Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கான விமான சேவை குறைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL_airlines.jpg
சென்னைக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் குறைத்துள்ளது. தமிழ் நாட்டில் இலங்கையர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையினை அடுத்தே இந்த குறைப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலாகும் இந்த குறைப்பின் ஊடாக வாரத்திற்கு 28 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமான சேவைகள் 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

 

மாணவர் புரட்சிக்கு கிடைத்த வெற்றி

பிக்குகள் மற்றும் சிங்களவர்கள் சீனா போகலாம், ஆனால் பயணச்சீட்டுகள் சற்று அதிகமாக விலையில் இருக்கலாம்  :icon_idea:

Edited by akootha

தமிழ்நாடு மீது கடும் கோபம் – பயணங்களை நிறுத்துமாறு கோத்தா கண்டிப்பான உத்தரவு

[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 01:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

gota2.jpg

தமிழ்நாடு மீது கடும் கோபம் – பயணங்களை நிறுத்துமாறு கோத்தா கண்டிப்பான உத்தரவு
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 01:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, தமிழ்நாட்டுக்கான சுற்றுலாப் பயணங்களை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு சுற்றுலா பயண முகவர்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதையும், தமிழ்நாடு செல்லும் பயணிகளின் தொகையை குறைப்பதற்கும் இதைவிட சிறிலங்கா அரசுக்கு வேறு வழி இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை மீறி தமிழ்நாட்டுக்கு சிறிலங்கா பயணிகளை அழைத்துச் செல்லும் முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பயண எச்சரிக்கையை பொதுவாக வெளிவிவகார அமைச்சே வெளியிடுவது வழக்கம்.

ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கையை விடுக்க தயக்கம் காட்டிவருவதாலேயே, சிறிலங்கா பாதுகாப்புச்செயலரே நேரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சென்னைக்கான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களின் சேவையை பாதியாக குறைக்கும்படியும் கோத்தாபய ராஜபக்சவே உத்தரவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130320107973

இந்த கோபத்தால் அதிகம் பாதிக்கப்படுவது சிங்கள பொருளாதாரம் :o

அப்ப இங்க வர பிக்குகளை அடிச்சா சிங்கள அரசுக்கு வலிக்குது ம்ம்  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.