Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுநாவல் சிங்கள மொழிபெயர்ப்புக்கு முன்னுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை.

07.03.2013

விமல் சாமிநாதன் என் அன்புகுரிய தோழன் அவனது  சிங்கள மனைவி பிள்ளைகள்

எல்லாம் இன்று அருகிப்போய்விட்ட உண்மையான மனிதர்கள்.

 

சே குவேரா வாழ்ந்த

தலைமுறையில்தான் இத்தகைய இலட்சிய வாதிகளை நான் சந்திதிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கையைத்தான்

நானும் தேடினேன்.அத்தகைய கனவுகளோடு அலைந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தோழர்கள் தோழியர்கள்

பலருடன் சேர்ந்து கனவுகண்ட அந்த நாட்களை போர் சிதைதழித்துவிட்டதுதான் சோகம்..

 

ஒரு கலைஞனாக நான் உள்ளொன்று வைத்து புறமொன்று

பேசியதில்லை. நான் நம்பியவற்றுக்காக உயிரை பணயம் வைக்க நான் ஒருபோதும்

தயங்கியதுமில்லை..

 

தமிழ் பேசும் மக்களுகெதிரான இன ஒடுக்குதலை எதிர்த்து

எழுந்த காலங்களில் வடபகுதி முஸ்லிம் மக்கள் பாதிக்கப் பட்டபோதோ அப்பாவி சிங்கள

மக்கள் பாதிக்கப்பட்டபோதோ கபட மவுனம் சாதிததில்லை.

 

 

என் தலை பணியாத கருத்துக்களுக்காக பல்வேறு தருணங்களில் பல்வேறு தரப்புகளால் நான் கொலைக்

களத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறேன்.

 

முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட அப்பாவிகளின்

இரத்தில் என் ஆன்மா மூச்சுத்தினறுகிறது. இத்தகைய ஒரு தருணத்தில் என் தோழன்

சாமிநாதன் என் குறுநாவல்கள் மூன்றை மொழி பெயர்திருக்கிறான். அவனுக்கும்

பதிப்பாளருக்கும் என் நன்றிகள்.

 

ஒரு கவிஞனாக கலைஞனாக சிங்கள மக்களுக்கு என்

வேண்டுகோள் தமிழ் பேசும் மக்களையும் அவர்களது சுயாட்ச்சிக் கனவையும் புரிந்து

கொள்ள முயற்சியுங்கள் என்பதுதான்.

 

வரலாறு தொடர்ந்தும் எல்லா தழைகளில் இருந்தும் மக்களை

விடுதலை செய்தே வருகிறது. தொடர்ந்தும் வரலாறு மக்களை விடுதலை செய்தேவரும். அந்த

வரலாற்றின் பங்காளிகளாக வாருங்கள்.

தோழமை அன்புடன்

 

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

visjayapalan@yahoo.com

 

 

 

Edited by poet

சென்னை.

07.03.2013

விமல் சாமிநாதன் என் அன்புகுரிய தோழன் அவனது  சிங்கள மனைவி பிள்ளைகள்

எல்லாம் இன்று அருகிப்போய்விட்ட உண்மையான மனிதர்கள்.

 

சே குவேரா வாழ்ந்த

தலைமுறையில்தான் இத்தகைய இலட்சிய வாதிகளை நான் சந்திதிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கையைத்தான்

நானும் தேடினேன்.அத்தகைய கனவுகளோடு அலைந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தோழர்கள்

பலருடன் சேர்ந்து கனவுகண்ட அந்த நாட்களை போர் சிதைதழித்துவிட்டதுதான் சோகம்..

 

ஒரு கலைஞனாக நான் உள்ளொன்று வைத்து புறமொன்று

பேசியதில்லை. நான் நம்பியவற்றுக்காக உயிரை பணயம் வைக்க நான் ஒருபோதும்

தயங்கியதுமில்லை..

