Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன - இலங்கை ஜனாதிபதிகள் கலந்துரையாடல்

Featured Replies

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், சீனாவின் புதிய ஜனாதிபதி க்சீ ஜின்பின்னுக்கும் இடையில் நேற்று தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

சீனாவிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஜின்பின்னுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.hirunews.lk/tamil/55369

  • தொடங்கியவர்

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்: சீனா

 

'இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்' என சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது.

'ஒரு நாட்டில் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் பிரச்சினைகளை பாரபட்சமின்றி அனுகவேண்டும்' என்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது.

 

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பான மீளாய்வின்போது பல நாடுகள் தமது பாராட்டுதல்களை இலங்கைக்கு வழங்கியிருந்தன. இதன்போது பல நாடுகள் தமது கருத்துக்களை இலங்கை தொடர்பாக வழங்கியிருந்தது.

 

'யுத்தம் முடிவடைந்ததிற்கு பின்பு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள வேண்டும். இலங்கை சர்வதேச சமூகத்திடம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் சாதகமாக அமைந்துள்ளன' என இதன்போது, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60813-2013-03-16-04-09-23.html

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு நாலு யானைக்குட்டிகள் வெகுவிரைவில் பயணத்தை ஆரம்பிக்கும், என எதிர்பார்க்கலாமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு நாலு யானைக்குட்டிகள் வெகுவிரைவில் பயணத்தை ஆரம்பிக்கும், என எதிர்பார்க்கலாமா? :icon_idea:

 

Devon-Rutilated-Quartz-and-Elephant-Hair

 

ஊரிலை உள்ளவன், யானை மயிரிலை... ஒரு மோதிரம் போட ஏலாமல் கிடக்குது.

இவங்கள்... முழு யானையை, யப்பானுக்கும், சீனாவுக்கும் கொண்டு போய் குடுக்கிறாங்கள். :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
சீனா இலங்கைக்கு ஆதரவளிக்கும்: புதிய ஜனாதிபதி உறுதி

 

images25.jpgஇலங்கையின் இறைமையைப் பாதுகாக்க தமது ஆதரவை அளிக்க வேண்டும் என சீனாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

 

இரண்டு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள் எனவும் இலங்கை மக்களின் மேம்பாட்டிற்காக சீனா வழங்கும் ஒத்துழைப்புக்களிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையின் சுதந்திரம், இறைமை, பூகோள ஒருமைப்பாடு, என்பனவற்றைப் பாதுகாப்பதற்கு சீனா உறுதியான ஆதரவை அளிக்கும் என்றும், சீனாவின் இயல்புக்கேற்ற வகையில் இலங்கைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

இதன்போது, இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க தமது நாடு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், உதவிகளை வழங்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம், சீனாவின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

 

நீண்டகால நட்பு நாடுகளான இலங்கை - சீன உறவுகளை மேலும் மேப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சீன ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.