Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

திருச்சி

சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கபட்டத்தை கண்டித்து சென்னை டாக்டர் அம்பேத்கர்

சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பகவன் எதிரில் உள்ள தமிழ்

நாடு தேசிய காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Madurai Mohanraj Rm//

மதுரை மாணவர்களின் அதிரடி

போராட்டம் பேரணிகளில் வேடிக்கை பார்க்கும் மக்களை பார்த்து -வேடிக்கை பார்க்கும் தமிழினமே -வீதிக்கு வந்து போராடு என்று கோஷமிட்டு ,கையில் கொஞ்சம் உப்பை பரிசாக வழங்கினார்கள் -----அப்படியாவது ரோசம் வரட்டும் என்று

 

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

ஆஸ்திரேலியாவில் தொடருகிறது இளையோர் உண்ணாவிரத போராட்டம்.... —
 
392907_598997380112291_576678115_n.jpg

Loyolahungerstrike

அகில இந்தியா வானொலி முற்றுகையின் போது .

 

541223_598905503454812_73541881_n.jpg

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ மாணவர் உண்ணாவிரதம்

 

150474_598912380120791_1996082627_n.jpg

 

579190_598912353454127_1658745672_n.jpg

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம் மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள், எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை. எங்கள் அனைவரின் நோக்கம் தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான, சுதந்திரமான, உரிமையான, அவர்களுக்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெறும் வரை எங்கள் அறவழி பணி தொடரும் .

இப்போதைய தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் .

அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல.

 

(முகநூல்)

மதுரை மாணவர்கள் போராட்டம் நாளை.

இடம் -மதுரை லேடிடோக் கல்லூரி எதிரில் உள்ள Employees' Provident Fund Organisation அலுவலகம் முற்றுகை
நேரம் - காலை 10 மணி

தொடர்புக்கு - 7200998864

அனைத்து தமிழ் ஈழ ஆதரவாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வோம்

 

(முகநூல் : loyolahungerstrike)
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

திருச்சி சட்ட கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பகவன் எதிரில் உள்ள தமிழ் நாடு தேசிய காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

 

253763_598994096779286_86322612_n.jpg

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

599235_126341204217612_1733502358_n.jpg

 


(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம்: மாணவ போராட்டக் குழு எச்சரிக்கை
 

மதுரை: தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. 

மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள்.

Mdu_Students_Relay1.JPG

 

Mdu_Students_Relay_3.JPG

இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்" என்றார். 

இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,  அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள் தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

Mdu_Students_Relay_6.JPG

\இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள், வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி, அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.

- கே. கே. மகேஷ்

படங்கள்: வி. சிவக்குமார் 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13281

மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்!

 

8400_281973781936242_1844661328_n.jpg

 


சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகில இந்திய வானொலி நிலையத்தைச் சுற்றிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார்
குவிக்கப்பட்டிருந்தனர்.

மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விண் அதிரும் கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். மத்திய அரசின் அலுவலகங்களை முற்றிலும் முடக்கும் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருந்தது. இந்த அறவழிப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் வானொலி நிலையத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்ட போது, மாணவர்கள் பொலிஸாரால் மிருகத்தனமாக நடாத்தப்பட்டனர். போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாணவியான திவ்யாவை பொலிஸார் குண்டுக்
காட்டாகத் தூக்கி வானில் ஏற்றினர். அப்போது திவ்யா பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கதறினார்.

 

மற்றைய மாணவர்களையும் பொலிஸார் தகாத வார்த்தைகளினால் திட்டினர்.

தமிழக அரசின் ஏவலின் பெயரில் பொலிஸ் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி மிருகத்தனமாக நடந்து கொண்டமையானது மாணவர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனி முழுவீச்சில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் முன்னெடுக்கப்படும் என மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார்.

 

(முகநூல்)

மாணவர் போராட்டம் பற்றியும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தீர்மானம் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிலங்கா பாராளமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனுடனான நேர்காணல் - (27-மார்ச் 2013)

 

போர்க்கலைகள் கற்றவன் நான் அல்ல ; கலைப்போர் யுத்திகள் கற்றவன் !!!

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பல்லின மக்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பிவருகின்றனர். அவ்வாறாவர்களில் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட மாணவி மோனிஷா ஜெயபாலன் அவர்களின் நேர்காணல்

 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் பேரணி 

chennai-9991.jpg

 

 




ஈழ தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், ஈழ மக்களுக்காக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையினரை கண்டித்தும் திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை 11 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தெற்கு ரயில்வே அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 500 மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன், 

அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் ஒரு ஏமாற்று வேலை. இனப்படுகொலை நிகழ்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணைதான் தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு தன்னிச்சையாக இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும். திருச்சியில் ஈழ மக்களுக்காக போராடி வரும் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். இதனை மாணவர்கள் அமைப்பு கண்டிக்கிறது என்றார். 