 

தமிழ் பேசும் மக்களுகெதிரான இன ஒடுக்குதலை எதிர்த்து

எழுந்த காலங்களில் வடபகுதி முஸ்லிம் மக்கள் பாதிக்கப் பட்டபோதோ அப்பாவி சிங்கள

மகள் பாதிக்கப்பட்டபோதோ கபட மவுனம் சாதிததில்லை.

 

 

என் தலை பணியாத கருத்துக்களுக்காக பல்வேறு தருணங்களில் பல்வேறு தரப்புகளால் நான் கொலைக்

களத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டிருக்கிறேன்.

 

முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட அப்பாவிகளின்

இரத்தில் என் ஆன்மா மூச்சுத்தினறுகிறது. இத்தகைய ஒரு தருணத்தில் என் தோழன்

சாமிநாதன் என் குறுநாவல்கள் மூன்றை மொழி பெயர்திருக்கிறான். அவனுக்கும்

பதிப்பாளருக்கும் என் நன்றிகள்.

 

ஒரு கவிஞனாக கலைஞனாக சிங்கள மக்களுக்கு என்

வேண்டுகோள் தமிழ் பேசும் மக்களையும் அவர்களது சுயாட்ச்சிக் கனவையும் புரிந்து

கொள்ள முயற்சியுங்கள் என்பதுதான்.

 

வரலாறு தொடர்ந்தும் எல்லா தழைகளில் இருந்தும் மக்களை

விடுதலை செய்தே வருகிறது. தொடர்ந்தும் வரலாறு மக்களை விடுதலை செய்தேவரும். அந்த

வரலாற்றின் பங்காளிகளாக வாருங்கள்.

தோழமை அன்புடன்

 

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

visjayapalan@yahoo.com

 

 

 

வாழ்த்துக்கள் வசெஐ . உங்கள் இலக்கியப்படைப்புகள் எதிரணியில் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் பெரியளவு அவர்களில்  மனமாற்றத்தை ஏற்படுத்துமா ???  ஏனெனில் நான் கவிஞர் வெடிவர்த்தனாவின் கவிதைகளை இங்கு இணைத்தபொழுது அது தேடுவாரற்று கிடந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிஞன் எனப்படுபவன், அவன் சார்ந்த சமூகத்தின் ஒரு கண்ணாடியாகப் பார்க்கப்படுபவன்!

 

அந்த சமூகத்தின் உணர்வுகளையும், ஆதங்கங்களையும், ஏக்கங்களையும் அவன் தனது வார்த்தைக் கோவைகளினால் பிரதிபலிக்கின்றான்!

 

அதே வேளையில், தனது தனித்துவமான கருத்துக்களையும், சமூகத்தை நெறிப்படுத்தும் ஒரு நல்ல நோக்கோடு கவிதைகளாகவும், கதைகளாகவும் வடிக்கிறான்!

 

அந்தப் படைப்புகள், அவன் சார்ந்த சமூகத்தின் வேலியையும் தாண்டிச் சிறகு விரிப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்!

 

எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கவிஞரே!

 

விமல் சாமிநாதனுக்கும், அவரது மனைவிக்கும் எனது நன்றிகளும்!

 

இன்றுள்ள நிலையில், உங்கள் கருத்துக்களை எந்த அளவுக்குச் சிங்கள மக்கள், உள் வாங்குகின்றார்கள் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்!

 

ஆனாலும், சிறு தடைகள் வரினும், துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து நடவுங்கள் கவிஞரே!

