன்று

செயற்படுகின்றது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காது மௌனமாக இருக்கின்றது. அல்லது நாம் தான் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளோமென வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

 

இந்த நாட்டில் இரண்டுவகையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது அரசாங்கத்திற்கு சார்பானவர்களுக்கு ஒரு சட்டம் மற்றையது அரசிற்கு எதிரானவர்களுக்கு ஒரு சட்டம். இந்நிலையில் பாடசாலைகளில் முஸ்லிம் - சிங்கள மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் உருவாக்கி விடப்பட்டுள்ளது. இச் செயற்பாடு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.


இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், பர்தா அணிந்து செல்ல முடியுமாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பயந்து கொண்டிருக்கவில்லை. இனியும் முஸ்லிம்களால் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது.

 

 

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தத் தவறினால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோமென அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3327

  • தொடங்கியவர்

அலரி மாளிகை மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும் அச்சநிலை

 

 

அலரிமாளிகையின் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழக்கும் நிலையை அரசு ஏற்படுத்தி விடக்கூடாது. இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தலைவர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கத் தீவிரமாக செயற்படும் பொதுபல சேனாவை அரசு உடன் தடைசெய்ய வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்பு; பர்தா அணிவதற்குத் தடை விதிப்பு; ஹலாலை நிறுத்துதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளைப் பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

அதனால் முஸ்லிம் சமூகம் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டது. ஆனால் இந்தத் தீவிர நடவடிக்கையில் பெரும்பாலான சிங்கள மக்கள் பங்கு பற்றாததாலும், அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாலும் முஸ்லிம்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கி வருகின்றனர்.

குருநாகல், பதுளை, மஹியங்கனை மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் குடும்பங்களின் இருப்புக்கும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் இருப்புக்கும் இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எந்தவேளையில் என்ன நடக்குமோ என்ற அச்சநிலை இன்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சநிலையை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டியது பொறுப்புமிக்க அரசின் கடமையாகும். இந்த அரசை நம்பியே இன்று முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம்கள் அரசுக்கே இன்றும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி அலரி மாளிகையில் வைத்துக் கூறியுள்ளார்.

ஆனால் அந்த அலரி மாளிகை மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கையிழக்காமல் இருக்க அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். என்றார். பெரும்பாலான முஸ்லிம்கள் அரசுக்கே இன்று ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=216061877405172419

  • தொடங்கியவர்

அமைச்சர் றிசாத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்



அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு எதிராக இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 

 

புத்தளம் நகரின் பிரதான சுற்று வட்டத்தில் இடம்பெற்ற இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நகர சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


இதன்போது அமைச்சர் றிசாத், புத்தளம் நகரின் நகரின் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும்  நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சுலோகங்களினை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பப்பட்டது.

 

புத்தளத்தின் அபிவிருத்தியில் அமைச்சர் றிசாத் தலையிட வேண்டாம் எனவும் இதன்போது கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

புத்தளம் நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான சுற்று வட்டத்திலிருந்து குருநாகல் - புத்தளம் பிரதான வீதியின் ஊடாக நகரின் சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் புத்தளம் பஸ் தரிப்பு நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

 

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழிலதிபருமான அலி சப்ரி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்ககையில்,

"புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் முஸ்லிம்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தவே புத்தளம் நகர பிதா பாயிஸ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். புத்தளத்தில் கால காலமாக இருந்து வந்த ஞாயிறு வாராந்த சந்தையை நகர பிதா பாயிஸ் தனது தனிப்பட்ட நலன்களுக்காக சனிக்கிழமைக்கு மாற்றியிருக்கிறார்.

இந்த சந்தை தின மாற்றத்தை புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் விரும்பவில்லை. இதனால் வர்த்தகர்கள் வியாபார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.எனவே தான் சனிக்கிழமை மாற்றிய வாராந்த சந்தை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரின் கருத்துக்களை நாம் கேட்டறிந்து வருகிறோம்.


எனவே நாம் செய்கின்ற பணியையும் புத்தளத்திலுள்ள மக்கள் எம்முடன் இருப்பதையும் கொஞ்சம் கூடப் பொறுக்க முடியாத நகர சபைத் தலைவர் பாயிஸ் தன்னுடைய குற்றங்களை மறைத்துக் கொள்ள சம்பந்தமே இல்லாத புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்.

 

தவிர இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளத்திலுள்ள எந்தவொறு பொதுமகனும் கலந்துகொள்ளவில்லை. புத்தளத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பல அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறார்.

 

புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் அமைச்சர் றிசாதிற்கு என்று நன்றியுயைவர்களாகவே இருப்பார்கள்.


இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்காளர்கள் பல்வேறு சதிகளை செய்து கொண்டிருக்கிhர்கள். இந்நிலையில் நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புன் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சரை வஞ்சிப்பது அநியாயமாகும்" என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/60024-2013-03-05-06-26-34.html

 

 

நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றத்தால் முஸ்லீம் பெண்கள் பார்த்தா அணிய முடிமோ என்னவோ, ஆனால் அது சிங்கள அரசு(பொது பல சேனா) போடும் சட்டமாகத்தான் இருக்க போகிறது. நாளைக்கு கோத்தா என்ன செய்வார் என்பதை நாம் இப்போ சொல்ல முடியாது. ஆனால் கக்கீம் அடுத்த முறை கொழும்புவில் இருந்து கிழக்கு மாகாணம் போகும் பார்த்தா மட்டும்தான் அணிந்து போக முடியும். அந்த மக்கள் மகிந்தா அரசுடன் சிறுபான்மை உரிமைக்காக போராட அளித்த வாகுக்களை இந்து நவீன G.G. இப்படி கெடுத்தவர். அவரால் கிழக்கு சென்று முகத்தை காட்ட முடியாது. அந்த வாக்குகளை வாங்கி கொண்டு கொழு போய் தான் அணிந்திருந்த கால் சட்டையையும் மகிந்தாவிடம் கழ்ட்டிக்கொடுத்துவிட்டு மந்திரி பதவி வாங்கி வயிறு கழுவுபவர். அங்கு வாய் திறந்தால் மத்திய கிழகுக்குதான் கப்பல் ஏறவேண்டி வரும் இந்த மந்திரிக்கு.

 

1915 லியே இலங்கையில் இனக்கலவரம் பிறந்தது. அதை ஆளும் வெள்ளையருக்கு எதிராக போராடி, இங்கிலாந்து சென்று கலவரத்தை சட்டப்படி அடக்கியவன் தமிழன். முட்டாள்தனமாக யாழ்பாணத்தில் இருந்து தனது அடுத்த வீட்டுகார உறவுகளை முஸ்லீம் தலைமைகளான பதியுதினும், கக்கீமும் போல காட்டிகொடுக்க வெளிக்கிட்டு அங்கு தமிழ் முஸ்லீம் உறவை சிதைத்தவர்கள். சட்டப்படி ஜனநாயகமாக வாழும் தமிழருடன் சேர்ந்து வாழ மறுத்த பதியுதின், கக்கீம் போன்றவர்களுக்கு அடாத்து மிக்க சிங்களவருடன் சேர்ந்து வாழ எள்ளவும் முடியாது என்பதையே இவர்கள் இன்று காண்கிறார்கள்.

 

யாழில் புலிகளுக்கு எதிராக வீசும் புயல்கள்  எல்லாம் வெறும் ஊது குழல்களே. இவற்றில் ஒன்றும் இதுவரை கோத்தா பொது பல சேனா என்ற அமைப்பை ஸ்தாபித்தை எதிர்த்து எதுவும் எழுதவில்லை. சிங்கள மேட்டுக்குடிக் கோத்தா பாதுகாப்பு கரியதரிசியாக இருப்பதால் மட்டும் புத்த மத இராணுவம் ஒன்றை உருவாக்கி நாட்டில் நடமாட விட முடியாது என்று ஒரு சொல் எழுத இவர்களுக்கு முடியாது.

 

திருவாளர் கோட்டை விடும் கப்பல் மந்திரி கக்கீமுக்கு மட்டும்:

First they came for the communists,
and I didn't speak out because I wasn't a communist.

Then they came for the socialists,
and I didn't speak out because I wasn't a socialist.

Then they came for the trade unionists,
and I didn't speak out because I wasn't a trade unionist.

Then they came for me,

and there was no one left to speak for me.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rajapaksas are planning to creating another ethnic violence between Sinhalese and muslims to hide the country's economic disaster and to divert people's attention.

  • கருத்துக்கள உறவுகள்

Rajapaksas are planning to creating another ethnic violence between Sinhalese and muslims to hide the country's economic disaster and to divert people's attention.

இது உண்மையானால் அப்படியே ஆகட்டும் ராணி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தாங்கள் யார் என்பதை உணரும்வரை

அவர்களுக்கெதிரான சிங்கள இனவெறியர்களின் அச்சுறுத்தல்கள் தொடரும்.

  • தொடங்கியவர்

இணக்க அரசியல் தான் முள்ளிவாய்க்கால் பின் ஒரே வழி என எம்மில் சிலர் நம்பினோம். அதற்கு உவமையாக முஸ்லீம் மக்களையும் அவர்கள் அரசியலையும் கூட கூறினோம். ஆனால், அந்த அரசியல் இன்று சேடம் இழுக்கும் நிலையில் உள்ளது.

 

இதில் இருந்து என்ன பாடம் படிக்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.