 

படங்கள்: அசோக்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95495

இலங்கை வீரர்கள் விளையாடாதது வருத்தமளிக்கிறது-குஷ்பு...

 

உன்ன சொல்லி குத்தமில்லை..உனக்கு கோவில் கட்டி வளர்த்து விட்ட எங்கள சொல்லனும்!!

 

 

- முகநூல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி குண்டர்களினால் கண்மூடித்தனமாக தாக்கப்பபட்ட மாணவர்களை பழ.நெடுமாறன் பார்வையிட்டார்: camera_icon.jpeg video_icon.jpeg 

-Thiruchi-270313-students-150.jpg

திருச்சியில் நேற்றையதினம் (27-03-13) காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வடக்கு மாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி எம்.பி யும் கலந்து கொண்டார் .

  

இன் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துதிருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்கள் கருப்புப்கொடி ஏந்தி எதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரண்டு மாணவர்கள் மீது உருட்டு கட்டைகள் கூரிய ஆயுதங்கள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினார்கள் இதனால் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரச பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

 

 

இவ் மாணவர்களை பார்வையிட நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம் போன்ற கட்சி தொண்டர்களும் வழக்கறிஞ்சர்கள் தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் மருத்துவமனையில் திரண்டிருந்தார்கள் அப்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை தாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் சிலர் உள் நுழைய முற்பட்டனர் இதனை அறிந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு காங்கிரஸ் கட்சியினரை தாக்கி மருத்துவ மனையை விட்டு வெளியேற்றினார்கள் .

இதன் பின்பு மாணவர்களை பார்வையிடுவதற்காக ஐயா பழ .நெடுமாறன் அவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் சிகிச்சை அளிக்கப்படும்மாணவர்களை பார்வையிட்ட பின் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காங்கிரஸ்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதோடு காவல் துறை உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

%20Thiruchi-270313-students%20(5).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(6).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(2).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(1).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(3).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(4).jpg

 

 

%20Thiruchi-270313-students%20(7).jpg

 

Edited by தமிழரசு

564581_599365146742181_1091888015_n.jpg

 

------------------------------

 

388380_599318990080130_46167884_n.jpg

இலங்கையில்
நடந்த இனபடுகொலையை கண்டித்தும் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள்
தன்னெழுச்சியாக செய்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,
ஜப்பான் தமிழர்களின் சார்பாக இந்திய தூதரகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணா
நிலை போராட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மாபெரும்
மனிதாபிமான குற்றங்களை கண்டித்து நமது வருத்தங்களை பதிவு செய்ய வேண்டும்
என்று மனிதாபிமானம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

 

-முகநூல்-

Edited by சகானா

இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது .

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல்
அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ,
வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட
வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில்
மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக
தெரிவித்தனர் .

மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்

- தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் .

- இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும்

- இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் .

- தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் .


-  ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும்
பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் .


- இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ ,
கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு
தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் .

- பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட
விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை
ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது .

இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர்

 

305294_599389393406423_1424340915_n.jpg

 

ஒருங்கிணைப்பாளர்கள்
கை கோர்க்கிறார்கள் ! ஐ.பி.எல்லில் இலங்கை வீரர்களை தமிழகத்தை விட்டு
விரட்டிய மாணவ வீரர்கள் அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட களமிறங்கி
விட்டாரகள்! பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - சேப்பாக்கம்

 

522421_599390080073021_131158776_n.jpg

 

-முகநூல்-

Edited by சகானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

! Mass protest on Friday 05/04/13. Lets all join together in solidarity with Tamil Nadu students @ Trafalgar Square @ 1pm. We urge everyone to take part demanding justice for the continuing 65 years of Genocide against Tamils and UN monitored referendum for Tami Eelam. Plz fwd. TCC UK 020 3371 9313

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோவையில் ஞாயிறன்று காலை 10 மணி அளவில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதற்கும் தமிழகம் முழுதும் மாணவர்கள் ஒன்றிணைத்தல் குறித்தும் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது இடம் இன்னும் முடிவாகவில்லை . கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Trichy Maanavarkal meethu thaakkuthal nadathiya kangkiras rowdikal meethu nadavdikkai edukka kori matrum thani thamil eelam vendi pothuvaakkeduppu nadatha valiyuruthiyum naalai kaalai 9 maniyalavil puthukkottai kaangiras aluvalagathirku poottu podum poraattam...thozharkal anaivarum varuka..

place: pudukkottai
time:9 am
date:30.03.2013

thodarpukku :
shanmuganathan - 9751466364
nagaa athiyan -8883382058

*************************************

-முகநூல்-

Loyolahungerstrike

527770_599566120055417_1913378684_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

483911_599572323388130_1409076362_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 

----------------------------------------------------------------------------------------------------------------------------------
 

554528_599577536720942_272497680_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)
 