 

நீங்கள் நடப்பீர்கள்! அதுவும் எனக்குத் தெரியும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கும் புங்கை ஊரானுக்கும் என் நன்றி. ஊருக்குத் தடையாக இருந்த மலையை அகற்றிய மூடக்கிழவன் பற்றிய சீனக்கதையை கேழ்விபடிருப்பீங்க. மலையை அகற்றும் பணியை தான் ஆரம்பித்து வைத்தாலே போதும். எதிர்காலத் தலைமுறை தனக்கு வேண்டிய வடிவத்தில் அந்தப் பணியை முடித்து வைக்கும் என அந்தக் கிழவன் நம்பினான். அனைத்துத் தலைமுறைகளிலும் அனைத்துத்தேசங்களிலும் கலைஞர்கள் மலையை அகற்றும் மூடக்கிளவர்களாகவே உள்ளனர். இதில் நானும் விதிவிலக்கல்ல.

இந்த பரபரப்புக்குள் விற்றால்த் தான் தேறும். சர்வதேச விசாரணை வருவதை கண்டு சிங்கள ஆமிகளும், சிங்களவர்களும் திகில் கொள்கிறார்களாக செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு மல்லையூரானுக்கு, உங்கள் அனுபவ வார்த்தைகள் முக்கியமானவை என்பதை உய்த்து உணர்கிறேன்.அதற்காக என்னுடைய முதல் வணக்கம்..

 

இத்தகைய வர்த்த விடயங்களில் இன்னும் நான் ஒரு அறிவிலியாகவே இருக்கிறேன். .

 

என்னுடைய குறு நாவல்களை தோழர் சாமிநாதன் அவர்களே மொழிபெயர்த்தார்கள். அவரேதான் அவற்றை புத்தகமாவும்க வெளியிடுகிறார் என நினைக்கிறேன். அவர்களுக்கு உங்கள் அல்லோசனைகள் நிச்சயம் உதவும். அனுப்பி வைக்கிறேன்.

Edited by poet

தோழர் சாமிநாதன் தனி ஒருவரின் அபிப்பிராயங்களை வாங்காமல் யாழில் போன்றவற்றில் இணைந்து தனது அபிப்பிராயம் தமிழ் மக்களிடம் செல்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.  

 

ஒரு தடவை தமிழர் மீது இந்தியா திணித்த தீர்வை ஆயுத போராட்டம் செய்த இயக்கம் ஏற்கவில்லை. அதன் பின்னர் தேர்தலில் வென்ற கூட்டமைப்பு ஏற்கவில்லை. சிங்கள மக்களின் மூன்று கட்சிகளான JVP. UNP, SLFP ஏற்கவில்லை அசிரபின் உடைந்து போன ஒரு மு.க கட்சிகளும் ஏற்கவில்லை.  

 

சர்வாதிகாரமாக  யாழில் கருத்து வைத்து மூன்று முறை மன்னிகேட்டவர்கள் அதை  எமது உரிமைக்காக போராடும் தமிழ்நாட்டு தமிழ் மக்களிடம் TV யில் விற்கிறார்கள். தோழர் சாமிநாதனுடன் சேர்ந்து புத்தகத்தில் சிங்கள மக்களிடம் தனிநாட்டு கோரிக்கை விற்கிறார்கள்.

 

தோழர் சாமிநாதன் தனி ஒருவரின் அபிப்பிராயங்களை வாங்காமல் யாழில் போன்றவற்றில் இணைந்து தனி மனிதர்களின் அபிப்பிராயங்கள் மன சுத்தியுடன் தான் வெளிவருகிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.  

 

இவர்கள் தங்களுக்கு யாபாரம் தெரியாது மாதிரியும் நடிக்கிறார்கள். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடித் தேடி சேறடிக்கும்மல்லையூரான், உங்களோடு விதண்டா வாதம் செய்யவோ மாறி மாற் சேறடித்து விழையாடவோ நான் தயாரில்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு மதுவிருந்தாக இருக்கு. அதனால்தான் ஒதுங்கியிருந்தேன். இத்தகைய சிக்கலான உறவுகள் ஒருவருக்கு ஒருவர் பின்னூடம் எழுத முடியாதபடி தடுக்கப்படவேண்டும். அதை தவிர யாழில் உருப்படியான விவாதங்கள் நடக்கும் வாய்ப்பில்லை என்பதி யாழ் நிர்வாகம் உணர்ந்துகொள்ல வேண்டும்

யாழுக்கும் ஒரு நோக்கம் இருக்கு என்பதால் தான் நாமும் இங்கு எழுதுகிறோம். புத்தக வியாபரத்திற்கு விளம்பர தலமாக மட்டும் இருந்திருந்தல் நாமும் ஒதுங்கி இருந்திருப்போம்.

