Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை: 1000 மாணவர்கள் கைது ( படங்கள் )

Featured Replies

சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை துணை தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்ட 300 மாணவர்களை தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.

10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்ற போலீசார் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காவலில் வைத்துள்ளனர்.

மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கே.கேந.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை விமான நிலையத்தை பச்சையப்பன் கல்லூரி  500 மாணவர்கள் இன்று முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 

 மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் சென்னை பரபரப்புடன் காணப்படுகிறது.

chennai-18.jpg

 

இந்த சாத்வீக போராட்டங்களை உலகமும் இந்தியாவும் அலட்சியப்படுத்தாமல் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும்.

இல்லாவிட்டால் இந்திய நாட்டிலும் உலக பொருளாதாரத்திலும் கூட பாதிப்புகள் ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதியவர்களின் அறிவும், அனுபவமும் முதலில் பொருளைத் தேடுகிறது, பின்புதான் உண்மைகளைத் தேடிச்செல்கிறது. மாணவப்பருவத்தின் அறிவும், அனுபவமும் முதலிலும், முடிவிலும் உண்மைகளையே தேடிச்செல்கிறது. அதனால்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள், நீதிபதிகளாக மாணவப்பருவத்தினரை தேர்ந்தெடுத்து நீதித்துறையையும் அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையை வைத்து அன்று தமிழர்களின் எழுச்சியை அடக்கியதுபோல் மாணவர் எழுச்சியை அடக்கிவிட முடியாது என நம்பலாம். இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது விட்டால் இந்திய நிலம் மாற்றமடைவது வெகுதூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழீழ விடுதலைக்கான அனைத்து கல்லூரி மாணவர்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இப்படி ஒரு எழுச்சி மிகுந்த போராட்டத்தை இப்போது இருக்கின்ற திருச்சி மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

திருச்சி புறநகரான பொன்மலை பகுதியில் புறப்பட்ட பேரணியானது ஒரு ராணுவ ஒழுங்குடன் மிகவும் கட்டுக்கோப்புடன் முன்னேறி சென்றது.

முற்றுகையிடப்பட்ட இடங்கள்:

1) திருச்சி தலைமை தபால் நிலையம்.

2) பாரத ஸ்டேட் வங்கி.

3) திருச்சிராப்பள்ளி தொடர்வண்டி நிலையம்.

௪) சிறீலங்கா விமான நிலைய அலுவலகம்.

5) வருமான வரித்துறை அலுவலகம்.

6) சுங்க இலாகா அலுவலகம்.

7) அகில இந்திய வானொலி நிலையம்.

௮) கடவுச் சீட்டு அலுவலகம்.

ஒரே நாளில் இத்தனை அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டது திருச்சி மாநகரையே வியப்படையவைத்தது.

ஒரு கட்டத்தில் மாணவர்கள் மன்மோகன் சிங்,சோனியா காந்தி,ராஜபக்சே,சிதம்பரம்,ஆகியோரின் படங்களை பாடையில் வைத்து கட்டி அலுவலகங்கள் முன்பு போட்டு எரித்தனர்.மேலும் காங்கிரஸ் கொடி,இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை கிளித்தெடுத்துவிட்டு மீத படத்தை போட்டு எரித்தனர்.

ஒட்டுமொத்தத்தில் மாணவர்களின் எழுச்சியும் புரட்சியும் இன்னும் வேகமாக வீரியமடைகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.