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தஞ்சை மாவட்ட பூதலூர் அருகில் ( திருச்சி-தஞ்சை இரயில் வழியிலுள்ள ) அய்யனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்வரும் 30-12-2013 அன்று அய்யனாபுரம் இரயிலடி முன்னபாக தமிழீழத்தில் நடைபெற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஒருநாள் அடையாள உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடைபெற உள்ளது .தஞ்சை -திருச்சி மாவட்டங்களிலுள்ள உணர்வாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைக்கு நமது பங்காளிப்பை கொடுப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "

 

(முகநூல் : loyolahungerstrike)
 



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வணக்கம் நண்பர்களே நாளை 30-03-2013 நம் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தனித் தமிழீழ நாடு வேண்டி கோவை காந்திபுரம்
தமிழ்நாடு உணவகம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் கோவை மாவட்ட தங்க நகை தொழிளாளர் நண்பர்கள் மற்றும் 80வது வார்டு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து நடத்த இருக்கிறோம் எனவே அனைவரும் கலந்து நம் உறவுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்,

 

பேச:

முரளி 9894864644
கார்த்திக் பாரதி 9042007489

 

(முகநூல் : loyolahungerstrike)



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பூபதி நகர் பொது மக்களுடன் சட்ட கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்.

தொடர்புக்கு - பிரதீப்: 9941586869

 

521430_599627423382620_781910252_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Edited by துளசி

திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கியதைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆர்பாட்டம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தஞ்சையில் திருச்சி மாணவர்களை தாக்கிய அயோக்கியர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது, மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இலங்கையை ஆதரிக்கும் நாடுகளின் பொருட்களை புறக்கணிப்போம் - கோவை மாணவர் கூட்டமைப்பு.

தொடர்ந்து பேசிய மாணவர் கூட்டமைப்பினர், ''தனித்தமிழ் ஈழம் தேவையில்லை எனவும் ஒன்றுபட்ட இலங்கை மட்டுமே போதுமானது என கூறும் தமிழீழத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.

தமிழீழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு. ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், நடுநிலையுடனும் செயல்பட்ட நாடுகளின் உற்பத்தி பொருள்களை புறக்கணிப்போம். ராஜபக்சேவை போர்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை இந்தப் போராட்டம் ஓயாது"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போற்குற்றவாளிகளான சிங்கள அரசும் - போருக்கு துணைபோன இந்திய அரசும் இணைந்து பங்கு பெரும் ஐ பி எல் போட்டியை புறக்கணிப்போம் ! எதிரிகளையும் துரோகிகளையும் தோலுரிப்போம் !

 

24657_599642896714406_786764705_n.jpg

(முகநூல் : loyolahungerstrike)

நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வொம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில்

புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்..

# # நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்..

மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு அழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்..

 

(முகநூல்)

நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது இதுதான். வீடியோவை பாருங்கள்.

 

அன்பார்ந்த உலகதமிழ் முகநூல் நண்பர்களே புதியதலைமுறை தொலைக்கட்சிக்கு ஆதவும் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பும் தெரிவியுங்கள் இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது

 

http://www.facebook.com/photo.php?v=576907705661081&set=vb.100000255716394&type=2&theater

 

(முகநூல்)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இ வி கே எஸ் இளங்கோவன்

அறிவிப்பாளரைத்தாக்கியது வீடியோவில் தெரிகிறது

காந்தீய  கட்சி

அதன் தொண்டர்

வாழ்க ஐனநாயகம் :(

  • கருத்துக்கள உறவுகள்

எதை தூக்கி எறிந்தவர் என்பது பதிவில் இல்லையா? அடுத்த தேர்தலில் இவர்களின் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வாக்குகள் ஐநூறை தாண்டக்கூடாது.. :unsure:

மலேசியா எங்கும் தமிழர் முன்னேற்ற அமைப்பும் இளையோர்களும் மாணவர்களும் வீதி எங்கும் தொடரும் ஆர்ப்பாட்ட பேரணிகள், தமிழீழத்துக்கான கோசங்களும் மற்றும் தமிழகத்து மாணவர்களுக்கான ஆதரவாக குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

மேலும் மலேசிய மக்களில் கவனத்தை ஈர்த்து மகிந்த ராஜபக்சேவின் புகைப்படத்தை வீதியில் போட்டும் செருப்பால் அடித்தும் அதன்மேல் வாகனங்களை ஏற்றியும் வினோதமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மலேசிய எங்கும் இளையோர்களாலும் மாணவர்களாலும் சுதந்திரத் தமிழீழத்துக்கான வழிகோல் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என மலேசியாவில் உள்ள இளையோர்களும்
மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

 

541141_428378707252872_1454237430_n.jpg

 

(முகநூல்)


------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பாரிஸில் , ஈபிள் டவர் முன்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ் சொந்தங்கள் .

 

578247_428393610584715_1194235862_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

தமிழக சட்டபையில் நிறைவேற்றிய தனித் தமிழீழ வாக்கெடுப்புக்கான தீர்மானம் இந்திய நாடாளு மன்றத்திலும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தமிழக மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.