 

தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்தால் சர்வாதிகாரத்தனமாக திருப்பித்தாக்கும் இயல்புடையோர் போதிக்கும் சமாதானம் என்பது மகிந்த சித்தாந்தத்தில் மட்டும்தான் கண்ப்படுகிறது என்பது உண்மையா இல்லையா?

 

யாழில் தங்களின் வேறு நோக்கங்களுடன் திரிக்கப்பட்டு வைக்கப்படும் கருத்துக்களுக்கு உண்மையை எடுத்து கூறி எதிர்க் கருத்துக்கள் சொல்வோருக்கு பதில் இல்லாத போது சேறடிப்பதாக எதிர்க்கருத்தாளர்களை பயங்கரமாக தாக்குவதை தவிர இது வரையில் பதில் வந்ததே இல்லை.

 

முன்னுரையில் தனிநாடு தரும்படி இப்போது எழுதி அதன் தமிழ் பகுதியை மட்டும் இங்கே பதிவதை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்.   

 

உண்மையை சொல்ல முடியுமா? இது வரையும் இலங்கையை கைவிடாத இந்தியா இப்போது இலங்கையிடம் தான் உதவ முடியாது, நேராக அமெரிக்காவிடம் போய்ப் பேசுங்கள் என்று இலங்கைக்கு பதில் அளித்துவிட்டதாக  செய்திகள் வெளிவருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவிடம் போய் தமிழர்கள் 13ம் திருத்தம் கேட்க, இந்தியா இலங்கையிடம் தமிழருக்கு 13ம் திருத்தம் கொடுக்கும் படி சொல்லப்போகிறதென்றும், 1987 ல் இருந்து 13ம் திருத்தத்தை கழித்து வைத்த இலங்கை அதை உடனே கொடுத்து அதிரடி நடவடிக்கையாக நிறை வேற்றும் என்று யார் உங்களை பிரசாரம் செய்ய சொல்லி கேட்பது. இந்தியாவின் இரகசிய சேவைகள் யாராவதா? அல்லது இந்தியா கை கழுவிட்ட இலங்கையில் இருந்து யாராவது இந்தியாவை திரும்ப பிரேரணைக்குள் இழுத்து விழுத்தி அதிலிருந்து தப்பிக்க முயல்பவர்களா? இந்த பிரச்சணையில் இருந்து இந்தியா வெளியேறும் நாட்கள் வந்துவிட்டத்தாக எழுதப்படும் கருத்துக்களை படிக்கவில்லையா? சென்ற தடவை இந்தியா சென்று வந்த சம்பந்தர் இந்தியா தங்களுக்கு எந்த உதவிக்கான வாக்குறுதியும் தரவும் இல்லை என்றும் அதேநேரம் தங்களை எதுவும் செய்யச் சொல்லி சொல்லவும் இல்லை என்று பேசியதை வாசிக்கவில்லையா? இந்தியா இனி ஒதுங்க வேண்டும்.

 

மேலதிக ஊடுருவல்களை தடுக்க இலங்கை இராணுவத்தை சர்வதேசம் வந்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு சரத்து பிரேரணையில் போட்டிருப்பதை உண்மையில் காணாதபடியாலா, அல்லது அந்த சரத்தை குழப்பும் படியாக யாராவது சொல்வதாலா திரும்ப 13ம் திருத்ததை கூறி இந்தியாவை இழுத்து வந்து கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்குள் தள்ள முயல்கிறீர்கள்?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.