Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டில் பிக்கு மீது தாக்குதல்காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழகமே இலங்கை இன படுகொலைக்கு எதிராக போரட்டம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் இவர்கள் இங்கு வர அனுமதி தந்த குறுமுட்டை அதிகரிகள் யார் ? இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் மத்தியில் ஆளும் காங்கரஸ்தான் ஏற்க வேண்டும்.

இன போராட்ட வீரர்களை தமிழக அரசு வழக்கு போடமல் அவர்களை விடுவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இப்படியான விடயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு அவர்களின் உணர்வை வெளிப்படுத்த உரிமையுள்ளது. ஆனால் ஊடகங்கள் இவற்றை வெளியிடும் போது.. சிங்கள அரசின் ஆயுத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பல இலட்சம் ஈழத்தமிழர்களின் நிலை குறித்துச் சிந்தித்து.. சுய தணிக்கைகளோடு இவ்வாறான செய்திகளை பிரசுரிப்பது நன்று..!

 

சிங்கள இனவெறியர்கள்.. தமிழ் உணர்வாளர்களை போல அடித்து உதைத்து போட்டு விட்டு விடுபவர்கள் அல்ல. ஆணோ பெண்ணோ சுட்டுக் கொன்றும் கொல்லாமலும்.. சீரழித்து மனித உயிர்களை முற்றாக அழிக்கும்.. ஒரு விதமான மிக மோசமான காட்டுமிராண்டிகள். அந்தக் காட்டுமிராண்டிகளை கையாள வேறு வகையான நடவடிக்கைகளே முக்கியம்..! அவன் வைச்சிருக்கும் ஆயுதத்திற்கு மிஞ்சிய ஒரு ஆயுதத்தால் அவன் நிலத்தில் நின்று அவனோடு நாம் நீதி தர்மம் மானுடம் பற்றிப் பேச வேண்டுமே தவிர இவ்வாறான சொட்டல்கள் சொறியல்களால் சிங்கள இனவெறியர்களை திருத்த முடியாது. அவங்களும்.. திருந்தப் போறதில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது நெடுக்ஸ்.. மக்களை அந்த அளவுக்கு இருட்டில் பூட்டி வைத்திருந்தார்கள்..!

 

இந்தமாதிரி பிக்குகளோ, சிங்களவரோ வந்தால் அவர்களிடம் சமாதானமாகப் பேசி, இன அழிப்புப் படங்களைக் காட்டி இதுகுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்க வேணும்.. பயத்தில் உண்மையைச் சொல்லிவிடுவான்கள்..! அந்தக் காணொளியை ஊரெல்லாம் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவை வெருட்டிய, தமிழ் உணர்வாளுக்கு பாராட்டுக்கள். :) 
பிக்குவுக்கு ... சைவக் கோயிலுக்குள், என்ன அலுவல் என்று கேட்கிறன்.

தமிழகம் கொதிக்குது. இப்படி பச்சையாக உணர்வை வெளிக்காட்ட வேண்டிய நிலையை அவர்கள் அடையும் வரை போடா சட்டத்தால் அடக்கி வைத்திருந்த டெசொ புகழ் கருணாநிதிதான் இதற்குப் பொறுப்பு. இனி இலங்கையில் ஒன்று நடந்தால் தமிழ் நாட்டுமக்கள் கருணாநிதியை பொறுப்பு கூற வைக்க வேண்டும்.

 

இது அண்ணா காலம் அல்ல. அன்று தமிழ்நாடு ஒரு பிச்சைக்கார மாநிலம். அன்று எது நடந்தாலும் அது அண்ணவின் தனிப்பட்ட திற்மையில் இருந்து மட்டும்தான் வரவேண்டியிருந்தது. ஆனாலும் அண்ணா தனது திறமையால் கங்கிரசை வெளியே துரத்தினார்.

