Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று போராடுங்கள்.. திமுகவுக்கு நெடுமாறன் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11-nedumaran300.jpg
 
 
 
சென்னை: மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று இல்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்தியுள்ளன. வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈரமில்லாத வகையில் உரையாற்றியிருக்கிறார்.

 

நமக்காகப் போராட வேண்டிய தளபதி எதிரிப்படையின் முன்வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோச னைகளை வாரி வழங்கியிருப்பதைப் போலத்தான் அவரின் உரை அமைந்துள்ளது என திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 

ஏற்கனவே நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஈழப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் போக்கினை தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார்.

 

முதல்வர் பதவியில் இருந்தபோது கூறாத வகையில் மத்திய அரசின் மீது கண்டனம் தெரிவிக்க இப்போதாவது அவர் முன் வந்துள்ளார். காலம் கடந்து மத்திய அரசுக்கெதிராக நடத்தும் மாநாடுகள், போராட்டங்கள் போன்றவை யாருக்கெதிராக என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வியாகும்.

 

மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

சரியான கோரிக்கை.. உள்ளேயிருந்து இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை.. இதயத்தில் மாற்றம் வந்திருந்தால் வௌியேறியிருப்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

1947 முதல் ஈழதமிழர்களுக்காக பல போராட்டங்கள் அண்ணா தலைமையில் சிதம்பரத்தில் பொதுகூட்டம், மயிலை மாங்கொல்லையில் அறபோராட்டம் என்று தொட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது திமுக கழகமே. இவ்வளவு ஏன் ஈழ தமிழர்களாக அரசையும் இழந்திருக்கிறோம்.

பதவியில் இருப்பதால்தான் நம்முடைய கோரிக்கையை இந்த அளவிற்காவது மத்திய அரசிடம் வலியுறுத்திட இயலுக்கிறது என்பது எனோ சில சிறுமதி படைத்தவர்களுக்கு விளங்கிட வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் எண்ணம் எப்படியாவது கழக உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும். மத்தியில் மத சார்பான அரசை கொண்டு வந்துவிடவேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.அவர்களின் எண்ண் ஓட்டத்தை கழக உடன்பிறப்புகள் தமிழக மக்களிடம் எடுத்து செல்வீர்கள் என்ற எண்ணம் இந்த அண்ணனுக்கு உண்டு..

டிஸ்கி:

நாம எல்லாம் எத்தனை வருடமாக இருக்கிறம் இந்த பீல்டுல..


நெடுமாறன் அவர்களின் அறிக்கைக்கு பதில்  "நகல்" இப்படித்தான் இருக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான கோரிக்கை.. உள்ளேயிருந்து இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கோரிக்கை.. உள்ளேயிருந்து இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை ....

 

அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்பது தான் ஞாபகத்துக்கு வருகுது :(

சரியான கோரிக்கை.. உள்ளேயிருந்து இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை ....

 

பண சம்பாதித்தது மட்டுமே

Request made is an eye opener. He will  never do it. At least his action has promoted the out cry of students who are genuinely fighting for the  cause of the Eelam Tamils. Had he withdran the support to the Indian Central Government in 2009 during the height of the War, he would have saved the lives lost and he would have been the C.M. for ever. Kankeddapin suriyanamaskaram ethatku.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.