Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்னை: மார்ச் 12-ல் பொது வேலைநிறுத்தம்: டெசோ அமைப்பு அழைப்பு

Featured Replies

First Published : 05 March 2013 08:43 PM IST

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி மார்ச் 12-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடத்த டெசோ அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் மார்ச் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும்.இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டம் கட்சி சார்பற்ற முறையில் நடைபெறும்.தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வியாபார நிறுவனங்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் உள்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீக்குளித்து இறந்த கடலூர் மணிக்கும் டெசோ அமைப்பு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெசோ கூட்டத்தில் பங்கேற்றனர்.

http://dinamani.com/latest_news/article1489482.ece

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிங்களா...டெல்லியிலை தோசை சுட்டு ஆறவைத்து இப்பதான் சாம்பாரு விடதயாராகிறாங்கள்...நீங்க என்னடாவென்றால்...

தி.மு.க. செய்யும்  போராட்டங்களுக்கு  நன்றிகள்.

 

அதை வரவேற்கும் அதே வேளை தி.மு.க. போராட்டங்கள்  தமது அரசியல் தேவையை முன்னிறுத்துவதையும் மக்கள் தெரிந்து ஆதரவு தரல் வேண்டும்.

இந்தியா கட்டாயம் தீர்மானத்தை ஆதரிக்கும். பொதுவேலை நிறுத்தத்திற்கான கோரிக்கை மாற்றப்பட வேண்டும். தீர்மானத்தை வலுவாக்கச் சொல்லி வேலை நிறுத்தம் செய்யலாம். அப்படி இல்லாமல் தீர்மானத்தை ஆதரிக்க சொல்லி வேலை நிறுத்தம் செய்வது மக்களை ஏமாற்றும் செயற்பாடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.