 

இன்று மாநிலத்தின் கதை வேறு.  அவர்களின் இன்றைய தமிழ் உணர்வு என்பது சுதந்திர போராட்ட காலம் மாதிரி வடமொழிப் புராணக்கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்து பத்திரிகையில் எழுதுவது அல்ல. "தமிழ் என்றால் அதன் பொருள் தமிழன். தமிழுக்கு ஒரு இடம் என்றால் தமிழனுக்கு ஒரு இடம்." என்பது இன்றைய படித்த, தொழில் வாய்புகள் தேடி அலையும் தமிழ்நாடு மானிலத்து மாணவர்களின் நிலைப்பாடு.

 

தமிழுக்கு ஒரு இடம் என்றால், அவர்களுக்கு இப்போ அது, தமிழனுக்கு ஒரு இடம் என்பது என்றது தெரியும். முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாய் துடித்து துடித்து குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இளைஞ்ஞர்களும் கிந்திய ரசாயன குண்டுகளுக்கு பலியாக்கிக்கொண்டிருந்த போது அந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்துகொண்டு  அந்த  கொலைகளை மூடி மறைக்க கருணாநிதி செம்மொழி மகாநாட்டை நடத்தி அதில் அடுக்கு மொழி கவிதை எழுதி பாடினால் அது தமிழின் பேரால் தமிழுக்கு நடக்கும் அழிப்பு என்று அவர்கள் எல்லோருக்கும் தெரியும், அன்று அவர்களை போடா சட்டத்தால் கைகட்டி, வாய் பொத்தி, சப்பாணிக்கட்டி இருக்க வைத்துவிட்டு கருணாநிதி இந்த நாடகத்தை மேடை ஏற்றினார்.

 

இன்று தமிழ்நாடு, நாட்டின் முன்னனி மானிலங்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகாலம்  கருணாநிதி மத்திய அரசுடன் ஒட்டி இந்திய சபையில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் போய்விட்டது; ராஜாஜி, காமராஜர், நிஜலிங்கப்பா, சிதம்பரம்....  தகுதி உண்டோ இல்லையோ ஒரு தமிழனை மேடை ஏறவிடாமல் மட்டம் தட்டி விடுவார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவில் தமிழன் பிரதமராக முடியாது. படித்து முன்னேறியிருக்கும் இளைஞ்ஞர்கள் இனிமேல் தமக்கு என்று இடம் இல்லாமல் கிந்தி ஒதுக்கல்களை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அந்த சதிக்கு துணை போகும் குள்ளநரிகளை ஏற்கவும் மாட்டர்கள். 

 

இனி தமிழ் நாட்டிலோ அல்லது இலங்கையிலோ ஒரு அவலம் நடந்தால் அதற்கு கருணாநிதி தனிப்பட பொறுப்பு. 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை தவறு என்று சொல்லுரவர்கள் தமிழனாய் இருக்க தகுதி இல்லாதவர்கள்
வாழ்க்க எமது தமிழ் நாட்டு உறவுகள்

paarka migavum magilvaaga irukku

 

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில், சிங்கள இன புத்த பிட்சு மீது கடும் தாக்குதல்.

 

வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இன புத்த பிட்சு மாணவரும் ஒருவர்.

 

இந்நிலையில், இன்று (16.03.2013) காலை நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, மதிமுக வினர் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர், புத்த பிட்சு மீது தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தடுத்த மற்றவர்கள், புத்தபிட்சுவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தொல்லியல் துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் தமிழ் அமைப்புகள் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

 

இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு வேனில் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டது. 

 

 

eelam%20attack%201.jpg 

eelam%20attack%202.jpg

 

eelam%20attack%203.jpg

செய்தி: நக்கீரன்.

படங்கள் : ஜே.டி.ஆர்.

 

இந்த செய்தி சிங்கள ஊடகங்களில் கடந்த சில நாட்களாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று சிங்கள தேசம் தமிழ்நாட்டிற்கு பிரயாணம் செய்வோரை எச்சரிக்கும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

 

Govt. might issue travel advisory against TN

 

http://www.dailymirror.lk/news/26792-govt-might-issue-travel-advisory-against-tn.html

 

 

sr600_1.jpg

sr600_2.jpg

sr600_3.jpg

sr600_6.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.